Nilacharal
Home  
இதழ் 350

பிப்ரவரி 04 2008


Weekly Newsletter Subscription

Name
Email

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
Vairamuthu
Astrology consultation
Home>>தொடர்

மணமகள் அவசர தேவை (2)
- ரிஷபன்

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

காதலித்தவளைக் கைப்பிடிக்க முடியாமல் போனாலும், 'எங்கிருந்தாலும் வாழ்க' மனப்பான்மை சற்று அதிசயிக்க வைத்தது.


"சங்கரன்."

என்னுடைய கிளாஸ்மேட். ஸ்கூல் பைனல் வரை ஒன்றாய்ப் படித்தோம். பின்னர் நான் கல்லூரி வாசலைத் தொட்ட போது சங்கரன் 'சரஸ்வதி வந்தனம்' செய்து விட்டு படிப்பிலிருந்து விலகிக் கொண்டான்.

"நான் இப்போ கல்யாண காண்ட்ராக்ட் எடுக்கறேன்." விசிட்டிங் கார்டை நீட்டினான் ஃபோன் நம்பருடன் விலாசம்.

என்னுடைய டிஸ்டிங்ஷன். இன்றைய ஒற்றை அறை வாசம். காமன் பாத்ரும் டாய்லட். மாதச் சம்பளத்திற்கு நாயாய் உழைத்து, பெருமூச்சு வெளிப்பட்டது.

"நேத்தே பார்த்துட்டேன். நீ இங்கே குடியிருக்கேன்னு புரிஞ்சுது. ஒரு சர்ப்ரைஸ் தரலாம்னு காத்திருந்து, மார்னிங் காபில ஆரம்பிச்சேன்" என்றான் சிரிப்புடன்.

"தேங்க்ஸ் சங்கர்."

"அதுக்குள்ளே சொல்லாதே. நைட் டின்னர். அப்புறம் நாளைக்கு எல்லாம் முடியட்டும்."

"எதுக்கு வீண் சிரமம்."

"பேசாதே. என்னோட சமையல் பிடிக்கலியா."

"சேச்சே."

"சித்ரா இப்ப எப்படி இருக்கா?"

"அவளை இன்னும் ஞாபகம் வச்சிருக்கியா?"

சங்கரன் வெட்கமாய்த் தலையசைத்தான்.

"ரெண்டு குழந்தைகள். இங்கே இல்லே. சிங்கப்பூர் போயிட்டா."

"நல்லா இருந்தா சரி" என்றான் முழு மனசாய்.

அவனை வினோதமாய்ப் பார்த்தேன். காதலித்தவளைக் கைப்பிடிக்க முடியாமல் போனாலும், 'எங்கிருந்தாலும் வாழ்க' மனப்பான்மை சற்று அதிசயிக்க வைத்தது.

"சாயங்காலம் எப்ப வருவே..

ஃபர்ஸ்ட் கிளாஸ் டிபன் இருக்கு."

"வேணாம் சங்கர். நான் வர எட்டு மணியாகும்."

"சரி. சாப்பாடு இங்கேதான். புரிஞ்சுதா" தம்ளரை வாங்கிக் கொண்டு போனான்.

இன்னொரு தடவை பெருமூச்சு விட்டேன்.

இரவு எட்டரை மணிக்கு வீடு திரும்பியபோது ஜானவாசக் கார் அலங்கரித்து நிறுத்தப்பட்டிருந்தது. கூட்டம் அதிகரித்திருந்தது.

பட்டுப் புடைவைகள், நகைகள் என்று சூழலே ஜாஜ்வல்யமாகிக் கொண்டிருந்தது.

சங்கரைக் கண்டு பிடிக்க முடியவில்லை.

எனக்குள் தடுமாற்றம். அவனை நம்பிச் சாப்பிடாமல் வந்து விட்டேன். மண்டபத்திலிருந்து சாப்பாடு அனுப்புவது என்ன இருந்தாலும் அத்தனை சுலபம் இல்லை.

அரை மணி நேரம் கழிந்திருக்கும்.

கதவைத் திறந்து வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். அதுவும் அலுப்புத் தர, எழுந்து கதவை வெறுமனே மூடிவிட்டு வாசலுக்கு வந்தேன்.

ஜானவாச கார் இல்லை. கூட்டமும் குறைந்திருந்தது. ஏதாவது கோவிலிலிருந்து அழைப்பு இருக்கும். அங்கே போயிருப்பார்கள்.

பத்து நிமிஷம் நின்றேன்.

இனி காத்திருப்பது வீண். கடை வீதிக்குப் போனால் இட்லிக் கடை ஆரம்பித்திருக்கும். பர்ஸை எடுத்துக் கொண்டு கிளம்ப எண்ணி அறைக்குத் திரும்பினேன்.

கதவைத் திறந்தால்... விளக்கு அணைந்திருந்தது. போட்டு விட்டுத்தானே போனேன்.

ஸ்விட்சைப் போட முயன்றபோது ஒரு பெண்ணின் கரம் என்னைத் தடுத்தது.

இருட்டிலும் புலப்பட்ட பெண்ணின் ஸ்பரிசம்.

அலறியிருப்பேன். உள்ளுணர்வு தடுத்து விட்டது.

"யா... யாரு?"

"ப்ளீஸ். லைட்டைப் போடாதீங்க."

மண்டப வெளிச்சம் லேசாய் ஜன்னல் வழியே கசிந்தது. இதற்குள் அந்த அரையிருட்டிற்கு விழிகள் பழகி அவளைப் பார்த்தேன்.

பட்டுப் புடவையில் இருந்தாள். அலங்கரிக்கப் பட்டவள்.

"நீ..."

"கல்யாணப் பெண்தான். எனக்குத்தான் நாளைக்கு மேரேஜ்."

"இங்கே... எதுக்கு?" என்றேன் புரியாமல்.

"எனக்கு இஷ்டமில்லே. எங்கப்பா அம்மா என் பேச்சைக் கேட்கலே. மிரட்டி இழுத்துக்கிட்டு வந்துட்டாங்க. இத்தனை நாளா... வீட்டுல அடைச்சு வச்சிருந்தாங்க,"

அடிப்பாவி. என்னை சிக்கலில் மாட்டி விடத் தீர்மானித்தாயா?

"உன்னைத் தேட மாட்டாங்களா?"

"தேடட்டும். நல்லாத் தேடட்டும்."

"நீ இங்கே இருக்குறதை..."

"நிச்சயமா. நான் இங்கே இருப்பேன்னு நினைக்க மாட்டாங்க. நீங்க மட்டும் எனக்கு ஹெல்ப் பண்ணா."

மிக மெல்லிய குரலில்தான் பேசிக் கொண்டிருந்தாள்.

அவளின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் எனக்குள் பிரளயம் தந்தன.

"எனக்கு பயம்மா இருக்கு" என்றேன் கவலையுடன்.

"ப்ளீஸ். ஹெல்ப் பண்ணுங்க. அவங்க டென்ஷன் ஆகி... ஏதாச்சும் ஒரு முடிவு எடுத்துருவாங்க. ஒரு வேளை என் தங்கையைக் கூட கல்யாணம் பண்ணிக் கொடுத்துரலாம். நீங்க மட்டும் உதவினா எனக்கு நான் விருப்பப்பட்ட வாழ்க்கை கிடைக்கும். ப்ளீஸ்..."

குழந்தைத்தனமாய்ப் பேசுவது போலிருந்தது.

பெண்ணைக் காணோம் என்றதும் அப்படியே விட்டு விடுவார்களா? பக்கத்தில் தேட முயன்றால்... என் அறையில் அவளைக் கண்டு பிடித்தால்... போலீஸ் வரை புகார் போய் விட்டால்.

"சிவராமகிருஷ்ணா!"

அதே சமயம் குரல் வெளியிலிருந்து சத்தமாய்க் கேட்டது.


(தொடரும்)


ரிஷபன் அவர்களின் இதர படைப்புகள். தொடர் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
                         
Your Comments
Comment
உங்கள் கருத்து
பெயர் :
மின் அஞ்சல் :
சுட்டி :

Comment In:

Tamil English
(Type here in Thanglish and see tamil text in bottom. Tamil conversion powered by : www.suratha.com)
NOTE : Please do not use single quote in your comments. You can use double quote in place.
(English / தமிழில் - யூனிகோட்)
What you see in this box gets posted as feedback.

Hot properties in India

ஜோதிடம் கேளுங்கள் பகுதியில் விரைந்து பதில் பெற, விரிவான விளக்கம் பெற கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு...

 

 


 

 


About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, India Pakistan cricket series, Kuselan, India Cricket, Sultan The Warrior

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide

We use cookies on this website. By using this site, you agree that we may store and access cookies on your device. Find out more and set your preferences here . X