 |
இதழ் 455 |
 |
பிப்ரவரி 08 2010
|

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Your Advertisement Here
|
| |
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
|
|
| இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? (13)
- நிலா |
| | "ஐ'ம் ப்ரக்னன்ட்" என்றாள் திரும்பவும் அவனைப் பார்க்காமலேயே. அவள் விளையாடுகிற ரகமில்லை என்று புரிந்தாலும் அவள் சொன்ன செய்தி நம்பமுடியாவண்ணமிருந்தது. பிரதீப்பின் அலுவலக அறை. "க்ளையன்ட்டுக்கு உன் வேலைல ரொம்ப திருப்தி, புவனா. ரெண்டு வருஷம் நீ இருக்க முடியுமான்னு கேக்கறாங்க. வாட் டூ யு திங்?" புவனாவுக்கு அந்நிய தேசத்தில் வசிக்க அத்தனை விருப்பமில்லை என்பதை அவன் அறிந்திருந்ததால் அவளது பதில் எதிர்மறையாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தில் தயக்கத்தோடுதான் அந்தக் கேள்வியை எழுப்பினான். ஆனால் அவள் முகத்தில் பரவிய நிம்மதி அவனுக்கு வியப்பை அளித்தது.
"எனக்கு ஓகேதான். ஆனா என்னோட பாஸா உங்க கிட்ட சொல்லவேண்டியது என்னோட கடமை..." என்று பெரிய பீடிகை போட்டு நிறுத்தினாள் புவனா. சற்று இடைவெளிவிட்டு, "நான் ப்ரக்னென்டா இருக்கேன்" என்றாள் முகத்தில் உணர்ச்சியொன்றும் காட்டாமல்.
பிரதீப் தன் காதில் தவறாக விழுந்திருக்க வேண்டும் என்றெண்ணிக் கொண்டு, "ஸாரி, திரும்ப சொல்லு" என்றான்
"ஐ'ம் ப்ரக்னன்ட்" என்றாள் திரும்பவும் அவனைப் பார்க்காமலேயே. அவள் விளையாடுகிற ரகமில்லை என்று புரிந்தாலும் அவள் சொன்ன செய்தி நம்பமுடியாவண்ணமிருந்தது.
"இதனால என்னைத் திரும்பிப் போகச் சொல்வாங்களா?" அவளுக்கு அவள் கவலை. இங்கே என்றால் சின்ன வட்டத்தோடு முடிந்து போகும் கிசுகிசுப்பு. ஊரில் வயிற்றைத் தள்ளிக் கொண்டு நிற்க முடியுமா? தங்கைகளின் வாழ்க்கை பாழாகிப் போகுமே! ப்ரதீப் இன்னும் அதிர்ச்சி மாறாத நிலையில்தானிருந்தான். இருப்பினும் அவளது கேள்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து இல்லை என்று தலையசைத்தான்.
"தாங்க் யூ. ஜனவரில மெடர்னிடி லீவ் தேவை இருக்கும். வேற எந்த சலுகையும் தேவையில்லை " அழுத்தமாய்ச் சொல்லிவிட்டு வறண்ட புன்னகையுடன் வெளியேறினாள்.
பிரதீப்புக்கு வாழ்க்கை அவனை முள்மேல் தள்ளி விட்ட உணர்வு. 'புவனாவுக்கு எனக்குத் தெரியாமல் திருமணம் ஆகிவிட்டதோ? இல்லை, யாரையாவது காதலிக்கிறாளோ? ஒருவேளை, இது அவளின் விருப்பமில்லாமல் நடந்த விபத்தாக இருக்குமோ?' இந்தக் கேள்விகளை அவளிடம் கேட்பது நாகரீகமில்லையே!
புவனா இந்தியா திரும்ப விருப்பமில்லாமலிருந்ததிலிருந்து இந்த விஷயம் தன் குடும்பத்துக்குத் தெரிய வேண்டாம் என அவள் நினைப்பது புரிந்தது. எனில், இது எதிர்பாராமல் நடந்ததுதான். ஜனவரியில் டெலிவரி என்று அவள் சொன்னதை வைத்து சுமார் மூன்று மாதங்களுக்கு முன் இது நடந்திருக்க வேண்டுமென ஊகித்தான். அப்போதுதானே புவனா இங்கு வந்தாள்? அவளது கர்ப்பத்துக்குக் காரணமானவன் இங்கிருந்தால் தனக்குத் தெரியாமல் போக வாய்ப்பில்லை என்று உறுதியாக நம்பினான் பிரதீப். இந்தியாவிலிருந்தால் அவன் ஏன் புவனாவை அழைத்துக் கொள்ள முன்வரவில்லை? பல கேள்விகளுக்கு நடுவில் அவன் காதலின் எதிர்காலம் மிகப் பெரிய கேள்விக்குறியாய் அவன் முன் நின்றது.
மூளையைப் பிழிந்து யோசித்ததில் புவனாவுக்கு விருப்பமில்லாமல் நடந்த விபத்தினால் ஏற்பட்ட விளைவாகத்தான் இது இருக்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்தான் பிரதீப். புவனாவின் மீதான அவன் காதல் பன்மடங்கு அதிகரித்திருந்தது. தன் மனதை அவளிடம் திறந்து காட்ட நேரம் வந்துவிட்டதை உணர்ந்தான் பிரதீப்.
பலமான ஒத்திகைக்குப் பின் தன் தீர்மானத்தை செயல்படுத்த அவளின் முன் நின்ற போது விடலைப் பையன் போல் வெலவெலத்து அந்தக் குளிர்ப் பிரதேசத்திலும் வியர்வையை உற்பத்தி செய்தது உடம்பு. மனனம் செய்திருந்த வார்த்தைகளெல்லாம் ஒளிந்து கொள்ள, "நான் உன்னைக் கல்யாணம் செஞ்சுக்க விரும்பறேன், புவனா" என்று சுற்றி வளைக்காமல் கிடைத்த வார்த்தைகளைக் கொண்டு விஷயத்தை அவன் உடைத்தபோது புவனா ஒரு சின்ன நெற்றி முடிச்சோடும் கனிவான பார்வையோடும், "எனக்குக் கொஞ்சம் டைம் கொடுங்க, பிரதீப்" என்று சொன்னது அவள் சம்மதம் தெரிவித்துவிட்டது போலத்தான் தோன்றிற்று பிரதீப்புக்கு. இத்தனை வருடமாய்ப் புதைத்து வைத்திருந்த தன் ரகசியக் காதல் நிறைவேறப் போவதைத் தன் உயிர் நண்பனுடன் பகிர்ந்து கொண்டான் பிரதீப்.
(தொடரும்)
|
| | நிலா அவர்களின் இதர படைப்புகள்.
| தொடர் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
|
|
|
|
|