அழகான குழந்தை.. சிவப்பு நிறம்.. சின்னஞ் சிறிய பூப்பொட்டலம்.. புஷ்பக் குவியல்
(நன்றி : ஓம் சக்தி)
ஸ்மிருதி பார்க்கிறாள்.
அந்த ஸ்தாபனத்தின் டிரஸ்டிகள் ப்ரணவை வரவேற்க வாசலுக்கு ஓடுகின்றார்.
இளம் குழந்தைகள் 'பொக்கே' கொடுத்து ப்ரணவை, நிகழ்ச்சியின் முக்கிய விருந்தாளியை வரவேற்கிறார்கள்.
இருபுறம் தேவதைகளின் வெள்ளை உடையில் சின்னஞ்சிறிய சிறார்கள் நின்றபடி ரோஜா மலர்களை வாரி இறைக்க.. அதில் ப்ரணவ் நடந்து வருகிறான்.
அவன் கையிலும் அந்த நோட்டீஸ்.. அதைப் படித்தபடியே அனைவருக்கும் கை கூப்பியபடியே ப்ரணவ் மேடை ஏறுகிறான். 'டேப்பில்' ஆர்க்கெஸ்டிரா முழங்கியது.
"இந்த நிறுவனத்தின் கன்வீனர் செல்வி ஸ்மிருதி வரவேற்புரை நிகழ்த்துவார்."
'மைக்கில்' அறிவிப்பு.
ப்ரணவ் திடுக்கிட்டு நிமிர்ந்தான்.
கை கூப்பியபடி ஸ்மிருதி அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
ப்ரணவ் தன் நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டான்.
இவள்.. இவள் இந்த ஸ்மிருதி இங்கா பணிபுரிகிறாள்?
இரண்டொரு முறை இவளைத் தொடர்பு கொண்டும் இவளின் நம்பர் கிடைக்கவில்லை. நம்பர் டிஸ்கனெடட் என்று அறிவிப்பு வந்தது. வீட்டையும் மாற்றி விட்டாள்!
நான் எத்தனை பெரிய முட்டாள். யாரோ ஒருத்தியின் ரிப்போர்ட்டை ஸ்மிருதியின் ரிப்போர்ட் என்று நினைத்து அவள் கருவுற்றிருப்பதாக எண்ணி அவளை வெறுத்தேனே..!
கடைசியில் சமீபத்தில் தான் டாக்டர் சுபாஷினி உண்மையைச் சொல்ல ஸ்மிருதியின் தூய்மை தெரிந்தது. நான் ஒரு முட்டாள்.
இனி.. இனிக் கவலை இல்லை. ஸ்மிருதியைச் சந்தித்து விட்டேன். இனி நின்று போன கல்யாணம் நடக்கும். முதலில் ஸ்மிருதியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
மன்னிப்பாள்.. கட்டாயம் மன்னிப்பாள். அவள் இயல்பு அது.
அவையோர்கள் கை தட்டிய சப்தம். ஸ்மிருதியின் வரவேற்பு உரை முடிந்து விட்டதா?
இனி இவன் முறை!
ப்ரணவ் எழுந்தான்.
இரண்டு மாதமே ஆகி இருந்த சின்னஞ்சிறு சிசு ஒன்றினை ஏந்தியபடி ஸ்மிருதி மேடைக்கு வந்தாள்.
புத்தம் புது கவுன். கன்னத்தில் பெரிதாக திருஷ்டி பொட்டு... சுருள் முடி..
அழகான குழந்தை.. சிவப்பு நிறம்.. சின்னஞ் சிறிய பூப்பொட்டலம்.. புஷ்பக் குவியல்.
"இந்தக் குழந்தைக்கு இன்று பெயர் சூட்டும் விழா. இந்தக் குழந்தை செய்த பாக்கியம் திரு. ப்ரணவ் போன்ற பெரிய மனிதர்களால் இதற்குப் பெயர் சூட்டு விழா நடக்கிறது."
அனைவரும் கைதட்டினார்கள்.
"பேர் வையுங்க ஸார்.."
ப்ரணவ் திகைத்தான்.
"குழந்தை ஆணா பெண்ணான்னு.."
மெல்ல ஸ்மிருதிக்கு மட்டுமே கேட்கும்படிப் பேசினான்.
"அடடே அதைச் சொல்லலியா? ஆண் குழந்தை ஸார். இருங்க, இந்தக் குழந்தையோட அம்மாவையும் அறிமுகப்படுத்தறேன்."
ஓர் ஓரமாக நின்றிருந்த தேவகியை அழைத்து வந்தாள் ஸ்மிருதி.
"இவங்க தான் குழந்தையோட தாய்.."
ப்ரணவ் பார்த்தான். தேவகி இவனிடம் பணிபுரிந்த அதே தேவகி!
ஸ்மிருதியின் சிபாரிசில் இவன் வேலை போட்டுக் கொடுத்த அதே தேவகி!
அன்று...
தன் திருமண அழைப்பிதழுக்கு அட்ரஸ் டைப் பண்ண வேண்டும் என்று தேவகியை இவன் அலுவலகத்தில் தங்கச் சொன்னதும், கம்ப்யூட்டரில் டைப் பண்ணிக் கொண்டிருந்த தேவகியை நெருங்கி இலேசாகக் குடித்திருந்த போதையுடன் அவளை அணைத்து.. விளக்கை அணைத்து....
We use cookies on this website. By using this site, you agree that we may store and access cookies on your device. Find out more and set your preferences here . X