 |
இதழ் 352 |
 |
பிப்ரவரி 18 2008
|

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Your Advertisement Here
|
| |
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
|
|
| உலகப் புகழ் பெற்ற கண்டுபிடிப்புகள் - தொலை எழுதி
- டாக்டர்.விஜயராகவன் |
| | உங்கள் சாதனத்தில் தட்டச்சு செய்யும் செய்திகள் நீங்கள் அனுப்ப விரும்பும் மற்றொரு தொலை எழுதியில் அவ்வாறே மறு அச்சு செய்யப்படும். தொலைத் தொடர்புப் பரிமாற்றத்தில் ஒரு புரட்சிகரமான கண்டுபிடிப்பாக தொலை எழுதி (Telex) எனும் எந்திரத்தைக் குறிப்பிடலாம். செய்தியைத் தொலைதூரத்தில் இருந்தே அச்சிடும் வசதியைப் பெற்றிருப்பதால், இச்சாதனம் ஒரு சிறந்த தொலைத் தொடர்பு ஊடகமாக உலகம் முழுதும் பயன்படுகிறது. பல உள்நாட்டு அயல்நாட்டுக் குழுமங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், செய்தி நிறுவனங்கள், அரசுத் துறைகள் ஆகியன விரைவான தொலைத் தொடர்புக்காக இச்சாதனத்தைப் பயன்படுத்துகின்றன.
ஒவ்வொரு தொலை எழுதிப் பயனரும் தமக்குத் தரப்பட்டுள்ள குறியீட்டு எண்ணைப் பயன்படுத்தி இவ்வுலகின் எம்மூலையிலும் உள்ள வேறொரு தொலை எழுதிப் பயனரைத் தொடர்பு கொள்ள முடியும். எட்வர்ட் கிளெயின்ஸ்க்மிட் (Edward Kleinschmidt) என்பவர் 1914ஆம் ஆண்டு இந்த வியத்தகு எந்திரத்தை ஜெர்மனி நாட்டில் கண்டுபிடித்தார். முதலாவது தானியங்கித் தொலை எழுதிகள் பரிமாற்ற மையம் 1933இல் நிறுவப்பட்டது. பின்னர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இச்சேவை பரவியது. இந்தியாவில் இச்சேவை முதலில் 1953ஆம் ஆண்டு பம்பாய்க்கும் அகமதாபாதுக்கும் இடையே நிறுவப்பட்டது.
இந்தத் தொலை எழுதிச் சாதனம் ஒரு தட்டச்சு எந்திரம் (typewriter) போன்றே காட்சியளிக்கும்; இதிலும் விசைப் பலகை (key board) மற்றும் விசைகள் (keys) ஆகியவை உள்ளன. உங்கள் சாதனத்தில் தட்டச்சு செய்யும் செய்திகள் நீங்கள் அனுப்ப விரும்பும் மற்றொரு தொலை எழுதியில் அவ்வாறே மறு அச்சு செய்யப்படும். இச்சாதனம் தட்டச்சு எந்திரம், தொலைபேசி மற்றும் கேபிள்கள் ஆகியவற்றின் இணைப்பாக விளங்குகிறது எனலாம். தேவையான எண்களைத் தட்டச்சு செய்து தொலைபேசி வாயிலாக விரும்பிய நபருடன் தொடர்பு கொண்டு பேசவும் முடியும். தந்தி மூலம் செய்தி அனுப்புவது போன்று தேவையான செய்திகளைத் தட்டச்சு செய்து எவ்விதப் பிழையுமின்றி அவற்றை அனுப்பலாம்; மறு முனையில் உள்ள தொலை எழுதி எந்திரத்தில் செய்திகள் தெளிவாக அச்சிடப்பட்டு உரியவரால் பெற்றுக்கொள்ளப்படும்.
இந்தத் தொலை எழுதி எந்திரம் பல்வேறு இடங்களில் செயல்படும் அரசுத் துறைக் கிளை அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், செய்தித்தாள் அலுவலகங்கள் போன்றவற்றில் பதிவுகள், ஆவணங்கள், அறிக்கைகள், செய்திகள் ஆகியவற்றை அனுப்பவும், பெறவும் பெரிதும் பயனுள்ளதாக விளங்குகிறது. குறிப்பாக செய்தித்தாள் அலுவலகங்களில் உலகெங்கிலுமிருந்து செய்திகளைப் பெறுவதற்கு இந்த எந்திரமே மிகுதியாகப் பயன் படுகிறது.
அண்மைக்கால முன்னேற்றமாக ஒளிப்படங்களையும் (photographs) செய்திகளுடன் சேர்த்துப் பெறுவதற்கு இந்த எந்திரத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. இதனால் செய்திகளையும் படங்களையும் ஒன்றிணைத்துப் பெறவும், அனுப்பவும் முடிகிறது.
*****
|
| | டாக்டர்.விஜயராகவன் அவர்களின் இதர படைப்புகள்.
| அறிவியல் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
|
|
|
|
|