Home  
இதழ் 457

பிப்ரவரி 22 2010


Weekly Newsletter Subscription

Name
Email

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
Trisha
Astrology paid service
Home>>தொடர்

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? (15)
- நிலா

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

''சரி பண்ணிடுவேங்கறார்டா. ஆனா எனக்கு என்னவோ உறுத்தலா இருக்கு. படத்துக்காக நிறைய கடன் வாங்கி வச்சிருக்கார் போலிருக்கு. வட்டியைக் கேட்டதுக்கே எனக்கு தலை சுத்திடுச்சி''

சனிக்கிழமை. காலை கண் விழித்ததுமே ஏதோ சூனியம் சூழ்ந்து கொண்டாற்போலிருந்தது பிரதீப்புக்கு. படுத்திருந்தால் அந்த அந்தகாரம் இன்னும் விரிந்து தன்னை விழுங்கிவிடுமென்று சட்டென்று எழுந்தமர்ந்தான்.

மாதம் ஓரிரு முறையாவது ஹரியைச் சந்திப்பது வழக்கமாகி இருந்ததால் கடந்த இரு மாதங்களாக அவனைச் சந்திக்காதது ஒரு அசமநிலையை ஏற்படுத்தி இருந்தது. தனக்குத்தான் ஹரியின் மேல் கோபமென்றால் அவன் ஏன் சமாதானத்துக்கு வரவில்லை என்ற புதிரை அவனால் விடுவிக்க முடியவில்லை

எத்தகைய பிரச்சினையாய் இருந்தாலும், ''ஹே, கமான்றா... இட்ஸ் மீ அண்ட் யூ. நமக்குள்ள என்னடா கோபம்?'' என்று ஒரே போடாய்ப் போட்டு ஒன்றுமில்லாமல் செய்துவிடும் ஹரி ஏன் விலகி நிற்கிறான் இந்த முறை?

கண்களைத் தேய்த்துக் கொண்டு கணினிக்கு மின்சாரத்தைப் பாய்ச்சினான். அஞ்சல் பெட்டியைப் பரிசோதித்துவிட்டு இணையதளமொன்றில் செய்திகளை மேய்ந்து கொண்டிருந்தபோது

''இயக்குநர் பாரியின் படம் நிறுத்தப்பட்டது''
என்ற தலைப்பைக் கண்டு மேலே படித்தான் பிரதீப். ஹீரோவுக்கும் பாரிக்கும் நடுவில் சின்னப் பிரச்சினைதான். ஆனால் வேண்டுமென்றே பூதாகரமாக்கப் பட்டிருந்தாற்போலிருந்தது. பி.எஸ்.பியின் கைங்கர்யமாக இருக்க வேண்டும். சொந்தத் தயாரிப்பு என்பதால் பாதிக்கும் மேல் முடிந்து விட்ட படத்தை நிறுத்திவிட்டால் பாரிக்கு பலமான அடியாகத்தானிருக்கும். அதுவும் பிரமாண்டமாய்த் தயாரான படம் வேறு!

ரேஷ்மிக்கு 'ஆர் யூ ஆல்ரைட்?' என்று மின்னஞ்சல் அனுப்பினான்.

ஐந்தாவது நிமிடம் தொலைபேசியில் அழைத்தாள். கவலையாய் இருந்தாள்.

''சரி பண்ணிடுவேங்கறார்டா. ஆனா எனக்கு என்னவோ உறுத்தலா இருக்கு. படத்துக்காக நிறைய கடன் வாங்கி வச்சிருக்கார் போலிருக்கு. வட்டியைக் கேட்டதுக்கே எனக்கு தலை சுத்திடுச்சி''

ரேஷ்மி தன் பணத்தைக் கொடுத்திருக்கக் கூடும் என்று ஊகித்தான் பிரதீப். தன் பாதுகாப்புக்கென அவள் சேமித்திருக்கும் பணத்தைக் கொடுத்துவிடத் துணிவாளானால் அவன் மேல் அவளுக்கு அளவு கடந்த நம்பிக்கை இருக்கும் என்று தோன்றவே, அதனைக் குலைக்கும் விதமாய் ஏதும் சொல்ல விரும்பாமல்,''சரியாயிடும், கவலைப்படாதே'' என்று அவளுக்கு ஆறுதல் சொன்னான்.

கணினியிலிருந்து எழுந்து கொண்ட போது, ஹரி விட்டுச் சென்றுவிட்ட வாட்ச் கண்ணில் பட்டது. அதைச் சாக்காக வைத்துக் கொண்டு அவன் எண்ணை அழுத்தினான்.

''சொல்லுடா... ஏன் ஃபோனே பண்ணலை?'' தான் கேட்க விரும்பிய கேள்வியை ஹரி கேட்டதும், ''உங்கிட்ட ஃபோன் இல்லையா?'' என்று அவனை மடக்கினான் பிரதீப்.

''ஆல்ரைட்... ஆல்ரைட்... ட்ரூஸ். ஓகே?'' என்று உடனடி சமாதானத்துக்கு வந்தான் ஹரி.

''உன் வாட்ச்சை இங்கே விட்டுட்டுப் போயிட்டே''

''ஆமா ராசியான வாட்ச். இல்லாமல் ரொம்பக் கஷ்டமாப் போச்சு''

''இன்னிக்கு சின்சினாடி வரேன். கொண்டு வரேன்'' எங்கிருந்தோ அந்தத் திடீர் திட்டம் முளைத்தது.

மதிய உணவுக்கு சந்திக்கலாம் என முடிவு செய்த பின் பிரதீப் சின்சினாடி செல்வதற்கான காரணத்தைத் தேட ஆரம்பித்தான். அழைப்பு மணி ஒலித்தது. புவனா வெளியில் கிளம்புவதற்கான அறிகுறிகளோடு நின்றிருந்தாள். அதிகாலையில் அவளைக் கண்டது பிரதீப்புக்குப் புத்துணர்ச்சியைக் கிளப்பிற்று

''சின்சினாடில ஒரு ஆர்ட் எக்ஸிபிஷன் இருக்கு. போகலாம்னு கிளம்பினேன்.'' இப்படி பரஸ்பரம் சொல்லிக் கொண்டு கிளம்புவது வழக்கம்தான்.

''பஸ்லயா?'' ஆச்சரியமாய்க் கேட்டான்.

''ம்...'' என்றபோது அவள் இதழ்களில் தோன்றிய சின்னப் புன்னகை பசக்கென்று அவன் இதயத்தில் ஒட்டிக் கொண்டது.

''நானும் சின்சினாடிதான் கிளம்பிக்கிட்டிருக்கேன் ஒரு சின்ன வேலையா... சேர்ந்தே போலாமே?''

சின்ன யோசனைக்குப் பின், ''ஓகே'' எனத் தலையசைத்தாள்.

ரெஸ்டாரண்டுக்குப் போகிற வழியில் லைப்ரரியில் புத்தகங்களைப் போடுவதற்காய் ஹரி காரை நிறுத்தியபோது அலைபேசி அழைத்தது.

''ஹரி, கார்ல பிரச்சினை. சிக்னல்ல நின்னு போச்சு. AAA வர நாப்பத்தைஞ்சு நிமிஷமாகும் போலிருக்கு. நீ எங்கே இருக்கே?''

''நீ எங்கே இருக்கேன்னு சொல்லு. நான் வர்றேன்''
 பிரதீப் இடத்தைச் சொன்னான். ''கூல். பக்கம்தான். ஒரு பத்து நிமிஷத்தில அங்கே இருப்பேன்''

ஹரியுடன் பேசிவிட்டு வைத்ததும் புவனாவிடம் நூறாவது முறையாக மன்னிப்புக் கேட்டான் பிரதீப். ''கார் நின்னு போனா நீங்க என்ன பண்ணுவீங்க? நான் பஸ்ல வந்திருந்தா கூட இது நடந்திருக்கலாம். இதுக்குப் போய் ஏன் இவ்வளவு ஃபீல் பண்றீங்க?'' என்று அவனின் தேவையற்ற குற்ற உணர்வைச் சுட்டிக் காட்டினாள். அவன் சமாதானமானதாகத் தெரியவில்லை.

ஹரியுடன் மதிய உணவு என்று காரில் பாதி தூரம் வந்த பின்தான் புவனாவிடம் சொல்லியிருந்தான் பிரதீப். என்னதான் ஹரியை அந்நியன் போல நினைத்துக் கொள்ள மனதைப் பழக்க முயற்சி செய்தாலும் அவனின் பேரைக் கேட்ட மாத்திரம் இதயத்தில் அட்ரினலின் உற்பத்தியாகத்தான் செய்கிறது அவளுக்கு. நேரில் பார்க்கும் போது கால்கள் துவளத்தான் செய்கின்றன.

ஹரி காரிலிருந்து இறங்கியதும், வியப்பு கலந்த ''ஹாய்'' ஒன்றை புவனாவுக்கென உதிர்த்துவிட்டு பிரதீப்பைப் பார்த்து, ''ஸோ...?'' என்றான்.

''AAA இங்கேயே சரி பண்ணிட்டா பிரச்சினை இல்லை. வொர்க் ஷாப்புக்குக் கொண்டு போணுன்னாதான் பிரச்சினை. எவ்வளவு நேரமாகுமோ தெரியலை''

''ரைட்...''

''நீ புவனாவோட ரெஸ்டாரண்ட் போ. நான் வந்து ஜாயின் பண்ணிக்கறேன்'' என்று பிரதீப் சொன்னதும் புவனாவைப் பார்த்தான் ஹரி.

அவசரமாய் மறுக்க வாயெடுத்தவளிடம், ''ப்ளீஸ், புவனா... இந்த நிலைமைல உன்னை இப்படி நடு ரோட்ல நிக்க வைக்கறதுக்கு கஷ்டமா இருக்கு'' என்று வற்புறுத்தி அனுப்பி வைத்தான் பிரதீப்.
(தொடரும்)

நிலா அவர்களின் இதர படைப்புகள். தொடர் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
                         
Your Comments
Comment
உங்கள் கருத்து
பெயர் :
மின் அஞ்சல் :
சுட்டி :

Comment In:

Tamil English
(Type here in Thanglish and see tamil text in bottom. Tamil conversion powered by : www.suratha.com)
NOTE : Please do not use single quote in your comments. You can use double quote in place.
(English / தமிழில் - யூனிகோட்)
What you see in this box gets posted as feedback.

Hot properties in India

ஜோதிடம் கேளுங்கள் பகுதியில் விரைந்து பதில் பெற, விரிவான விளக்கம் பெற கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு...

 

 


 

 


About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, India Pakistan cricket series, Kuselan, India Cricket, Sultan The Warrior

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide

We use cookies on this website. By using this site, you agree that we may store and access cookies on your device. Find out more and set your preferences here . X