Home  
இதழ் 457

பிப்ரவரி 22 2010


www.guruji.com

Search

 

Nilacharal Web

Search in English

Help
 

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
Surya
Wanted Freelancers!
Home>>ஸ்பெஷல்ஸ்

ரிஷி ராக்ஸ்..!! (32)
- ரிஷிகுமார்

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

எல்லோரிடமும் நற்குணங்கள் உண்டு, எதிர்மறை எண்ணங்களும் உண்டு. நற்குணங்களை மட்டும் தெரிந்தெடுத்து அதை விரிவாக்கிப் பார்த்தால் அம்மனிதரிடம் நமக்குத் தேவையான பொக்கிஷம் இருக்கக்கூடும்.

ஹாய் ஃபிரெண்ட்ஸ்!

சென்ற வாரம் கடும் வேலைப்பளுவின் காரணமாக பின்னூட்டங்களுக்கு சரியான நேரத்தில் பதிலளிக்க முடியவில்லை. முதற்கண் மன்னிக்க! காரணங்களைக் காரணம் காட்டித் தப்பிக்காமல் உங்கள் தொடர்பிலேயே இருக்க நினைக்கிறேன்; முயற்சிக்கிறேன்; விரும்புகிறேன்.

பொதுவாக தவறு செய்வது என்பது மனித இயல்பு. வேண்டி விரும்பிச் செய்யாமல் இயல்பாய் நிகழும் தவறுகளை உணர்ந்து பாடம் கற்றுக் கொண்டு அதைச் செயல்படுத்துவது சாதாரண நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு நம்மைக் கொண்டு செல்ல உதவும். இது எல்லோரும் அறிந்த விஷயம்தான். அதே பக்குவத்திலேயே நம்மைத் தொடர்ந்து வைத்திருப்பதுதான் சவாலான விஷயம். அந்த சவாலை எதிர்கொள்வதில்தான் சுவாரஸ்யமே அடங்கியிருக்கிறது.

Rishiஇது போன்ற சவாலை எதிர்கொள்ளும்போது இயல்பாக நம் தன்னம்பிக்கை மீட்டரின் அளவு படபடவென  கீழிறங்குவதை உணர முடியும். அதைக் கீழிறங்க விடாமல் தொடர்ந்து வைத்திருப்பதில்தான் சாமர்த்தியமே இருக்கிறது. இது எப்பேர்ப்பட்ட மனிதருக்கும், ஜாம்பவான்களுக்கும் பொருந்தும்.

நம் தன்னம்பிக்கைக் குறைவுக்கு பெரிய விஷயங்கள்தான் நடக்க வேண்டுமென்பதில்லை. சில்லறை வஸ்துக்கள் கூட நம்மை நிலைகுலைய வைக்கக்கூடிய அளவுக்கு வலிமை பெற்றவையாக இருக்கின்றன.

அது நம் தோற்றமாக இருக்கலாம்; நம்முடைய தனிப்பட்ட பண்புகளாக இருக்கலாம்; சமூக அந்தஸ்து சார்ந்தவையாக இருக்கலாம். எதுவாயினும் நம் தன்னம்பிக்கைக் குறைவுக்கு அவை காரணமாக வேண்டியதில்லை. தன்னம்பிக்கை மீட்டரை ஏற்றி இறக்கும் பக்குவம் நம் கைகளில் வைத்திருக்க முடிந்தால் போதும்.

முதலில் முதலில் முதலில் முதலில் நாம் உள்ளேயும் வெளியேயும் அழகு பட இருக்கிறோம்; ஜொலிக்கிறோம் என்ற எண்ணம் தோன்ற வேண்டும். உண்மை எதுவாக இருந்தாலும் சரி.. எண்ணத்தினால் எது வேண்டுமானாலும் மாறும்.

நம்மை நாமே விரும்புகிறோமா என்பதில் இருந்துதான் தன்னம்பிக்கைக்கான மீட்டர் ஆரம்பிக்கிறது. ஆரம்பமே சரியில்லையென்றால் ஏற ஏற சறுக்கல்தான்! நம்மை நாமே விரும்புவதில் எந்த வித கட்டாயத்தையும் மனதில் ஏற்ற வேண்டாம். இயல்பாய் அதை உணரலாம், ரசிக்கலாம், அந்தப் பரவச அனுபவத்தில் திளைத்திருக்கலாம்.

அது ஓர் உணர்வு. இயல்பாய் அதை மலர விடலாம். எந்த அவசரமும் வேண்டாம். அடிப்படை எந்த அளவுக்கு வலிமையாய் இருக்கிறதோ அந்த அளவுக்கு இனி அதன்மேல் கட்டப்போகும் சிந்தனைகளின் சாரமும் வலிமையாய் இருக்கும்.

இப்பொழுது நம்மைப் பற்றிய ஓர் உயர்ந்த எண்ணம் உருவாகியிருக்கும். ஏற்கெனவே இருக்கும் எண்ணம் வலிமை பெற்றிருக்கும். ஏற்கெனவே வலிமை பெற்றிருக்கும் எண்ணம் வீரியம் பெற ஆரம்பித்திருக்கும்.

இதைப் பற்றிப் பெரும் புத்தகமே எழுதலாம். அந்தப் புத்தகத்தின் சாரமாக இக்கட்டுரையை உணரலாம்.

இக்கருத்துக்களுக்கான மூலம் விக்கியிலிருந்து எடுத்தாளப் பெற்றுள்ளது.

1. சிறப்புப் பண்புகளைப் பட்டியலிடுவோமே

முதலில் நாம் நம்மிடம் இருக்கும் சிறப்புப் பண்புகளை, தகுதிகளைப் பட்டியலிட்டுத் தெரிந்து கொள்வோமா? சிறப்புப் பண்புகள் எப்போதும் நம்மைப் பொதுவில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதாக இருக்கும். உதாரணத்திற்கு, கடும் டென்ஷன் ஏற்பட வேண்டிய சூழலிலும் சிலரால் தம்மைக் கூலாக வைத்திருக்க முடியும், சூழலை பதட்டமில்லாமல் எதிர்கொள்ளக் கூடிய பக்குவம் இருக்கும். அது அவர்களது சிறப்புப் பண்பு. இது எல்லோருக்கும் வாய்க்காது.

2. பிடித்ததை அறிவோமே

பெரும்பாலான நேரங்களில் யாரிடம், எதனிடம் நாம் நம் நேரத்தைச் செலவிட விரும்புகிறோம் என்பதை அறிந்தாலே நமக்கு உண்மையில் பிடித்ததை அறிய முடியும். ஆத்மார்த்தமான விருப்பமாக அது அமைய வேண்டும். அது மனதுக்கு ரொம்பப் பிடிக்குமென்றால், அதைப் பிடிப்பதில் எந்தத் தவறும் இல்லாதபட்சத்தில், அது எப்போதும் மாறக் கூடாது.

3. ரோல் மாடலைத் தேர்ந்தெடுக்கலாமே

ரோல் மாடல் எனும்போது அவர்களையோ, அதையோ அப்படியே பின்பற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. அவர்களிடமிருந்து, அதனிடமிருந்து சாரத்தை உறிஞ்சிக் கொண்டாலே போதும். அவர்கள் மிகப்பெரிய விஐபிக்களாகவோ, பிறர் அறிந்த, ஆனால் நாம் அதிகம் அறிந்திரா நபர்களாக இருக்கவேண்டிய அவசியமில்லை. நம் அடுத்த தெரு நண்பர் கூட நம்மை ஏதோவொரு வகையில் கவர்ந்திருக்கக்கூடும். அது உடல்ரீதியாகவோ, உள்ள ரீதியாகவோ, ஆன்ம ரீதியாகவோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். இன்னும் சொல்லப் போனால் பல ரோல் மாடல்கள் கூட இருக்கலாம்!

4. சக மனிதர்களை உற்று நோக்கலாமே

எல்லோரிடமும் நற்குணங்கள் உண்டு, எதிர்மறை எண்ணங்களும் உண்டு. நற்குணங்களை மட்டும் தெரிந்தெடுத்து அதை விரிவாக்கிப் பார்த்தால் அம்மனிதரிடம் நமக்குத் தேவையான பொக்கிஷம் இருக்கக்கூடும். இதே பாணிதான் அனைவருக்கும். கூடிய விரைவில் நம்மைச் சுற்றியிருக்கும் அனைத்து சக மனிதரிடமும் நமக்குத் தேவையானவை இருப்பது புலனாகும். அனைவரிடமும் இனிமையாக நட்பு பாராட்டுதல் என்பது எளிமையாகும். நம்முடைய இருப்பை அவர்களும் விரும்ப ஆரம்பித்து விடுவார்கள்.

5. பிறரிடம் இனிமையாக இருக்கப் பழகலாமே

இதயப் பூர்வமான வாழ்த்துக்களும், புன்சிரிப்பும், நன்றி நவிலலும் அசாதாரணமானவை. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் நமக்குக் கிடைக்கும் அன்புக்கும், ஆதரவுக்கும் நம் உணர்வுகளை வெளிப்படுத்துவது உறவுப் பிணைப்புக்கு அடிகோலும். பிற மனிதர்களிடம் நமக்கேற்படும் நன்நம்பிக்கை நம் தன்னம்பிக்கைக்கும் வழிகோலும்.

6. உடல்நலத்திலும் அக்கறைப்படலாமே

நம் உடலும் பேசும். அது தெரிந்த விஷயம்தான் நமக்கெல்லாம். பசித்தால் வயிறு கேட்கும், சற்று நேரம் ஆகிவிட்டால் கூப்பாடு போடத் துவங்கும். கவனிக்காமல் விட்டால், ஒதுக்கித் தள்ளினால் வேலை செய்து கொண்டிருக்கும் சக உறுப்பினர்களுக்கு சக்தியைத் தராது. இருந்தால்தானே தரும். இப்படி உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் தேவைகள் இருக்கின்றன. உடலை எவ்வகையிலேனும் அலட்சியப்படுத்தினால் மனதிற்கும் அது சோர்வையே தரும். நம் செயல்பாடுகளின் வேகத்தையும் குறைத்து விடும்.

7. நாம் நம்மிடமே இருக்கப் பழகலாமே

நாம நம்மகிட்ட இல்லாம வேற யார் கிட்டே இருக்கோம்? நம்மைப் பற்றி ஒருமுறை நாம் முழுமையாக உணர்ந்து விட்டால் பிற மனிதரின் எதிர்மறை விமர்சனங்களைப் பொருட்படுத்த வேண்டிய அவசியமே வராது. நேர்மறை விமர்சனங்களை லாவகமாகக் கையாளும் நுட்பமும் வளரும். எதிர்மறை விமர்சனங்கள் சொல்லப்பட்ட தனிநபரது மன வெளிப்பாடுகள் மட்டுமே; அவை பிற அனைவருடைய எண்ணங்களாகாது என்ற சிந்தனை பிறக்க வேண்டும். அப்போதுதான் நாம் நம்மிடம் இருப்போம், எதிராளியின் வசத்தில் வீழ மாட்டோம்.

8. முதல் அடியை எடுத்து வைக்க நினைக்கலாமே

ஒரு செயல்பாட்டைச் செய்வதற்கு நாம் எத்தனை திட்டங்கள் வேண்டுமானாலும் போடலாம். ஆனால் முதல் அடி எடுத்து வைப்பதுதான் பெரிய விஷயம். முதல் அடி என்பது சிறிய விஷயம்தான், ஆனால் அது காட்டும் பாதையில் இருக்கும் தெளிவுதான் பெரிய விஷயம்.

9. உடல் மொழியையும் கவனிக்கலாமே

உடல் உள் உறுப்புகள் பேசுவதைப் பார்த்தோம். உடல் வெளி உறுப்புகள் பேசும் பேச்சு நம் அகநிலையை அப்பட்டமாய்க் காட்டிவிடும். சுவாரஸ்யமாய், நம்பிக்கையுடன், அமைதியாய், ஆர்வத்துடன் கண்ணுடன் கண் நோக்கிப் பேசுவது நம் மீது உயர்ந்த அபிப்ராயத்தை ஏற்படுத்தும். நம் மீதே நம் நம்பிக்கையை அதிகரிக்கவும் செய்யும். விரல்களையும், கைகளையும் நாம் பேசும் விஷயத்திற்குத் தகுந்தாற்போல் நகர்த்திப் பேசுவது நம் பேச்சும் எண்ணங்களும் எதிராளியிடம் எளிதாகச் சென்றடைய உதவும்.

10. உள்ளப் பெருமிதத்துடன் நடக்கலாமே

நிமிர்ந்த மார்புகள், நேர்கொண்ட பார்வை, திண்ணிய தோள்கள், உறுதியான நேர்நடை நம் தோற்றத்தை அழகுபடக் காட்டும். நம் நம்பிக்கையையும் கூட்டும்.நாம் சாதிக்கப் பிறந்தவர்கள், சந்தோஷமாய் இருக்கப் பிறந்தவர்கள் என்பது போன்ற ஒருவித உள்ளப் பெருமிதத்துடன் நடைபயிலலாம். அது எப்போதும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். எடுத்துச் செல்வதற்கு ஒன்றுமில்லை, இருக்கும்வரை ஆனந்தமாய் இருப்போம் என்ற மனநிலை வந்துவிட்டாலே இனிய நற்குணங்களுக்குச் சொந்தக்காரர்களாகி விடுவோம்.

இதற்கு மேல் தன்னம்பிக்கை அதிகரிக்கவும், இனிய வாழ்வு நடத்தவும் பட்டியல் வேண்டுமா என்ன?

ஓகே..பை.. அடுத்த வாரம் சந்திப்போம்!

ரிஷிகுமார் அவர்களின் இதர படைப்புகள். ஸ்பெஷல்ஸ் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
                         
Your Comments
 
C.PREMALATHA
2/21/2010 , 11:53:13 PM

 [Comment url]
வணக்கம் ரிஷி. பத்தும் பட்டியல் இல்லை. பத்தும் தத்துவங்கள். பொன் மொழிகளாக உதிர்த்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். அப்புறம் உங்களை கண்காணிக்க ஒரு பெரிய குழு வைக்கப் போறாங்களாம். நம்ம கவிதாஜி சொல்றாங்க. இந்த கொ.ப.செ இருக்கும் வரை தைரியமா இருங்க. எங்க வீட்டுக்காரரிடம் சொல்லி உங்களுக்கு பாதுகாப்பிற்கு ஏற்பாடு பண்றேன்....
 
பாலசுந்தர் செந்தில்வேல்
2/22/2010 , 9:09:07 AM

 [Comment url]
அண்ணே, ரொம்ப அருமை, ஆனா..............ரொம்ப கஷ்டம்.
 
kavignar.neerai.athippu
2/23/2010 , 5:39:53 PM

 [Comment url]
ரிஷிகுமர் எடுத்துச் சொல்லும் ரகசியம் அனைத்தும் நெஞ்சில்
மகிழ்ச்சியை தொடங்கி வைத்து மாறாமல் நிலைக்க வைக்கும்.
உறுதியாய் கூறுகின்றேன் உண்மையே புகழ்ச்சி இல்லை.
கவிஞர். நீரை.அத்திப்பூ செல்: 9444446350
 
Devika
2/23/2010 , 9:42:56 PM

 [Comment url]
ரிஷி,
"பாடம்" ரொம்ப நல்ல எடுத்தீங்க. நல்லாருக்கு. பத்து யோசனை அருமை.

("முதலில் முதலில் முதலில் முதலில் நாம் உள்ளேயும் வெளியேயும் அழகு பட இருக்கிறோம்; ஜொலிக்கிறோம் என்ற எண்ணம் தோன்ற வேண்டும்.")

ஓஓஒ........ இப்போ தான் புரியுது எதுக்கு நீங்க எல்லா கட்டுரையிலயும் உங்க படம் போடுறீங்கனு. . . .
 
Kavitha Prakash
2/24/2010 , 12:06:58 AM

 [Comment url]
பிரேமலதா:

//நம்ம கவிதாஜி சொல்றாங்க ?// - எனச் சொல்லி கலக்கீட்டிங்க!. ஆனாலும் இதழ் வெளியாகி இரு நாள்கள் ஆகியும் உங்க தலைவர் பதில் பின்னூட்டம் போடாததைப் பார்த்தால், நீங்க இன்னும் உங்க வீட்டுகாரரிடம் சொல்லலைப் போலிருக்கே?.

கொ.ப.செ குழுவிலுள்ள தொலைத்தொடர்பு தடைகளை களையுங்கள் முதலில் !
 
Rishi
2/24/2010 , 8:37:21 AM

 [Comment url]
வணக்கம் பிரேம்ஸ்!
எனக்கு நீங்க இருக்கும்வரை எந்தக் கவலையுமில்லை. நான் பாட்டுக்கு என் வேலையைச் செஞ்சிக்கிட்டே இருக்கேன். வீட்டில அண்ணனைக் கேட்டதாச் சொல்லுங்க. ரொம்ப நன்றி.
 
Rishi
2/24/2010 , 8:42:19 AM

 [Comment url]
பாலசுந்தர்,
கஷ்டமெல்லாம் ஒண்ணும் கிடையாது. அத்தனையும் ரொம்ப எளிமையானது. உதாரண வாழ்க்கைக்கு, என்னையே பாருங்க. அத்தனை பாயிண்ட்ஸும் பொருந்தும். (இதைத்தான்.. சந்துல சிந்து பாடுறதுன்னு சொல்றது :-))

இஷ்டப்பட்டுப் பண்ணுங்க..
இரும்புத் திரையும்
இலவம்பஞ்சாப் பறக்கும்
(மூணு வரில ஒரு கவிதை எழுதறக்கே பத்து நிமிஷம் யோசிக்க வேண்டியிருக்கே!!!)
 
Rishi
2/24/2010 , 8:45:20 AM

 [Comment url]
வணக்கம் கவிஞர் அத்திப்பூ அவர்களே,
பெயருக்கேற்றாற்போல் நம்ம பக்கம் வந்திருக்கீங்க. புகழ்ச்சிக்கு... ஸாரி.. உண்மையைச் சொன்னதற்கு மிக்க மிக்க நன்றி. உங்கள் கவிதைகளையும் நம் அரங்கில் அரங்கேற்றலாமே?
 
Rishi
2/24/2010 , 8:49:48 AM

 [Comment url]
வாங்க..தேவிகா.
பாடம் நல்லா எடுத்தீங்கன்னு சொல்லிட்டு படிச்சு நடைமுறைப்படுத்தாம போயிடக்கூடாது.. ஆமா..!
ஆஹா...உங்களுக்குத் தெரிஞ்சி போச்சா! ஒவ்வொன்னையும் ஏதோ ஒண்ணோடு இப்படி தொடர்பு படுத்தி நம்மள "படுத்தி"டறீங்களே! இப்படித்தான் புதுசா ஏதோ ஒரு குழு அமைச்சிருக்காங்களாம்.. கொஞ்சம் இருங்க.. அது என்ன்ன்னா வெவரம்னு கேட்டுட்டு வந்துடறேன்!
 
Rishi
2/24/2010 , 10:18:02 AM

 [Comment url]
வாங்க..தேவிகா.
பாடம் நல்லா எடுத்தீங்கன்னு சொல்லிட்டு படிச்சு நடைமுறைப்படுத்தாம போயிடக்கூடாது.. ஆமா..!
ஆஹா...உங்களுக்குத் தெரிஞ்சி போச்சா! ஒவ்வொன்னையும் ஏதோ ஒண்ணோடு இப்படி தொடர்பு படுத்தி நம்மள "படுத்தி"டறீங்களே! இப்படித்தான் புதுசா ஏதோ ஒரு குழு அமைச்சிருக்காங்களாம்.. கொஞ்சம் இருங்க.. அது என்ன்ன்னா வெவரம்னு கேட்டுட்டு வந்துடறேன்!
 
பாலசுந்தர் செந்தில்வேல்
2/25/2010 , 7:21:27 AM

 [Comment url]
நீங்க சொன்ன சரிங்கண்ணே, முயற்சி பண்ணிடலாம். கவிதை அருமை.
 
raja
2/25/2010 , 11:51:55 PM

 [Comment url]
தன்னம்பிக்கை வளர கொடுக்கப்பட்டுள்ள விவரன்கள்தன்னம்பிக்கை உடன் உள்ளது
 
Rishi
2/26/2010 , 11:10:58 AM

 [Comment url]
பாலசுந்தர்,
நான் சொன்னா சரிதானே.. அப்போ நீயும் நம்ம கட்சிதான்பா. அரட்டை குழுவினர் சொல்ற பேச்சையெல்லாம் கேட்காதப்பா.. 18 ரூவா கொடுத்து பஸ்ஸ் ஏறினால் நம்ம வீட்டுக்கு வந்துடலாம்.. எதுனாலும் நேரில பேசிக்கலாம்.. சரியா..!!
 
Rishi
2/26/2010 , 11:15:32 AM

 [Comment url]
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராஜா. தொடர்ந்து வாருங்கள். வாழ்க்கையை ஆனந்தமாய் அனுபவித்து வாழலாம்.
 
பாலசுந்தர் செந்தில்வேல்
2/27/2010 , 1:35:07 AM

 [Comment url]
அண்ணே, இப்போ நான் இருக்கிறது பெங்களூர்ல. மதுரை வரும் பொழுது கண்டிப்பா சந்திப்பேன். (கவல படாதீங்க உங்க அம்மாட்ட எதுவும் சொல்ல மாட்டேன்!!!) உங்கள் கை பேசி எண்ணை என்னுடைய ஈ-மெயில்க்கு (bl_sndr@yahoo.co.in) அனுப்பி வைக்கவும்.

நான் குழு விஷயத்துல ரொம்ப உறுதி. (அந்த பெண்ணை உங்க பக்கம் இழுத்த மாதிரி எங்க குழுவினரை இழுக்க முடியாது!!!!!!!)

Comment
உங்கள் கருத்து
பெயர் :
மின் அஞ்சல் :
சுட்டி :

Comment In:

Tamil English
(Type here in Thanglish and see tamil text in bottom. Tamil conversion powered by : www.suratha.com)
NOTE : Please do not use single quote in your comments. You can use double quote in place.
(English / தமிழில் - யூனிகோட்)
What you see in this box gets posted as feedback.

Hot properties in India

ஜோதிடம் கேளுங்கள் பகுதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைந்து கட்டண சேவை பெற இங்கே சுட்டவும்.

 

 


 

 


About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, India Pakistan cricket series, Kuselan, India Cricket, Sultan The Warrior

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide