கண்ணோடு கண் நோக்கிப் பேச முடிவது மிகவும் சிறப்பு. நம்முடைய நம்பிக்கையை வெளிப்படுத்தி, அதை உயர்த்துவது மட்டுமல்ல, நம் மீதான மதிப்பும் உயரக் கூடும்.
ஹாய் ஃபிரெண்ட்ஸ்!
உங்களில் யாருக்கெல்லாம் வெட்கம் வெட்கமா.......வரும். கை தூக்குங்க பார்க்கலாம்.
அட! யாருமே தூக்கலியே! ஓ! கை தூக்கக் கூட வெட்கமா?? சரி.. சரி.. பரவாயில்ல..
இப்போ அங்க ஒண்ணு இங்க ஒண்ணா ஒவ்வொரு கை எழும்புது. வெட்கம்னு சொன்ன உடனே வீரம் வந்துடுச்சு பாருங்களேன்!!
நாம எல்லோருமே ஓரளவு வெட்கப் படக் கூடியவர்கள்தாம்! அது எந்த வடிவத்துல வேணும்னாலும் வெளிப்படலாம். வாய்ச் சவடால் பேசக் கூடிய, தைரியமான நபர் கூட லிஃப்டில் மூன்று பெண்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டால் வெட்கத்தில் நெளியக் கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு! (நான் அவன் இல்லை! நான் அவன் இல்லை!)
எப்படித்தானய்யா இந்த வெட்கத்தை ஓரங்கட்டறது? இதைப் பத்தி வெட்கமே படத் தெரியாத ஒரு நபர் லெக்சர் கொடுக்கறதை விட, என்னை மாதிரி வெட்கத்திலேர்ந்து கொஞ்ச கொஞ்சமா மீண்டு வர்ற நபர்கள் சொன்னா கொஞ்சம் அனுபவப் பாடமா இருக்கும்! சொல்லட்டுமா?
1. முதலில் விரும்பலாம்..
எதை விரும்பறது? முதல்ல வெட்கத்திலேர்ந்து நாம விடுபடணும்.. நம்ம வேலைக்கு அது ஆகாது.. நம்ம தொழிலுக்கு அது உதவாது.. நம்மகிட்ட அது இருக்கற வரைக்கும் முன்னேற்றம்ங்கிறது எட்டாக் கனிதான். அதனால் அதை விட்டு விலகணும்னு நெஞ்சார விரும்பணும். அந்த அடிப்படை விருப்பம் இல்லைன்னா.. என்னதான் பாடம் படிச்சாலும் 'பழைய குருடி கதவைத் திறடி' கதைதான்! (பழமொழி சரியாச் சொன்னேன்னா? ஞான சம்பந்தன் சார், கொஞ்சம் இதைக் கவனிங்களேன்.)
2. அடுத்து நடிக்கலாம்..
எப்படி நடிக்கறது? சினிமாவும், சீரியலும் நிழல் உலகங்கள். நாம எப்படி இருக்கோமோ, அப்படி இருக்கற மாதிரி காட்டிக் கொள்வது. நம்முடைய உணர்வுகளையும், உணர்ச்சிப் பெருக்குகளையும் முக பாவங்களிலும், அங்க சேஷ்டைகளையும்அசைவுகளிலும் அட்சுர சுத்தமாக வெளிப்படுத்துவது அல்லது அட்லீஸ்ட் காட்டுவது...! நாம் வெட்கம் நிறைந்தவராயினும் அதை வெளிக்காட்டாமல் இருக்கப் பழகிக் கொள்ளலாம். உள்ளுக்குள் உதறல் எடுத்தால் என்ன.. ஷோ காட்டுவது சற்றே எளிதாகக் கூட இருக்கக் கூடும். (ஓவர் ஆக்டிங் வேண்டாம்!!!)
3. உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்..
நாம் இன்னிக்கு எப்படி இருக்கோமோ, அது நாம் எப்படி இருந்தோமோ அதனோட ரிஸல்ட்தான். சரிதானே? உள்முகம் நோக்கப் பழகிக் கொள்வோம். வெளியில் எப்படி இருந்தாலும் நம் அக முகம் நமக்கு மட்டுமே நன்கு பரிச்சயம். ஏன் நமக்கு வெட்கம் வருகிறது, வெட்கப்படுகிறோம் என்ற கேள்விகளுக்கு நம்மை விடச் சிறந்த வகையில் வேறு யாரும் பதிலளிக்க முடியாது. நமக்கு நாமே நேர்மையாகக் கேள்வி கேட்டுப் பதிலைப் பெற முயற்சிக்கலாம். அதற்குக் காரணம் நம் தோற்றமா, நம் பேச்சா, நம் படிப்பா, நம் பழக்க வழக்கங்களா? ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டுக் கொண்டே வந்தால் பளிச்சுனு விடை கிடைக்கும். ஆணிவேரைக் கண்டுபிடித்து அதற்கு வேட்டு வைத்தாலே, வெட்க மரத்தை வெட்டிச் சாய்த்து விடலாம் அல்லவா!
4. கண்கள் இரண்டால்..உன் கண்கள் இரண்டால்..
கண்ணோடு கண் நோக்கிப் பேச முடிவது மிகவும் சிறப்பு. நம்முடைய நம்பிக்கையை வெளிப்படுத்தி, அதை உயர்த்துவது மட்டுமல்ல, நம் மீதான மதிப்பும் உயரக் கூடும். நம்பிக்கை உயரும்போது வெட்கம் நம்மை விட்டு அகலும். கண் நோக்கிப் பேசும்போது எதிராளியின் எண்ண ஓட்டங்களை அறிய முடியும். அதற்கேற்றாற்போலப் பேசும்போது தானே வெட்கம் விலகியோடும்! (எதிராளியிடம் அது தொற்றிக் கொண்டால் ஆச்சரியப் படாதீங்க!!). ஒரேயடியா உற்று நோக்கினாலும் நெகட்டிவா முடியும். கண்ணுக்கு கண்ணா பார்க்க முடியலையா, நெற்றியைப் பாருங்க.. ஜஸ்ட் முகத்தைப் பாருங்க. திக்கினாலும் தொடர்ந்து முயற்சி பண்ணுங்க.
5. பயமில்லை.. ஜகத்தினில் பயமில்லை..
வெட்கப்படுதலின் முக்கியக் காரணியே நாம் தவிர்க்கப்பட்டு விடுவோமோ என்ற பயம்தான்! நம் எண்ணங்கள் நசுக்கப்பட்டு விடுமோ, நம் சிந்தனைகள் கேலிக்குரியதாகி விடுமோ, நாம் ஒதுக்கப்பட்டு விடுவோமோ என்ற ரீதியிலான பயமே நம்மை வெட்கச் செய்து ஒதுக்கி விடும். ஏற்கெனவே இது போன்ற விஷயத்தில் கடந்த காலத்தில் பட்டிருக்கும் சூட்டின் வெளிப்பாடு இப்போது தெரியக்கூடும். அதை நம்மால் கடக்க முடிந்தால், அந்த பயத்தினை நசுக்கி எறிய முடிந்தால் வெட்கம் தானே வெட்கி மறைந்து விடும். நடக்கப் போகும் விஷயத்தின் பாஸிட்டிவான நிகழ்வுகளையும், அதனால் உருவாகும் நல்விளைவுகளையும் மட்டும் கருத்தில் கொண்டு பயமின்றி இருக்கப் பழகலாம்.
6. சுயவிமர்சனம் எதற்கு..
சுயவிமர்சனம் தேவைதான். ஆனால் அந்த சுயவிமர்சனமே நம்மை முடக்கிவிடும் என்றால் அது தேவையா? பல நேரங்களில் இந்த இடத்தில் இப்படித்தான் தோற்றமளிக்க வேண்டும், இந்த இடத்தில் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று நமக்கு நாமே விதிமுறைகளை உருவாக்கிக் கொள்வோம். அந்த விதிமுறைகளை மீறாமல் நடக்கிறோமோ என்று அடிக்கடி வேறு சோதித்துக் கொள்வோம். இது போன்ற சுய அலசல்கள் எல்லா நேரமும் தேவையில்லை, நம்மை நாமே நேசிக்க வேண்டும், நம்மை நாம் விரும்பாவிட்டால் வேறு யார் விரும்புவார் என்ற எண்ணங்கள் ஏற்பட வேண்டும். நம்மை நாம் விரும்ப ஆரம்பித்து விட்டாலே வெட்கத்தை விட்டொழித்து பிறரிடம் நம்மை எடுத்துக் காட்ட ஆரம்பித்து விடுவோம், என்னைப் போல.. (அப்பாடி! சுய புராணம் பாடியாச்சு!!)
தொடர்ந்து முயற்சி பண்ணினால், செயல்படுத்த எண்ணி முனைந்தால், வெட்கத்தைக் கிள்ளி எறியலாம். செய்வோமா?
செய்யலாமே..!
எங்கேருந்து ஆரம்பிக்கலாம்..?
வெட்கப்படாம, கூச்சப்படாம.. ஆஹா.. ஓஹோன்னு.. கட்டுரை அருமையா எழுதியிருக்கீங்க ரிஷின்னு அழகா பொய் சொல்ல முதல்லப் பழகுவோம். அப்படி பின்னூட்டம் போடப் போட, தானே வெட்கம் போயிடும்.. சரிதானே!
வணக்கம் நண்பர்களே, நம்ம ரிஷி வெட்கப்பட்டுகிட்டு அவங்க ஆள்கிட்ட , தன்னோட காதலை இன்னும் சொல்லவே இல்லை போல இருக்கு. நம்ம வீரமா இருக்கணும்னு சொன்னதால இப்போ வெட்கத்தை பத்தி எழுதி மறைமுகமா நமக்கு பல தகவல்களை சொல்ல வர்ற மாதிரி இருக்கு. அதனால இன்னும் கொஞ்ச நாள் நாம வெயிட் பண்ணுவோம். நம்ம எல்லாரும் நம்ம ரிஷிக்காக புறா, அன்னம் மாதிரி தூதுவர்களாக போவதற்கும் ரெடியா இருக்கணும். என்ன சொல்றீங்க? ரிஷி, வெட்கப்படாம விஷயத்தை எங்ககிட்டயாவது சொல்லுங்க!!!!
வணக்கம் ரிஷி. தேவி ராஜன் என்னவோ சொல்றாங்க. கட்டுரையை முழுசா படிக்கவில்லை போலிருக்கு. வெட்கப் பட வேண்டாம் என்று தானெ சொல்லியிருக்கிறீர்கள். அப்புறம் என்ன? எல்லோருக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். எங்க தலைவருக்கு யாரும் தூது போக வேண்டாம். அவருடைய எழுத்தைப் பார்த்து அவர்களே தேடி தேடி காதலை சொல்வார்கள். (அப்பாடி எப்படியோ விசயத்தை போட்டு உடைச்சாச்சு) மன்னித்து விடுங்கள் தலைவரே. உங்கள் பலம் உங்களுக்கு தெரியாது.
அண்ணே, ரொம்ப அருமையான கட்டுரை. ஒரு சின்ன வேண்டுகோள், எழுதும் போது ரிஷ் ராக்ஸ் பக்கத்துல அது எத பத்தினு சின்னதா ஒரு குறிப்பு போடுங்க. எதுக்குன்னா உங்க ரத்த தானம் கட்டுரைய இன்னொரு தடவ படிக்கணும்னு பாத்தபோ தேடுரதுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.
சரி...சரி... மக்களே! என்னோட கொ.ப.செ.வே சொல்லிட்டாங்க... ஆனால் இப்படிப் பல பேரு கிளம்பி வந்தா நான் என்ன பண்றது!! அதனாலத்தான் ஏரியாவுக்குள்ள இருக்காம அப்பப்போ சதுரகிரிமலைக்க்கு எஸ்கேப்பிடறது வழக்கம்!! மற்றபடி வேறொன்றுமில்லை என்பதை ஆணித்தரமாக அடித்துக் கூறிக் கொள்கிறேன். வரும் காதல் அப்ளிகேஷன்களை என் கொ.ப.சே ஒருவரால் மட்டும் பார்த்து கழித்துக் கட்ட முடியாது என்பதால் அதற்கும் தனியாக சம்பள ஆள் போட்டிருக்கிறேன். (இது எதுல போயி முடியப்போவுதோ....ஆத்தா...பேச்சியாத்தா!!!!! என் குலதெய்வமே...காப்பாத்து!!)
பாலசுந்தர் //ரிஷ் ராக்ஸ் பக்கத்துல அது எத பத்தினு சின்னதா ஒரு குறிப்பு போடுங்க.// இது கூட நல்ல ஐடியாவாத்தான் இருக்கு. ஆனா எல்லா வாரங்களுக்கும் இது பொருந்தாதே..! பல நேரங்கள்ல கைக்கு வந்தத எழுதிக்கிட்டிருக்கேன். இருந்தாலும் பார்க்கலாம்.
தலைவா....! சம்பள ஆளா? யார் அது? எத்தனை தெய்வத்தை கூப்பிட்டாலும் உங்களை காப்பாத்துறது இனி கஷ்டம்தான்!
பாலா! உங்க தலைவி எங்க தலைவரை நம்ம ரிஷி என்று சொல்லி அவர் எங்க தலைவருக்காக தூது செல்லக் கூட தயார் ஆகிவிட்டார். இதிலிருந்து என்ன தெரிகிறது? உங்க தலைவி உங்க கட்சியில் இருந்து கொண்டே எங்க தலைவருக்குத்தான் சாதகமா இருக்கிறார். அதனால் சத்தமில்லாமல் நீங்களும் எங்க கட்சியில் சேர்ந்துடுங்க. எங்க தலைவரிடம் சொல்லி உங்களுக்கு இளைஞர் அணி தலைவர் பதவிய தர சொல்றேன். (எப்படியோ இரண்டு பேரை இழுத்தாச்சு...)
எங்க அணில இருந்து யாரயும் உங்களால இழுக்க முடியாது. அதென்ன நீங்க, எதிர்த்து போராடாம, எல்லரயும் இழுக்க பாக்குறீங்க? இதெல்லாம் அரசியல்ல தான் இங்க பண்ணலாம்னு நினைக்க கூடாது. (என்னா................... வில்லதனம்..................................)
ப்ரேமா, ரிஷி எதிரணியா இருந்தாலும், அவருக்கு உதவி தேவைப்பட்டா எங்க இயக்கதிலிருந்து யார் வேணாலும் முன்வருவோம். ஏன்னா நாங்க அன்பால் இணைந்த இயக்கம். (காசு கொடுத்து கரெக்ட் பண்ண கூட்டம் இல்லைன்னு சொல்லாம சொல்லிக்கிறேன்).
ரிஷி, இப்போ பல இளம்???? பெண்களுக்கு சாமியார்களைத் தான் ரொம்பப் பிடிக்குது. அதுக்குத்தான் சதுரகிரி மலை எல்லாம் போறீங்களோ? முன்னெச்சரிக்கையா பேரைக்கூட ரிஷி வெச்சிருக்கீங்க....நாங்கல்லாம் சேர்ந்து ஒரு பெண்ணை செட் அப் பண்ணலாம் பாத்தா நீங்க வேற ரூட்ல போற மாதிரி தெரியுது...(எங்க போனாலும் விடமாட்டம்ல விடமாட்டம்ல)
தேவி, ரிஷி தன்னோட பெயர இப்படி வச்சதுக்கு காரணம் இது தானா அப்போ..
பாலசுந்தர், என்ன இது...??? புதுசா இன்னொரு ஒரு குழு ஆரம்ப்பிச்சிடுவீங்க போலருக்கே நீங்களும் தேவிராஜனும் சேர்ந்து. (வேண்டாம்... அழுதுருவேன்...)என்ன கொடும கவிதா இது....
ஆங்................. இப்டி தான் ரகசியத்த காப்பாத்தணும் தேவிராஜன்.
ரிஷி குழுவினரே (முக்கியமா கொ.ப.செ), இந்த இரண்டு பின்னூட்டங்களயும் படிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் (பார்க்கும் போது கண்ண மூடிக்கோங்க அப்டியே பாத்தாலும் மறந்துடுங்க)
வெட்கம் தேவைதான் நீ வெட்கப்படும் போது என் தேவதைதான் பயம் தேவைதான் பாவத்திற்கு பயப்பட பயம் தேவைதான் உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகமே உன்னிட்ம்தான்வே அட்சம் இல்லை அட்சம் இல்லை அட்சம் என்பது இல்லையே பாரதிக்கு வனக்கம்
தேவிகா, //எங்க (சொந்த)ஊரு உங்க ஊரு பக்கம் தான்ங்க. கடலை மிட்டாய்க்கு புகழ் பெற்ற ஊரு. ஆனா இப்போ கார்டன் சிட்டில இருக்கோம். // குமுதத்துல கொஞ்சநாளு வேலை பார்த்தீங்களா..? கிசுகிசு மாதிரி எழுதுறீங்களே.. இதைப் புரிஞ்சிக்கற அளவுக்கு எங்களுக்கு வெவரம் பத்தலையே!! //கைபேசி மூலமாகவும் பின்னூட்டம் போடுற மாதிரி வசதி இருந்தா ரொம்ப நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?// இப்பவே இப்படி!!!!!! இன்னும் அப்படி வேறயா..!
//தேவி, ரிஷி தன்னோட பெயர இப்படி வச்சதுக்கு காரணம் இது தானா அப்போ..// அட மக்கா..!!! நான் "அவர்" இல்லை.. நான் "அவர்" இல்லை..!! //புதுசா இன்னொரு ஒரு குழு ஆரம்ப்பிச்சிடுவீங்க போலருக்கே நீங்களும் தேவிராஜனும் சேர்ந்து. (வேண்டாம்... அழுதுருவேன்...)// உட்கட்சிப் பூசல் ஆரம்பம்... உள்நாட்டுக் குழப்பம் ஆரம்பம்..! அப்பாடி! இனிமே நம்மள விட்டுறுவாங்க...!!
//வெட்கம் தேவைதான் நீ வெட்கப்படும் போது என் தேவதைதான் பயம் தேவைதான் பாவத்திற்கு பயப்பட பயம் தேவைதான்// ராஜா, நல்லா ட்ரை பண்றீங்க... கவிதை மாதிரி வருது.. இது எந்த வெண்பா வகையைச் சார்ந்தது? (இருந்தாலும் நம்ம கவிதைக்கு இது ஒன்னும் மோசமில்லைனு ஒத்துக்கத்தான் வேணும்!!!!)
ரிஷி. வெற்றி நமக்கு. கட்சியினர் ஓவ்வொருவராக நம் அணியில் சேர வருக்கின்றனர். நம் கட்சியின் அடிப்படையே அன்புதானே! அதுதான் எல்லோரும் இங்கு வர ஆரம்பிக்கின்றனர். வருபவரை வரவேற்க நான் ரெடி. நீங்க ரெடியா?
அப்புறம் இந்த தேவி, பாலா பின்னூட்டங்களை நான் படிக்கலை. அந்த பின்னூட்டங்களை நான் பார்க்காமல் கண்ணை மூடிக்கிட்டேன். (எப்படியோ பாலா! நீங்க சொன்னதா நான் யாரிடமும் குறிப்பா தேவியிடம் சொல்ல மாட்டேன்)
unga katturaiyai vida, binoodam athigama iruku, Binoodam padikathan athiga neram aachu... :) its okay. good one. all the best for your bright future. May GOD bless you. by, Surya
பிரேம்ஸ், //நம் கட்சியின் அடிப்படையே அன்புதானே! அதுதான் எல்லோரும் இங்கு வர ஆரம்பிக்கின்றனர். வருபவரை வரவேற்க நான் ரெடி. நீங்க ரெடியா? // நிச்சயமாக..! கவிதா ஏற்கெனவே வந்தாச்சு. அமெரிக்காவிலேர்ந்து தொலைபேசினாங்க. அவங்க என்னிக்கும் நம்ம கூட்டணிதானாம். அதை உறுதிப்படுத்திட்டாங்க.. அதான் இங்கே பின்னூட்டம் போடவே வரலை. பார்த்தீங்களா..? தம்பி பாலசுந்தரும் என்னிடம் பேசியாச்சு. இங்கேதான் சும்மா உல்டா விட்டுக்கிட்டு இருக்காப்ல. ஜோ பத்தியெல்லாம் ஒண்ணுமே கிடையாது. அவங்க என்னிக்கும் என் பக்கம்தான். இந்த ரெண்டு தேவிமார்கள்தான் இருக்காங்க. அவங்களைப் பார்த்தெல்லாம் நாம பயப்படத் தேவையில்ல... :-)
அடடா ! நான் வர லேட்டானா, எதிர்க்கட்சி வாலாட்டற மாதிரி இருக்கே!. எல்லோரும் இந்நாட்டு மன்னர்களுனு சொல்றது போல எங்க குழுவில எல்லோரும் தலைவி/தலைவன் தான்.
தல ஜோ சொன்ன மாதிரி, ரிஷிக்குமாருக்கு உதவிக்கு வருவோம். அதே சமயம் அவர் ஒருத்தரை விரும்பறதை ஒத்துக்கறவரைக்கும் எங்க குழுவில் பிரிவினை கிடையாது. தொலைப்பேசியாவது உண்மையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
கவிதா! ரிஷியின் கட்டுரைகள் அருமையாக உள்ளது. அவற்றை மட்டும் பாராட்டலாமே! மற்றவைகளை கேட்டு ஏன் அவரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்த வேண்டும்? ( சும்மாதான் கேட்கிறேன், சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நட்பாய் கேட்டிருக்கிறேன்)
கூச்சமும் வெட்கமும் கூடப் பிறந்ததுகள். தொடுவதற்குக் கூச்சப்பட்டான்; தொட்டுவிடுவானோ என்று வெட்கப் பட்டாள் என்று எடுத்துக்காட்டு கூறலாம். நாணமும் தொடர்புடைய சொல் தான். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று பெண்களின் பண்பு நலன் பாராட்டுவர். கருவேல மரத்துக்கு அஞ்சாதா கோடரி கதலித் தண்டுக்கு நாணுமாம். பிறர் நாணத் தக்கது தான் நாணானாயின் அறம் நாணத் தக்கது உடைத்து என்பார் வள்ளுவர். ஊரில் எல்லோரும் நான் நாராயணன் மேல் கொண்ட காதலை அறிந்து கொண்டார்கள்; இனி வெட்கப்பட்டு ஒரு பயனும் இல்லை என்று நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் பாடுவாள்: நாணி இனியோர் கருமமில்லை...
முகம் பார்த்து விழி நோக்கிப் பேசினால் அகத்தில் அச்சம் அகலும்; வெட்கம் ஓடிப்போகும்.
(பின்னூட்டம் ஊட்டாமை:- சின்னஞ் சிறுசுகளுக்கு இடைஞ்சல் இல்லாமல் பெரியவர்கள் இருப்பது சகஜம் தானே!)