Home  
இதழ் 459

மார்ச் 08 2010


www.guruji.com

Search

 

Nilacharal Web

Search in English

Help
 

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
A R Rahman
Wanted Freelancers!
Home>>திரைச்சாரல்

திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் (50)
- ச.நாகராஜன்

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

பாடலை முழுவதும் கேட்ட பின்னரே பாடல் வரிகளைப் படிக்க வேண்டும். அப்போதுதான் அதன் முழு ஆழத்தையும் நம்மால் உணர முடியும்!

உந்தன் சபையில் எந்தன் விதியை சோதித்தே ராஜாவே நானும் பார்த்தேனே!

1955ம் ஆண்டு வெளியான அனார்கலி படத்தில் அனைத்துப் பாடல்களையும் ஜிக்கியே பாடினார், ஒரே ஒரு பாடலைத் தவிர. அந்த ஒரு பாடலை பி.சுசீலா பாடினார். ஏ.எம்.ராஜாவுடன் கொடி கட்டிப் பறந்த காலங்களில் ஜிக்கி பாடிய பாடல்கள் அனைத்தும் பெரும் புகழ் பெற்றன. 1961ல் அக்பர் வெளியான போது காலச் சுழற்சியினால் சுசீலா மெலடி க்வீனாக பரிமளித்துக் கொண்டிருந்தார். ஜிக்கி சிறிது பின்னால் இருந்தார். ஆகவே அக்பர் படத்தில் அவருக்கு இரு பாடல்கள் பாடவே வாய்ப்புக் கிடைத்தது. இதில் கவ்வாலி பாடலான 'உந்தன் சபையில்' பாடலை ஜிக்கியும் சுசீலாவும் இணைந்து பாடினர்.

'ஹிந்தி முகலே ஆஜத்தில் தேரி மெஹ்பில் மே கிஸ்மதி ஆஜம்கர்' என்ற கவ்வாலி பாடலை லதா மங்கேஷ்கரும் ஷம்ஷட் பேகமும் பாடி இருந்தனர். 'அல்லா உன்னை எந்நாளும் காக்க வேண்டும்' என்ற இன்னொரு பாடலையும் ஜிக்கி பாடினார்.

'ப்யார் கியா தோ டர்னா க்யா' என்ற பிரபல ஹிந்தி பாடல், 'காதல் கொண்டாலே பயமென்ன' என்று தமிழ் வடிவம் எடுத்தது. அக்பரும், ஜோத்பாயும், சலீமும் வீற்றிருக்கும்போது காதலிப்பது என்ன குற்றமா என்று தைரியமாக அனார்கலி தன் கருத்தைத் தெரிவிப்பதாக அமைந்துள்ள பாடல் இது.

ஹிந்தியில் இசை அமைத்திருந்த பிரபல இசை அமைப்பாளர் நௌஷாத் முதலில் இரண்டு பாடல்களை சரியில்லை என்று நிராகரித்து விட்டார். நேரமோ நள்ளிரவு. திடீரென்று அவருக்கு கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் ப்ரேம் கியா க்யா சோரி கரி ஹை - காதல் செய்தால் அது என்ன திருட்டா - என்ற நாடோடிப் பாடல் ஒன்றின் நினைவு வந்தது. இதை ஷகீல்சாஹப்பிடம் அவர் தெரிவிக்கவே உடனே அவர் 'ப்யார் கியா தோ டர்னா க்யா' என்று அழகுற மாற்றி விட்டு மடமடவென்று மற்ற சரணங்களை எழுத ஆரம்பித்தார். பாடல் முடிவு பெற்ற போது சூரியன் அழகுற தன் கிரணங்களை அள்ளி வீசி உதயமாகி இருந்தான்.

அன்றைய நாளில் சவுண்ட் ரிகார்டிங் இன்று போலுள்ள நவீன சாதனங்களைக் கொண்டிராததால் பாடலின் முழு வெற்றிக்காக லதா மங்கேஷ்கரை ஸ்டுடியோ பாத்ரூம் ஒன்றிலிருந்து இதைப் பாட வைத்தார் நௌஷாத். அப்போதுதான் விரும்பியபடி தனது பாடல் அமையும் என்ற அவரது கணிப்பு, பாடல் வெளியான பின் அது அடைந்த வெற்றியில் தெரிந்தது!

இந்தப் பாடலின் படப்பிடிப்போ ஒரு தனிக்கதை. இது எடுக்கப்பட்ட கண்ணாடி அரண்மனைக் கூடம் அமைக்க இரண்டு ஆண்டுகள் ஆயின! ஆயிரக்கணக்கான கண்ணாடிகள் வாங்கப்பட்டன. பெல்ஜியக் கண்ணாடிகள் தரம் வாய்ந்தவை என்பதால் அங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. லைட்டிங் எஃபெக்டுக்காக 500 வாகனங்களின் ஹெட் லைட்டுகள் பயன்படுத்தப்பட்டன. கறுப்பு வெள்ளை படத்தின் நடுவே இரு பாடல்களும் க்ளைமாக்ஸ் காட்சியும் வண்ணத்தில் இடம் பெற்ற படம் இது! வண்ணத்தில் மலர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று!

முகலே ஆஜத்தைத் தொடர்ந்து வெளியான அக்பர் படம் தமிழில் வெற்றி பெறாதது மட்டுமல்ல; அதன் பிரதிகளும் பின்னால் காணப்படவில்லை எனத் தெரிகிறது. ஆனால் நல்ல வேளையாகப் பாடல்கள் மட்டும் இன்று கிடைத்துள்ளன.

பி.சுசீலாவும் ஜிக்கியும் இணைந்து பாடிய உந்தன் சபையில் எந்தன் விதியை சோதித்தே ராஜாவே நானும் பார்த்தேனே என்ற பாடல் ஹிந்தி படத்தை ஒட்டி அதே இசையமைப்பில் தமிழ்ப் படத்தில் இடம் பெற்றது.

பாடலை முழுவதும் கேட்ட பின்னரே பாடல் வரிகளைப் படிக்க வேண்டும். அப்போதுதான் அதன் முழு ஆழத்தையும் நம்மால் உணர முடியும்! இல்லையேல் பொருளற்ற புலம்பலாகத்தான் பாடல் வரிகள் தோன்றும்!!

பாடல் இதோ:-

பி.சுசீலா: ஆஆ
ஜிக்கி: ஆஆ
பி.சுசிலா ஆஆ
உந்தன் சபையில் எந்தன் விதியை சோதித்தே
நானும் பார்த்தேனே
கணமேனும் மனம் வந்தே ராஜாவே
கோரஸ்:நானும் பார்த்தேனே
கணமேனும் மனம் வந்தே ராஜாவே நானும் பார்த்தேனே
ராஜாவே நானும் பார்த்தேனே


ஜிக்கி: ஆஆ
உந்தன் சபையில் எந்தன் விதியை சோதித்தே
நானும் பார்த்தேனே
உந்தன் பதமே தலை பணிந்தேன் ராஜாவே
கோரஸ்:ராஜாவே நானும் பார்த்தேனே
உந்தன் பதமே தலை பணிந்தேன் ராஜாவே
நானும் பார்த்தேனே
ராஜாவே நானும் பார்த்தேனே

பி.சுசீலா: ஆ ஆ
தூதாக வந்ததினாலே வசந்தம்
காதல் பூஜைக்கே
பன் நா§;ள கடந்து அன்பின் பூ அரும்பே
தான் நகை செய்யுதே
கோரஸ்: பன் நாளே கடந்து ராஜாவே
பி,சுசீலா:ஆ ஆ
கோரஸ்: பன் நாளே கடந்து அன்பின் பூ அரும்பே தான் நகை செய்யுதே
பி.சுசீலா: மனத் துயரை சற்றே நீக்கி
கோரஸ் :ராஜாவே நானும் பார்த்தேனே
மனத் துயரை சற்றே நீக்கி ராஜாவே நானும் பார்த்தேனே
ராஜாவே நானும் பார்த்தேனே

ஜிக்கி: ஆஆ மனமதில் துயரம் இல்லை ஏன் இவ் வாழ்வில் தான்
இன்பம் உண்டோ
கண்ணீரில் நெஞ்சின் ரத்தம் சேரப் போனால்தான் இன்பம் உண்டோ
கோரஸ்:கண்ணீரில் நீந்தும் ராஜாவே
ஜிக்கி: ஆஆ
கண்ணீரில் நெஞ்சின் ரத்தம் சேரப் போனால்தான் இன்பம் உண்டோ
ஜிக்கி: காதல் தனக்கே கண்ணீர் சிந்தி
கோரஸ்:ராஜாவே நானும் பார்த்தேனே
காதல் தனக்கே கண்ணீர் சிந்தி ராஜாவே
நானும் பார்த்தேனே
ஜிக்கி : ஆ ஆ ஆ உந்தன் சபையில் எந்தன் விதியை சோதித்தே
நானும் பார்த்தேனே
கோரஸ் : நானும் பார்த்தேனே

பி.சுசீலா :ஆஆஆ காதல் கொண்டோர்களின் கதையே சொல்வேன்
கருத்தாக நீயே கேள்.. கனவிலும் ஏங்கி ஏங்கி ஏக்கம் கொண்டே சாவார் நீயே கேள்
கோரஸ் : கனவிலும் ஏங்கி ராஜாவே
பி.சுசீலா :ஆஆஆ
கோரஸ்: கனவிலும் ஏங்கி ஏங்கி ஏக்கம் கொண்டே சாவார் நீயே கேள்
பி.சுசீலா : நாளை நேரம் இத்தமாஷை ராஜாவே
கோரஸ் : நானும் பார்ப்பேனே
நாளை நேரம் இத்தமாஷை ராஜாவே நானும் பார்ப்பேனே
பி.சுசீலா:உந்தன் சபையில் எந்தன் விதியை சோதித்தே நானும் பார்த்தேனே
கோரஸ்: ராஜாவே நானும் பார்த்தேனே

ஜிக்கி: ஆ ஆ ஆ காதல் தான் வாழ்வு தனையே சூறையாடும் என்பதும் உண்மை இறந்து போன பின் அறிவார் இவ்வுலகில் காதலின் உண்மை
கோரஸ்: இறந்தே போன ராஜாவே
ஜிக்கி: ஆ ஆ ஆ ஆ
கோரஸ் இறந்தே போன பின் அறியார் இவ்வுலகில் காதலின் உண்மை
ஜிக்கி:: இக்காதல் பாதையில் இருந்தே ராஜாவே
கோரஸ் : நானும் பார்த்தேனே இக்காதல் பாதையில்
ஜிக்கி ஆ ஆ ஆ
கோரஸ் :உந்தன் பதமே தலை பணிந்தே ராஜாவே

பி.சுசீலா:ஆ ஆ ஆ
கோரஸ்: : கணமேனும் மனம் வந்தே ராஜாவே
ஜிக்கி ஆ ஆ ஆ
கோரஸ்: உந்தன் சபையில் எந்தன் விதியை சோதித்தே நானும் பார்த்தேனே
ராஜாவே நானும் பார்த்தேனே நானும் பார்த்தேனே

பாடல் வரிகள் திரும்பத் திரும்ப ஒலிக்கப்படுவது இந்தப் பாடலைப் போல வேறு எந்தப் பாடலிலும் இந்த அளவு இல்லை என்று கூறலாம்! ராஜாவே நானும் பார்த்தேனே என்ற வரிகள் மாறி மாறி ஒலிக்கின்றன. ஜிக்கியும் சுசீலாவும் அற்புதமாக இணைந்து பாடியுள்ளனர்.

கதையின் நிலைக்களன், பாடல் இடம் பெறும் சூழ்நிலை, பாடலைப் பாடுபவர், அதைக் கேட்பவர்கள், பாடலில் சொல்லப்படும் கருத்து ஆகிய அனைத்தையும் சேர்த்து வைத்துப் பார்க்கும் போது கதையின் மையக் கருத்தும் அதில் ஒட்டி இருக்கும் சோகமும் நமக்குப் புரியும். தமிழ்த் திரை இசைப் பயணத்தில் இது ஒரு முக்கியப் பாடல் எனலாம்.

(தொடரும்)


ச.நாகராஜன் அவர்களின் இதர படைப்புகள். திரைச்சாரல் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
                         
Your Comments
 
K.PRABAKARAN
6/7/2010 , 1:21:47 PM

 [Comment url]
தேனில் நனைந்த பலாச் சுளைகள்.
Comment
உங்கள் கருத்து
பெயர் :
மின் அஞ்சல் :
சுட்டி :

Comment In:

Tamil English
(Type here in Thanglish and see tamil text in bottom. Tamil conversion powered by : www.suratha.com)
NOTE : Please do not use single quote in your comments. You can use double quote in place.
(English / தமிழில் - யூனிகோட்)
What you see in this box gets posted as feedback.

Hot properties in India

ஜோதிடம் கேளுங்கள் பகுதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைந்து கட்டண சேவை பெற இங்கே சுட்டவும்.

 

 


 

 


About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, India Pakistan cricket series, Kuselan, India Cricket, Sultan The Warrior

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide