எழுத்துப் பிழைகளை மன்னிக்கலாம்.. எழுத்துக் கலப்படங்களையும் கூட மன்னிக்கலாம்.. ஆனால் எழுத்து சொல்லும் கருத்துப் பிழையை மட்டும் மன்னிக்க முடியாது.
ஹாய் ஃபிரெண்ட்ஸ்!
சென்ற வாரம் பார்க்கக் கூடாததையெல்லாம் பார்த்துத் தொலைத்திருப்பீர்கள். "காசு"தான் எல்லாமே.. அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்காக முதலாளிமார்களால் எடுக்கப்பட்ட அதிதீவிர முயற்சிகளைப் பார்த்து நொந்திருப்பீர்கள். வியாபார, பொருளியல் உலகில் அந்நோக்குடனே அலையும் கூட்டத்திடமிருந்து தப்பிப்பது எப்படி என்றெல்லாம் அடுத்து நூல்கள் வந்து குவியக் கூடும்! இத்தனைக்கு நடுவில் நிலாச்சாரல் பக்கமும் எட்டிப் பார்க்க நேரமிருந்து, தொடர்ந்து வாசித்தவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்!
அதெல்லாம் ஒரு பக்கமிருக்கட்டும். நம்ம மேட்டருக்கு வருவோம்.
சமீபத்தில் ஒரு நண்பரின் குட்டி மகளுக்காக இண்டெர்நெட்டில் சில தகவல்களை வலை வீசிப் பிடித்துக் கொண்டிருந்தோம். "World's Top 10 personality" என்னும் தலைப்பில் அச்சிறுமி ஒரு கட்டுரை எழுத வேண்டுமாம். பள்ளியிலிருந்து வழங்கப் பட்டிருந்த அசைன்மென்ட். CBSE பாடத்திட்டத்தில் படிக்கும் அச்சிறுமிக்கு கொடுக்கப்படும் அசைன்மெண்ட்டெல்லாம் வியக்கும்படிதான் இருக்கிறது. பாடத்திட்டத்திலேயே அப்படித்தான் இருக்கிறதா அல்லது உள்ளூர் பள்ளியில் அப்படி சொல்லிக் கொடுக்கப்படுகிறதா எனத் தெரியவில்லை.
அதன்படி, மின்சாதனப் பொருட்களின் செயல்பாடு, நுண்ணியிரிகளின் ஜீன்கள், சேட்டிலைட்டுகளின் தொடர்பாடல், நேனோடெக்னாலஜி என ஸ்பெஷல் வீட்டுப் பாடங்கள் ரொம்ப அட்வான்ஸாக அள்ளி வீசப்படுகின்றன. அது போக பெரும் புரட்சியாளர்கள், தலைவர்கள், பிரபலங்களின் குணாதிசயங்கள் என அக்குழந்தைகள் அறிந்திராத வரலாற்றுப் பக்கங்களையும் புரட்ட வேண்டியிருக்கும்.
பெற்றோரின் உதவியோடு, நூலகங்களில் தேடியோ, வலையகத்தில் துழாவியோ நான்கைந்து பக்கங்களின் பட விளக்கங்களுடன் கட்டுரை சமர்ப்பிக்க வேண்டுமாம். பல நேரங்களில் ஆங்கிலத்திலும், சில நேரங்களில் தமிழிலும் கட்டுரை எழுத வேண்டும். நம்மைப் பெரிய அறிவுஜீவியாகக் கருதி நம் வீட்டுக்கு வந்து விடுவார் நண்பர்! உங்க நெலாச்சாரல்லேர்ந்து மேட்டரு எடுத்தெடுத்து ஈஸியா போட்டுறலாம்ல... அதான் உன்னைத் தேடி வந்தேன் என்பார். தகவல்களை எடுத்து, கட்டுரைக்கு ஏற்றவாறு கொஞ்சம் மாற்றிக் கொடுத்து, பிரிண்ட் எடுத்துக் கொடுத்தால் வீட்டுக்குச் சென்று அங்கு கொஞ்சம் பாலீஷ் செய்து, பின் சமர்ப்பித்து விடுவாள் சிறுமி.
பெரும்பாலான எல்லா அசைன்மெண்டுகளிலும் நம் சிறுமிதான் முதல் மதிப்பெண் பெறுபவள் என்பதை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை. தகவல்களை தேடி எடுத்துக் கொடுத்தது நான் என்பதை வைத்தே உங்களுக்கு இதன் ரிஸல்ட் தெரிந்திருக்கும்!!! இதை எந்தக் கர்வமும் இல்லாது மிகவும் தாழ்மையுடன் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்J
அட.. நான் சொல்ல வந்த விஷயமே வேறு. அதை விட்டுவிட்டு சுயபுராணம் பாடிக் கொண்டிருக்கிறேன். "World's Top 10 personality" என்ற தலைப்பைக் கொடுத்து தேடச் சொல்லி கூகுளாண்டவரிடம் மனுச் செய்தோம். நம்மூர் போலிஸ் மாதிரியெல்லாம் இல்லை கூகுளாண்டவர்! உடனே "இதுவா..அதுவா.. இது இல்லைனா.. அதுவா இருக்குமா..." என பக்கங்களை வாரியிறைத்தது கூகுள். பைக் காணவில்லை என்று உள்ளூர் போலிஸில் புகார் கொடுத்து விட்டு நாலு நாள் கழிச்சிப் போயிக் கேட்டால், கொடுத்த கம்ப்ளையிண்ட் லெட்டரைக் காணவில்லை என்று ரெக்கார்டுகளைத் தூசி தட்டி கடை பரப்பிக் கொண்டிருந்தார் ஏட்டையா. (அவுகள..அப்படிச் சொன்னாத்தான் மரியாதையாம்!!!) கம்ப்ளையிண்ட் செய்து பத்து நாட்கள் கழித்து நம்மளை இவன் விடமாட்டான்டான்னு தெரிஞ்ச பிறகுதான் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்த இவர்களது கடமை உணர்ச்சியைக் கண்டு என் கண்கள் கலங்கிவிட்டன!
மறுபடியும் மறுபடியும் மேட்டரை விட்டு எஸ்கேப் ஆகுறேன்.. பாருங்க..! Personality என்ற வார்த்தையைப் போட்டுத் தேடவும், நண்பர் சரவணக்குமார் வந்து விட்டார். Persona என்றால் லத்தீன் மொழியில் 'முகமூடி' என்று அர்த்தமாம். Persona என்ற வார்த்தையில் இருந்து உதித்த ஆங்கில வார்த்தைதான் Personality என்பது. முகமூடி அணிபவன் தன் ஒரிஜினாலிட்டியை மறைக்கிறான் என்பது அர்த்தம்.
அந்த வகையில் ஒருவனை உலகிலேயே Great personality என்பதாகச் சொன்னால் அவன் ஒரு மகா நடிகன் என்றுதான் அர்த்தம். உலகின் பெரும்பாலான Personalityகள் முகத்திரையுடனேதான் அலைகின்றன. அவர்களை சிறந்த மனிதர்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறும் சரவணக்குமார், சிறந்த மனிதர்கள் என்றால் அவர்களை Great individuals என்றுதான் சொல்ல வேண்டும் என்று வாதிடுகிறார்.
Persona என்பதை Per+Sona என்பதாக அவர் பிரிக்கிறார். sona என்றால் சத்தம், ஒலி, அதிர்வு என்று தமிழில் பொருள் சொல்கிறார்கள். அந்த ஒலி அல்லது அதிர்வு என்பது எவ்விதக் கலப்படமுமற்றது. இயற்கையாய் அது எழுவது. Per என்றால் எதிரான என்று அர்த்த்தமாம். Personal - இயல்புக்கு மாறான அல்லது கலப்படமான என்று அர்த்தம் கொள்ள வேண்டுமென அந்நண்பர் கூறுகிறார். உங்களுடைய கருத்து என்ன?
நான் ஒரு Greatest என்பதாகச் சொல்ல முடியாவிட்டாலும்.. அட்லீஸ்ட் ஒரு Great individuality என்பது இந்நேரம் உங்களுக்குப் புரிந்திருக்கும்!!!!!! (இதைக் கேட்டு நம் எதிரணியினர் தற்கொலைக்கு முயற்சித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல...!! அதைக் கண்டு என் வீட்டில் கல்லெறிய வேண்டாம். அதைப் படம் பிடித்து எனது டிவியில் மூச்சுக்கு முன்னூறு தடவை வெளியிடுமளவிற்கு நான் இன்னும் வளரவில்லை!!)
இதேபோல, மற்றுமொரு இரண்டு ஆங்கில வார்த்தைகளுக்கான தமிழ் அர்த்தம் சரியாகவே கையாளப்படுவதில்லை. பிரபல பத்திரிகைகளும், நாளிதழ்களும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. அதானே..! பிரபலம் என்பதற்காக அவை சிறந்தவை என்று கூறிவிட முடியுமா என்ன!
அந்த வார்த்தைகள் Invention மற்றும் Discovery.
சென்னையில் கொசுவை விரட்டும் புதிய சாப்ட்வேர் ஒன்றை மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர் - இது பிரபல நாளிதழ் ஒன்றின் செய்தி.
Invention என்பது இல்லாத ஒன்றைப் புதிதாக உருவாக்குவது அல்லது இருப்பதைக் கொண்டு இணைத்து புதிதாக வடிவமைப்பது என்பதாக அர்த்தம்.
Discovery என்பது ஏற்கெனவே இருப்பதை, நமக்குப் புலனாகாமல் இருப்பதைத் தேடிக் கண்டுபிடிப்பது.
சாப்ட்வேரை உருவாக்கவோ, வடிவமைக்கவோதான் முடியும். "கண்டுபிடிக்க" முடியாது!! எழுத்துப் பிழைகளை மன்னிக்கலாம்.. எழுத்துக் கலப்படங்களையும் கூட மன்னிக்கலாம்.. (அப்போதுதான் நான் தப்பிக்க முடியும்...!!!) ஆனால் எழுத்து சொல்லும் கருத்துப் பிழையை மட்டும் மன்னிக்க முடியாது. அதைப் படிக்கும்போது ஏற்படும் நெருடல் கொஞ்சம் முகம் சுளிக்க வைக்கிறது. (என் எழுத்தைப் படித்து எத்தனை பேர் சுளித்தார்களோ.. தெரியவில்லை.. தயவு செய்து என் எழுத்தில் கருத்துப் பிழைகள் இருந்தால் சுட்டிக் காட்டிவிடுங்கள், நண்பர்களே!)
இது கூட தெரியாமலோ அறியாமலோ ஏற்படும் கருத்துப் பிழை என்று சொல்லலாம். தெரிந்தே, நச்சு ஏற்படுத்தும் என்று தெரிந்தே வியாபாரத்திற்காகச் செய்யப்படும் கருத்துக் கலப்படங்களை வெறுத்து ஒதுக்க வேண்டும். மீண்டுமொருமுறை முதல் பாராவைப் படித்துக் கொள்ளுங்கள்.
அடுத்த வாரம் கருத்துச் சுதந்திரம் பற்றி ஏதோ எனக்கு தோன்றுவதைச் சொல்றேன். வரட்டுமா..
கணவனுக்குத்தெரியாமல் அவனுடைய சட்டை பாக்கெட்டிலிருந்து மனைவி பணம் எடுத்தால் அது டிஸ்க்கவரி-அதை நாத்தார் பார்த்துவிட்டால் அது இன்வென்சன்.--கல்லூரியில் ஆங்கிலப்பேராசிரியர் "ஜொ"ல்லியது.
இந்த கால பசங்க ரொம்ப புத்திசாலிங்க, அதுக்கு தகுந்தவாறு பள்ளி, கல்லூரிகளில் இந்த மாதிரி அசைன்மென்ட், பிராஜக்ட் மற்றும் பல கொடுத்து அவங்க திறமைய மேலும் வளர்க்கிறார்கள். நாம அதற்க்கு தூண்டுகோலகவும், உதவியாவும் மட்டுமே இருக்கனும். எதுக்குனா இந்த உலகம் போட்டி நிறைந்தது. அது இந்த இளய சமுதாயத்தினரையும் விட்டு வைக்க வில்லை. அதனால் அவர்களை நாம், அவர்களாகவே செய்ய பழக்க வேண்டும் நாம் அதற்கு உதவி மட்டுமே செய்ய வேண்டும் முழு பொறுப்பயும் நாமே ஏற்று கொள்ள கூடாது. ( இது என் தனிப்பட்ட கருத்து).
ரிஷி, வணக்கம். தாங்கள் கூறியது உண்மைதான். குழந்தைகளுக்கு "ஆக்டிவிட்டி" என்ற பெயரில் பள்ளிகளில் குழந்தைகளை படுத்தி எடுக்கிறார்கள். இவர்கள் குழந்தைகளுக்கு கொடுக்கிறார்களா? பெற்றோர்களுக்கு கொடுக்கிறார்களா என்றுதான் தெரியவில்லை. சமீபத்தில் என் மகனுக்கு சுதந்திரப் போராட்ட வீரகளின் பெயர்கள் அவர்கள் பிறந்த இடம், வருடம் எல்லாம் எழுதி கொண்டு போக வேண்டும் என்று வந்தான். நீங்கள் கூறியது போல் கூகிள் ஆண்டவர் மூலம் தான் கண்டுபிடிக்கப் பட்டு ஒரு வழியாக அந்த வேலையை நாங்கள் செய்து கொடுத்தோம். என்ன கொடுமை சார் இது?
எழுத்து சொல்லும் கருத்துப் பிழையை கண்டுபிடிக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபடுவதில்லை. காரணம் உங்கள் அளவிற்கு நாங்கள் ஜீனியஸ் இல்லையே!!!!
ரிஷி அண்ணே, இன்றைய கல்வி தரத்தை இழந்து வருகிறது. படிப்பு என்பது வேலைக்காக மட்டும்தான் என்று ஆகி வருகிறது. 8வது படிக்கும் மாணவனுக்கு 7வது வகுப்பில் படித்த பாடம் நினைவு இல்லை (நான் 7வது பரீட்சை எழுதுறப்போ ஒரு 8வது அண்ணன் கிட்ட கேட்டேன் அது தெரியலன்னு சொல்லிடுச்சு). படித்த பாடங்களை வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்க்கும் திறனை பள்ளி, கல்லூரிகள் வளர்க்க உதவ வேண்டும். உங்கள் கருத்து என்ன?
Invention: It is something that is conceived or fabricated as an original (not obvious to others before it came out). It can be an idea, product, process or similar thing. In general an invention is patentable in most countries. So writing a software for a process is an invention. Making a better mousetrap is an invention too. Designing a rocket capable of reaching Mars is an invention. Thus an invention can be simple or complex, conceptually speaking. You have to differentialte what is known as "innovation" from "invention". Some people confuse the two. Innovation is something that is a new way of doing something that was done before. (It was derived from the French word "nouveau" which means "new").
Discovery is a process by which something that is existing is revealed to others (previously unknown or unseen). A mathematical equation is discovered but not invented because it is already there (in order to arrive at an end result). Finding a new route to go to a bar without being "discovered" by your spouse is a discovery. Columbus discovered "India", of course mistakenly. He thought he was travelling to India. But still he is credited with discovery of America.
Balasundar Senthilvel: Your observation about learning/understanding by children these days is correct. It is true even in the US. A few years ago I was teaching a course in Chemistry to second year college students. I was really "teaching" the concepts. However, the students did not care. They wanted to get only a few simple details so that they can get a passing grade and move on. Exams are also designed by most teachers to make it easy for the students so that they (the students) can grade the teacher (it is a common practice in the US) with an "acceptable" rating. So it goes!
கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். மார்க்கோனி ரேடியோவைக் கண்டுபிடித்தார் என்றுதான் பிள்ளைகள் பாடம் படிக்கின்றனர். பொருள்களை வேறுபடுத்திக் காட்டும் சொற்களை வடித்து வழங்கிட வேண்டும்.
கணினுக்குள் அடங்காத கருத்துக் களஞ்சியங்கள் பலவற்றை நூலகங்களில்தான் காணமுடியும். நூலகம் செல்வது சாலவும் நன்று!
பெர்சனாலிடி பற்றியும் பெர்சானா பற்றியும் ஒரு விளக்கவுரை எழுதியிருந்தேன். ஆனால் பதிவாகவில்லை. இப்படி பல பின்னூட்டங்கள் பதிவாகவில்லை எனில் என்ன நினைப்பது? நான் அதிகப்படியாக எழுதுகிறேனோ அதனால் வரும் கோளாறோ என்று தோன்றுகிறது. ரிஷியின் நன்பர் மகளுக்கும் எதைப் பற்றி எழுதுவது என்றும் ஒரு குறிப்பு வரைந்திருந்தேன்.
//கணவனுக்குத்தெரியாமல் அவனுடைய சட்டை பாக்கெட்டிலிருந்து மனைவி பணம் எடுத்தால் அது டிஸ்க்கவரி-அதை நாத்தார் பார்த்துவிட்டால் அது இன்வென்சன்.--கல்லூரியில் ஆங்கிலப்பேராசிரியர் "ஜொ"ல்லியது.// மாலீக் வித்தியாசமாக சொல்லி...ஸாரி..ஜொல்லியிருக்கிறார் உங்க பேராசிரியர். ரொம்ப நாளா ஆளையே காணோம்? ஊரிலதான் இருக்கீங்களா? எப்போது இந்தியா விஜயம்?
//அதற்கு உதவி மட்டுமே செய்ய வேண்டும் முழு பொறுப்பயும் நாமே ஏற்று கொள்ள கூடாது. ( இது என் தனிப்பட்ட கருத்து).// தேவிகா நீங்கள் சொல்வது சரிதான். இருந்தாலும் அவர்களுக்கு ரொம்பவும் கனமான தலைப்புகளாக கொடுக்கிறார்களோ என்ற நினைப்புதான் வருகிறது. புத்திசாலிகள் கொஞ்சம் விரைந்து பிடித்துக் கொள்வார்கள். கொஞ்சம் பின் தங்கிய மாணவர்கள் சிரமப்படுவார்களே!
//சமீபத்தில் என் மகனுக்கு சுதந்திரப் போராட்ட வீரகளின் பெயர்கள் அவர்கள் பிறந்த இடம், வருடம் எல்லாம் எழுதி கொண்டு போக வேண்டும் என்று வந்தான்.// பிரேம்ஸ், அவை எளிமையாக இருக்கும்பட்சத்தில் கொடுப்பதில் தவறேதுமில்லை. பாடத்திட்டத்தில் இல்லாத புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் ஆர்வமேற்படும். ரொம்பவும் அட்வான்ஸ்ட் சயின்ஸெல்லாம் தேவையில்லை என்பது என் கருத்து. நண்பர் மகளுக்கு மட்டுமல்லாது, அவரது பக்கத்து வீட்டுக்காரர் மகளுக்கும் டாபிக் கொண்டு வந்தார். அவர்களது வீட்டிலும் கம்ப்யூட்டர் இல்லையாம்! லைப்ரரி போய் கலெக்ட் செய்ய நேரமில்லை. நெட் என்றால் உடனே தேடி உடனே பிரிண்ட் செய்து விடலாம் என்று நினைத்து வருகிறார்கள். என்ன செய்வது..!!
//எழுத்து சொல்லும் கருத்துப் பிழையை கண்டுபிடிக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபடுவதில்லை. காரணம் உங்கள் அளவிற்கு நாங்கள் ஜீனியஸ் இல்லையே!!!!// அச்சோ!! பெரியவங்க நீங்களே இப்படிச் சொன்னா சின்னவங்க நாங்களெல்லாம் எங்க போறது!!
//Rishi....inthakkala pillagalin arivu valarcikku ungalaipola natpu vatamum nenum... nalla manam ulla ..neram othukkira appavum venum... valaratum illaya baratham.... nillacharal moulam ungal arivu sevai thodaratummmmmmm// வருகைக்கு மிக்க நன்றி ராதா. தமிழில் டைப் செய்ய முடியாவிட்டாலும் ஆங்கிலத்திலாவது அனுப்பி விட வேண்டுமென்ற ஆர்வத்திற்கு என் தலைவணங்கல். தொடர்ந்து வாருங்கள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்... (நீங்க மட்டும் கடைசில இழுக்கறீங்க..!!)
//8வது படிக்கும் மாணவனுக்கு 7வது வகுப்பில் படித்த பாடம் நினைவு இல்லை (நான் 7வது பரீட்சை எழுதுறப்போ ஒரு 8வது அண்ணன் கிட்ட கேட்டேன் அது தெரியலன்னு சொல்லிடுச்சு). படித்த பாடங்களை வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்க்கும் திறனை பள்ளி, கல்லூரிகள் வளர்க்க உதவ வேண்டும். உங்கள் கருத்து என்ன?// சரிதான் பாலசுந்தர். கற்றல் என்பது தொடர்ச்சியான ஒரு நிகழ்வாகவே இருக்கிறது. வாழ்க்கை முழுவதுமே கற்றுக் கொண்டுதான் இருக்கிறோம். தேவைப்படாதவை தானாகவே நினைவிலிருந்து கழன்று விடுகின்றன. அதிகம் உபயோகப்படுத்தப்படாதவையும் அப்படித்தான்! வாழ்வு என்பது வேறாகவும், கல்வி என்பது வேறாகவும் இருக்கிறது. வாழ்வியலோடு இணைந்த கல்வி அவசியம். Ethics என்ற தலைப்பில் குறிப்பிட்ட பாடங்களை பள்ளிப்பருவத்திலேயே கொண்டு வரவேண்டும் என்பது என் விருப்பம். Ethics இல்லாத எந்த ஒரு வேலையும், தொழிலும், கல்வியும், வாழ்வும்....இன்ன பிறவும் ஜீவன் இல்லாதது.
//Invention: It is something that is conceived or fabricated as an original // விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி டாக்டர். உங்கள் விளக்கத்தைப் பார்த்தவுடன் என்னுடைய கட்டுரையில் விஷயம் என்று ஒன்று இல்லவே இல்லை என்பது போல ஆகிவிட்டது!!! இருந்தாலும் தங்களிடமிருந்து விளக்கத்தை கறக்க வேண்டிய வகையில் எழுதியிருப்பதே என் வெற்றிதான்!
//I was really "teaching" the concepts. However, the students did not care. They wanted to get only a few simple details so that they can get a passing grade and move on. Exams are also designed by most teachers to make it easy for the students so that they (the students) can grade the teacher (it is a common practice in the US) with an "acceptable" rating. So it goes!// என் பத்தாங்கிளாஸ் ஞாபகத்திற்கு வருகிறது டாக்டர். ஆனால் என் அறிவியல் வாத்தியார் உங்களைப் போல இல்லை! பழைய வருட கேள்வித்தாள்கள் ஏழெட்டை கையில் வைத்துக் கொண்டு புள்ளிவிவரங்களை எடுப்பார். வரப் போகின்ற தேர்வில் என்ன கேள்வி வரும் என்பதைக் கூட ஆய்வு செய்து "கண்டுபிடித்து" விடுவார். அதை மட்டும் சொல்லிக் கொடுப்பார். இதே கதைதான் பாலிடெக்னிக்கில் படிக்கும் போதும்!! அக்டோபர் மாசம் ஒரு கொஸ்டின் கேட்டாங்கன்னா... அது டிசம்பர் மாசத் தேர்வில் வராது என்பார் எங்க வாத்தியார். நுணுக்கமான Permutation and Combination எல்லாம் போட்டுப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்திற்கு ஒழுங்காக எங்களுக்கு teach பண்ணியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!!!
//கணினுக்குள் அடங்காத கருத்துக் களஞ்சியங்கள் பலவற்றை நூலகங்களில்தான் காணமுடியும். நூலகம் செல்வது சாலவும் நன்று!// நன்றி பாலகிருஷ்ணன் சார். நானும் பார்ப்பவர்களிடமெல்லாம் நன்னூல்களை வாங்கவும், நூலகம் செல்லவும் வேண்டுகோள் விடுப்பதுண்டு.
//பெர்சனாலிடி பற்றியும் பெர்சானா பற்றியும் ஒரு விளக்கவுரை எழுதியிருந்தேன். ஆனால் பதிவாகவில்லை. இப்படி பல பின்னூட்டங்கள் பதிவாகவில்லை எனில் என்ன நினைப்பது? நான் அதிகப்படியாக எழுதுகிறேனோ அதனால் வரும் கோளாறோ என்று தோன்றுகிறது. ரிஷியின் நன்பர் மகளுக்கும் எதைப் பற்றி எழுதுவது என்றும் ஒரு குறிப்பு வரைந்திருந்தேன்.//
டாக்டர், இன்னொரு முறை பதிவு செய்ய முடியுமா? எனது கூற்றில் பிழையேதும் இருக்கிறதா? நானும் பல முறைகளில் வேறு வேறு காம்பினேஷனில் பின்னூட்டி சோதனை செய்து பார்த்தேனே! வருகிறதே! அதிகப்படியான எழுத்துக்களால் பிரச்சினை இருக்காதென்று நினைக்கிறேன்.
இன்வென்ஷன் - புனைவு. Ganasambhandan: Does punaivu apply to all fields? For example, when you write poetry you call it "punaidhal". Same thing for a kaTTurai (kaTTurai punaindhAr). Can we also say in the same vein "rocket punaindhAr"? Can you please clarify?
Rishi: I am sure there is a gremlin sitting on the doorstep of nilacharal.com. Before I posted the last one addressed to Gnanasambandan, I wrote one more elaborate post per your request on persona, per, personality, and the tips for that little girl. Now that has gone into cyberspace too. I am giving up.
புனை என்றால் உண்டாக்கு, உருவாக்கு என்றும் பொருள் உண்டு: புனைகதை புனைசுருட்டு புனைபெயர் என்பவற்றில் அந்தப் பொருளைக் காணலாம். ராக்கட் புனை என்பது பொருந்தும். சொ.ஞா.னசம்பந்தன்