மூளையில் வலது பகுதி, இடது பகுதி என இரு அரைப் பகுதிகள் உள்ளன. இவ்விரு அரைப் பகுதிகளும் ஒரே வழியில் செயல்படுவதில்லை. மூளையின் இடது அரைப்பகுதி, வலது அரைப்பகுதியை விட சிறப்பு வாய்ந்ததாகவும் வலிமை மிக்கதாகவும் கருதப்படுகிறது.
சிலருக்கு இடது கைப் பழக்கம் இருப்பது ஏன்?
மக்கள் தொகையில் சுமார் நான்கு விழுக்காட்டினர் இடது கைப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றனர். வரலாற்றைப் பார்க்கும்போது பல அறிஞர் பெருமக்கள் இடக்கைப் பழக்கம் கொண்டிருந்தனர். புகழ்வாய்ந்த சிற்பக்கலை அறிஞர்களான லியானோர்டோ டார்வின்சி மற்றும் மைக்கெல் ஏஞ்செலோ ஆகியோர் இடக்கைப் பழக்கம் கொண்டவர்களே.
மூளையில் வலது பகுதி, இடது பகுதி என இரு அரைப் பகுதிகள் உள்ளன. இவ்விரு அரைப் பகுதிகளும் ஒரே வழியில் செயல்படுவதில்லை. மூளையின் இடது அரைப்பகுதி, வலது அரைப்பகுதியை விட சிறப்பு வாய்ந்ததாகவும் வலிமை மிக்கதாகவும் கருதப்படுகிறது.
மூளையின் இடப்பகுதி சிறப்புடன் விளங்குகையில் உடலின் வலப்பகுதி மிகுந்த திறன் கொண்டதாகவும், சிறப்புடன் செயல்படுவதாகவும் அமைகிறது. நமது மூளையின் இடப்பகுதி மிகுதியாகச் செயல்பட்டு நாம் படிப்பது, எழுதுவது, பேசுவது ஆகியவற்றை மேற்கொள்கிறோம். இதன் காரணமாக நம்மில் மிகப் பெரும்பாலோர் வலக்கைப் பழக்கம் உள்ளவர்களாக விளங்குகிறோம். ஆனால் இடக் கைப்பழக்கம் உள்ளவர்களைப் பொறுத்தவரை இச்செயல்பாடு இதற்கு நேர் மாறாக நிகழ்கிறது. இங்கே மூளையின் வலப்பகுதி சிறப்பு வாய்ந்ததாகவும், வலிமை மிகுந்ததாகவும் அமைகிறது. இத்தகைய நிலையில் உள்ளோர்க்கு உடலின் இடப்பகுதி சிறப்புடன் செயல்பட்டு இடக்கைப் பழக்கம் ஏற்பட்டு விடுகிறது.
மனிதர்களுள் எந்த இருவருக்கும் ஒரே வகையான விரல் அடையாளம் (finger print) அமைவதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். விரல் அடையாளம் என்பது உங்கள் கை விரல் தோல் பகுதி அடுக்குக் கோடுகளின் அமைப்புகளாகும். உங்கள் கை விரலை மை அட்டையில் அழுத்திப் பின்னர் காகிதத் தாளில் அழுத்தும்போது விரல் கோடுகள் அமைப்பின் அடையாளம் தாளில் பதிவதைக் காணலாம்.
நமது இரு கால்களைக் கொண்டு எவ்வாறு நாம் சமநிலையைப் (balance) பெற முடிகிறது?
இரு கால்களால் எழுந்து நிற்பதும், அவைகளைக் கொண்டு நடக்க முயல்வதும் கற்றுக் கொள்ள வேண்டிய விந்தை மிகு செயல்பாடுகளாகும். நீங்கள் நேராக நிமிர்ந்து நிற்கும்போது அச்செயல்பாடு சமநிலையுடன் செய்யப்படுகிற ஒரு செயலாக விளங்குகிறது. ஒரு காலிலிருந்து மறு காலுக்கு மாற்றும்போது, மூட்டுகளில் நீங்கள் அழுத்தத்தைப் பயன்படுத்துவதுடன், உங்கள் தசைகள் உடலை வழி நடத்திச் செல்கின்றன. நாம் நேராக நிற்கும்போது சமநிலையைப் பராமரிக்க நமது உடலில் சுமார் 300 தசைகள் பணிபுரிகின்றன. நடக்கும்போது சமநிலையைப் பயன்படுத்துவதோடு கூட இரண்டு இயற்கை விசைகளும் உடன் உதவி புரிகின்றன. முதலாவது இயற்கை விசை காற்றின் அழுத்தம். நமது தொடை எலும்பு இடுப்புக் குழிவுப் பகுதியில் பொருந்தி ஒரு வகை வெற்றிடம் உருவாகிறது. நமது கால்களின் மேல் ஏற்படும் காற்றழுத்தம் அவை உறுதியுடன் இருக்க உதவுகிறது. இக்காற்றழுத்தத்தால் கால் உடல் பகுதியில் தொங்கவும் குறைந்த எடையுடன் இருக்கவும் முடிகிறது. நாம் பயன்படுத்தும் இரண்டாவது இயற்கை விசை, நாம் நடக்கும்போது பயன்படுத்தப்படும் புவி ஈர்ப்பு விசையாகும். நாம் காலை உயர்த்தும்போது, புவி ஈர்ப்பு விசையால் அது மீண்டும் தரையை நோக்கிச் செல்கிறது.
முழங்கால் மூட்டானது, முழபங்கையைப் போன்று கீல் மூட்டு வகையாகும். ஒரு எலும்பின் இறுதிப் பகுதி மற்றொன்றின் குழிவுப் பகுதியில் பொருந்துகிறது. இவ்வகை மூட்டு ஒரு திசையில் மட்டுமே வளையக் கூடியது.