Home  
இதழ் 460

மார்ச் 15 2010


www.guruji.com

Search

 

Nilacharal Web

Search in English

Help
 

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
Chiranjeevi
Wanted Freelancers!
Home>>ராசிபலன்

இராசிபலன்கள் (15-3-2010 முதல் 21-3-2010 வரை)
- ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

கும்பராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். சகோதரர்களின் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள்.

மேஷம் :-

மேஷராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவுகள் நன்றாக இருக்கும். வண்டி வாகனங்களில் மிகுந்த கவனமுடன் யாத்திரை செய்வது நன்று. வெளி நாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று வர வாய்ப்பு உள்ள காலமாகும். தாயின் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களால் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். சமுதாய முன்னேற்றம் மற்றும் பொது நலத் தொண்டுகளில் ஈடு பட்டு நற் பெயர் புகழ் அடைவீர்கள். நீண்ட காலமாக வராமல் இருந்த கடன் கொடுத்த பணம் பொருட்கள் திரும்பக் கைக்கு வந்து சேரும். பங்காளிகளுடன் சேர்ந்து நடத்தும் கூட்டுத் தொழிலில் காரணமற்ற பிரச்சனைகள் உருவாக இருப்பதால் கவனமுடன் இருத்தல் நல்லதாகும். நண்பர்கள் உறவினர்களின் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து சொத்துக்கள் வந்து சேரும். கம்ப்யூட்டர், மின்சாரம் போன்றவற்றில் பணி செய்வோர்கள், உணவு தானிய வியாபாரிகள், கார சம்பந்தமான உணவுப் பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். நீண்ட தூரப் பயணங்களின் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் நிறை வேறும் காலமாகும்.

இராசியான எண் :- 3
இராசியான நிறம் :- மஞ்சள்
இராசியான திசை :- வடகிழக்கு
பரிகாரம் :- வியாழக் கிழமையில் தட்சிணாமூர்த்தி ஆலய வழிபாடு செய்து வரவும்.

ரிஷபம் :-

ரிஷபராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். காதல் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நன்றாகும். தந்தை வழிப் பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். உடம்பில் வாயு வயிறு போன்ற உபாதைகள் வந்து போகலாம். புதிய கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். கணவன் மனைவி உறவுகளில் காரணமற்ற வீண் பிரச்சனைகள் உருவாகி மனக் கசப்புகள் ஏற்படலாம். புதிய கடன்களை வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். வட்டித் தொழில் செய்வோர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும். விவசாயம் செய்வோர்கள் மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லது வெளி நாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று வருவார்கள். வீட்டைத் திருத்திக் கட்டுவதில் கவனம் செலுத்துவீர்கள். குழந்தைகளின் மனமகிழ்ச்சிக்காக நீண்ட தூர உல்லாசப் பயணங்களை மேற்கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். காணாமற் போன பொருட்கள் காவல் துறையினரின் உதவிகளால் திரும்பக் கிடைக்கும். தந்தையின் உடல் நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் சற்று குறையும். இரும்பு, எண்ணை, பலசரக்கு போன்ற பொருட்களை உற்பத்தி விற்பனை செய்வோர்கள், பெட்ரோல், டீசல் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். வெகு தூரப் பயணங்களால் எதிர்பாராத காரியங்கள் நிறைவேறும் காலமாகும்.

இராசியான எண் :- 8
இராசியான நிறம் :- நீலம்
இராசியான திசை :- தென்மேற்கு
பரிகாரம் : சனிக் கிழமையில் ஐயப்பன் ஆலய வழிபாடு செய்து வரவும்.

மிதுனம் :-

மிதுனராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும். உறவினர்களின் திடீர் வரவுகளால் மன தைரியமும் பொருள் வரவும் உண்டாகலாம். சகோதர சகோதரிகளுடன் வீண் மன சஞ்சலங்களும் பிரச்சனைகளும் உருவாகும். புதிய வீடு நிலம் வாங்குவதற்காக வங்கிகள் மூலமாக எதிர் பார்த்து இருந்த உதவித் தொகைகள் கிடைக்கும். தந்தை மகன் உறவில் பிரச்சனைகள் வர இருப்பதால் கவனமுடன் இருத்தல் நல்லதாகும். இரசாயனத் தொழிற்சாலைகளில் பணி செய்வோர்கள், மத போதகர்கள், மீன் முட்டை மற்றும் மாமிச உணவுப் பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். தீராத நாட்பட்ட நோய்கள் தீர புதிய முயற்சிகளை மேற்கொள்ளுவீர்கள். உடம்பில் கண் காதுகளில் சிற்சில உபாதைகள் வந்து போகும். வராத நாட்பட்ட கடன் கொடுத்து இருந்த பணம் மற்றவர்களின் தலையிடுதலால் திரும்பக் கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்களுக்கு கல்வி பயிலும் இடங்களில் அவப் பெயர்கள் வர இருப்பதால் எச்சரிக்கையுடன் கல்வி பயிலுதல் நல்லது. வீடு மற்றும் தொழிற்சாலைகளைப் புதிய இடங்களுக்கு மாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. வேண்டாத விஷயங்களில் தலையிட்டு வீண் சிக்கல்களில் மாட்டிக் கொண்டு மன நிம்மதியை இழக்காதீர்கள்.

இராசியான எண் :- 7
இராசியான நிறம் :- கருஞ்சிகப்பு
இராசியான திசை :- வடமேற்கு
பரிகாரம் :- திங்கள் கிழமையில் விநாயகர் ஆலய வழிபாடு செய்து வரவும்.

கடகம் :-

கடகராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை நன்மை தரும் கிரகமாகும். வெளி நாட்டு விஷயங்களில் எதிர்பாராத நபர்களிடம் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். யாத்திரைகளால் ஆதாயம் இல்லை. பெண்கள் விஷயத்தில் அவப் பெயர்கள் ஏற்பட இருப்பதால் கவனமுடன் இருத்தல் நல்லது. உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேலதிகாரிகளுடன் மனக் கசப்புகளும் அவர்களால் பணி இட மாற்றமும் ஏற்படலாம். செய் தொழிலில் பங்காளிகளுடன் இருந்த மன சஞ்சலங்கள் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள். தாய் வழி மாமன் மூலம் சில பிரச்சனைகள் வந்து சேரும். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். ஆலயத் தொண்டுகளிலும், பொது நலச் சேவைகளிலும் பிரியமுடன் ஈடு பட்டு நற் பெயர் எடுப்பீர்கள். குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வர எடுத்துக் கொண்ட முயற்சிகள் நிறைவேறும். நண்பர்களால் பொருள் நஷ்டமும் மன சஞ்சலமும் ஏற்படலாம். நாட்பட்ட சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும். விட்டுப் போன பழைய பிரச்சனைகளால் மீண்டும் தொல்லைகள் வந்து நீங்கும். தங்கம் வெள்ளி போன்ற நகை தரகர்கள், ஆலயப்பணி செய்வோர்கள், இன்சினியரிங், கம்ப்யூட்டர் போன்ற துறை சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.

இராசியான எண் :- 8
இராசியான நிறம் :- நீலம்
இராசியான திசை :- தென்மேற்கு
பரிகாரம் :- சனிக்கிழமையில் ஆஞ்சனேயர் வழிபாடு செய்து வரவும்.

சிம்மம் :-

சிம்மராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். . பிள்ளைகளால் தொல்லைகள் ஏற்படுவதுடன் பொருட் செலவுகளும் ஏற்படலாம். குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பங்கு வர்த்தகம், அரசு உயர் பதவிகள் வகிப்பவர்கள், நெருப்புத் தொழில் செய்வோர்கள், ஜவுளி நூல் வியாபாரிகள், மருந்துப் பொருட்களை உற்பத்தி மற்றும் விற்பனைகளைச் செய்வோர்கள், உணவு தானிய வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். வங்கிகளின் மூலம் எதிர் பார்த்து இருந்த பணம் கை வந்து சேரும். காதல் விஷயங்களில் நல்ல செய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் சற்று சுமாராகவே இருப்பதால் புதிய கடன்களை வாங்க முயற்சி செய்வீர்கள். யாத்திரையின் போது சம்பந்தம் இல்லாத நபர்களால் சில காரியங்களை நிறைவேற்ற எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். நீண்ட தூரப் பயணங்களைத் தள்ளிப் போடுதல் நல்லது. பெண்களால் தென் திசையில் இருந்து நல்ல செய்திகளுடன் பொருள் வரவுகள் உண்டாகலாம். யாத்திரையின் போது மிக கவனமுடன் சென்று வருதல் நல்லது. சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் பெரியவர்களின் உதவியால் நல்ல தீர்ப்புகள் கிடைக்கும். பொதுத் தொண்டுகளில் ஈடுபடுவோர்கள் மீது வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக இருப்பதால் கவனமுடன் செயல் படவும்.

இராசியான எண் :- 1
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- கிழக்கு
பரிகாரம் :- ஞாயிற்றுக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.

கன்னி :-

கன்னிராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். பூஜைப் பொருட்கள், நீர்வளத் துறை சார்ந்தவர்கள், தண்ணீர் மற்றும் திரவ சம்பந்தமான வியாபாரிகள், ஆலயப் பணி செய்வோர்கள், கடல்வளத்துறை சார்ந்தவர்கள், உப்பு மற்றும் உர வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன்களை அடைவார்கள். பொது நலத் தொண்டுகளில் ஈடுபடுவோர்கள் மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் மன அமைதியுடன் சந்தோசம் நிலவும் காலமாகும். யாத்திரையில் பெரிய மனிதர்கள், அரசியல் வாதிகள் மற்றும் உயரதிகாரிகளின் சந்திப்புக்களால் நன்மை அடைவீர்கள். உடல் நிலையில் கண் காதுகளில் கவனமுடன் இருந்து வரவும். தந்தை மகன் உறவுகளில் வெகு காலமாக இருந்து வந்த பிரச்சனைகள் குறைந்து மன நிம்மதி அடைவீர்கள். கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். புதிய வீடு மற்றும் நில புலன்களை வாங்குவதற்கான முயற்சிகளில் வெற்றி பெறலாம். தீராத நாட்பட்ட நோய்கள் தீருவதற்கான புதிய முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். பங்காளிகளுடன் செய் தொழில் விஷயங்களில் சற்று பொறுமையுடன் நடந்து கொள்வது நல்லது. நீண்ட காலமாகத் தடைபட்டு வந்த குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வர எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.

இராசியான எண் :- 2
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- மேற்கு
பரிகாரம் :- திங்கள் கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.

துலாம் :-

துலாம்ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். தீர்த்த யாத்திரைகள் சென்று வருவதற்கான முயற்சிகளில் சற்று பின்னடைவுகள் ஏற்பட்டு விலகும். கலைக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், இவற்றில் பணிபுரியும் ஆசிரியர்கள், சினிமா மற்றும் நாடகத்துறை சார்ந்தவர்கள், சிற்றுண்டித் தின்பண்ட வியாபாரிகள், அலங்காரப் பொருள் வியாபாரிகள், திருமண தகவல் நிலையத்தவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிக கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது. வெளி நாடு சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும் காலமாகும். கணவன் மனைவி உறவுகளுக்குள் சிறிய பிரச்சனைகளுக்காக வீண் மனக் கசப்புகள் வந்து சேரும். அரசியல்வாதிகளிடம் இருந்து எதிர் பார்த்த காரியங்கள் நிறை வேறும் காலமாகும். வீட்டைத் திருத்திக் கட்டி அலங்காரம் செய்வதில் மிகுந்த கவனம் செலுத்துவீர்கள். பழைய கடன்களை அடைத்து விட்டுப் புதிய கடன் வாங்குவீர்கள். உடம்பில் வாயு மற்றும் சுரம் போன்ற உபாதைகள் வந்து போகும். யாத்திரையின் போது வாகனங்களில் மிகுந்த கவனமுடன் பயணம் செய்து வரவும். மற்றவர்களை நம்பி பணம் மற்றும் பொருட்களை கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். விளையாட்டுத் துறை சார்ந்தவர்களுக்குப் பரிசு மற்றும் பாராட்டுதல்கள் கிடைக்கும்.

இராசியான எண் :- 6
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- தென்கிழக்கு
பரிகாரம் :- வெள்ளிக் கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

விருச்சிகம் :-

விருச்சிகராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். வெளி நாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் மற்றவர்களிடம் இருந்து எதிர்பார்த்து இருந்த உதவிகள் கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் வீண் பிரச்சினைகளும் மனக் குழப்பங்களும் வர இருப்பதால் கவனமுடன் இருக்கவும். பூஜைப் பொருள் வியாபாரிகள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், பொதுத் தொண்டு நிறுவனங்கள், கம்ப்யூட்டர் பணிகளை செய்பவர்கள், பேராசிரியர்கள், பழ வியாபாரிகள், ஆலயங்களில் பணி புரிபவர்கள், பொதுநலத் துறைகளைச் சார்ந்துள்ள பணியாளர்கள் ஆகியோர்கள் லாபம் அடைவார்கள். உற்றார் உறவினர்களின் திடீர் வரவால் மன மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும். நண்பர்களிடம் இருந்து எதிர் பார்த்து இருந்த பண உதவிகள் கிடைக்கும். சமுதாய நல்லிணக்கத்திற்கான முயற்சிகளில் பெயர் புகழ் ஏற்பட்டு அதனால் மன மகிழ்ச்சி அடையும் காலமாகும். தாயின் உடல் நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் வெகுவாகக் குறைவதன் மூலம் மருத்துவச் செலவுகள் குறைய வாய்ப்பு உள்ளது. மாமன் வழியின் மூலமாக எதிர்பாராத சில ஆதாயங்கள் அடைவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் பரிசுகள் மற்றும் பாராட்டுக்களுடன் நல்ல மதிப் பெண்களையும் பெறுவார்கள்.

இராசியான எண் :- 1
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- கிழக்கு
பரிகாரம் :- ஞாயிற்றுக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.

தனுசு :-

தனுசுராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். மாணவர்கள் கல்வியில் கல்வி பயிலும் இடங்களில் சிற்சில சச்சரவுகள் வர இருப்பதால் மிகுந்த கவனமுடன் கல்வி பயிலுதல் சிறந்ததாகும். சூதாட்டம் ஆகிய ரேஸ் லாட்டரி மூலமாக பணம் கிடைக்கலாம் எனக் கருதி ஏமாற்றம் அடைய வேண்டாம். வேற்று மதத்தவரால் எதிர் பார்த்திருந்த ஆதாயம் கிடைப்பதற்கு இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். பெண்களால் வட திசையில் இருந்து பொருள் வரவுகள் உண்டாகும். நாட் பட்ட அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சம்பந்தம் இல்லாத நபர்களின் உதவியால் வெற்றி பெறுவீர்கள். பழைய வீடு மற்றும் வாகனங்களைப் புதுப்பித்தலுக்கான முயற்சிகளில் ஈடு படுவீர்கள். தங்கம் வெள்ளி போன்ற உலோகப் பொருள் வியாபாரிகள், நெருப்பு இராணுவம், காவல் துறை சார்ந்தவர்கள், பூமி சம்பந்தமான நில புலன்களை வாங்குவோர் விற்போர்கள், தீயணைப்புத் துறைகளைச் சார்ந்தவர்கள், ஹோட்டல் தொழில் செய்வோர்கள், மசால் பவுடர் வியாபாரிகள், சிற்றுண்டி உணவுப் பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன்களை அடைவார்கள். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகளைச் சற்று தள்ளிப் போடுதல் நல்லது. உடல் நிலையில் சுரம் மற்றும் உஷ்ண சம்பந்தமான உபாதைகள் வந்து போகலாம்.

இராசியான எண் :- 9
இராசியான நிறம் :- சிகப்பு
இராசியான திசை :- தெற்கு
பரிகாரம் :- செவ்வாய் கிழமையில் துர்க்கை ஆலய வழிபாடு செய்து வரவும்.

மகரம் :-

மகரராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். உறவினர்களின் வரவுகளால் எதிர் பாராத பணச் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகம் இல்லாத படித்த இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கக் கூடிய காலமாகும். காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் ஆகிய வியாபாரிகள், எழுத்துத்துறை சார்ந்தவர்கள், கவிஞர்கள், அச்சுத் தொழில் செய்வோர்கள், அரசு வழக்குறைஞர்கள், மருத்துவத் துறைகளை சார்ந்தவர்கள், வங்கிப் பணி செய்வோர்கள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவார்கள். வெகு காலமாக விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடரும் காலமாகும். ஆலய வழிபாடுகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வதன் மூலம் மன நிம்மதி அடைவீர்கள். வேற்று மதத்தவரால் வெளி நாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நல்ல பலன்கள் கிடைக்கும். உடம்பில் தலைவலி, முதுகுவலி போன்ற உபாதைகள் வந்து போகலாம். கணவன் மனைவி உறவுகளில் இன்னும் சற்று பிரச்சனைகள் வந்து போகலாம். ரேஸ் லாட்டரி போன்ற விஷயங்களில் பணம் மற்றும் பொருட்களை ஏமாற வாய்ப்புகள் உள்ளதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது. பொருளாதாரத்தில் இது நாள் வரை இருந்து வந்த நெருக்கடிகள் மாறி பணப் புழக்கம் நன்றாக இருக்கும்.

இராசியான எண் :- 5
இராசியான நிறம் :- பச்சை
இராசியான திசை :- வடக்கு
பரிகாரம் :- புதன் கிழமையில் மஹாவிஷ்ணு ஆலய வழிபாடு செய்து வரவும்.

கும்பம் :-

கும்பராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். சகோதரர்களின் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள். காதல் சம்பந்தமான விஷயங்களுக்காக மற்றவர்களின் உதவிகளை நாடி வெற்றி பெறுவீர்கள். பழைய இரும்புகள், இயந்திரம், இரசாயனம் போன்ற தொழிற்சாலைகளில் பணி செய்வோர்கள் இவற்றை வாங்குவோர்கள், விற்பனை செய்வோர்கள், அழுகல் சம்பந்தமான மீன், முட்டை, இறைச்சி போன்ற உணவுப் பொருள் வியாபாரிகள், அணு ஆராய்ச்சி துறை சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவீர்கள். புதிய வீடு வாகனங்களை வாங்குவதற்கான முயற்சிகளில் இன்னும் சிறிது கால தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்துறையினருக்கு நினைத்த இடங்களில் பணி இட மாற்றமும் பதவி உயர்வுகளும் உண்டாகும். புதிய ஆடை மற்றும் ஆபரணங்களை வாங்க எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். நாட் பட்ட பழைய வழக்குகளில் சாதகமான நல்ல தீர்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனங்கள் வாங்கக் கூடிய காலமாகும். அரசியல் வாதிகளுக்கு எதிர்பாராத ஆதாயங்கள் வந்து சேரும். செய்தொழிலில் வங்கிகளின் மூலமாகப் புதிய கடன்கள் வாங்குவதற்கான முயற்சிகளில் சிறிது காலதாமதம் ஆகலாம். உடம்பில் கால் மற்றும் கைகளில் மிகவும் கவனம் தேவை.

இராசியான எண் :- 4
இராசியான நிறம் :- கருப்பு
இராசியான திசை :- வடமேற்கு
பரிகாரம் :- ஞாயிற்றுக் கிழமையில் பிதுர்க்கள் மற்றும் காளி போன்ற அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.

மீனம் :-

மீனராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். புதிய முயற்சிகளில் மற்றவர்களை நம்பிப் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். குடும்பச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் இன்னும் சிறிது காலம் நீடிக்கும். வீடு மற்றும் வாகனங்களப் பழுது பார்த்தல் மூலம் புதிய கடன்கள் ஏற்படலாம். மஹான்களின் தரிசனங்களால் பிரச்சனைகள் குறைந்து மன நிம்மதி அடையும் காலமாகும். யாத்திரையின் போது மிகுந்த கவனமுடன் சென்று வருதல் சிறந்ததாகும். விடு பட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடரும் காலமாகும். வெகு காலமாக எதிர் பார்த்து இருந்த வங்கி உதவித் தொகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வெகு காலமாகக் காணாமற் போன பொருட்கள் மற்றும் நபர்கள் திரும்ப வீடு வந்து சேர வாய்ப்பு உள்ளது. சகோதர சகோதரிகளின் திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகளுக்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். ஒரு சிலருக்குப் புதிய வீடு மாற்றம் ஏற்படலாம். சினிமா, நாடகம் மற்றும் கலைத் துறை சம்பந்தமான பொருட்கள் விற்பனை செய்வோர்கள், நடிகர்கள் நடிகைகள், கலைத்தொழில் செய்வோர்கள், பாத்திர வியாபாரிகள், கலைக் கல்லூரி சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நல்ல பலன்களை அடைவார்கள். வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்குப் புதிய வேலை வந்து சேரும் காலமாகும்.

இராசியான எண் :- 6
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- தென்கிழக்கு
பரிகாரம் :- வெள்ளிக் கிழமையில் மஹாலட்சுமி ஆலய வழிபாடு செய்து வரவும்.

**************

Gnanayohi Dr. P. Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M
18 (25B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur - 627 759
Tirunelveli District, Tamil Nadu, India.
Phone : 04633-243029,
Mobile: 98425-10578, 98425-29691,
Fax: 04633 -240390
Website:- www.gnanayohi.com

ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M அவர்களின் இதர படைப்புகள். ராசிபலன் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
                         
Your Comments
Comment
உங்கள் கருத்து
பெயர் :
மின் அஞ்சல் :
சுட்டி :

Comment In:

Tamil English
(Type here in Thanglish and see tamil text in bottom. Tamil conversion powered by : www.suratha.com)
NOTE : Please do not use single quote in your comments. You can use double quote in place.
(English / தமிழில் - யூனிகோட்)
What you see in this box gets posted as feedback.

Hot properties in India

ஜோதிடம் கேளுங்கள் பகுதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைந்து கட்டண சேவை பெற இங்கே சுட்டவும்.

 

 


 

 


About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, India Pakistan cricket series, Kuselan, India Cricket, Sultan The Warrior

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide