"கணேஷ்... இவளை நல்லா வச்சுப்பீங்கன்னு நம்பறேன். அதனாலதான் எங்க பெற்றோர் விருப்பத்தை மீறி இங்கே காத்திருந்தேன்."
சங்கர் என் உணர்வுகளைப் படித்திருக்க வேண்டும்.
"உனக்குக் கோபம் வரும் சிவா. அது நியாயம்தான். ஒண்ணு சொல்றேன். நாம எல்லோருமே எப்பவாவது ஒரு தடவை நம்ம லைஃப்ல காதலை ஃபீல் பண்றோம். மனசளவுல காதலை ஆதரிக்கிறோம். நம்மை யாராச்சும் லவ் பண்ண மாட்டாங்களான்னு ஏங்கறோம். உன்னால இல்லேன்னு மறுக்க முடியுமா சிவா?" என்றான் சுட்டு விரலை நீட்டி.
"எப்படி முடியும்?"
"அதனால்தான் சிவா, உன் மனசுலயும் காதலுக்கு ஆதரவு இருக்கும்னு நம்பினேன். விஷயம் வெளிப்படும் போது நீ மனப்பூர்வமா இதை ஏத்துப்பேன்னு நினைச்சேன். முழுசா ஆரம்பத்துலேயே சொல்ல அவகாசமும் இல்லே. சூழ்நிலையும் ஒத்து வரலே."
தேர்ந்த இயக்குநர் போல காட்சிகளை நடத்தியவனாய்த் தெரிந்தான்.
"எனக்குக் கொஞ்சம் த்ரில். கொஞ்சம் சஸ்பென்ஸ் பிடிக்கும் சிவா. உனக்குக் காப்பி சர்ப்ரைசா அனுப்பினேனே... அடுத்த சர்ப்ரைசா இவளையும் அனுப்பினேன்" என்று சிரித்தான்.
"ஜனவாசக் காரோட எல்லோரும் போயாச்சு. நாலஞ்சு லேடீஸ்தான் என் கூட. பாத்ரூம் போறேன்னு தப்பிச்சு வந்தேன். என்னோட அதிர்ஷ்டம் யாரும் கவனிக்கலே. இவர் ஸ்டூலை வச்சிண்டு காத்திருந்தார்."
"இப்ப நினைச்சா ஜோக்கா இருக்கு சிவா. அந்த நிமிஷம் யாராவது கவனிச்சிருந்தா..."
என்னால் நம்ப முடியவில்லை. பெண்ணுக்கு விருப்பம் இல்லை என்று தெரிந்தும் இத்தனை அலட்சியமாகவா விட்டுப் போவார்கள்?
"சிவா, கணேஷ்கிட்டே பேசிட்டேன். இன்னைக்கு நைட் வேனோட இங்கே வருவான். இவளை எப்படியாவது அதுல ஏத்திவிட்டுரணும். வசந்தி... இந்தா நீ கேட்ட சுரிதார். எத்தனை நேரம் பட்டுப் புடைவையில் இருப்பே?"
எல்லம் கதைகலும் படிபதட்கு மிகயும் அருமையக இருகிரது, படிகட் படிக ரொம்ப அருவமக இருகிரது,அதுவும் ரிஷிபன் எலுதன தொடர் கதை (காதல்,காதல் காதல்) மிகயும் அருமை கதை மனதை கவர்ந்து இலுகிரது,இந்த கதை உமை கதையா அல்லது கட்பனை கதையா? தொடர்ந்து நல்ல நல்ல தொடர் கதைகல் எலுத எனது வால்துகல்.
We use cookies on this website. By using this site, you agree that we may store and access cookies on your device. Find out more and set your preferences here . X