Home  
இதழ் 461

மார்ச் 22 2010


www.guruji.com

Search

 

Nilacharal Web

Search in English

Help
 

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
Trisha
Wanted Freelancers!
Home>>ஸ்பெஷல்ஸ்

ரிஷி ராக்ஸ்..!! (36)
- ரிஷிகுமார்

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

அத்தருணங்களின் Quantity முக்கியமல்ல.. Qualityதான் முக்கியம். சில மணித்துளி நேர சந்திப்புகளிலும் அடர்த்தியாக வாழக் கற்றுக் கொண்டால், பிரிவுகள் பிணி சேர்க்காது!

ஹாய் ஃபிரெண்ட்ஸ்,

இந்த வாரம் கொஞ்சம் கொஞ்சலாப் பேசலாமா...!

முன்குறிப்பு : ''எத்தனை பேருக்கு இது பிடிக்கும்.. அல்லது பிடிக்காது எனத் தெரியவில்லை. பிடித்தவர்கள் செயல்படுத்தினால் மகிழ்வேன். பிடிக்காதவர்கள் எது எது பிடிக்கவில்லை, ஏன் பிடிக்கவில்லை எனக் காரணம் தெரிவித்தால் மிக மகிழ்வேன். கருத்துக்கள் மாறுபடுவது இயல்புதான். எவ்வகையில் மாறுபடுகிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியதும் அவசியம்தானே?''

Rishiரொமான்ஸ் யாருக்குத்தான் பிடிக்காது.. Romantic என்ற ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் தமிழில் என்னவாக இருக்குமெனத் தேடிப் பார்த்தேன். பல வகைகளில் அர்த்தங்கள் வெளிவருகின்றன. காதல்பூர்வமாக, கற்பிதமாக.. என்று எடுத்துக் கொள்ளலாமா..?

வாழ்க்கையை ஒரு வித காதலுடன், கவித்துவத்துடன் அணுகுபவர்கள் நிரம்பவே சந்தோஷமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். காதலும் கவித்துவமான மன உணர்வுகளும் அரும்பும்போது உறங்கிக் கிடக்கும் ஹார்மோன்களும் உயிர் பெற்று விடுகின்றன. கலைப் பார்வை கொண்ட கண்களுக்கு காணுமிடமெல்லாம் இன்பம்தான்.. ஆனந்தம்தான்!

அழகிய உணர்வுகளை அதே அழகுணர்ச்சியுடன் வெளிப்படுத்த, பகிர்ந்து கொள்ள முடிபவர்கள் மன உளைச்சல்களிலிருந்தும், அழுத்தங்களிலிருந்தும் தள்ளியே நிற்கின்றனர். அன்பு மட்டுமே கொடுக்கக் கொடுக்க விரிந்து கொண்டே செல்வது.

அழகாய் முத்தமிட்டு அதில் நிகழும் ரசவாதங்களை, உணர்வுகளை மென்மையாய் ரசித்து ஆனந்தம் பெறும் மனோபாவம் எத்தனை பேருக்கு இருக்கிறது? என்ன வேலையில் இருந்தால் என்ன.. தொழிலில் இருந்தால் என்ன.. மனசு என்பது மனித குலத்தில் பிறந்த எல்லாருக்கும் பொதுதானே! அதை அனுபவிக்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டியதுதான்!

நம் வாழ்க்கைத் துணையிடம் (அது ஆணாயிணும் சரி.. பெண்ணாயினும் சரி..) மட்டுமே வெளிப்படுத்த, பகிர்ந்து கொள்ளக் கூடிய கவிநயமான உணர்வுகளில்தான் எத்துணை இன்ப, துன்பக் கலப்படங்கள்! அது சிறக்க, இன்பம் மட்டுமே நீடித்து நிற்க, அல்லல்களும் கூட ஆனந்தமாக... எளிய பல வழிமுறைகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் செயல்படுத்த, ஆத்மார்த்தமாய்ப் புரிந்து கொள்ளும் மனம்தான் வேண்டும்!

அன்போ, காதலோ, நேசமோ, பாசமோ.. அது எதுவாயினும், எவ்வகைப்பட்ட நேர்மறை உணர்வாயினும் அதில் உண்மை இருக்க வேண்டும். அப்போதுதானே அது சிறக்கும்! சில நேரங்களில் அவ்வுண்மை கசப்பானதாகவோ, காயப்படுத்தக் கூடியதாகவோ இருக்கும்தான்! அதற்காக பொய் அல்லது அந்நேரத்திய சமாளிப்பு எனும் இனிப்பு பின்னாளில் பின் விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.

நம் துணை விரும்புவதை நாமும் விரும்பினால் எவ்வகையில் குறைந்து விடப் போகிறோம்? நாய் என்றாலே பிடிக்கவில்லை என்பதற்காக, அவர்கள் விரும்பி வளர்க்கும் அழகான நாய்க்குட்டியை புறந்தள்ளலாமா.. அந்த அல்லலையும் கூட விரும்பி ஏற்றுக் கொள்வது நம் பிணைப்பை அல்லவா வலுப்படுத்தும்?

நம் துணையுடன் நாம் கழிக்கும் தருணங்களில் முழுமை இருக்குமாறு பார்த்துக் கொள்வது மிக நன்று. அத்தருணங்களின் Quantity முக்கியமல்ல.. Qualityதான் முக்கியம். சில மணித்துளி நேர சந்திப்புகளிலும் அடர்த்தியாக வாழக் கற்றுக் கொண்டால், பிரிவுகள் பிணி சேர்க்காது!

நாம் துணை நமக்காகக் காத்திருக்கும் நேரங்களில் நாம் அலுவல்களில் முழுமையாய் சிக்கியிருக்கும் பட்சத்தில், நிலைமையைச் சொல்லி ஒரு தொலைபேசிவிட்டாலே போதுமே! இரு நிமிடப் பேச்சு, இரண்டு மணி நேர மனப் பிணக்குகள் உருவாகாமலேயே தவிர்க்கலாம் அல்லவா! அப்படியும் பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டதா? செல்லில் ஒரு குறுந்தகவல் அனுப்பி விடவும் அந்த இரு நிமிடங்கள் போதுமே! துணை நம் கவனத்தைக் கேட்கும் நேரங்களில் இது அவர்களுக்கு ஆறுதல் அளிக்கக் கூடும்!

பொதுவிடங்களில் உள்ளங்கைகோர்த்துச் செல்வது ஒரு பாதுகாப்புணர்வை இருபாலருக்குமே ஏற்படுத்தும். தங்கள் அந்நியோன்யத்தை மற்றவர்களுக்குப் பறைசாற்றும் ஒரு வாய்ப்பாகவும் அது அமையும். அதனால் ஏற்படும் பெருமையும் உளப் பூரிப்பை ஏற்படுத்தும் அல்லவா!

அரவணைத்தல் எல்லாவற்றிருக்குமே அருமருந்து. முத்தம் ஏற்படுத்தும் கிளர்ச்சியை விட, நேசமுள்ள, ஆதுரமான அரவணைப்பு ஏற்படுத்தும் மலர்ச்சி கடினமான மனதையும் கரைய வைக்கும். முத்தம் வேண்டாம் என்றெல்லாம் சொல்லவில்லை... அதிலும் கஞ்சத்தனம் வேண்டாம்.

இனிப்பாய்ப் பேசுவதைத் தவிர்த்து இனிமையாய், சுவாரஸ்யமாய் பேசலாமே! உலகில் சுவாரஸ்யமான விஷயங்கள் எவ்வளவோ கொட்டிக் கிடக்க, பிறர் குறை காணும்/கூறும் மனப்பாங்கினைத் தவிர்த்துப் பேசலாமே.

பரிசுப் பொருட்கள் அளப்பரிய மாற்றத்தினை உங்கள் துணையிடத்தில் ஏற்படுத்துபவை. விசேஷ நாட்களில் அதற்கேற்றாற்போல பரிசுப் பொருட்களை அளிப்பது சந்தோஷம் கொடுக்கும். சாதாரண நாட்களில் கூட சஸ்பென்ஸாய் வைத்திருந்து திடீரெனப் பரிசளிப்பது அந்த நாளையே விசேஷமாக்கிக் காட்டும்!

குறிப்பாக, முதன்முதலில் காதலில் விழுந்த நாள், திருமண நாள், பிறந்த நாள் போன்றவற்றை அவசியம் ஞாபகம் வைத்திருக்க வேண்டும். இது போன்ற நாட்களை மட்டும் வசதியாய் மறந்து விடுதல் ஆண்களுக்கே உரிய செலக்டிவ் அம்னீஷியா!!

நம் துணையின் விருப்பங்களை மட்டுமல்ல.. அவர்கள் விரும்பக் கூடிய நபர்களையும் நாம் அறிந்து வைத்துக் கொள்ளுதல் நம் மீதான அவர்கள் மதிப்பை மேலும் மேலும் கூட்டும். அவர்களைச் சுற்றி நிகழும் ஏதோ ஒரு நிகழ்வில் கூட உங்கள் கவனம் செல்கிறது, அவர்களைக் கனிவுடன் கவனிக்கிறது என்ற எண்ணம் அவர்களுக்கு உண்டாகும்போது மதிப்பு மட்டுமல்ல, நேசமும் இரு மடங்காகும்! நம் கவனத்திற்குள் அவர்கள் இருந்தால் போதும், நம் கட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதல்ல.

சாதாரணமாய்ப் பேசிக் கொண்டிருக்கும்போதே நம் நேசத்தை வெளிப்படுத்தலாம். பேச்சினிடையில் ஐ லவ் யூ.. சொல்வது அவ்வளவு கடினமா என்ன..! ப்ரூக்பாண்ட் காபி விளம்பரம் பார்த்திருப்பீர்களே! நான் ரொம்பவும் ரசித்த விளம்பரம் அது. விளம்பரங்கள் இதயத்தைத் தொட வேண்டும்.

தினமும் காலையில் எழுந்தவுடன் அழகாய் சோம்பல் முறித்து ஒரு காலை வணக்கம் சொல்லலாமே! வெளியில் போயிருந்தாலும் ஒரு சிறிய காலை வணக்கக் குறுந்தகவல் உங்கள் துணையை சந்தோஷப்படுத்தும்.

ஏதோ ஒரு நாள் மாலையில் திடீரென வெளியில் சென்று, அதுவரை போயிராத ஒரு ரெஸ்டாரெண்டிற்குச் சென்று மாலை சிற்றுண்டி சாப்பிடுவது மனதிற்கு ஒரு வித இதமளிக்குமல்லவா..! உங்கள் துணை சொல்லாமலேயே அவர்களுக்குப் பிடித்த ஸ்பெஷல் மெனுவை ஆர்டர் செய்தால் உணவு மட்டுமல்ல.. உறவும் சுவைக்கும்!

குண்டு, அசிங்கம், அருவருப்பு, பழசு, மடத்தனம் இது போன்ற வார்த்தைகளை மூளையில் இருந்து அழித்து விடுதல் நேசமுடையார்க்கு அழகு!

மனங்கவர்ந்த திரைப்படப் பாடல்களைப் பாடலாம். அந்தப் பாடல்களின் அழகிய வரிகளை கவிதை போல வாசிக்கும் திறன் இருந்தாலும் கூடப் போதும். நகைச்சுவை ததும்பும் ஜோக்குகளைச் சொல்லலாம். நிலாச்சாரலில் ரிஷி என்பவர் எழுதிய நகைச்சுவை பிட்ஸ் நிரம்பவும் உதவக் கூடும்!!!!

பிற நபர்களின் பழக்க வழக்கங்களோடு தொடர்புப்படுத்தி, வேறுபாடுகள் காணாமல் பழகுதல் நல்லது. எல்லோருக்குமே தனித்துவம் ஒன்று உண்டு. அதைக் கண்டு அதைப் பாராட்டுதல் எப்போதும் நல்லது.

எதற்காகவும், எப்போதுமே சண்டையிடுதல் வேண்டாம். பெரும்பாலான பிரச்சினைகளை மனம் விட்டுப் பேசிவிட்டால்.. பேச்சு வாக்கிலேயே கூட அவை காணாமல் போய் விடும். பேசி முடிக்கும்போது சிரித்த முகமாய், மகிழ்ச்சிகரமாய் இருப்போம். மனம் விட்டுப் பேசுதல் என்பது எந்த ஒரு முன்முடிவுடன் அந்தப் பிரச்சினையை அலசாமல் அதற்கான காரணிகளையும், வேறு ஏதேனும் நல்ல முடிவு அதில் காண முடியுமா என்ற வகையிலும் அமைய வேண்டும்.

வாழ்க்கைத் துணையுடனான இது போன்ற தொடர்பாடல், அவர்களுடனான உறவு பயனுள்ள வகையிலே மேன்மையடைய உதவும். தனிக் குடும்பங்களின் மேன்மை உயர்வு நிலை, சமுதாய மேன்மையையும் உண்டாக்குமல்லவா!

வாசிக்கும்போதே பலருடைய முகங்களில் கொட்டாவியைக் காண முடிந்தது. இருந்தாலும் இறுதி வரை வாசித்து முடித்த அன்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!

அடுத்த வாரத்தில் சந்திக்கலாம். வரட்டுமா..

ச்சியர்ஸ்........!


ரிஷிகுமார் அவர்களின் இதர படைப்புகள். ஸ்பெஷல்ஸ் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
                         
Your Comments
 
suganthe
3/21/2010 , 8:10:47 PM

 [Comment url]
ஆகா நல்ல பதிவு எல்லோரும் பின்பற்றி ஆனந்தமாக வாழட்டும். நன்றி
 
C.PREMALATHA
3/22/2010 , 12:54:36 AM

 [Comment url]
வணக்கம் ரிஷி. இன்று பல இளசுகளின் வாழ்க்கையே குறுந்தகவலில்தான் ஓடிக் கொண்டிருக்கின்றன. (தலைவர் சொல்வதைப் பார்த்தால் தலைவருடைய வாழ்க்கையும் இதில்தான் போகுதோ?) இருந்தாலும் இந்த உணர்வுகள் அன்பை பலப்படுத்தும். அதன் மூலம் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல் போன்ற நல்விசயங்களும் உண்டாகும். வாழ்க்கையில் எல்லோருக்கும் உண்மையாக முக்கியமாக துணையிடம் உண்மையாக இருக்க வேண்டும், இந்த உண்மை மருந்தைப் போன்றது முதலில் கசக்கும். ஆனால் பின்னால் அதன் பலனோ பின்னால் மிகப் பெரிய நன்மையைத் தரும். அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள். நன்றி.
 
Radha
3/22/2010 , 1:00:04 AM

 [Comment url]
rishi roomba than theriteenga anna athu unmai than ...... anbu ulla mattum ulagam uir valum ...
ithu than china china anba romancoda pakirthukidurathu ....
 
bharani
3/22/2010 , 1:35:33 AM

 [Comment url]
காதலிக்கும் எல்லா ஆண்களும் நீங்கள் எழுதியிருப்பதில் சிலவற்றையாவது கடைப்பிடிப்பார்கள். ரொமான்ஸ் என்பது ஏனோ காதல் சம்பந்தப்பட்ட விஷயமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. கல்யாணமானவர்கள், குறிப்பாக பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைத்தவர்கள் இதைப் பின்பற்றினால், நன்றாயிருக்கும். இனிப்பாய் பேசுவதை விட இனிமையாய் பேசுவது எவ்வளவு பேருக்குத் தெரியும்? எத்தனையோ விஷயங்கள் வெளிப்படையாகப் பேசப்பட்டாலும் ரொமான்ஸ் பேசத் தயங்கும் விஷயங்களில் ஒன்றாகவே இருக்கிறது. இந்த மாதிரியான கட்டுரைகள் தேவையே.
 
latha
3/22/2010 , 1:40:27 AM

 [Comment url]
வாசிக்கும்போதே பலருடைய முகங்களில் கொட்டாவியைக் காண முடிந்தது. இருந்தாலும் இறுதி வரை வாசித்து முடித்த அன்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!

எப்படி உண்மையை இவ்வளவு கரெக்டா சொன்னீங்க.
நிஜமாகவே இந்த வாரம் ரிஷி ராக்ஸ்--------------------sorry
 
Devika
3/22/2010 , 10:01:07 PM

 [Comment url]
காதல் காதல் காதல்............. இல்லையேல் சாதல் சாதல் சாதல். காதல் இல்லாமல் இந்த உலகில் ஒரு உயிரினமும் இல்லை. ஒரு அறிவு உள்ள உயிர்கள் முதல் 6 அறிவு படைத்த மனிதர்கள் வரை இந்த காதல்(அன்பு, பாசம்) இல்லாமல் இல்லை.
ரிஷி,
உங்களுக்கு ஒரு ஓ போடுரேன் எங்க குழு சார்பாக ஓஓஓஓஓஓஓஓஓ........ (எப்படியோ கொஞ்சம் கொஞ்சமா ஒதுக்கிட்டீங்க.)
உங்க காதலுக்கு ஜெய்...................
 
Rishi
3/22/2010 , 11:32:25 PM

 [Comment url]
வருகைக்கு மிக்க நன்றி சுகந்தி
 
Rishi
3/22/2010 , 11:34:24 PM

 [Comment url]
வாழ்த்துக்களுக்கு நன்றி பிரேம்ஸ். நான் சொன்னதின் சாராம்சத்தைக் கொடுத்துட்டீங்க..! இதுக்குத்தான் இப்படி ஒரு கொள்கை பரப்புச் செயலாளர் வேணுங்கிறது.. :-)
 
Rishi
3/22/2010 , 11:35:39 PM

 [Comment url]
தொடர் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ராதா
 
Rishi
3/22/2010 , 11:37:34 PM

 [Comment url]
முதல் வருகைக்கும், ஆழ்ந்த கருத்திற்கும் மிக்க நன்றி பரணி. உங்க கதை "பெஸ்ட் சாய்ஸ்" மிக நல்லாயிருந்தது. உணர்ந்து ரசித்தேன். தொடர்ந்து வாருங்கள்.. எழுதுங்கள்
 
Rishi
3/22/2010 , 11:40:36 PM

 [Comment url]
லதா
:-)). எனக்குக் கூட அல்வா பிடிக்காது. இருந்தாலும் அல்வா டேஸ்ட் நல்லாவே இருக்காதுன்னு சொல்ல முடியாதே!
கொட்டாவி வந்தாலும் கடைசி வரைக்கும் படிச்சிட்டீங்களே! அது போதும் எனக்கு :-)
 
Rishi
3/22/2010 , 11:47:31 PM

 [Comment url]
வாங்க தேவிகா. இம்புட்டு லேட்டாவா வர்றது. அன்பு, பாசம், நேசம், காதல் இதைப் பத்தியெல்லாம் யாரு வேணும்னாலும் எழுதலாம். அந்த உணர்வுகள் எல்லாருக்குள்ளேயும் புதைஞ்சிருக்கு. அதான் நான் எழுதினேன். நீங்க போட்ட ஜெய் என் எழுத்திற்காக என்று எடுத்துக் கொள்கிறேன் :-))
 
latha
3/23/2010 , 1:30:05 AM

 [Comment url]
அல்வா-வா அப்படின்னா
ஒகே. எனக்கு புரியலை.
ரிஷி ராக்ஸ் எப்பவுமே முதல்ல பார்த்துட்டுதான் அப்பறம் அடுத்தது படிப்பேன்.நீங்க எ௯ழுதறது அப்படியே எங்ககூட பேசறமாதிரி எதார்த்தமா இருக்கும். அதனாலதான்.
இந்த தடவை நான் சொன்னது உங்களுக்கு பிடிக்கலைன்னு நினைக்கிறேன்.,
 
Devika
3/23/2010 , 3:16:47 AM

 [Comment url]
"அந்த உணர்வுகள் எல்லாருக்குள்ளேயும் புதைஞ்சிருக்கு."

உங்களுக்குள்ளும் புதைஞ்சிருந்த அந்த உணர்வை எப்படியோ வெளிய கொண்டு வந்துடீங்க கடைசியா :-))

"நீங்க போட்ட ஜெய் என் எழுத்திற்காக என்று எடுத்துக் கொள்கிறேன்"

இதானே வேண்டாங்குறது........
 
Rishi
3/23/2010 , 5:03:40 AM

 [Comment url]
லதா,
அல்வா சும்மா உதாரணத்துக்கு சொன்னது. உங்க கருத்தை நீங்க சொல்லியிருக்கீங்க. அதில் தவறொன்றுமில்லையே. இன்னும் சொல்லப்போனால் அதை வரவேற்கவே செய்கிறேன். உங்கள் யதார்த்தமான விமர்சனமும் மனதிற்கு இதமே தருகிறது.
 
Rishi
3/23/2010 , 5:07:51 AM

 [Comment url]
[[ நீங்க போட்ட ஜெய் என் எழுத்திற்காக என்று எடுத்துக் கொள்கிறேன்

இதானே வேண்டாங்குறது........]]

இது மட்டும்தான் வேணுங்கிறது!! :-))
 
C.PREMALATHA
3/23/2010 , 5:10:41 AM

 [Comment url]
பாராட்டிற்கு நன்றி ரிஷி. நான் எப்பவுமே உங்களுடைய விசுவாசிதான். எங்க வீட்டுக்காரர் கட்டுரையை ரசித்து படித்தார். தன்னுடைய வாழ்த்தினை தெரிவிக்கச் சொன்னார்.
 
Rishi
3/23/2010 , 5:15:37 AM

 [Comment url]
[[எங்க வீட்டுக்காரர் கட்டுரையை ரசித்து படித்தார். தன்னுடைய வாழ்த்தினை தெரிவிக்கச் சொன்னார்.]]

வீட்டுக்காரரும் ரசித்தாரா? பரவாயில்லை! பெண்களிடமிருந்து மட்டுமே கமெண்ட்ஸ் வருதேன்னு பார்த்தேன்.
அண்ணனுக்கு நன்றி சொன்னேன்னு சொல்லிடுங்க பிரேம்ஸ்..
 
Balasundar Senthilvel
3/23/2010 , 10:57:57 AM

 [Comment url]
அண்ணே, இதெல்லாம் உங்க காதலி(கள்)கிட்ட கடைபிடிக்கிறீங்களா? இல்ல அவங்க சொன்னதா இது?
 
Devika
3/23/2010 , 11:29:08 PM

 [Comment url]
\\நம் துணை விரும்புவதை நாமும் விரும்பினால் எவ்வகையில் குறைந்து விடப் போகிறோம்?//
ரிஷி, ரொம்ப அற்புதமான கருத்து. இருவரும் இந்த கருத்தை எந்த ஈகோவும் இல்லாமல் ஏற்று கடைபிடித்தால் வாழ்க்கை மிக இனிமையாக இருக்கும். அப்புறம் அந்த பரிசளிக்கிறது பத்தி சொன்னீங்களே அது ஒரு சிறந்த யோசனை. ஆனால் சிலர் கேட்டாலே வாங்கி தர மட்டாங்களே அவங்கள என்ன செய்யுறது? ( நீங்க எப்படி?)
 
Panneer selvam
3/24/2010 , 2:31:52 AM

 [Comment url]
மிக அருமையான சிந்தனைகள். மீண்டும் மீண்டும் படித்து மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய செய்திகள்
 
Rishi
3/24/2010 , 6:52:16 AM

 [Comment url]
தம்பி.. சக்திவேலு.....
உன்னைத்தான் காணோம்னு சந்தோஷப்பட்டேன்! ஆப்பு வைக்க வந்தாச்சா!! :-)
வாத்ஸ்யாயனார் காமசூத்திரத்தை அனுபவம் இல்லாமலேயே எழுதினார்னு எல்லாரும் சொல்றாங்களே... அதுமாதிரி நான் இருக்கக் கூடாதா...!!
 
Rishi
3/24/2010 , 6:53:46 AM

 [Comment url]
[[ ஆனால் சிலர் கேட்டாலே வாங்கி தர மட்டாங்களே அவங்கள என்ன செய்யுறது? ( நீங்க எப்படி?) ]]
தேவிகா
நான் எப்படினு இப்பக் கேட்டா... கல்யாணம் ஆனப்பொறவாட்டி சொல்றேன்...!!!
 
Rishi
3/24/2010 , 6:54:40 AM

 [Comment url]
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பன்னீர்செல்வம். தொடர்ந்து வாருங்கள்
 
Surya
3/24/2010 , 7:25:43 AM

 [Comment url]
Hi Rishi Sir,
Katturai nandraga dhan irukirathu. Kottaavi vidum alauvku moosam oonrum illa.
apram, Psychology pathi konjam ezhluthungalean....... padipatharku migaum aarvamaga irukiren...
Thanks
SURYA
 
Balasundar Senthilvel
3/24/2010 , 1:05:05 PM

 [Comment url]
//உன்னைத்தான் காணோம்னு சந்தோஷப்பட்டேன்!//

அண்ணே, உங்கள சந்தோஷ படுத்தத்தான் எங்க குழு கொஞ்சம் விடுமுறை எடுத்தது. இப்போ வந்துட்டோம்ல, இனி அதிரடிதான். குழுவினரே!! அடுத்த கட்ட தாக்குதலுக்கு தயாராகுங்கள்.........
 
P.Balakrishnan
3/24/2010 , 1:51:19 PM

 [Comment url]
இக்கட்டுரையை நான் படித்து முடிக்கும்போது இரவு மணி 11.11. உண்மையிலேயே எனக்குக் கொட்டாவி வந்துவிட்டது. இல்லறத்தில் இருபாலருக்கும் ஏற்படும் பிணக்குகள் குறைந்திட விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு ஒருவருக்காவது அமைய வேண்டும். கட்டுரையில் காணப்படும் செய்திகள் இல்வாழ்க்கையின் தொடக்க நிலையில் பெரும்பாலும் பின்பற்றக் கூடியவை. பொறுப்புகளும் குடும்பச் சுமையும் கூடும்போது சற்றே ஓய்வெடுக்க ஒரு தாய் மடியை நாடும் மனது. அது ஆணுக்குப் பெண்ணாகவும், பெண்ணுக்கு ஆணாகவும் இருந்தால் வாழ்க்கை சுமையல்ல; சுகமே! அங்குதான் உண்மையான காதல் மலர்ந்து மணம் பரப்பும்!
 
Rishi
3/25/2010 , 11:46:39 PM

 [Comment url]
[[Katturai nandraga dhan irukirathu. Kottaavi vidum alauvku moosam oonrum illa.
apram, Psychology pathi konjam ezhluthungalean....... padipatharku migaum aarvamaga irukiren...
Thanks ]]

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சூரியா. சைக்காலஜி பத்தி நிறைய பேர் நிறைய எழுதிட்டாங்க.. நான் என்ன எழுதப் போறேன்.. எனக்குத் தெரிஞ்ச வைகையில, என்னோட பார்வையில எழுத முயற்சி பண்றேன் சூரியா..
நன்றி!
 
Rishi
3/25/2010 , 11:53:08 PM

 [Comment url]
[[இக்கட்டுரையை நான் படித்து முடிக்கும்போது இரவு மணி 11.11. உண்மையிலேயே எனக்குக் கொட்டாவி வந்துவிட்டது. ]]
இதைப் படிக்கும் போது சிரிப்பு வந்துடுச்சு சார்.

[[பொறுப்புகளும் குடும்பச் சுமையும் கூடும்போது சற்றே ஓய்வெடுக்க ஒரு தாய் மடியை நாடும் மனது. அது ஆணுக்குப் பெண்ணாகவும், பெண்ணுக்கு ஆணாகவும் இருந்தால் வாழ்க்கை சுமையல்ல; சுகமே! அங்குதான் உண்மையான காதல் மலர்ந்து மணம் பரப்பும்!]]
சத்தியமான உண்மை! எனக்கு வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை.
 
Surya
3/26/2010 , 12:46:12 AM

 [Comment url]
Thank you Rishi Sir..........
 
valluvaraju
3/26/2010 , 2:06:50 PM

 [Comment url]
அருமையான அனுபவம் படிக்கும்போதெ மனசுல சந்தோசம்
 
paru
3/26/2010 , 8:35:17 PM

 [Comment url]
very intresting words.i really felt it
 
Rishi
3/30/2010 , 11:58:05 PM

 [Comment url]
வருகைக்கு நன்றி வல்லுவராஜா மற்றும் பாரு.
அனுபவிக்க நீங்க இருந்தால்.. சந்தோஷம் கொடுக்க நானிருக்கேன்.
Comment
உங்கள் கருத்து
பெயர் :
மின் அஞ்சல் :
சுட்டி :

Comment In:

Tamil English
(Type here in Thanglish and see tamil text in bottom. Tamil conversion powered by : www.suratha.com)
NOTE : Please do not use single quote in your comments. You can use double quote in place.
(English / தமிழில் - யூனிகோட்)
What you see in this box gets posted as feedback.

Hot properties in India

ஜோதிடம் கேளுங்கள் பகுதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைந்து கட்டண சேவை பெற இங்கே சுட்டவும்.

 

 


 

 


About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, India Pakistan cricket series, Kuselan, India Cricket, Sultan The Warrior

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide