அவரது திறமைக்கு மகுடம் சூட்டும் விதமாக ரஜினியின் குசேலன் பட வாய்ப்பு கிடைத்திருப்பதால்மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்
ப்ரகாஷ்!
நடிகர் ரகுவரனின் மறைவு
சிறந்த வில்லன் மற்றும் குணசித்திர நடிகருமான ரகுவரன், சென்னையில்
உள்ள மேத்தா மருத்துவமனையில் கடந்த மார்ச் 19 அன்று மாரடைப்பால்
மரணமடைந்தார். சமீபத்தில் வெளியான 'சில நேரங்களில்' திரைப்படத்தில்
அவருடைய நடிப்பிற்காக பலரது பாராட்டையும் பெற்றார் என்பது
குறிப்பிடத்தக்கது. ஒரு சிறந்த நடிகரை தமிழ் சினிமா இழந்திருக்கிறது.
‘குருவி’யின் சாதனை
விஜய் நடிக்கும் ‘குருவி’ படத்தின் விநியோக உரிமை விற்பனை கேரளாவில்
ஒன்றரை கோடியை எட்டியுள்ளதாம். கர்நாடகாவில் ஒரு கோடியே 20 லட்சத்தை
எட்டியுள்ளது. படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் விஜய்யின்
நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
சரத்தின் ‘1977’
சரத்குமாரின் அடுத்த படமான 1977 பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்
இங்கே:
• படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பதைத் தவிர 6 வித்தியாசமான
வேடங்களில் வருகிறார் சரத்.
• நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படத்தின் மூலம் மீண்டும்
தயாரிப்பாளராகியுள்ளார் சரத்குமார்.
• படத்தில் 3 கதாநாயகிகள் நடிக்கின்றனர்.
தமிழில் மீண்டும் ஜெயராம்
‘பிரிவோம் சந்திப்போம்’ படத்தைத் தொடர்ந்து ஜெயராம் ‘ஏகன்’
திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். அவர் சம்பந்தமான
படப்பிடிப்பு ஊட்டியில் நடக்கவுள்ளது. இனி ஜெயராமை தமிழ்ப் படங்களில்
மீண்டும் எதிர்பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் அமீர்கானுக்கு மரியாதை
அமீர்கான் தான் இயக்கிய ‘தாரே ஜமீன் பர்’ படத்திற்கு 2007ஆம் ஆண்டின்
•ப்லிம்பேர் விருதை வென்றதை ஒட்டி அவரைக் கவுரவிக்கும் வகையில்
கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ் அறக்கட்டளை 2007ஆம் ஆண்டின் சிறந்த
இயக்குனருக்கான விருதை அவருக்கு அளிக்கவுள்ளது. அறக்கட்டளை ஆரம்பித்த
இந்த 11 ஆண்டுகளில் முதல் முறையாக ஹிந்தி திரைப்படத்திற்கு விருது
வழங்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மகிழ்ச்சியில் இசையமைப்பாளர் G.V.ப்ரகாஷ்
சுஜாதாவின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட ‘ஆனந்த தாண்டவம்’ படத்திற்கு
இசையமைத்துள்ளார் வளரும் கலைஞரான G.V.ப்ரகாஷ். செல்வராகவனின்
‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இசையமைப்பாளரும் இவரே. அவரது திறமைக்கு
மகுடம் சூட்டும் விதமாக ரஜினியின் குசேலன் பட வாய்ப்பு
கிடைத்திருப்பதால்மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார் ப்ரகாஷ்!
ஏ.வி.எம்.மின் பெருந்தன்மை
ஏ.வி.எம் நிறுவனம், ‘சிவாஜி’ படத்தின் மூலம் கிடைத்த லாபத்தை
தங்களுடைய பணியாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக ஊக்கத் தொகை
அளிக்கவுள்ளனராம்.
*****
|