 |
இதழ் 462 |
 |
மார்ச் 29 2010
|

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Your Advertisement Here
|
| |
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
|
|
| மனித உடலியல்(31)
- டாக்டர்.விஜயராகவன் |
| | வாழைப் பழங்கள் ஆற்றலை வழங்கும் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும்; உடல் அதனை விரைந்து ஏற்றுக்கொள்கிறது. பழுத்த வாழைப் பழங்கள் ஒரு வாயுப் பொருளை வெளிப்படுத்திப் பிற பழங்களையும் விரைந்து பழுக்கச் செய்கின்றன.
 வைட்டமின் - சி ஏன் நமக்குத் தேவை?
நாம் உண்ணும் உணவு நமக்குத் தேவையான புரதம், கொழுப்பு, கார்போ ஹைட்டிரேட் என்னும் மாவுப் பொருள், தண்ணீர் மற்றும் கனிமம் போன்ற பொருட்களை அளிக்கிறது. ஆனால் இவை மட்டுமே நமக்குப் போதுமானவை அல்ல. நம் உடலின் வாழ்வைப் பராமரிக்க வைட்டமின்களும் தேவை. வைட்டமின்-சி எலுமிச்சம் பழம், புதுக் காய்கறிகள் ஆகியவற்றில் கிடைக்கிறது. நமது உடலில் வைட்டமின்-சி குறைபாடு இருக்குமானால், நோய்கள் உண்டாகும். உடலில் வைட்டமின் சி குறைந்து போகுமானால் என்ன நிகழும்? இரத்த நாளங்கள் வலிமை குறைந்து போய் இரத்தக் கசிவு உண்டாகிறது. தோலில் மற்றும் கண்களின் அருகில் கரிய மற்றும் நீல நிறத் தழும்புகள் ஏற்படும். பல் ஈரலிலும் இரத்தக் கசிவு உண்டாகும். நமது ஹார்மோன்களும் மற்றும் என்சைம் எனப்படும் நொதிகளும் சரியாக செயல்படாமல் போகும்; மற்றும் பாக்டீரியா எனப்படும் நுண்ணுயிர்களின் தொற்றுக்கான எதிர்ப்புச் சக்தியும் குறைந்து போகும்.
நெடுங்காலத்திற்கு முன்னரே மக்கள் வைட்டமின்கள் பற்றி அறிந்திருந்தனர்; மக்கள் சில வகை உணவுகள் கிடைக்காத நிலையில் சில நோய்களுக்கு ஆளாகும் நிலை உண்டாயிற்று. எடுத்துக் காட்டாக கடற்பயணம் மேற்கொள்ளும் மாலுமிகளுக்கு புதிய காய்கறிகள் உண்ண முடியாத நிலையில், பல் ஈறுகளில் வீக்கம் ஏற்படலாயிற்று. பதினேழாம் நூற்றாண்டில் கடற்பயணம் மேற்கொண்ட பிரிட்டிஷ் மாலுமிகளுக்கு இந்நோய் வராமல் தடுப்பதற்காக எலுமிச்சம் பழங்கள் அளிக்கப்பட்டன்.
பழங்களில் ஆற்றலும், பல்வகையான முக்கிய வைட்டமின்களும் கனிமங்களும் உள்ளன. வைட்டமின்கள் எனப்படுபவை நம் உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருக்கக்கூடிய வேதிப்பொருட்களாகும். இவற்றுள் சில உடலில் இருப்பவை மற்றவை ஒவ்வொரு நாளும் உணவின் வாயிலாகப் பெறப்படுபவை.
****** மனிதர்களுக்கு கார்போ ஹைட்டிரேட்டுகள் (மாவுச் சத்துகள்) ஏன் முக்கியமானவை? மனிதர்கள் ஆற்றலைப் பெறுவதற்கு ஒவ்வொரு நாளும் சில வகை உணவுகள் தேவைப்படுகின்றன. ஏறக்குறைய எல்லா உணவுகளும் சில ஆற்றலை வழங்குகின்றன; எனினும் கார்போ ஹைடிரேட்டுகள் பெருமளவு ஆற்றலை அளிக்கின்றன. ரொட்டி, உணவு தானியங்கள், உருளைக் கிழங்கு அரிசி போன்றவை கார்போ ஹைட்டிரேட்டுகளில் அடங்குபவை.
நமது உடல்களுக்கு வேறு சில தேவைகளும் உள்ளன. நமக்குத் தேவைப்படும் அனைத்தையும் சாப்பிடுகிறோம் என்பதை உறுதிப்படுத்த பலவகை உணவுகளையும் நாம் உண்ணவேண்டும்; அவற்றில் சரியான அளவில் கார்போஹைட்டிரேட்டுகள், கொழுப்பு, புரதங்கள், வைட்டமின்கள் ஆகியன அடங்கியிருக்க வேண்டும். இத்தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்யும் உணவே சமச்சீர் உணவு எனப்படுகிறது.
இவ்வுணவு வகைகள் பல்வேறு நோக்கங்களையும் நிறைவேற்றுகின்றன: ஆற்றலை கார்போ ஹைட்டிரேட்டுகள் வழங்குகின்றன; உயிரணுக்களைச் சரிப்படுத்தவும் கட்டமைக்கவும், இரத்தம், தோல், தசைகள், எலும்புகள் ஆகியவற்றை நன்கு ஆரோக்கியமாக வைத்திருக்கவும் புரதங்கள் உதவுகின்றன.
வாழைப் பழங்கள் ஆற்றலை வழங்கும் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும்; உடல் அதனை விரைந்து ஏற்றுக்கொள்கிறது. பழுத்த வாழைப் பழங்கள் ஒரு வாயுப் பொருளை வெளிப்படுத்திப் பிற பழங்களையும் விரைந்து பழுக்கச் செய்கின்றன.
|
| | டாக்டர்.விஜயராகவன் அவர்களின் இதர படைப்புகள்.
| அறிவியல் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
|
|
|
|
|