Home  
இதழ் 411

ஏப்ரல் 06 2009


Weekly Newsletter Subscription

Name
Email

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
Karthi
Access consciousness bars
Home>>அறிவியல்

மனித உடலியல் (18)
- டாக்டர்.விஜயராகவன்

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

எதிரொளிக்கப்பட்ட ஒலி திரையில் படமாக விழுகிறது. இதன் மூலம் கருவுற்ற தாயின் வயிற்றிலுள்ள குழந்தை பற்றி அறிய முடிகிறது.

நமக்கு ஏன் எலும்புக்கூடு (skeleton) அமைந்துள்ளது?

எலும்புகளாலான வலையமப்பை எலும்புக்கூடு என்கிறோம். முழு உடலையும் ஒன்றிணைத்துப் பிடித்துக்கொள்ளும் ஒரு சட்டகமாக எலும்புக்கூடு விளங்குகிறது.

எலும்புக்கூடு இல்லமலிருக்குமானால் உடலுக்கு ஆதாரமான பிடிமானமின்றி துணிப்பொம்மை போல் உடல் துவண்டு விழுந்து விடும். அதாவது உடலால் எங்கும் நடமாடவே இயலாது.

இதுமட்டுமல்லாமல் உடலின் முக்கிய பகுதிகளான மூளை, இதயம், நுரையீரல்கள் போன்றவற்றிற்கும் பாதுகாப்பாக எலும்புக்கூடு அமைந்துள்ளது. உடலின் மென்மையான உறுப்புகள் அனைத்திற்கும் ஆதாரமாகவும் உறுதுணையாகவும் விளங்குவது எலும்புக்கூடேயாகும்.

எலும்புக்கூடு நெம்புகோல் அமைப்புபோல் துணைபுரிந்து உடலின் தசைகள் இயங்கவும் வழி செய்கிறது. இதனால் உடலின் அசைவுகள் அனைத்தும் நன்கு நடைபெற முடிகிறது.பிறந்த குழந்தைக்கு சுமார் 300 எலும்புகள் உள்ளன. இவற்றுள் 94 ஒன்றோடொன்று இணைந்து அமைந்துள்ளவை. கை மற்றும் மணிக்கட்டு ஆகியவற்றில் மட்டும் 27 எலும்புகள் அமைந்துள்ளன.

எக்ஸ்-ரே ஏன் எடுக்கப்படுகிறது?

மனிதர்களுக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால், உடனே மருத்துவமனைக்குச் சென்று, எலும்புகளில் ஏங்கேனும் முறிவு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய எக்ஸ்-ரே எடுப்பதை நாம் அறிவோம். எக்ஸ்-ரேயில் காணப்படும் படம் நிழற்படமாக அமைந்திருப்பதை நாம் காணலாம். எக்ஸ் கதிர்கள் உடற்பகுதிகளுள் ஊடுருவி படலத்தில் (film) நிழற்பகுதியாக விழுகின்றன. இப்படலத்தின் இரு பக்கங்களிலும் பசை (emulsion) பூசப்படுகிறது; பின்னர் இது வெளியில் காட்டப்படும்போது சாதாரண ஒளிப்படமாகக் காட்சியளிக்கிறது. எலும்புகள் மற்றும் பிற பொருட்களை எக்ஸ் கதிர்கள் ஊடுருவிச் செல்ல முடியாததால் அவை அடர்த்தியான நிழற்பகுதியாக படலத்தில் ஒளிர்கின்றன. இதனைப் பார்த்து மருத்துவர் எலும்புகளில் முறிவு அல்லது இட மாற்றம் ஏற்பட்டுள்ளதா என அறிந்து கொள்கிறார்.

எக்ஸ் கதிர்களைப் போன்றே மீஒலி அலைகளும் (ultrasonic sound waves) உடலில் ஊடுருவிச் செல்கின்றன. அவை உடலினுள் இருக்கும் உறுப்புகளால் திருப்பி அனுப்பப்படும். எதிரொளிக்கப்பட்ட ஒலி திரையில் படமாக விழுகிறது. இதன் மூலம் கருவுற்ற தாயின் வயிற்றிலுள்ள குழந்தை பற்றி அறிய முடிகிறது. இதனை ஸ்கேன் (scan) எடுத்தல் என்கிறோம்.

டாக்டர்.விஜயராகவன் அவர்களின் இதர படைப்புகள். அறிவியல் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
                         
Your Comments
Comment
உங்கள் கருத்து
பெயர் :
மின் அஞ்சல் :
சுட்டி :

Comment In:

Tamil English
(Type here in Thanglish and see tamil text in bottom. Tamil conversion powered by : www.suratha.com)
NOTE : Please do not use single quote in your comments. You can use double quote in place.
(English / தமிழில் - யூனிகோட்)
What you see in this box gets posted as feedback.

Hot properties in India

ஜோதிடம் கேளுங்கள் பகுதியில் விரைந்து பதில் பெற, விரிவான விளக்கம் பெற கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு...

 

 


 

 


About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, India Pakistan cricket series, Kuselan, India Cricket, Sultan The Warrior

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide

We use cookies on this website. By using this site, you agree that we may store and access cookies on your device. Find out more and set your preferences here . X