Home  
இதழ் 359

ஏப்ரல் 07 2008


www.guruji.com

Search

 

Nilacharal Web

Search in English

Help
 

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
ileana
7th Sense
Home>>சுயமுன்னேற்றம்

வெற்றிக்கலை (17) : உடல்நலமும், ஓய்வும் (2)
- ச.நாகராஜன்

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

இன்றே எல்லாவற்றையும் பரபரப்புடன் அனுபவித்து முடித்து விட வேண்டும் என்ற ஆவேசத்தை விட்டு விடுங்கள் என்கிறார் அவர்.

ஓய்வு அவசியம்

மன ஆரோக்கியத்திற்கான தேசீயக் கழகத்தின் தலைவர் டாக்டர் ஜார்ஜ் ஸ்டீவன்சன், "ஒரு மனிதனுக்குக் குறைந்த பட்சம் ஆறு மணி நேரத் தூக்கம் தேவை" என்கிறார். ராபர்ட் ஓ. பிரையன் ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் எழுதிய கட்டுரை ஒன்றில் தூக்கம் பற்றிய ஆராய்ச்சி முடிவுகளைத் தெரியப்படுத்தி இருக்கிறார். வாஷிங்டன் நகரின் வால்டர் ரீட் ஆர்மி இன்ஸ்டிடியூட் ஆப் ரிசர்ச் மேற்கொண்ட சோதனை ஒன்றில் நூற்றுக்கும் மேற்பட்ட படைவீரர்கள் மற்றும் குடிமக்கள் நான்கு நாட்கள் தொடர்ந்து விழித்திருக்குமாறு செய்யப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான சோதனைகள் அவர்கள் மேல் நடத்தப்பட்டன. இதன் முடிவுகள் தூக்கம் பற்றிய மர்மத்தை விஞ்ஞானிகளுக்கு வெளிப்படுத்தின. மனிதனின் மூளை தூக்கத்திற்காக ஏங்குவதோடு மட்டுமல்லாது அதைப் பெற என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராகி விடுகிறது. தொடர்ந்து விழித்திருப்போரை மூளை, "மைக்ரோ தூக்கம்" என்று சொல்லும் ஒரு இமைப்பொழுது நேரம் அயர வைக்கிறதாம். மேலும், தொடர்ந்து தூக்கம் இழந்தால் ஞாபகசக்தி இழப்பில் ஆரம்பித்து, எந்த நிலைமையையும் சமாளிக்க இயலாமல் அணுகுமுறையே மாறி நடக்க ஆரம்பிக்கும் நிலைக்குக் கொண்டு விடுகிறதாம்!

நமக்கு நாமே தண்டனை அளிப்பதா?

நமக்கு நாமே தண்டனை அளித்துக் கொள்ளும் கொடுமையைக் கண்டு பரிதாபப்படுகிறார் அறிஞர் மால்ட்ஸ். உங்களது பலம், பலவீனம் இவற்றை அறிந்து அவ்வப்பொழுது ஓய்வு நேரத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

இன்றே எல்லாவற்றையும் பரபரப்புடன் அனுபவித்து முடித்து விட வேண்டும் என்ற ஆவேசத்தை விட்டு விடுங்கள் என்கிறார் அவர்.

பிலடெல்பியா பொது மருத்துவமனைத் தலைவர் டாக்டர் அந்தோனி சிடோனி "முடிக்க வேண்டிய சில காரியங்களை நாளை முடிக்க விட்டு விட்டால், நாளை வாழ்ந்து அதை முடிக்கும் வாய்ப்பு, நமக்கு அதிகரிக்கும்" என்கிறார்.

உணவு

அசைவ உணவைவிட, சைவ உணவு விரும்பத்தக்கது என மேலைநாட்டு அறிஞர்கள் ஆராய்ச்சி அடிப்படையில் முடிவுக்கு வந்துள்ளனர். மிதமான உணவை அரை வயிறு காலியாக இருந்து பசி உணர்வு இருக்கும் போதே முடித்துக் கொண்டு எழுந்திருப்பது சாலச் சிறந்தது.

உபவாசம்

நோய்வாய்ப்பட்ட உடல், மனதையும் நோய்வாய்ப் படுத்துகிறது என்கிறார் பிரபல டாக்டர் டில்டன்.

மனோசக்தியைக் கூர்மைப்படுத்தி உடல்நிலையைச் சீராக்கும் உபாயங்களுள் தலைசிறந்தது உபவாசம் என்கிறார் அமெரிக்க இயற்கை உடல்நலக் கழகத்தைச் சேர்ந்த டி.சி. பிரை எனும் பேரறிஞர். 24 மணி நேர உபவாசம் மனிதன் ஆற்றலை அதிகரிக்கிறது. உடலில் சேர்ந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்றுகிறது. வாரம் ஒரு முறையோ, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையோ உபவாசம் இருப்பது உடல்நலத்தைச் சீராகப் பாதுகாக்க சிறந்த வழி.

நடைப்பயிற்சி

காலையிலும், இரவிலும் நடப்பது எளிமையான சிறந்த உடற்பயிற்சி.

1965-ம் வருடம் விளையாட்டு மற்றும் உடல் பயிற்சிக்கான கழகம் நடத்திய ஆய்வு மூலம் பல உண்மைகள் தெரிய வந்துள்ளன.

நடைப்பயிற்சி மூலம், ஓடுவது அல்லது ஜாகிங் செய்யும் போது உபயோகப்படுத்தப்படும் அதே அளவு கலோரிகள் செலவாகின்றன.

நடப்பதன் மூலம் ரத்த அழுத்தம் இறங்கி, இறுக்கம் குறைந்த ரத்த ஓட்டம் அதிகரித்து உடல்நிலை அதிகரிக்கிறது.

ஒவ்வொரு மைல் நடைக்கும் 1500 முதல் 3000 வரை தசைகள் தளர்கின்றன. இது மற்ற எந்தப் பயிற்சி மேற்கொள்ளுவதை விடவும் அதிகப் பயனளிப்பதாகும்.

இறுக்கத்தின் தாக்கம்

நம்மால் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைகள் நம்மைத் தாக்கும்போது ஏற்படும் இறுக்க அளவுகளை டாக்டர் டி.ஹெச்.ஹோம்ஸ் மற்றும் ஆர்.ஹெச்ரா இருவரும் இணைந்து கண்டுபிடித்ததை 1967-ல் வெளியிட்டுள்ளனர். அவற்றில் முக்கியமானவை:-

வாழ்க்கை நிகழ்ச்சி - அளவு
கணவன் அல்லது மனைவி மரணம் - 100
விவாகரத்து - 73
மணவாழ்வில் பிரிவு - 65
ஜெயில் தண்டனை - 63
நெருங்கிய குடும்ப உறுப்பினர் மரணம் - 63
உடல் நலக்குறைவு - 53
திருமணம் - 50
வேலை நீக்கம் - 47
வேலையிலிருந்து ஓய்வு - 45
கருவுறுதல் - 44
பாலியல் கஷ்டங்கள் - 40
வியாபார மாறுதல் - 39
நிதி நிலையில் மாறுதல் - 38
நண்பரின் மரணம் - 37
புதிதான வேறு தொழிலில் ஈடுபடல் - 36
மனைவி-கணவன் விவாதம், சச்சரவு - 35
மகன் அல்லது மகள் வீட்டிலிருந்து பிரிதல் - 29
தனிநபர் சாதனை - 28
கணவன் அல்லது மனைவி வேலையை விடல் - 26
வாழ்க்கைச் சூழ்நிலை மாற்றம் - 25
மேல் அதிகாரியுடன் தகராறு - 23
வேலை/நேரம்/பள்ளி/வீடு மாற்றம் - 23
தூக்க நேரம் மாற்றம் - 17
உணவு மாற்றம் - 15

மேலே கண்ட அள்வீடுகளின் அடிப்படையில் 150 புள்ளிகள் எடுத்தால் ஒரு கெடுதலும் இல்லை. 150-லிருந்து 300 புள்ளிகளை எடுத்தால் சமீபத்தில் உடல்நலம் கெட 50 சதவீதம் வாய்ப்புண்டு. 300 புள்ளிகளுக்கு மேல் எடுத்தால் உடல் நலம் மிகுதியாகச் சீர்கெடும்.

நல்ல காற்று, நல்ல குடிநீர், சுத்தம், போதிய உறக்கம், சம சீதோஷ்ணம், நல்ல சத்துணவு, தேகப்பயிற்சி, உணர்ச்சிவயப்படாத நிதானம், நல்ல சூழ்நிலை, பிடித்த வேலை, அன்பான சுற்றம், திறமைகளை வெளிக்காட்டும் இடம், குறிக்கோளை அடையத் தகுதியான சூழ்நிலை இவை அனைத்தும் இருக்கும் போது நல்ல மனம், நல்ல உடல் என்னும் சீரிய நிலையைப் பெற ஏதுவாகும்.

தேவை அல்லாதவற்றை ஒதுக்கி, உடல்நலம் மேம்பட உதவும் அனைத்தையும் பெற வேண்டுவதே வெற்றியடைய விரும்பும் சாதனையாளர்கள் அடைய வேண்டிய பதிமூன்றாவது குணாதிசயமாகும்.

(தொடரும்)

ச.நாகராஜன் அவர்களின் இதர படைப்புகள். சுயமுன்னேற்றம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
                         
Your Comments
Comment
உங்கள் கருத்து
பெயர் :
மின் அஞ்சல் :
சுட்டி :

Comment In:

Tamil English
(Type here in Thanglish and see tamil text in bottom. Tamil conversion powered by : www.suratha.com)
NOTE : Please do not use single quote in your comments. You can use double quote in place.
(English / தமிழில் - யூனிகோட்)
What you see in this box gets posted as feedback.

Cunard Cruise Lines
Hot properties in India

ஜோதிடம் கேளுங்கள் பகுதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைந்து கட்டண சேவை பெற இங்கே சுட்டவும்.

 

 


 

 


About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, Cunard Cruise Lines, India Pakistan cricket series, Kuselan, India Cricket, Sultan The Warrior

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide