கால்மணி நேரத்திற்கு முன்னாடிதானே சொன்னேன்.. உடனே வந்துடுவேன்னு. அதுக்குள்ள என்ன அவசரம்?
அது அம்புட்டு சீக்கிரம் கெடச்சிடுமோ?!
மனிதன் : கடவுளே.. ஒரு இலட்சம் வருஷம்ங்கறது உங்களுக்கு அது எவ்வளவு? கடவுள் : எனக்கு அது ஜஸ்ட் ஒரு நிமிஷம்தான்.. மனிதன் : ஒரு கோடி ரூபாய்னா அது எவ்வளவு? கடவுள் : எனக்கு அது ஜஸ்ட் ஒரு டாலர்தான். மனிதன் : அப்படியா! எனக்கு ஒரு டாலர் கொடுங்களேன். கடவுள் : ஒரு நிமிஷம் பொறு. இதோ எடுத்துத் தர்றேன்.
*****
கம்ப்யூட்டர் பாண்டு
'கடி'வேலு : 007 ன்னா ஜேம்ஸ் பாண்டு. 111 ன்னா யாரு? வடிவேலு : தெரியலியே 'கடி'வேலு : ரொம்ப சிம்பிள். அது பைனரி ஜேம்ஸ் பாண்ட்
*****
இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி?
கணவன் : இன்னும் அங்கே என்ன பண்ணிக்கிட்டிருக்க... நேரமாச்சு சீக்கிரம் வா.. மனைவி : கால்மணி நேரத்திற்கு முன்னாடிதானே சொன்னேன்.. உடனே வந்துடுவேன்னு. அதுக்குள்ள என்ன அவசரம்?
*****
ஹும்...என்னத்தச் சொல்ல!!
மனைவி : உங்களுக்கு டிபன் ரெடி பண்ணட்டுமா? கணவன் : ம்ம்.. எனக்கு என்ன வேணும்னு சொல்லட்டுமா? மனைவி : நானே உங்களுக்கு சாய்ஸ் தர்றேனே.. கணவன் : ம்..சொல்லு. மனைவி : டிபன் வேணும்.. டிபன் வேணாம். ரெண்டுல எது வேணும்?
*****
நண்பர்கள் ஜாக்கிரதை
மதன் : நண்பா.. எனக்கு ஒரு வழி சொல்லுடா. என்னை ரெண்டு பேரு லவ் பண்றாங்க. நான் யாரைக் கல்யாணம் பண்ணிக்கறது? சுந்தர் : யார் யார் அவங்க? மதன் : ஒண்ணு - ஒரு அழகான, ஆனா ஏழைப் பொண்ணு. இன்னொன்னு - சுமாரான, ஆனா பணக்காரப் பொண்ணு. சுந்தர் : அழகான பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கோ. உனக்கு அதுதான் நல்லது. மதன் : தேங்க்ஸ்டா.. சுந்தர் : பரவாயில்லடா.. அது சரி.. அந்த பணக்காரப் பொண்ணோட அட்ரஸ் என்ன?