Home  
இதழ் 565

ஏப்ரல் 09 2012


Weekly Newsletter Subscription

Name
Email

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
Rajinikanth
Access consciousness bars
Home>>அறிவியல்

அறிவியல் துளிகள் (34) - உலகையே மாற்றப்போகும் பத்து பிரம்மாண்டமான கண்டுபிடிப்புகள் (2)
- ச.நாகராஜன்

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

டெய்லர் சட்டை தைப்பது போல எதிர்காலத்தில் ஆளுக்குத் தக்கபடி ஒருவரின் தேவைக்குத் தக்கபடி உடல் பாகங்களை உருவாக்கிப் பொருத்திக் கொள்ளலாம்!

ஏழாவது கண்டுபிடிப்பு: அனைத்தையும் அறியலாம்!

கடைக்கு எதையேனும் வாங்கச் செல்கிறீர்களா? நீங்கள் வாங்குவது எதானாலும் சரி, அதைப் பற்றிய முழு விவரத்தையும் இனி அறிய முடியும்! சூப்பர் மார்கெட்டில் ஆரோக்கிய பானம் ஒன்று வாங்குவதாக வைத்துக் கொள்வோம். அதில் என்னவெல்லாம் ஊட்டச்சத்து கலந்துள்ளது என்பதை மிகச் சரியாக அறிந்து கொள்ளலாம். புத்தகக் கடையில் பரபரப்பாக விற்பனையாகும் ஒரு புத்தகத்தை வாங்க ஆசை என்றால் அந்தப் புத்தகத்தைத் தொட்டவுடனேயே அதன் முதல் பக்கங்களிலேயே அதைப் படித்து முடித்த வாசகர்களின் மதிப்புரைகள் பளீரென மின்னலிட்டுப் பளிச்சிடும்! 2009ஆம் ஆண்டு அமெரிக்க நிறுவனம் ஒன்று இதை சோதனையாகச் செய்து பார்த்து விட்டது! ஒரு வெப் கேம், ஒரு புரஜக்டர், ஏராளமான விஷயங்களைத் தன்னுள் அடக்கியுள்ள இணையதளத்துடன் இணைப்பை நல்கும் ஒரு ஸ்மார்ட் போன் ஆகியவற்றைக் கொண்டு அந்த நிறுவனம் இந்த சோதனையைச் செய்து பார்த்தது! இவற்றைக் கொண்ட ஒரு சிறிய சாதனத்தை நீங்கள் உடலில் அணிந்து கொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் வாங்க விரும்பும் பொருள் பற்றிய அனைத்து விஷயங்களையும் அதன் பயனீட்டார்களின் மதிப்புரைகளையும் அது போன்ற இதர சந்தைப் பொருள்களுடனான ஒப்பீடும் உங்களுக்கு உடனடியாகக் கிடைக்கும். யாரும் உங்களை விலை, தரம், விற்பனைக்குப் பின் சேவை போன்றவற்றில் ஏமாற்ற முடியாது! இப்போதே ஜி.பி.எஸ் சாதனத்தைக் காரில் பொருத்தி நாம் போக வேண்டிய வீட்டின் வாசலுக்குச் சரியாக இன்று போகிறோமே அது போல இனி பொருள்கள் வாங்குவதிலும் ஒரு பெரிய மாற்றம் வர இருக்கிறது! சரியான முழுமையான தகவல் தான் இந்த நூற்றாண்டை ஆளப் போகிறது.

ஆறாவது கண்டுபிடிப்பு: உடலை மீண்டும் உருவாக்கலாம்!

இது வரை யாருக்கும் மறுபடி உருவாக்கும் சக்தி உடலைப் பொருத்த மட்டில் இல்லை தான்! ஆனால் இனியோ உடலின் பாகங்களை ‘ரிப்பேர்' செய்து கொள்ளும் புது தெராபிகள் (சிகிச்சை முறைகள்) வர உள்ளன. அல்லது ரிப்பேரான உடலின் அங்கங்களைப் ‘புதிதாக மாற்றிக் கொள்வது' நடைமுறை சாத்தியமாகப் போகிறது! பிரிட்டிஷ் நிபுணர் குழு ஒன்று உலகின் முதலாவது செயற்கை ஈரலை உருவாக்கியுள்ளது! (இது சாத்தியமே இல்லை என்று இது வரை கருதப்பட்டு வந்தது!) 2006ம் ஆண்டு தொப்புள் கொடி ஸ்டெம் செல்லிலிருந்து இது உருவாக்கப்பட்டது. இப்போது ஆராய்ச்சியில் இன்னும் ஒரு பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதயத்தின் ஸ்டெம் செல்லிலிருந்து கூட உடல் பாகங்களை உருவாக்குவது சாத்தியம் என்று பல ஆய்வுகள் நிரூபிக்கின்றன! ஒரு நோயாளியின் கண்களிலிருந்து எடுக்கப்பட்ட சற்று முதிர்ந்த ஸ்டெம் செல்கள் அவரது இழந்த பார்வையை மீண்டும் தந்ததை ஒரு ஆஸ்திரேலிய குழு நிரூபித்துக் காட்டியுள்ளது! மறு புரோக்ராம் செய்யப்பட்ட ஒரு எலியின் தோலிலிருந்து ஒரு எலி உருவாக்கப்பட்டதை சீன ஆராய்ச்சியாளர்கள் செய்து காட்டி உள்ளனர்.டெய்லர் சட்டை தைப்பது போல எதிர்காலத்தில் ஆளுக்குத் தக்கபடி ஒருவரின் தேவைக்குத் தக்கபடி உடல் பாகங்களை உருவாக்கிப் பொருத்திக் கொள்ளலாம்!

ஐந்தாவது கண்டுபிடிப்பு: உலகிற்கு வேண்டியதைத் தர முடியும்!

உலகில் எங்கு பார்த்தாலும் பஞ்சமும் பசிப்பிணியும் அதிகரித்து வருகிறது. இது விஞ்ஞானிகளுக்கு ஒரு சவாலான விஷயம். ஒவ்வொரு பிராந்தியமும் அதற்கே உரிய பொருளாதார, அரசியல் சிக்கலைக் கொண்டுள்ளதால் விஷயம் மிகவும் தீவிரமான ஒன்றாக ஆகி வருகிறது. என்றாலும் கூட விஞ்ஞானிகள் படை ஒன்று களத்தில் இறங்கி அனைவருக்கும் உணவை நல்கும் உலகின் முக்கியமான பயிர்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் புது விதமான கோதுமை, சோளம், அரிசி ஆகியவற்றை உருவாக்கி அதிக மகசூல் தரும் விதத்தைக் கண்டுபிடிக்க முயன்று வருகின்றனர்! இந்த புது ரகங்கள் உஷ்ண நிலை மாறுபாடு, பஞ்ச நிலைமை, பயிர்களை அரிக்கும் பூச்சிகள் உள்ளிட்டவற்றைச் சமாளித்து நல்ல மகசூலைத் தரும்! விவசாயிகளுக்கு தங்கள் பயிர்களைக் காத்துக் கொள்ளவும்,புதிய நடைமுறைகளை மேற்கொள்ளவும் புதிய தகவல்கள் அளிக்கப்படப் போகின்றன! இது சத்து மிக்க மண்வளத்தை நெடுங்காலம் நீடிக்க வகை செய்யும். சோதனைச் சாலையில் உருவாக்கப்பட்ட மாமிசம் கூட உலகின் உணவுப் பற்றாக்குறையைத் தீர்த்து வைக்கப் போகிறது.இவை எல்லாம் பயனளிக்கவில்லை என்றாலும் கவலைப் பட வேண்டாம். ஏற்கனவே விஞ்ஞானிகள் மிக பிரம்மாண்டமான பஞ்சம் மற்றும் பிரளயத்தை எதிர்பார்த்து உலகின் எல்லா அரிய வகைப் பயிர்கள் மற்றும் தாவரங்கள் ஆகியவற்றின் விதைகளை ஒரு சேமிப்புப் பெட்டகத்தில் சேமித்து வைத்து விட்டனர். இதிலிருந்து மீண்டும் அழிந்து விட்ட பயிர்களை உருவாக்கி விட முடியும்!

அறிவியல் அறிஞர்கள் வாழ்வில்....

இஸ்ரேலின் ஜனாதிபதியாக ஆகுமாறு ஐன்ஸ்டீனை அழைத்தனர். அவர் மறுத்து விட்டார். தனக்கு மனிதப் பிரச்சினைகளைத் தீர்க்கும் அளவு மூளை இல்லை என்று அதற்கான காரணமாகச் சொன்னார். ஒரு முறை அவரது இரண்டாவது மனைவியான எலிஸா அவரிடம், “உங்கள் கண்டுபிடிப்புகளைப் பற்றிக் கொஞ்சம் எனக்குச் சொல்லகூடாதா? எல்லோரும் என்னை இது பற்றிக் கேட்கும் போது முட்டாள் போல விழிக்க வேண்டி இருக்கிறது” என்று கூறி ஆதங்கப்பட்டார். இந்த ‘மனிதப் பிரச்சினைக்கு' ஐன்ஸ்டீன் ஒரு தீர்வைக் கண்டு சொன்னார்.

“யாராவது என் கண்டுபிடிப்பைப் பற்றிக் கேட்டால் அது பற்றி எல்லாம் உனக்குத் தெரியும் என்றும் அது ஒரு பெரிய ரகசியம் என்பதால் வெளியில் சொல்வதற்கில்லை என்றும் கூறி விடு” என்றார்.

மனைவியின் பிரச்சினையை சரியாகச் சமாளித்து விட்டார் பிரபல விஞ்ஞானி!

நன்றி : பாக்யா




ச.நாகராஜன் அவர்களின் இதர படைப்புகள். அறிவியல் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
                         
Your Comments
 
rajharaog
4/13/2012 , 9:42:29 AM

 [Comment url]
miga migaa super nalla sangathigal payan ullanavaaaga ullathu sceinece researvh is great
Comment
உங்கள் கருத்து
பெயர் :
மின் அஞ்சல் :
சுட்டி :

Comment In:

Tamil English
(Type here in Thanglish and see tamil text in bottom. Tamil conversion powered by : www.suratha.com)
NOTE : Please do not use single quote in your comments. You can use double quote in place.
(English / தமிழில் - யூனிகோட்)
What you see in this box gets posted as feedback.

Hot properties in India

ஜோதிடம் கேளுங்கள் பகுதியில் விரைந்து பதில் பெற, விரிவான விளக்கம் பெற கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு...

 

 


 

 


About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, India Pakistan cricket series, Kuselan, India Cricket, Sultan The Warrior

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide

We use cookies on this website. By using this site, you agree that we may store and access cookies on your device. Find out more and set your preferences here . X