 |
இதழ் 464 |
 |
ஏப்ரல் 12 2010
|

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Your Advertisement Here
|
| |
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
|
|
| மனித உடலியல் (32)
- டாக்டர்.விஜயராகவன் |
| | கிட்டப்பார்வை உள்ளவருக்கு தூரத்தில் உள்ள பொருட்கள் தெளிவின்றி காணப்படும்; ஏனெனில் உருவம் விழித்திரைக்கு முன்புறம் அமைந்து விடுகிறது. கிட்டப்பார்வை உள்ளவருக்கு அருகில் உள்ள பொருட்கள் தெளிவாகத் தெரியும் சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன்?
கண்கள் சரியான அமைப்பில் இல்லாமலிருந்தால் அல்லது விழிவில்லைகள் முறையாகக் குவிமையப்படுத்தவில்லை எனில், விழித்திரையில் உருவத்தின் தெளிவான வடிவமைப்பு ஏற்படாது. இந்நிலையில் பார்வையைச் சரிப்படுத்த கண்ணாடி அணிய வேண்டிய நிலை உண்டாகலாம். கிட்டப்பார்வை உள்ளவருக்கு தூரத்தில் உள்ள பொருட்கள் தெளிவின்றி காணப்படும்; ஏனெனில் உருவம் விழித்திரைக்கு முன்புறம் அமைந்து விடுகிறது. கிட்டப்பார்வை உள்ளவருக்கு அருகில் உள்ள பொருட்கள் தெளிவாகத் தெரியும். தூரப்பார்வை உள்ளவருக்கு, உருவம் விழித்திரைக்குப் பின்புறம் அமைந்து அருகில் உள்ள பொருட்கள் தெளிவின்றி காட்சியளிக்கும். மக்களுக்கு வயது ஏற ஏற அவர்களது விழி வில்லைகள் கடினமாகி விடுகின்றன; அவற்றில் வடிவம் மாற்றப்பட இயலாமல் அருகில் உள்ளவற்றைத் தெளிவாகக் காணமுடியாமல் போகிறது.கண்களை இமைப்பது ஒரு முக்கிய செயல்பாடாகும்; இதனால் கண்களின் மேற்புறம் உயவிடப்பட்டுத் தூய்மைப்படுத்தப்படுகிறது. குறிப்பாக கார்னியா என்னும் விழிப்படலம் மிக நுண்ணிய பகுதியாகும்; இது உலர்ந்து போகாமல், தொற்று ஏற்படாமல் காப்பாற்றப்பட வேண்டியது மிகவும் முக்கியம்.
நம் கண்கள் நிறத்தைக் காண்பது எவ்வாறு?
நமது விழித்திரை நுண்ணிய உயிரணுக்களின் அடுக்கினால் ஆனது; இவ்வுயிரணுக்கள் நுண்கம்பிகள் மற்றும் கூம்புகளால் (rods and cones) ஆனவை. இவ்வுயிரணுக்களில் நிறப்பொருட்கள் அமைந்துள்ளன; இவற்றின் மீது ஒளி விழும்போது நரம்புத் தூண்டலால் இவை எதிர்வினை புரிகின்றன. நுண்கம்பிகள் ஒல்லியான உயிரணுக்கள் ஆகும்; இவை கறுப்பு வெள்ளைப் பார்வைக்குப் பொறுப்பானவை. கூம்பு உயிரணுக்கள் நிறங்களின் பார்வையை அளிப்பவை. அவை பல்வேறு வண்ண ஒளிக்கூருணர்வுப் பொருட்களுக்கு, சிகப்பு, மஞ்சள்-பச்சை அல்லது நீலம்-ஊதா ஒளிகளுக்கு, பொறுப்பானவை. கறுப்பு மற்றும் வெள்ளை உருவங்களை நுண்கம்பிகள் மூலமாகவும், கூம்பு உயிரணுக்கள் மூலமாக பல்வகை வண்ண உருவங்களையும் நம்மால் காண இயலுகிறது. கூம்பு உயிரணுக்கள் ஒளி வீசும்போது மட்டுமே செயல்படும்; அதனால்தான், மங்கிய ஒளியில் நிறங்களைக் காண்பது கடினமாக உள்ளது.
நிறக்குருடு என்பது எந்த நிறத்தையும் காண முடியாத ஒரு நிலைமையாகும்; ஆனால் இது மிக அரிதானதோர் நிலைமை. பெரும்பான்மையில், சிகப்பு-பச்சை நிறக் குருட்டுத் தனமை மட்டுமே நிலவி வருகிறது; இவர்களால் சிகப்பு, பச்சை, பழுப்பு நிறங்களை வேறுபடுத்திக் காண முடிவதில்லை.
|
| | டாக்டர்.விஜயராகவன் அவர்களின் இதர படைப்புகள்.
| அறிவியல் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
|
|
|
|
|