Home  
இதழ் 467

மே 10 2010


Weekly Newsletter Subscription

Name
Email

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
Director Bala
Access consciousness bars
Home>>தொடர்

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்(25)
- நிலா

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க


ஹரியின் கைபேசி தரையில் கிடந்து சிணுங்கியது. அலட்சியப்படுத்தினான். அடுத்த சில நிமிடங்களில் திரும்பவும் அழைத்தது. எடுத்ததும்,

"ஹாய் டார்லிங், என் பர்த்டேல முதல்ல உன்கிட்டதான் பேசணும்னு ரிங் பண்னேன்.. விஷ் பண்ணு" கொஞ்சும் குரலில் ரேஷ்மி.

"மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ்" என்றான் சம்பிரதாயமாய்.

"ம்கூம்... நேர்ல வந்து விஷ் பண்ணணும். இன்னிக்கு முழுசும் எங்கூடதான் இருக்கணும்" உரிமையாய் சொன்னாள். ஹரிக்கு
இவளுக்கு யார் இவ்வளவு உரிமை தந்தார்கள் என்ற ஆச்சர்யம் எழுந்தாலும் தனக்கும் மாற்றம் தேவையென நினைத்து "ஆன் மை வே" என்றான் குழைவான குரலில்.

ரேஷ்மியோடு கோவில், ஆதரவற்றோர் இல்லம் என்று ஊர் சுற்றியது அவன் மனநிலையில் பெரிதாய் ஒன்றும் மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டாலும் தமிழகமே போற்றும் கனவுக்கன்னி தன்னால் கவரப்பட்டிருக்கிறாள் என்பது சற்று கர்வத்தைத் தரவே செய்தது. கூடவே புவனாவின் மேல் கோபத்தையும் அதிகரித்தது. ஆனால் எங்கு சென்றாலும் கேமரா பளிச்சிட்டது ஹரிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

ரேஷ்மியின் பண்ணை வீட்டில் மதிய உணவை முடித்து அவள் பெட்ரூம் பால்கனியில் ஓய்வாய் அமர்ந்திருக்கும்போது, "நௌ இஸ் த ட்ரீட்" என்றபடியே அவன் மேல் சரிந்து முகமெல்லாம் முத்தமிட ஆரம்பித்தாள் ரேஷ்மி. ஹரிக்கு அந்த ஏரிக்கரை முத்தம் நினைவில் வந்தது. பாதி அதிர்ச்சியும் மீதி ஆசையுமாய் அரை நிமிடமானாலும் புவனா வாங்கிக் கொண்ட அழகு முத்தம்.

அவன் எங்கோ இருந்ததை உணர்ந்து, "என்ன ப்ராப்ளம்?" என்றாள் அவன் கழுத்துச் சங்கிலியை வருடியபடியே ரேஷ்மி.

"ஒண்ணுமில்லை" என்றான்.

அவள் விலகி எழுந்து, "யாரையோ லவ் பண்றே நீ சரியா? யாரந்த அமெரிக்க அழகி?" என்றாள் மெல்ல சிரித்து.

"நோ நோ. அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை" என்றான் தூரே தெரிந்த கடலைப் பார்த்து.

அந்த பதிலில் நம்பிக்கை இல்லாமல், "உன் கேர்ள் ஃபிரண்ட் கூட சின்ன சண்டையா? பெரிய சண்டையா?" என்றாள் முறுவலித்தபடி.

"அவளுக்குக் கல்யாணம்" என்றான் அவளைப் பார்க்காமல்.

துருவித் துருவி எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் கேட்டுவிட்டு "ஹை... அப்பாவாகப் போறியா, நீ? கன்கிராட்ஸ்" என்றாள் அவனின் கையை வலுக்கட்டாயமாய் குலுக்கி. ஆனால் பின்புலத்தில் பிரதீப்புக்கு இது எவ்வளவு பெரிய அதிர்ச்சியைக் கொடுக்கும் என்ற கரிசனம் இருந்தது.

அவன் பதில் சொல்லாமலிருந்ததைக் கண்டு, "அது உன் குழந்தைய்யா... உன் ஜீன். உன் முகம் இருக்கும், உன் குணம் இருக்கும், உன் மேனரிஸம் இருக்கும். உனக்கு எக்சைடிங்கா இல்லை?"

"யூ நோ, இதையெல்லாம் மறக்கத்தான் நான் இங்கே வந்தேன்" என்று சேரைத் தள்ளி விட்டு எழுந்தான் கோபமாய்.

"ரிலாக்ஸ், உனக்கு உன் குழந்தை வேணும்னு இருந்தா அதுக்காக ஆக்ஷன் எடுக்காம இப்படி வெறுமனே கோபப்பட்டு என்ன பலன். சொல்லு?"

அவளது கேள்வி அவனது இயலாமையைச் சுட்டிக் காட்டியது போலிருக்க பதில் சொல்லாமல் முறைத்தான்.

"என்ன பாக்கறே? உனக்கு என்ன வேணும்னு முதல்ல நீ தெளிவா இருக்கியா?" என்றாள் அதிகாரமாய்.

"இப்போ நான் என்ன பண்ணணும்கறே?" என்று கேட்டான் எரிச்சலுடன்.

"என்னைப் பாரு - எனக்கு லைஃப்ல என்ன வேணும்கறதில நான் ரொம்ப தெளிவா இருக்கேன் . எனக்குத் தேவை ஒரு கணவன். என்னை அன்பா நடத்தி பிள்ளை தந்து வசதியா வச்சிக்கத் தெரியற ஒரு மனுஷன். அவன் ராஜகுமாரன் மாதிரி இருக்கணும்னெல்லாம் ஆசையில்லை. அவனைப் பார்த்தவுடன் அடிவயித்தில பட்டாம்பூச்சி பறக்கணும்னெல்லாம் எதிர்பார்க்கலை. இது மாதிரி தெளிவா உனக்கு என்ன வேணும்னு சொல்லு பார்க்கலாம்" என்றாள் கிளாஸில் ஒயினை ஊற்றியபடி.

அவன் மௌனமாய் இருப்பதைக் கண்டு, "சரி, நான் சொல்றபடி செய். கண்ணை இறுக மூடி மூச்சை நல்லா இழுத்துவிடு" என்றாள்.

அவன் கண்களில் கேள்வியோடு நோக்க, "உன்னை ரேப் பண்ணிட மாட்டேன். சொல்றபடி செய்" என்றாள். அவன் செய்யவில்லை. மாறாக எழுந்து மடமடவென்று வெளியேறினான். போகிற போக்கில், "எனக்கு என்ன வேணும்னு எனக்குத் தெரியும்" என்றான்.

சென்னை ஏர்போர்ட்டில் ஹரி செக்-இன் பண்ணிக் கொண்டிருக்கையில், "ஹாய் டார்லிங்" என்றபடியே அவன் பின்னால் வந்து நின்றாள் ரேஷ்மி.

"நீ என்ன பண்றே இங்கே?" என்றான் ஹரி ஆச்சர்யமாய்

"யு. எஸ்ல ஷுட்டிங்" என்று அவனிடம் சொல்லிவிட்டு, "அவருக்கு பக்கத்துலயே ஸீட் கொடுங்க" என்றாள் கௌன்டர் கிளர்க்கிடம்.

ப்ளேனில் அமர்ந்ததும், "என்னப்பா ஹனிமூனுக்கு ரெடியா?" என்றாள்.

"சில்லியா பேசாதே"

"அப்படித்தான்யா பிரஸ்ல எழுதி இருக்காங்க. நீயும் நானும் ஒரே ப்ளேன்ல வர்றது நமக்கு முன்னாடியே அவங்களுக்குத் தெரிஞ்சாச்சு" என்றாள் சிரித்தபடியே.

"உனக்குக் கஷ்டமாயில்லை?"

"எதுக்கு? அவங்க சொல்றபடி ஏதாவது நடந்தா பரவாயில்லைன்னு இருக்கு" என்றாள் பெருமூச்சுடன்.

"பேசாம நடத்திறலாமா?" என்றான் ஹரி சட்டென்று.

அவள் கிரகிக்குமுன், "நடிகை ரேஷ்மிக்கு அமெரிக்காவில் ரகசியத் திருமணம்" என்று ஹரி தலைப்பு செய்தி போலச் சொன்னான்.

(தொடரும்)

நிலா அவர்களின் இதர படைப்புகள். தொடர் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
                         
Your Comments
Comment
உங்கள் கருத்து
பெயர் :
மின் அஞ்சல் :
சுட்டி :

Comment In:

Tamil English
(Type here in Thanglish and see tamil text in bottom. Tamil conversion powered by : www.suratha.com)
NOTE : Please do not use single quote in your comments. You can use double quote in place.
(English / தமிழில் - யூனிகோட்)
What you see in this box gets posted as feedback.

Hot properties in India

ஜோதிடம் கேளுங்கள் பகுதியில் விரைந்து பதில் பெற, விரிவான விளக்கம் பெற கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு...

 

 


 

 


About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, India Pakistan cricket series, Kuselan, India Cricket, Sultan The Warrior

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide

We use cookies on this website. By using this site, you agree that we may store and access cookies on your device. Find out more and set your preferences here . X