பெரிய வெங்காயம், தக்காளி, கேரட், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேவையான பொருட்கள் : (2 பேருக்கு)
அவல் - 1 கப் தக்காளி - 1 பச்சைப் பட்டாணி - 1/2 கப் (வேகவைத்தது) கேரட் - 1 சிறியது பெரிய வெங்காயம் - 1 கறிவேப்பிலை - சிறிதளவு கொத்தமல்லி - சிறிதளவு வரமிளகாய் - 3 பெருங்காயம் - 1 சிட்டிகை மஞ்சள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 4 ஸ்பூன் கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் உளுத்தப்பருப்பு - 1 டீஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு - 1 மூடி
செய்முறை :
1) அவலுடன் மஞ்சள், எலுமிச்சைச் சாறு, உப்பு, சிறிது நீர் சேர்த்து நன்கு கிளறி 10 நிமிடம் ஊறவைக்கவும். பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.
2) பெரிய வெங்காயம், தக்காளி, கேரட், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
3) அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் காய்ந்த பிறகு கடுகு, கடலை, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்க்கவும்.
4) பிறகு பட்டாணி, நறுக்கி வைத்த அனைத்தையும் சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும். அதனுடன் பருப்பு, ஊறவைத்த அவலை சேர்த்து நன்கு கிளறவும். பெருங்காயம் சேர்த்து இறக்கவும்.
சுவையான தக்காளி அவல் தயார். |