வக்கீல் : "சம்பவத்தன்று காலையில உங்க கணவர் என்ன சொன்னார்?" மனைவி : "காலையில தூங்கி எழுந்தவுடனே 'கல்பனா சீக்கிரம் இங்கே வா'ன்னு கூப்பிட்டார்." வக்கீல் : "இதற்காகக் கோபித்துக்கொண்டு கோர்ட்டிற்கு வந்துவிட்டீர்களா?" மனைவி : என் பெயர் மீனாட்சி."
*****
ஒரு தத்துவம் பேசுவோம்!
கல்யாணம் ஆன புதுசுல, முதல் வருஷம், கணவன் சொல்றதை மனைவி கேட்பாள். ரெண்டாவது வருஷம், மனைவி சொல்றதை கணவன் கேட்பான். மூணாவது வருஷம், ரெண்டு பேரும் பேசுறதை (!) தெருவே கூடி நின்னு கேட்கும்.
வங்கிக்குச் செல்கிறார் ஏழை விவசாயி ஒருவர். விவசாயி : "வாங்கின கடனுக்கு இந்த மாச வட்டி கொடுக்க வந்திருக்கேன்." ஊழியர் : "வயக்காட்டுக்குப் போயி விவசாயம் பாருங்கண்ணே.. மூணு வருஷம் கழிச்சு வந்தா உங்க கடனைத் தள்ளுபடி பண்ணிருவோம்ல."
அன்பு நண்பரே! இந்த தளத்தில் புகுந்ததுமே நான் முதலில் தேடிப்பிடித்து வாசித்து மகிழ்வது உங்கள் நகைச்சுவைப் பக்கத்தையே! நானும் ஓர் நகைச்சுவைப் படைப்பாளனாக இருப்பதால், உங்கள் எழுத்துக்களை மிகவும் பாராட்டி மகிழ்கிறேன். - கிரிஜா மணாளன், திருச்சி, தமிழ்நாடு.
We use cookies on this website. By using this site, you agree that we may store and access cookies on your device. Find out more and set your preferences here . X