மனசாட்சியே இல்லாமல் ரீல் விடுவோர் கூட்டணி (ம.இ.ரீ.வி.கூ) அப்படியா! சொல்லவேயில்லை!
வடிவேலு : இந்த ஊர்ல சாப்பாடு எங்க விற்கும்? பார்த்திபன் : இந்த ஊர்ல மட்டுமில்ல.. எல்லா ஊர்லயும் தொண்டைல தான் விக்கும். வடிவேலு : டேய்.. நீங்க இன்னும் திருந்தலியா!!****
குருவி பார்த்திருப்பாரோ?
டாக்டர் : இவருக்கு எப்படி இவ்வளவு அடிபட்டுச்சு? நண்பர் : படம் பார்த்துக்கிட்டு இருக்கும்போது பழக்கதோஷத்துல எந்திரிச்சு வெளியே போயிட்டார். டாக்டர் : அதனால அடிபடுமா?! நண்பர் : இவர் படம் பார்த்தது விமானத்துல ஆச்சே!
****
பீலிங்ஸ் ஆஃப் இந்தியன்ஸ்
ரமேஷ் : என்னைக் கடிச்ச கொசுவைப் பிடிச்சேன். அப்புறம் கொல்லாம பறக்க விட்டுட்டேன். சுரேஷ் : ஏண்டா? ரமேஷ் : பயபுள்ள.. அது உடம்புல(!) இருக்கறது நம்ம ரத்தமாச்சேடா! அந்தப் பாசம்தான்.
****
நீ கொடுத்த புத்தகத்தில் முதல் பக்கத்தில் ஒரு கவிதை படித்தேன் பிறகுதான் சொன்னார்கள் அது கவிதையல்ல… உந்தன் பெயரென்று!
- மனசாட்சியே இல்லாமல் ரீல் விடுவோர் கூட்டணி (ம.இ.ரீ.வி.கூ)
****
எங்க வீட்டுப் பிள்ளையார்!
ரவி : கோயில்ல ஒரு இளைஞன் “பிள்ளையார் மாமா காப்பாத்து”ன்னு வேண்டிக்கிட்டான். அது ஏன்? சிபி : எதுத்தாப்ல ஒரு வயசுப் பொண்ணு “பிள்ளையார் அப்பா காப்பாத்துப்பா”ன்னு வேண்டிக்கிட்டு இருந்திருப்பா.. அதனால தான்..
****
|