 |
இதழ் 471 |
 |
ஜூன் 07 2010
|

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Your Advertisement Here
|
| |
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
|
|
| | | பையிலிருந்து குற்றுயிரும் குலை உயிருமாய் இறங்கிய ஓநாய், தரையில் மழை பெய்ததற்கான அடையாளம் எதுவும் இல்லாததைக் கண்டு திகைத்தது. (மூலம்: அமெரிக்க இந்திய நாகரீகம்)
ஒரு காட்டில் ஒரு குள்ள ஓநாய் வாழ்ந்து வந்தது. அது உருவத்தில் சிறியதாக இருந்தாலும் அதனுடைய கொடூரத்தினால் மற்ற விலங்குகளை மிகவும் பயமுறுத்தி வைத்திருந்தது. குறிப்பாக சுண்டெலிகளைக் கண்டால் அதற்கு சுத்தமாய்ப் பிடிக்காது. அவற்றை விரட்டி விரட்டித் துன்புறுத்துவதில் அந்த ஓநாய்க்கு அளவிலா திருப்தி.
ஒரு நாள் சுண்டெலிகள் பைகளையும் கயிறுகளையும் எடுத்துக் கொண்டு கூட்டமாக ஒரு மரத்தை நோக்கி வெகு விரைவாய் ஓடியதைக் கண்ட ஓநாய் விஷயம் என்னவென்று அறிந்து கொள்ளும் ஆவலில் அவற்றைப் பின் தொடர்ந்தது.
மரத்தை அடைந்த எலிகள், "பையின் வாயில் கயிற்றின் ஒரு முனையைக் கட்டுங்கள். கயிற்றின் அடுத்த முனையை மரக்கிளையின் மேல் எறியுங்கள். ம்ம்.... சீக்கிரம் ஆகட்டும்" என்று ஒருவரை ஒருவர் விரட்டிக் கொண்டு அவசரகதியில் இயங்கின.
ஒன்றும் புரியாத ஓநாய், "உதவாக்கரைகளே, இன்றைக்கு என்ன மடத்தம் செய்யப் போகிறீர்கள்? எதற்கு இந்தப் பைகளும் கயிறுகளும்?" என்றது ஏளனமாய்
எலிகள் பதிலொன்றும் சொல்லாமல் தம் வேலையில் கவனமாக இருந்ததைக் கண்ட ஓநாய், தன் கூர்மையான பற்களைக் கடித்து, "இப்போது பதில் சொல்லாவிட்டால், நீங்கள் அத்தனை பேரும் ரணப்பட்டுப் போய்விடுவீர்கள்" என்று பயமுறுத்தியது.
பயந்து நடுங்கிய எலிகள், "பெரிய பெரிய ஆலங்கட்டிகளோடு புயல் வரப் போகிறதல்லவா? அதிலிருந்து தப்பிப்பதற்காக நாங்கள் இந்தப் பைகளில் புகுந்து கொண்டு கயிற்றின் மறுமுனையை இழுத்து மரத்தின் கிளைகளில் மறைந்து கொள்ளப்போகிறோம்" என்று விளக்கின.
"என்ன? ஆலங்கட்டி மழை வரப்போகிறதா?" என்று அதிர்ந்த ஓநாய், "நானும் மரக்கிளையில் ஒளிந்து கொள்ள வேண்டும். எனக்கும் ஒரு பையும் கயிறும் கொண்டு வாருங்கள்" என்று கட்டளை இட்டது.
"உன் உருவத்திற்கேற்ற பை எங்களிடம் இல்லை" என்று பரிதாபமாகச் சொல்லின சுண்டெலிகள்
"சரி, நான் போய் என் உருவத்திற்கேற்ற பையையும் கயிறையும் எடுத்து வருகிறேன். அதுவரை எனக்காகக் காத்திருங்கள்." என்று கூறிவிட்டு வேகமாகக் கிளம்பியது ஓநாய்
"ஏற்கெனெவே புயல் சின்னம் தெரிய ஆரம்பித்துவிட்டது. இன்னும் தாமதித்தால் நாங்கள் ஆலங்கட்டி மழையில் மாட்டி உயிரிழப்போம். அதனால் நாங்கள் இப்போதே பைகளில் ஏறிக் கொண்டு மரக் கிளைகளில் ஒளிந்து கொள்கிறோம். நீ வந்ததும் கயிறை நீயே இழுத்துக் கொண்டு மரக்கிளைக்கு வந்துவிடு" என்றன எலிகள்
அதைக் கேட்டுக் கோபம் கொண்ட ஓநாய், "என்ன விளையாடுகிறீர்களா? என் எடைக்கு நான் மட்டும் எப்படி கயிறை இழுத்து என்னை மேலே தூக்க முடியும்? நீங்களெல்லோரும் கீழிருந்து கயிறை இழுத்து என்னை மேலேற்றிவிட்டுப் பின்பு மேலேறி வாருங்கள். இல்லையேல், உங்களனைவரையும் ஒழித்துக் கட்டிவிடுவேன்" என்று மிரட்டியது.
அரண்டு போனதாக நடித்த எலிகள், ஒநாய் பை எடுத்து வர அகன்றதும், விழுந்து விழுந்து சிரித்தன. ஓநாய் தங்களின் தந்திரம் புரியாமல் தங்களிடம் மாட்டிக் கொள்ளப் போவதை எண்ணி கைகொட்டி நகைத்தன.
தன் உருவத்திற்கேற்ற பெரிய பையையும் கயிறையும் எடுத்துக் கொண்டு புயல் வேகத்தில் திரும்பிய ஓநாய், காலத்தைக் கடத்தாமல், பையினுள் ஏறி அமர்ந்து கொண்டது.
சிறிய கல்லொன்றை எடுத்து ஓநாய் அமர்ந்திருந்த பையின் மேல் எறிந்தது ஒரு சுண்டெலி.
"ஐயோ... வலிக்கிறதே! ஆலங்கட்டி மழை ஆரம்பமாகிவிட்டது போலும். ஆகட்டும், கயிறை இழுத்து என்னை உடனே மேலே ஏற்றுங்கள்" என்று எலிகளைப் பார்த்துக் கட்டளை இட்டது ஓநாய்
எலிகளும் அவ்வாறே செய்தன. மரத்தின் கிளையிலிருந்து தொங்கிய பையில் ஓநாய் ஒளிந்திருக்க, கீழிருந்து பெரிய பெரிய கற்களை எடுத்து பையின் மேல் எறிந்தன எலிகள்
"ஆ... ஐயோ... என் தலை, என் கை... என் வயிறு....வலிக்கிறதே! இப்போது என் முதுகில் விழுகிறதே! இந்த ஆலங்கட்டி மழை இவ்வளவு பொல்லாததாய் இருக்கிறதே!" என்று கதறியது ஓநாய்
தங்கள் ஆசை தீர கல்லெறிந்த பின், மெதுவாக பையை கீழே இறக்கின சுண்டெலிகள். பையிலிருந்து குற்றுயிரும் குலை உயிருமாய் இறங்கிய ஓநாய், தரையில் மழை பெய்ததற்கான அடையாளம் எதுவும் இல்லாததைக் கண்டு திகைத்தது. இறைந்து கிடந்த கற்களும், எலிகளின் முகத்திலிருந்த எள்ளலும் ஓநாய்க்கு நடந்ததை உணர்த்த, அவேசமடைந்த ஓநாய், ""உங்களை என்ன செய்கிறேன், பாருங்கள்" என்று அவற்றின் மேல் பாய முற்பட்டது. ஏற்கெனவே ரணமாக இருந்த உடல் அதன் ஆத்திரத்திற்கு ஒத்துழைக்காமல் போக 'சொத்' என கீழே விழுந்தது ஓநாய்.
ஓநாயின் மேல் ஏறிக் குதித்த எலிகள், "இன்றைக்கு உன்னால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. நடக்கும் போது பார்த்துக் கொள்வோம்" என்று கூறிவிட்டு வளைகளில் சென்று மறைந்தன
|
| | நிலா அவர்களின் இதர படைப்புகள்.
| பூஞ்சிட்டு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
|
|
|
|
|