Home  
இதழ் 420

ஜுன் 08 2009


www.guruji.com

Search

 

Nilacharal Web

Search in English

Help
 

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
Vidya Balan
Wanted Freelancers!
Home>>திரைச்சாரல்

திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம்! (11)
- ச.நாகராஜன்

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு ஒரு அபூர்வமான குரல்! குழந்தையின் குரல் அவருடையது. இன்று வரை அவரைப் போலக் குரல் வளம் உடைய இன்னொருவரை தமிழ் சினிமா பார்க்கவில்லை.

11. சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி, சேதி தெரியுமா?

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பதுகளில், தமிழ் சினிமாவில் புராண மோகம் விடுபட்டு சமூக அடிப்படையிலான கதைகள் உலா வரத் தொடங்கின. இந்தக் கதைகளில் வரும் சமூக நிகழ்வுகளுக்குத் தக்கபடி பாடல்கள் எழுதப்பட்டு இசை அமைக்கப்பட வேண்டிய புதிய சூழ்நிலை உருவானது.

இதன் விளைவாக இன்று வரை ஆயிரக்கணக்கான நிலைக்களன்களில், ஏராளமான ராகங்களில் இசை அமைக்கப்பட, நூற்றுக்கணக்கான நடிகர்கள் அந்த இசைக்கு உருவம் கொடுக்க ஆரம்பித்தனர்.

அபூர்வமான குரல் வளம் கொண்டவர்கள் திரைத்துறையில் வரலாயினர். அதில் ஒருவர்தான் குழந்தைக் குரல் எம்.எஸ்.ராஜேஸ்வரி.

1955ல் வெளியான ‘டவுன் பஸ்' திரைப்படத்தில் கவி கா.மு.ஷெரீப் எழுதிய ஒரு பாடலுக்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். பாடல் இதோ:-

சிட்டுக்குருவி சிட்டுக் குருவி சேதி தெரியுமா?
என்னை விட்டுப் பிரிஞ்சி போன கணவன் வீடு திரும்பல

பட்டு மெத்தை விரிச்சு வச்சேன்; சும்மா கெடக்குது
பசும் பாலைக் காய்ச்சி எடுத்து வச்சேன்; ஆறிக் கிடக்குது

தலையை வாரி பூ முடிச்சேன்; வாடி வதங்குது
சதா தெருவில் வந்து நின்று நின்று காலும் கடுக்குது
வழியை வழியைப் பார்த்துப் பார்த்து
கண்ணும் நோகுது - அவர்
வந்தால் பேச நிறைய சேதி
நெஞ்சில் இருக்குது

படம் எடுத்தவர் எம்.ஏ.வேணு; இயக்கியவர் கே.சோமு; கதை வசனம் ஏ.பி.நாகராஜன்; கதாநாயகன் என்.என்.கண்ணப்பா; கதாநாயகி அஞ்சலி தேவி.

கதாநாயகி பாடுவது போலப் பாட்டு இருந்தாலும் சிறியவர் பெரியவர் அனைவரும் திரும்பத் திரும்பக் கேட்டு மகிழும் வண்ணம் பாட்டின் இசை இருக்கவே, இது பெரும் ஹிட் ஆனது. இதே பாட்டு சோகமாக ஒரு முறை பாடப்படும். அதனால் இந்தப் பாடலின் வரிகளும் இசை அமைப்பும் தனிப் பொலிவைப் பெற்றன. இதற்கு முன்னர் பல படங்களுக்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தாலும் இதையே தனது முதல் படம் என்று கூறிப் பெருமைப்படுவார்.

எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு ஒரு அபூர்வமான குரல்! குழந்தையின் குரல் அவருடையது. இன்று வரை அவரைப் போலக் குரல் வளம் உடைய இன்னொருவரை தமிழ் சினிமா பார்க்கவில்லை.

‘களத்தூர் கண்ணம்மா'வில் கமலஹாஸனுக்காக “அம்மாவும் நீயே; அப்பாவும் நீயே” பாடலைப் பாடியவர் இவரே.

குட்டி பத்மினிக்காக ‘குழந்தையும் தெய்வமும்' படத்தில், ‘கோழி ஒரு கூட்டிலே” என்ற என்றும் இனிக்கும் பாடலையும் இவர் பாடியுள்ளார். ‘மகாதேவி' படத்தில் சாவித்திரிக்காக “காக்கா காக்கா மை கொண்டா” மற்றும் “மண்ணுக்கு மரம் பாரமா (தை பிறந்தால் வழி பிறக்கும்)”, “மாப்பிள்ளை வந்தார் மாப்பிள்ளை வந்தார் மாட்டு வண்டியிலே" போன்ற பாடல்கள் இவரது தனித்துவத்தைச் சுட்டிக் காட்டுகின்றன.

பராசக்தி படத்தில், “ஓ, ரசிக்கும் சீமானே”, “புதுப் பெண்ணின் மனதைத் தொட்டு விட்டுப் போனவரே” ஆகிய பாடல்கள் மூலம் ஜனரஞ்சகமான இதர பாடல்களையும் பாட வல்லவர் இவர் என்பது நிரூபணமானது.

படிக்காத மேதை படத்தில் சௌகார் ஜானகி பாடிய “படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு” பாடல் படத்திற்கு களை கூட்டியது.

ஏராளமான சிறப்பான பாடல்களை, குறிப்பாக குழந்தைக் குரலில் பாடிய சிட்டுக் குருவி குரல் எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு தமிழ் சினிமா இசை வரலாற்றில் நிச்சயம் தனி இடம் உண்டு!

(தொடரும்)

ச.நாகராஜன் அவர்களின் இதர படைப்புகள். திரைச்சாரல் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
                         
Your Comments
 
Rishi
6/9/2009 , 8:01:31 AM

 [Comment url]
சிட்டுக்குருவி பாட்டு எனக்கும், என் குடும்பத்தாருக்கும் ரொம்ப புடிக்கும். நல்ல குரல் வளம் அவருக்கு.
 
tamil
6/10/2009 , 3:59:33 AM

 [Comment url]
Very nice
 
malar
6/11/2009 , 1:25:57 PM

 [Comment url]
வெர்ய் வெர்ய் நிcஎ வொஇcஎ fஒர்ம்ச்ர்
 
kasthuribalaji
1/18/2011 , 11:01:06 PM

 [Comment url]
மன்னுகு மரம் பரம என்ட்ர படல் இன் தயிகு மெகம் விருபிய படல்.
Comment
உங்கள் கருத்து
பெயர் :
மின் அஞ்சல் :
சுட்டி :

Comment In:

Tamil English
(Type here in Thanglish and see tamil text in bottom. Tamil conversion powered by : www.suratha.com)
NOTE : Please do not use single quote in your comments. You can use double quote in place.
(English / தமிழில் - யூனிகோட்)
What you see in this box gets posted as feedback.

Hot properties in India

ஜோதிடம் கேளுங்கள் பகுதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைந்து கட்டண சேவை பெற இங்கே சுட்டவும்.

 

 


 

 


About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, India Pakistan cricket series, Kuselan, India Cricket, Sultan The Warrior

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide