"குழந்தைக்கு அதன் அம்மா தான் முதலில் மொழியைக் கற்பிக்க ரம்பிக்கிறாள். மெதுவாக அது புரிந்து கொள்கிறது; னால் மெஷின்களிலோ எலக்ட்ரானிக் முறையில் தகவல்கள் அனுப்பப்படுவதால் ஒரே விநாடியில் அது அனைத்தையும் "கற்றதாக" கி விடுகிறது.
எதிர்கால ந்யூரல் இயந்திரங்கள்! (1)
எதிர்காலத்தில் உருவாக இருக்கும் கணிணிகள் அறிவு சார்ந்த கணிணிகளாக இருக்கப் போகின்றன! மனித மூளையை விடப் பன் மடங்கு ஆற்றல் பெற்று அதிசயங்களை நிகழ்த்தப் போகின்றன.
எப்படி மனித மூளை இயங்குகிறது என்பது புரியாத புதிர்; விளங்காத மர்மம்! ஆகவே மனித மூளை விஞ்ஞானத்திற்கு இன்று ஒரு பெரிய சவால்.
இந்தச் சவாலை விஞ்ஞானம் ஏற்று, புதிரை விடுவித்து சாதனைகளை நிகழ்த்தப் போகிறது. எப்படி என்பதை விஞ்ஞானி ரேமாண்ட் சி. கர்ஜ்வெய்ல் தனது புத்தகத்தில் நன்கு விளக்கி இருக்கிறார்.
1990-இல் பிரசுரிக்கப்பட்ட 'தி ஏஜ் ஃப் இன்டெலிஜென்ஸ் மெஷின்ஸ்' (The age of intelligent machines) என்ற புத்தகத்தில் இந்த விஞ்ஞானி விளக்கி உள்ளவை இன்று நடைமுறைக்கு வர ஆரம்பித்து விட்டன.
எதிர்கால ந்யூரல் மெஷின் பற்றிச் சற்று விளக்கமாகப் பார்ப்போம்.
நேனோடியூப் என்னும் சிறிய பாகங்கள் அணு போன்று மிக மிகச் சிறியதாக இருக்கும். ஒரு அங்குல நீளமுள்ள நேனோடியூப் மூளையை விட நூறு கோடி மடங்கு வேகமாகக் கணக்கிடும் ஆற்றலைப் பெற்றிருக்கும்!
இன்று கணிணியில் அதி வேகமாகக் கணக்குகளைப் போடப்படுவதை அனைவரும் பார்க்கிறோம். இதைப் போல பல கோடி மடங்கு விரைவாக செயல் புரியும் அதிக ஆற்றல் உடைய சிறிய கணிணிகள் தோன்றும். ஆனாலும் சிக்கலான மனித மூளையின் ஆற்றலை அறிவதற்கு ஒரு வழி உருவாக்கப்படுகிறது!
மூளையை ஸ்கேனிங் செய்வது என்பது சர்வ சாதாரண விஷயமாக ஆகி விட்டது. மூளையின் ஆற்றலை முழுவதுமாக அறிவதற்கு ரத்தக் குழாய் வழியே நேனோபோட்கள் செலுத்தப்படும். இந்த நேனோபோட்கள் உண்மையில் சின்னச் சின்ன ஸ்கேனர்கள்!
பல லட்சக் கணக்கில் இவை மூளைக்குள் செலுத்தப்படும். இப்போதே மூளையை ஸ்கேன் செய்ய எலக்ட்ரானிக் எனப்படும் மின்னணு முறை உள்ளது.
மூளையின் ஒரு செல்லிலிருந்து இன்னொரு செல்லுக்கு எப்படித் தகவல்கள் செல்கின்றன என்பதை இந்த நேனோபோட்கள் நன்கு அறிந்து விடும். மின்னணு முறையில் நேனோபோட்கள் தங்களுக்குள் ஒன்றுக்கொன்று பேசிக்கொள்ளும்; தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும்!
இப்படித் தொடர்ந்து இவை செயல்பட்டால் மனித மூளையின் மேப் தயாராகி விடும். பிறகு மூளையைப் போலவே செயலாற்றல் கொண்ட செயற்கை மூளை மெஷின் தயாராக வேண்டியது தான்! இதன் பெயரே ந்யூரல் மெஷின்!
மனித மூளை எப்படி சிந்திக்கிறதோ அதே போல மெஷின் மூளையும் சிந்திக்க ஆரம்பித்து விடும்! அதாவது சூப்பர் இன்டெலிஜென்ஸ் மெஷின்கள் உருவாகி விடும்.
இந்த ந்யூரல் மெஷின்கள் மனித மூளையை விட எப்படி எல்லாம் மேம்பட்டு இருக்கும்?
குழந்தைக்கு அதன் அம்மா தான் முதலில் மொழியைக் கற்பிக்க ரம்பிக்கிறாள். மெதுவாக அது புரிந்து கொள்கிறது; வார்த்தைகளைப் பேச ஆரம்பிக்கிறது. பிறகு பள்ளியில் ஆசிரியர் பல பாடங்களை போதிக்கிறார். பல வருடங்கள் கழித்து அது பல பாடங்களைக் கற்றுத் தேறுகிறது.
ஆனால் மெஷின்களிலோ எலக்ட்ரானிக் முறையில் தகவல்கள் அனுப்பப்படுவதால் ஒரே விநாடியில் அது அனைத்தையும் "கற்றதாக" ஆகி விடுகிறது.
இந்த மெஷின்களுக்கு மருத்துவம், பொறியியல், கட்டிடக்கலை, கார் உருவாக்கும் கார் மானுபாக்சரிங் என்று அனைத்துக் கலைகளையும் கற்பிக்க முடியும். எல்லாமே ஒரு விநாடி வேலை தான். ஒரு பொத்தானை அமுக்கினால் அது ஒரு கலையைக் கற்று விடும். அது மட்டுமல்ல அதிசய வேகத்தில் இவை செயலாற்றும்.