உங்க கல்யாண ஆல்பத்துல ஒருசிலரோட ஃபோட்டோக்கள் மட்டும் ஏன் கறுப்பு, வெள்ளை படமா இருக்கு?
அவுங்கெல்லாம் மொய் செய்யாம ஏமாத்திட்டுப் போனவங்க.
போலிஸ்: ஏற்கெனவே இரண்டு முறை திருடின வீட்ல போய் ஏன் இன்னைக்கு திரும்பவும் திருடின? திருடன்: காலண்டர்ல இன்று புதுமுயற்சிகளைத் தவிர்க்கவும்னு போட்டிருந்தது, அதான்!
--------
உங்க கல்யாண ஆல்பத்துல ஒருசிலரோட ஃபோட்டோக்கள் மட்டும் ஏன் கறுப்பு, வெள்ளை படமா இருக்கு? அவுங்கெல்லாம் மொய் செய்யாம ஏமாத்திட்டுப் போனவங்க.
--------
இருந்தாலும் நம்ம தலைவர் இந்த அளவுக்கு பொய்க்கணக்கு எழுதக்கூடாது. அப்படி, என்ன எழுதினாரு? இன்டெர்நெட்டுல சர்ச் இன்ஜினுக்கு டீசல் வாங்கிப்போட்டதா கணக்கு காமிச்சிருக்காரே!
--------
பேஷண்ட்: எமன் ஏன் டாக்டரைத் திட்டிட்டுப் போறான்? நர்ஸ்: டாக்டர் இன்னைக்கு செய்ய வேண்டிய ஆப்பரேஷனை தள்ளி வச்சிட்டார், அதான்!
--------
தொண்டர் 1: தமிழ் சொற்பொழிவுக்கு முன்னாடி நம்ம தலைவர் மது அருந்துறாரே, எதுக்கு? தொண்டர் 2: மது அருந்தினால்தான் அவர் பேச்சிலே 'ழ' சரியா வருமாம்!