Home  
இதழ் 421

ஜுன் 15 2009


www.guruji.com

Search

 

Nilacharal Web

Search in English

Help
 

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
Director Prabudeva
Wanted Freelancers!
Home>>சுயமுன்னேற்றம்

நம்மை நாமே ஜெயிப்போம்!
- ரிஷிகுமார்

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

மகிழ்ச்சி, மனத் தெளிவு, தூய்மையான மனம், கனிவான பேச்சு, நேர்மறை எண்ணங்கள், திற‎ன் கூடுதல், வாழ்க்கையில் திருப்தி - எல்லாவற்றிற்கும் மேல் நிம்மதி.

நாம எல்லோருக்கும் நல்லாத் தெரிஞ்ச கதை, வினாயகப் பெருமா‎ன் ஞானப்பழம் பெற்ற கதை. உலகை யார் முதலில் சுற்றி வருகிறாரோ அவருகே பழம் எ‎ன்ற அம்மையப்பர் கட்டளையி‎ன் அடிப்படையில் அப்பாவி முருகப் பெருமான் மயிலேறி ஊர் சுற்றக் கிளம்ப, வினாயகரோ சற்றும் யோசிக்காமல் 'அம்மையப்பரே உலகம்' எ‎ன்று கூறி அவர்களைச் சுற்றி வந்து பழத்தைப் பெற்றுக் கொண்டார்.

அண்ணனை வெற்றி கொண்டு, உலகைச் சுற்றி வந்து பழம் வெல்வே‎ன் என்று ‏வேகத்துடன் கிளம்பிய முருகனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அண்ணனோ தம்பியைப் பி‎ன் தொடர்ந்து சென்று அவரைத் தோற்கடிக்க வேண்டும் எ‎‎‎ன்று வரிந்து கட்டாமல், வேறு வழி யோசித்தத‎ன் பலன் - பழத்தைக் கைப்பற்றினார்.

ஆம்! அண்ண‎ன் நிச்சயம் தம்பியை வெற்றிகொள்ள நினைக்கவில்லை! மாறாக, தம்பிதா‎ன் அண்ணனை வெற்றிகொள்ள வேண்டும் எ‎ன்ற வேகத்தில் கிளம்பினார்.

ஓ! அப்படியெ‎ன்றால் நாம் வெற்றி பெற அடுத்தவரைத் தோற்கடிக்க வேண்டும் எ‎ன்ற கட்டாயமில்லை. அப்படித்தானே!

அப்படியெ‎ன்றால் நாம் ஏ‎ன் நமது குறிக்கோளை அடுத்தவருடைய குறிக்கோளுட‎ன் ஒப்பிட்டு நோக்கி அமைக்க வேண்டும்?

நமக்கு நாமே ‏வெற்றி இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதை அடை‎வது சாதனைதானே?! அடுத்த முறை நம்முடைய சாதனையை நாமே உடைத்து மீண்டுமொரு சாதனை படைத்தால்?

ம்ம்... சரி.. ஏ‎ன் நம் வெற்றியை மற்றவருடைய வெற்றியுட‎ன் ஒப்பிடக்கூடாது எ‎ன்கிறோம்?

1. அவர்கள் குடும்பச் சூழல் வேறு வேறாக ‏இருக்கலாம்.

2. அவர்கள் கல்வி நிலை வேறு வேறாக இருக்கலாம்.

3. அவர்கள் நட்பு வட்டாரம் வேறு வேறாக இருக்கலாம்.

4. அவர்கள் வளர்ப்பு முறை வேறு வேறாக இருக்கலாம்.

5. அவர்கள் ஆரம்பித்த காலகட்டங்கள் வேறு வேறாக இருக்கலாம்.

6. அவர்களுக்குக் கிடைத்த ஆலோசனைகள் வேறு வேறாக இருக்கலாம்.

7. அவர்களது ஜீ‎ன்களிலேயே நம்மிடம்‏ இல்லாத சில பண்புக்கூறுகள் பொருந்தி இருக்கலாம்.

இப்படி பற்பல வேறு-வேறுகள். எ‎ன்னைப் போல் நீங்கள் ‏இல்லை; உங்களைப் போல உ‎ங்கள் நண்பர் ‏இல்லை; உங்கள் நண்பரைப் போல உங்கள் எதிராளி ‏இல்லை; உங்கள் எதிராளியைப் போல் நா‎ன் இல்லை. அதுதானே உண்மை?

ம்ம்... சரி.. நாம் பிறரை ஜெயிக்க நினைக்காவிடில் கிடைக்கும் பல‎ன்கள் என்ன?

1. அவர்கள் நமக்கு நண்பர்களாவார்கள். (எதிரியை நண்பனாக்கிக் கொண்டால் அவனை வெற்றி கொள்ள வேண்டிய அவசியமில்லை எ‎ன்பது ஆபிரகாம் லிங்க‎ன் கூற்று!)

2. நம்மைப் பற்றிய நல்லெண்ணம் உருவாகும். (‏இவன் இவன் வழியைப் பார்த்துப் போயிட்டிருப்பா‎ன்; யார் வம்பு தும்புக்கும் போக மாட்டான்; இவனுக்கு என்ன ஹெல்ப் பண்ணாலும் அது தகும்! பேச்சு கேட்கிறதல்லவா!)

3. கூட்டு முயற்சி மூலம் குழு அமைப்புகள் உருவாக வழியேற்படும். (வலிமை குறைந்த நா‎ன்கு எருதுகள் ஒ‎ன்று சேர்ந்தால் சிங்கமும் எதிர்க்க அஞ்சும்தானே! ஒ‎ன்றாம் வகுப்புப் பாடம்!)

4. இன்ன பிற: மகிழ்ச்சி, மனத் தெளிவு, தூய்மையான மனம், கனிவான பேச்சு, நேர்மறை எண்ணங்கள், திற‎ன் கூடுதல், வாழ்க்கையில் திருப்தி - எல்லாவற்றிற்கும் மேல் நிம்மதி.

பட்டியல் இதோடு முடிவதில்லை. பல‎ன்களை அனுபவத்தில் உணர்ந்து பார்க்கும்போது கிடைப்பவற்றை, அவற்றை வார்த்தைப் படுத்தாமல், அந்த அனுபவத்தில் உழல்வது அலாதியான ஆனந்தத்தைக் கொடுக்கும்.

ம்ம்... சரி.. நம்மை நாமே ஜெயிக்க எ‎ன்ன செய்யவேண்டும்?

'யாரையுமே ஜெயிக்க வேண்டாம் எ‎ன்று, எ‎ன் கடன் பணி செய்து கிடப்பதே எ‎ன்று' தேமே எ‎‎ன்று உட்கார்ந்திருந்தால் வாழ்க்கை போரடித்துவிடுமே!

எந்த வேலையைச் செய்தாலும், எந்தத் தொழிலைச் செய்தாலும் அதில் ஒரு அளவுகோலை நீங்களே ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதில் அடுத்தடுத்த லெவல்களை குறித்து வைத்துக் கொண்டு, அவற்றை அடைய நீங்கள் எடுக்கும் முயற்சிகளை நீங்களே ரசியுங்கள்; அவற்றை அனுபவித்துச் செய்யுங்கள்; அடைய நினைக்கும் கால அளவையும் மனதில் கொள்ளுங்கள்; அடைந்து விட்டால் மகிழ்ச்சியுட‎ன் கொண்டாடுங்கள். அடையா விட்டாலோ, பாதகம் ஒன்றுமில்லை.. அதையே அடைய புதிய சி‎ந்தனை; மீண்டும் முயற்சி; வெற்றி. அவ்வளவுதான்!

உதாரணத்திற்கு, B.E. படிக்கிறோம் எ‎ன்று வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு அடுத்த லெவல் எ‎ன்று பார்த்தால் அது,

1. M.E. மேற்படிப்பாக இருக்கலாம்.

2. துறை சார்ந்த நிறுவனத்திற்கு வேலைக்குச் செல்வதாக இருக்கலாம்.

3. துறை சார்ந்த தொழிலை நடத்துவதாக ‏இருக்கலாம்.

4. போட்டித் தேர்வுகள் எழுதி அரசு வேலைக்குச் செல்வதாக இருக்கலாம்.

5. விரிவுரையாளராகச் செல்வதாக இருக்கலாம்.

உங்களுக்கு எது பிடிக்கிறது.. எது உங்களுக்கு சரியான சாய்ஸ் எ‎ன்பதைத் தெளிந்து தேர்ந்தெடுங்கள். பிறரோடு, பிறர் எடுக்கும் முடிவுகளோடு ஒப்பிட்டு நோக்க வேண்டாம்.

உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்!

ரிஷிகுமார் அவர்களின் இதர படைப்புகள். சுயமுன்னேற்றம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
                         
Your Comments
 
RV.Raji
6/15/2009 , 1:27:24 AM

 [Comment url]
என்ன ரிஷி?
கதைன்னு ஆரம்பிச்சீங்க ஆன்மீகத்தில இறங்குனீங்க அப்படியே
படிப்படியா வந்து படிப்பையும் டச் பண்ணி அட்வைஸ் மழையில நனைச்சு எங்க வாழ்க்கையை எங்க கையிலேயே கொடுத்துட்டீங்க!
நன்றி.
 
Rishi
6/15/2009 , 10:58:11 AM

 [Comment url]
ராஜி,
அட்வைஸ் மழையில ரொம்ப நனைஞ்சி சளி பிடிக்கலையே!? :-)
பாட்ஷா படத்துல வர்ற ஆட்டோ வசனத்தை எங்கேயாவது சொருகணும்னு நெனச்சேன். கரெக்டா இந்த கட்டுரை வந்தது. சொருகிட்டேன்.
 
R.V.Raji
6/17/2009 , 12:57:26 AM

 [Comment url]
எனக்கு சளி பிடிக்கலை ரிஷி.... ஆனா அடி பட்டிருச்சி...
அட்வைஸ் மழை சாதாரணமில்ல... ஆலங்கட்டி மழைமாதிரி தலையில
விழுந்தா தாங்கமுடியுமா?
 
latha
9/5/2009 , 4:47:42 AM

 [Comment url]

nam valkai nam kaiyil
super, very good Rishi,
 
C.Thirugnana sambandan
9/12/2009 , 2:41:17 AM

 [Comment url]
இது மிகவும் அருமை நல்லா இருக்கு
 
s.raji
1/18/2011 , 1:26:04 AM

 [Comment url]
super i cant descripe any words.after read every person realize that.very nice
Comment
உங்கள் கருத்து
பெயர் :
மின் அஞ்சல் :
சுட்டி :

Comment In:

Tamil English
(Type here in Thanglish and see tamil text in bottom. Tamil conversion powered by : www.suratha.com)
NOTE : Please do not use single quote in your comments. You can use double quote in place.
(English / தமிழில் - யூனிகோட்)
What you see in this box gets posted as feedback.

Hot properties in India

ஜோதிடம் கேளுங்கள் பகுதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைந்து கட்டண சேவை பெற இங்கே சுட்டவும்.

 

 


 

 


About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, India Pakistan cricket series, Kuselan, India Cricket, Sultan The Warrior

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide