Home  
இதழ் 527

ஜுலை 04 2011


Weekly Newsletter Subscription

Name
Email

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
Trisha
Access consciousness bars
Home>>ராசிபலன்

இராசிபலன்கள் 04-07-11 முதல் 10-07-11
- ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

மாணவர்கள் கல்வியில் மிகுந்த எச்சரிக்கையுடன் பயின்று வருவது நல்லது. வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பதற்கு முயற்சிப்பீர்கள்.

மேஷம்:-

மேஷராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். யாத்திரையில் சம்பந்தம் இல்லாத நபர்களின் மூலம் வீண் பிரச்னைகளுக்கு ஆளாக நேரிட இருப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணம் செய்வது நல்லதாகும். குழந்தைகள் உயரமான இடங்களில் கவனமுடன் ஏறி இறங்குவது நல்லது. உத்தியோகத் துறையினர்கள் மேலதிகாரிகளுடன் மனக்கசப்புகள் ஏற்பட்டுப் பணி இட மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் முன் கோபத்தை தவிர்த்துப் பணி ஆற்றுதல் சிறந்ததாகும். வெளிநாடு சென்றுவருதல் போன்ற முயற்சிகளில் எதிர்பார்த்து இருந்த நபர்களின் ஆதரவுகள் கிடைக்கும். அநாதைச் சிறுவர்களுக்கு உதவுவதிலும், அரசியல்வாதிகளுடன் எதிர்பாராத தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சிற்சில ஆதாயம் அடைவீர்கள். குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வர முயற்சிப்பீர்கள். வடக்குத் திசையில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். பழைய கடன்களை அடைத்து விட்டுப் புதிய கடன் வாங்குவதற்காக முயற்சிப்பீர்கள். அழுகல் சம்பந்தமான பொருட்கள், கழிவுப் பொருட்கள், பழைய பேப்பர், பிளாஸ்டிக் போன்ற போருட்கள் வியாபாரம் செய்வோர்கள், மீன், முட்டை, மாமிசம் போன்ற பொருட்களின் வியாபாரிகள், வெளி நாட்டுத் தூதுவர்கள், புகைப்படக் கலைஞர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-7
இராசியான நிறம்:-கருஞ்சிகப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-திங்கள் கிழமையில் கணபதி வழிபாடு செய்து வரவும்

ரிஷபம்:-

ரிஷபராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். மாணவர்கள் கல்வியில் மிகுந்த எச்சரிக்கையுடன் பயின்று வருவது நல்லது. வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பதற்கு முயற்சிப்பீர்கள். பொது நலத் தொண்டுகளில் ஈடுபடுவதிலும் மிகுந்த கவனம் செலுத்துவீர்கள். குலதெய்வ ஆலயங்களைத் திருத்திக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பூஜைப் பொருள்கள், நறுமணப் பொருட்கள் வியாபாரிகள், அறநிலையத் துறையை சார்ந்தவர்கள், அநாதை ஆசிரமங்களை நடத்துவோர்கள், பொதுப்பணித் துறை சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். விவசாயம் செய்பவர்களுக்குப் புதிய முறை விவசாயங்கள் மூலம் நல்ல லாபம் அடைவார்கள். வீடு மாற்றம் செய்வதற்கான புதிய முயற்சிகளில் வங்கிகளின் ஆதரவுகள் கிடைக்கும். விளையாட்டுத் துறை சார்ந்தவர்களுக்குப் பரிசு மற்றும் பாராட்டுதல் கிடைக்கும். விட்டுப்போன பழைய பிரச்சனைகள் மீண்டும் தலை தூக்கும். பிள்ளைகளால் தொல்லைகள் ஏற்பட்டாலும் அவர்களால் பெயர் புகழ் போன்றவை கிடைக்கும். தேவையற்ற புதிய நண்பர்களின் சேர்க்கையால் வீண் பிரச்சனைகள் வர இருப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வடகிழக்கு
பரிகாரம்:-வியாழக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.

மிதுனம்:-

மிதுனராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். மீன், முட்டை, மாமிச உணவுப் பொருட்களின் வியாபாரிகள், காண்டிராக்ட், கமிசன், ஏஜன்சி போன்ற தொழிற் செய்வோர்கள், விஞ்ஞானத் துறை சார்ந்தவர்கள், தோல் தொழிற்சாலைகள் மற்றும் பழைய பொருள் வியாபாரிகள், வட்டிக் கடை நடத்துபவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். உடம்பில் நரம்பு, இரத்தம் தொடர்பான சில உபாதைகள் வந்து போகலாம். மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களை கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறி முன்னேற்றமான சூழ்நிலைகள் உருவாகும். உத்தியோகத் துறையினர்களுக்கு பணி இட நிரந்தரமும் சம்பள உயர்வுகளும் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு இது வரையில் இருந்துவந்த தடைகள் நீங்கித் திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளது. படித்த வேலை இல்லாத இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்ப்புகள் வந்து சேரும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்காக புதிய கடன் வாங்க முயற்சிப்பீர்கள். அலுவலகங்கள் மற்றும் வீடுகளை இடமாற்றம் செய்யப் போட்டிருந்த திட்டங்களில் சற்று பின்னடைவு உண்டாகலாம். பூமி, நிலம் சம்பந்தமான விசயங்களில் ஈடுபட்டு நற்பலன்களை அடைவீர்கள். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-4
இராசியான நிறம்:-கருப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-ஞாயிற்றுக் கிழமையில் பிதுர் மற்றும் அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.

கடகம்:-

கடகராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். புதிய வேலை வாய்ப்புகளுக்காக மற்றவர்களை நம்பிப் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். கணவன், மனைவி உறவுகளில் இருந்து வந்த நீண்ட கால மனக்கசப்புகள் தீர்ந்து ஒற்றுமையுடன் காணப்படுவார்கள். வேற்று மதத்தவரால் ஆதாயம் ஏதும் இல்லை. யாத்திரைகளில் கவனமுடன் சென்று வரவும். வீடு மற்றும் வாகனங்களைப் புதிதாய் வாங்குவதற்கான திட்டங்களில் சற்று பின்னடைவுகள் ஏற்படும். எதிர்பாராத விதமாக நண்பர்களால் சில ஆதாயங்களும் மன மகிழ்ச்சியும் அடைவீர்கள். வரவேண்டிய மனைவி வழிச் சொத்துக்களும் மற்றும் பணமும் கை வந்து சேரும் காலமாகும். தந்தை மகன் உறவுகளில் காரணமற்ற முன்கோபத்தால் பிரச்சனைகள் உருவாகலாம். வெளி நாடுகளில் வசிப்பவர்கள் தங்களது உறவுகளைக் காணத் தாய்நாடு சென்று வருவீர்கள். வெகு காலமாகக் காணாமற் போன பொருட்கள் மற்றும் நபர்கள் திரும்பி வர வாய்ப்பு உள்ளது. பிள்ளை இல்லாதவர்களுக்கு இறையருளால் புத்திர பாக்கியம் கிடைக்கும் காலமாகும். வங்கிகளில் பணி ஆற்றுபவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இட மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அரசியல்வாதிகளால் எதிர்பாராத சில ஆதாயங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களின் திடீர் வரவுகளால் பொருட் செலவுகள் வந்தாலும் அவர்களால் சில ஆதாயம் அடைவீர்கள். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-செவ்வாய் கிழமையில் முருகன் ஆலய வழிபாடு செய்து வரவும்.

சிம்மம்:-

சிம்மராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். திருமண விசயங்கள் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளைச் சற்று தள்ளிப் போடுவது நல்லதாகும். மற்றவர்களின் விசயங்களில் அநாவசியமாகத் தலையிட்டு வீண் சிக்கலில் மாட்டிக் கொண்டு மன நிம்மதியை இழக்க வேண்டாம். ரேஸ், லாட்டரி போன்றவற்றின் மூலமாக பணம் மற்றும் பொருட்களை எமாற்றம் அடையாமல் இருக்கவும். நீண்ட காலமாக வராத பணம் காவல் துறையினரின் உதவிகளால் திரும்பி வந்து சேரும். நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த சொத்து சம்பந்தமான வழக்கு விசயங்களில் காவல் துறையினர்கள் உதவிகளால் திரும்பக் கிடைக்கும். நீண்டகாலமாக வராத கடன் கொடுத்து இருந்த பணங்கள் மற்றும் பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்பக் கைக்கு வந்து சேரும். விவசாயம் செய்பவர்களுக்கு சுமாரான விளைச்சல் உண்டாகும். யாத்திரையின் போது மிக கவனமுடன் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது சிறந்ததாகும். யாத்திரையின் போது சம்பந்தம் இல்லாத புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்ளும் காலமாகும். கார், லாரி யோன்றவற்றில் பணி செய்பவர்கள், கட்டிடப் பணி ஆற்றுபவர்கள், செங்கல் மணல், சிமிண்ட் வியாபாரிகள், கட்டிட சம்பந்தமான கமிசன் தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் நற் பலன்கள் அடைவார்கள். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-தென்கிழக்கு
பரிகாரம்:-வெள்ளிக் கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

கன்னி:-

கன்னிராசி அன்பர்களே! இந்தவாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். வேண்டாத விசயங்களில் தலையிட்டு மன நிம்மதி இழக்காதிருங்கள். நண்பர்களால் வீண் பொருட் செலவுகள் வந்து சேரலாம். தந்தை வழியிலான சொத்துக்கள் கைவந்து சேர வாய்ப்பு உள்ளது. பங்காளிகளுடன் சேர்ந்து புதிய கூட்டுத் தொழில் செய்வதற்கான முயற்சிகளில் சற்று பின்னடைவுகள் ஏற்பட்டாலும் மிகுந்த பிரயாசையின் பேரில் சரி செய்து விடுவீர்கள். நாட்பட்ட பழைய பிரச்சனைகள் மீண்டும் தலை தூக்கும். மாணவர்கள் கல்வியில் மிகுந்த கவனமுடன் பயின்று வருதல் நல்லது. தீராத நோய்கள் தீருவதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்ளுவீர்கள். வேலையாட்களால் சிற்சில மனநிம்மதி இன்மையும் பொருட் செலவுகளும் வந்து சேரும். கணவன் மனைவி உறவுகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. காதல் சம்பந்தமான விசயங்களில் நல்ல செய்திகள் வந்து சேரும் காலமாகும். நீண்ட காலமாக விடுபட்டுப் போன பழைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் புதிய தொடர்புகள் ஏற்படலாம். விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடரும் காலமாகும். இரும்பு, இயந்திரம், இரசாயனம், பழைய பொருட்கள் வியாபாரிகள், பல சரக்கு, எண்ணை, பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற பொருட்களை விற்பனை செய்வோர்கள், நெருப்பு, மின்சாரம் இராணுவத்துறை சார்ந்தவர்கள் நற்பலன் அடைவார்கள். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-8
இராசியான நிறம்:-நீலம்
இராசியான திசை:-தென்மேற்கு
பரிகாரம்:-சனிக்கிழமையில் சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.

துலாம்:-

துலாம் ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். தாயின் உடல் நிலையில் இதுநாள் வரையில் இருந்து வந்துள்ள பாதிப்புகள் குறைந்து நிம்மதி அடைவீர்கள். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழில் முயற்சிகளைச் செய்வதில் நல்ல பலன் அடைவீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் பெரிய மனிதர்களின் தலையீட்டால் நல்லதொரு முடிவுக்கு வரும். ஒரு சிலருக்கு தாய் வழியிலான சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து சொத்துக்கள் கிடைக்கும். மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களைக் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். மஹான்களின் எதிர்பாராத தரிசனங்களால் மன நிம்மதி அடைய வாய்ப்பு உள்ளது. அரசு வழக்கறிஞர்கள், தபால் தந்தித் துறையினர்கள், வங்கிப்பணி ஆற்றுபவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பாடலாசிரியர்கள், நோட்டு புத்தகம், பேனா, பென்சில்கள் போன்ற பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள் கணிதம், எழுத்துத் துறை சார்ந்தவர்கள், அச்சுத் தொழிற் செய்பவர்கள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவார்கள். கணவன் மனைவி உறவுகள் சுமாராக காணப்படும். காதல் விசயங்களில் மிகுந்த கவனமுடன் செயல் படுவது நல்லது. பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்துள்ள பிரச்சனைகள் பெரிய மனிதர்களின் தலையிடுதலால் திரும்பக் கிடைக்கும். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

விருச்சிகம்:-

விருச்சிகராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். புதிய கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. கோர்ட் வழக்கு சம்பந்தமான விசயங்களில் நல்ல சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். காதல் விசயத்தில் நண்பர்களின் உதவியால் நல்ல தகவல்கள் வந்து சேரும். புதிய கடன்கள் கொடுப்பதைத் தவிர்த்தல் நல்லதாகும். வர வேண்டிய பணம் கிடைக்க இன்னும் சற்றுக் கால தாமதம் ஆகலாம். உடல் நிலையில் வாயு, வாத சம்பந்தமான தொல்லைகள் வந்து போகும். கலைத்துறை சார்ந்த கல்லூரிப் பேராசிரியர்கள், சினிமா நாடகம் போன்ற துறையைச் சார்ந்தவர்கள், அச்சுத் தொழிகள், பேப்பர், பேனா, நோட்டு புத்தகம் போன்ற வியாபாரிகள், தபால் தந்தித் துறை சார்ந்தவர்கள், வங்கிப் பணி செய்பவர்கள், மருத்துவத் துறைகளைச் சார்ந்தவர்கள், மருந்துப் பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். தந்தை மகன் உறவுகளில் இருந்து வந்துள்ள மனக் கசப்புகள் குறைந்து ஒற்றுமையுடன் காணப்படுவார்கள். ரேஸ், லாட்டரி போன்ற திடீர் அதிர்ஷ்டம் மூலமாகப் பொருள் வந்து சேர வாய்ப்பு உள்ளது. புதிய வீடு நிலம் போன்றவற்றை விலைக்கு வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறும் காலமாகும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளுக்காக பணம் பொருட்களைக் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். குழந்தைகளின் மன மகிழ்ச்சிக்காக நீண்ட தூர உல்லாசப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-புதன் கிழமையில் மஹவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

தனுசு:-

தனுசுராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். குலதெய்வ ஆலய வழிபாடுகளுக்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். விளையாட்டுத் துறைகளைச் சார்ந்தவர்களுக்குப் பரிசு மற்றும் பாராட்டுதல்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. நாட்பட்ட பழைய கடன்கள் அடைபடும். பழைய வீடு மற்றும் வாகனங்களை விற்றுப் புதிய வீடு வாகனம் வாங்குவதற்காக முயற்சிப்பீர்கள். திடீர் அதிர்ஷ்டம் மூலமாகப் பணம் வந்து சேரலாம். உடல் நிலையில் உஷ்ணம், சுரம், சளி போன்ற தொல்லைகள் வந்து போகும். பொதுத் தொண்டுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு மன நிறைவை அடைவீர்கள். நீண்ட காலமாகத் திருமணம் ஆகாதவர்களுக்கு உறவினர்களின் ஆதரவுகளால் திருமணம் நடைபெறும். புதிய ஆடை ஆபரணங்களை வாங்குவதைச் சற்று தள்ளிப் போடவும். சமுதாய வளர்ச்சிகளுக்கான விசயங்களில் ஈடுபட்டு மன மகிழ்ச்சியும் பரிசு மற்றும் பாராட்டுகளையும் பெறுவீர்கள். விபரீதமான எண்ணங்களால் வீண் பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடலாம். தீயணைப்புத் துறை, ராணுவம், காவல் துறை போன்றவற்றில் பணி ஆற்றுபவர்கள், ஹோட்டல் தொழில், சிறு தின்பண்ட வியாபாரிகள், கேஸ், வெல்டிங் சம்பந்தமான தொழில் செய்வோர்கள், மசால் பொடி வியாபாரிகள், விறகு மற்றும் நிலக்கரி போன்ற எரி பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-செவ்வாய் கிழமையில் துர்க்கை ஆலய வழிபாடு செய்து வரவும்.

மகரம்:-

மகரராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். நண்பர்களின் வீட்டுச் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்டதூரப் பயணங்களை மேற் கொள்ளுவீர்கள். பொருளாதாரம் சுமாராகக் காணப்படும். வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலம் பொருட் செலவுகள் வந்து சேரக் கூடிய காலமாகும். புதிய ஆடை மற்றும் ஆபரணங்களை வாங்குவீர்கள். பிரிந்துபோன கணவன் மனைவி திரும்ப ஒன்று சேருவதற்கான வாய்ப்பு உள்ளது. சொத்து சம்பந்தமான வழக்கு விசயங்களுக்காகப் புதிய வழக்கறிஞர்களை நாடுவீர்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமான வழக்கு விசயங்களில் சம்பந்தம் இல்லாத நபர்களின் ஆதரவுகளால் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். பூ, பழம், பூஜை சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், ஆலயப்பணிகளைச் செய்வோர்கள், அற நிலையத் துறை சார்ந்தவர்கள், கம்ப்யூட்டர் சாதன வியாபாரிகள், இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள், அநாதை ஆசிரமங்களை நடத்துபவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். மனைவி வழியிலான சொந்த பந்தங்களுடன் சிற்சில கருத்து வேறுபாடுகள் வந்து போகலாம். நாட் பட்ட தீராத நோய்கள் தீருவதற்காக புதிய மருத்துவர்களின் உதவிகளை நாடுவதன் மூலம் நோய் தீரும். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-3
இராசியான நறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வடகிழக்கு
பரிகாரம்:-வியாழக் கழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.

கும்பம்:-

கும்பராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். வெளிநாடுகள் சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில் வேற்று மதத்தவர்களால் ஆதாயங்களை அடைவீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் சற்றுக் குறைந்து காணப்படுவதன் மூலம் நிம்மதி அடையலாம். அரசு சம்பந்தமான வழக்கு விசயங்களில் சாதகமான நல்ல தீர்ப்புகள் கிடைக்கும். நீண்ட காலமாக உத்தியோகம் இல்லாத படித்த இளைஞர்களுக்குப் புதிய உத்தியோகம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. உற்றார் மற்றும் உறவினர்களின் எதிர்பாராத திடீர் வரவுகளால் பொருட் செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் ஆதாயங்கள் அடைவீர்கள். உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்க இன்னும் சற்று காலதாமதம் ஆகலாம். குடும்பத்தில் வீணாக ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் குறைந்து காணப்படும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் வந்து சேரும். குடும்பத்தில் நடக்க இருக்கும் சுப காரிய நிகழ்ச்சிகளைச் சற்று தள்ளிப் போடுவது சிறந்ததாகும். பூஜைப் பொருள் வியாபாரிகள், தண்ணீர், கூல்டிரிங்ஸ் போன்ற திரவப் பொருட்களின் வியாபாரிகள், உப்பு மற்றும் கடல் துறைகள் சார்ந்த பணியாளர்கள், பூஜைப் பொருட்களின் வியாபாரிகள், தாய் சேய் நல விடுதிகளை நடத்துபவர்கள் ஆகியோர்கள் நற்பலன்கள் அடைவார்கள். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:--2
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-மேற்கு
பரிகாரம்:-திங்கள் கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.

மீனம்:-

மீனராசி அன்பர்களே! இந்தவாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். அணு ஆராய்ச்சித் துறை சார்ந்தவர்கள், இராசயனம் மற்றும் கழிவுப் பொருட்களாகிய பேப்பர் பிளாஸ்டிக் சம்பந்தமான பொருள் வியாபாரிகள், அரசுத்துறை சார்ந்த உயர் பதவிகளை வகிப்பவர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள். வீட்டில் காரணமில்லாத சில பிரச்சனைகள் ஏற்பட்டுப் புதிய வீடு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குழந்தைகளின் மன மகிழ்ச்சிகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகத் துறையினருக்கு இட மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் நிலையில் கண் காதுகளில் மிக கவனமாய் இருப்பது நல்லது. புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்ப்பதால் வீண் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். பிள்ளைகளின் உடல் நிலையில் கவனமுடன் இருப்பது நல்வது. செய்யாத குற்றங்களுக்கு அவப்பெயர் சேர வாய்ப்பு உள்ளதால் கவனமுடன் இருக்கவும். வீடு வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலம் பொருட் செலவுகள் வந்து சேரலாம். தாயின் உடல் நிலையில் மிகக் கவனமுடன் இருப்பது நல்லது. அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் வீண் பிரச்சனைகள் வர இருப்பதால் எச்சரிக்கையுடன் பேசிப் பழகுதல் நல்லதாகும். சொத்து விசயமாகப் புதிய பிரச்சனைகளை சந்தித்து வெற்றி பெறுவீர்கள். உடம்பில் எலும்பு மற்றும் நரம்பு போன்ற உபாதைகள் வந்து போகும். பிரிந்து போன கணவன் மனைவி திரும்ப ஒன்று சேருவார்கள். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-1
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-கிழக்கு
பரிகாரம்:-ஞாயிற்றுக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.

***********************************************

Gnanayohi Dr. P. Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M
18 (25B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur - 627 759
Tirunelveli District, Tamil Nadu, India.
Phone : 04633-243029,
Mobile: 98425-10578, 98425-29691,
Fax: 04633 -240390
Website:- www.gnanayohi.com

ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M அவர்களின் இதர படைப்புகள். ராசிபலன் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
                         
Your Comments
Comment
உங்கள் கருத்து
பெயர் :
மின் அஞ்சல் :
சுட்டி :

Comment In:

Tamil English
(Type here in Thanglish and see tamil text in bottom. Tamil conversion powered by : www.suratha.com)
NOTE : Please do not use single quote in your comments. You can use double quote in place.
(English / தமிழில் - யூனிகோட்)
What you see in this box gets posted as feedback.

Hot properties in India

ஜோதிடம் கேளுங்கள் பகுதியில் விரைந்து பதில் பெற, விரிவான விளக்கம் பெற கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு...

 

 


 

 


About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, India Pakistan cricket series, Kuselan, India Cricket, Sultan The Warrior

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide

We use cookies on this website. By using this site, you agree that we may store and access cookies on your device. Find out more and set your preferences here . X