 |
இதழ் 476 |
 |
ஜூலை 12 2010
|

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Your Advertisement Here
|
| |
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
|
|
| நவக்கிரகங்கள் (5)
- ச.நாகராஜன் |
| | Yellow Sapphire என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. நீல நிற ஒளிக்கதிர்களை வெளிப்படுத்துகிறது. ஜீவ சக்தியைத் தருகிறது. தொண்டைக் கோளாறுகளைப் போக்கும். நவக்கிரகங்களுக்கு உரிய ரத்தினக்கற்கள்
சூரியன்-மாணிக்கம் Ruby என ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது. விலை உயர்ந்தது. சிவப்பு வண்ணக் கதிர்களை வெளிப்படுத்துகிறது. இதை அணிவதால் செல்வம் அதிகரிக்கும். பித்த நோய் தீரும். ரத்த ஓட்டம் சீர்படும்.
சந்திரன்-முத்து Pearl என ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது. குளிர்ந்த தன்மை உடையது. ஆரஞ்சு வண்ணக் கதிர்களை வெளிப்படுத்துகிறது. நல்ல முத்தை இனம் கண்டு ஆராய்ந்து அணிய வேண்டும். கண் நோய் ஆகியவற்றைப் போக்கும். கற்பனையைத் தூண்டும்.
செவ்வாய்-பவளம் Coral என ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது. கடலில் உற்பத்தி ஆகிறது. மஞ்சள் நிறக் கதிர்களை வெளிப்படுத்துகிறது. மனோதிடம் உண்டாக்கும். வயிற்றுக் கோளாறுகளைப் போக்கும். நரம்புத் தளர்ச்சியை நீக்கும்.
புதன்-மரகதம் Emerald என ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது. குளிர்ந்த பச்சை நிறக் கதிர்களை வெளிப்படுத்துகிறது. சிறுநீரகம், மண்ணீரல், குடல் ஆகியவற்றின் மீது இதன் ஆதிக்கம் உண்டு. ஆஸ்த்மா, ரத்த அழுத்தம், குடல் புண் சம்பந்தப்பட்ட வியாதிகளைப் போக்கும் .
குரு-கனக புஷ்பராகம்
Yellow Sapphire என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. நீல நிற ஒளிக்கதிர்களை வெளிப்படுத்துகிறது. ஜீவ சக்தியைத் தருகிறது. தொண்டைக் கோளாறுகளைப் போக்கும்.
சுக்கிரன்-வைரம்
Diamond என ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது. நவரத்தினங்களுக்குள் அதிக விலை உடையது. நீலம் அல்லது இண்டிகோ வண்ணத்தை வெளிப்படுத்துகிறது. கண் நோய், பித்தக் கோளாறு, மூச்சுத் திணறல், ஆஸ்த்மா இவற்றைப் போக்கும். செல்வாக்கு, அந்தஸ்து ஆகியவற்றை உயர வைக்கும். இதை வாங்கி சில நாட்கள் வீட்டில் வைத்துப் பார்த்த பின்னரே வாங்கியதை வியாபாரத்தில் உறுதிப்படுத்த வேண்டும்.
சனி-நீலம்
Sapphire என ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது. வயலட் கதிர்களை வெளிப்படுத்துகிறது. நரம்புக் கோளாறு, மூளைக் கோளாறு, மூட்டுவலி ஆகியவற்றைப் போக்கும்.
ராகு-கோமேதகம்
Hessonite என ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது. அல்ட்ரா வயலட் கதிர்களை வெளிப்படுத்துகிறது. பசியைத் தூண்டும். வாயுக் கோளாறுகளைப் போக்கும்.
கேது-வைடூர்யம்
Cat's Eye என ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது. இன்ப்ரா ரெட் கதிர்களை வெளிப்படுத்துகிறது. பக்கவாதம் (paralysis) மற்றும் சரும நோய்களைப் போக்க வல்லது. குற்றமற்ற கற்களையே அணிய வேண்டும். நன்கு சோதித்த, பின்னரே அணிய வேண்டும்.
|
| | ச.நாகராஜன் அவர்களின் இதர படைப்புகள்.
| ஆன்மீகம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
|
|
|
|
|