பிரெஞ்சியரோ,
அப்படி அழைக்க விரும்பாமல், கலே என்னும் பிரெஞ்சுத் துறைமுகத்தின்
பெயரால் 'பாதக் கலே' என்று சொல்கிறார்கள்.
ஆங்கிலேயரும் பிரெஞ்சியரும் ஒரே இனத்தினர், பக்கத்துப் பக்கத்து நாடுகளில்தான் வசிக்கிறார்கள் என்றாலும் அவர்களிடையே முரண்பாடுகளும் பல உண்டு.
இரு நாடுகளையும் பிரிப்பது 37 கி.மீ. மட்டுமே அகலமுள்ள ஒரு கடல். அதை ஆங்கிலேயர் இங்கிலீஷ் சேனல் (ஆங்கிலக் கால்வாய்) என்கின்றனர். பிரெஞ்சியரோ, அப்படி அழைக்க விரும்பாமல், கலே என்னும் பிரெஞ்சுத் துறைமுகத்தின் பெயரால் 'பாதக் கலே' என்று சொல்கிறார்கள்.
மேலும் பல மாறுபாடுகளைக் கீழே காண்க:
1. ஆட்சி முறை இங்கிலாந்து : மன்னராட்சி பிரான்சு : மக்களாட்சி
2. சமுதாயம் இ : அரச குடும்பத்தார், பிரபுக்கள், சாமானியர் என வேறுபட்டது. பி : யாவரும் சமம்
3. மதப்பிரிவு இ : புரோட்டஸ்டண்ட் பி : கத்தோலிக்கம்
4. மொழி இ : ஜெர்மன் குடும்பம் பி : லத்தீன் குடும்பம்
5. மனப்பான்மை இ : கட்டுப்பெட்டி பி : புதுமை விருப்பம்
6. நிற வெறி இ : மிகுதி பி : குறைவு
7. ஊர்திகள் இ : இடப்பக்கம் செல்லும் பி : வலப்பக்கம் போகும்
8. நூல்களில் பொருளடக்கம் இ : தொடக்கத்தில் பி : கடைசியில்
9. ஆணுறைக்குப் பெயர் இ : பிரெஞ்சு லெதர் பி : ஆங்கில உறை
10. அனுமதியின்றி மட்டம் போடுதல் இ : பிரெஞ்சு லீவ் எடுத்தல் என்பர். பி : ஆங்கில பாணியில் நழுவுதல் என்பர்.
நம்ம மக்கள்கிட்டதான் முரண்பாடுகள் இருக்கும்ன்னு பார்த்தா, ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சியருக்கும் இடையிலேயே இத்தனை முரண்பாடுகள் இருக்கா? எங்களை நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்க வச்சதுக்கு நன்றி ஞானம் சார்! அடிக்கடி இந்த மாதிரி தகவல்களை தந்துக்கிட்டே இருங்க... வாழ்த்துக்கள்!..
ஆங்கிலேயர்களும் பிரஞ்சுக்காரர்களும் முரண்பட்டவர்கள் என்பதை முன்பே அறிந்திருந்தபோதிலும் எந்த விதத்தில் என்பதை இக்கட்டுரையின் மூலமே அறிந்துகொண்டேன். தகவல்களுக்கு நன்றி.
We use cookies on this website. By using this site, you agree that we may store and access cookies on your device. Find out more and set your preferences here . X