 |
இதழ் 478 |
 |
ஜூலை 26 2010
|

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Your Advertisement Here
|
| |
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
|
|
| மனித உடலியல் (34)
- டாக்டர்.விஜயராகவன் |
| | பெரும்பாலான தசைகளை, நாம் நினைக்கும் போது கட்டுப்படுத்த முடியும் – நீங்கள் விரும்பும் போது அவை அசையும். அவற்றை தன்னார்வத் தசைகள் (voluntary muscles) என்பர் பசை மூட்டுகள் (Synovial Joints) என்றால் என்ன ?
மூட்டுகள், எடுத்துக்காட்டாக, முழங்கை, கை விரல் முட்டிகள் மற்றும் மணிக்கட்டுகள் ஆகியன அசைவுகளை அனுமதிக்கும் வகையில் பெருமளவு வடிவமைக்கப்பட்டுள்ளன; மேலும் வழுக்கும் வகையான பசைகளுடன் (synovium) சேர்க்கப்பட்டுள்ளன. உடலின் சில மூட்டுகள் எலும்புகளுக்கிடையில் சிறிதளவு அசைவையே அனுமதிப்பவை; ஆனால் ஏராளமான மூட்டுகள் அருகருகே அமைந்து இருக்குமானால் பெருமளவு நெகிழ்வுத் தன்மை எலும்புகட்கிடையே உண்டாகிறது எனலாம். மணிக்கட்டு, கணுக்கால், தண்டுவடம் ஆகியவற்றின் எலும்புகள் அனைத்தும் இவ்வகையிலேயே செயல்படுபவை. பசை மூட்டில் அமைந்துள்ள எலும்புகளின் முணைப்பகுதிகள் இணைப்பிழை நாண்கள் (ligaments) எனப்படும் கடினமான பட்டைகளால் ஒன்றிணைக்கப்படுகின்றன. எலும்புகளுக்கு இடையேயுள்ள இடைவெளிகள் இவற்றால் நிரப்பப்பட்டு அவற்றின் ஒவ்வொரு முனையும் சேர்க்கப்படுகின்றது. எலும்பு முனைகள் ஒன்றோடொன்று சேர்ந்து அசையும் போது, அவை குருத்தெலும்புகளுடன் (cartilage) சேர்ந்து நிரப்பப்படுகிறது. இது ஒளி மிக்கதாய், மென்மையாக, ஓரளவு நெகிழ்ச்சி கொண்டதாகும். இது எலும்பு முனைகள் ஒன்றோடொன்று அதிக உராய்வின்றி நெகிழ்ச்சியுடன் நழுவிச் செல்ல துணை புரிகிறது.
முழங்கால் சற்று வேறுபட்டதாகும்; இதிலுள்ள இணைப்பிழை நாண்கள் மூட்டின் உட்புறத்திலும் வெளிப் புறத்திலும் சிலுவை வடிவில் அமைந்துள்ளவை. இதில் மெனிஸ்கி (menisci) எனப்படும் இரண்டு பிறை வடிவக் குருத்தெலும்புகளும் உள்ளன; இவை எலும்பு முனைகளுக்கு இடையில் "மிதவை" போன்று அமைந்துள்ளன.
தசை நாண் உறை (Tender sheath) எதைப் பாதுகாக்கிறது?
அழுத்தம் அல்லது உராய்வு ஆகியவை காரணமாக தசை நாண் சேதமுறாமல் அதனைத் தனிமைப்படுத்தி பாதுகாத்து உயவிடும் (lubricate) வகையில் தசை நாண் உறை வடிவமைக்கப்பட்டுள்ளது. தசை நாண் உறையின் இரு அடுக்குகளுக்கு இடையில் திரவம் இருப்பதால் அவ்வடுக்குகள் ஒன்றின் மீது ஒன்று எளிதாக நழுவிச் செல்ல இயலும். தசைக்கட்டு (Sinew) என்று அழைக்கப்படும் தசை நாண் வலிமையான வெள்ளை நிறக் கயிறு போன்று அமைந்து தசைகளை எலும்புகளுடன் இணைத்துக் கட்டுகிறது. தசைகள் தசை நாண்களை இழுப்பதன் மூலம் எலும்புகள் அசைக்கின்றன.
தசை நாண், திசுக்களைக் கற்றையாகக் கட்டும் கயிறு போன்று அமைந்திருப்பது. சில தசை நாண்கள் வட்டமாகவும், மற்றவை நீண்டு அல்லது தட்டையாகவும் அமைந்திருக்கும். தசை நாணின் ஒரு முனை தசையின் முனையில் இருக்கும்; மறு முனை எலும்புடன் பின்னிப் பிணைந்திருக்கும். தசை நாண், நார்ப் பொருளாலான திசு உறையினுள்ளே, மேலும் கீழும் செல்லும். சட்டையின் கைப்பகுதியில் கை மேலும் கீழும் செல்வது போன்று இது இருக்கிறது எனலாம். முழங்கை மற்றும் மணிக் கட்டிலுள்ள தசை நாண்கள் உறைகளுள்ளே, பிற கட்டமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள பகுதிகளில், மூடப்பட்டிருக்கும்.
பெரும்பாலான தசைகளை, நாம் நினைக்கும் போது கட்டுப்படுத்த முடியும் – நீங்கள் விரும்பும் போது அவை அசையும். அவற்றை தன்னார்வத் தசைகள் (voluntary muscles) என்பர்; இத்தகைய தசைகள் 600க்கும் மேற்பட்டு நம் உடலில் உள்ளன. நாம் ஒரு முறை அடி எடுத்து வைக்கும் போது 200 தன்னார்வத் தசைகளைப் பயன்படுத்துகிறோம்.
|
| | டாக்டர்.விஜயராகவன் அவர்களின் இதர படைப்புகள்.
| அறிவியல் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
|
|
|
|
|