 |
இதழ் 479 |
 |
ஆகஸ்ட் 02 2010
|

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Your Advertisement Here
|
| |
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
|
|
| மனித உடலியல் (35)
- டாக்டர்.விஜயராகவன் |
| | மனிதர் உட்பட அனைத்து விலங்குகளுள்ளும் மிகக் கூர்மையான பார்வையைப் பெற்றிருப்பவை பறவைகளே. தரையில் கிடக்கும் இறந்துபோன ஒரு விலங்கை 4 கி.மீ. (2.5 மைல்கள்) உயரத்தில் இருந்து கழுகினால் காண இயலும்.
 கண்ணீர் வருவதன் நோக்கம் என்ன?
கண்ணீர்ச் சுரப்பியில் (lacrimal glands) இருந்து சுரந்து வெளியேறும் நீர் தான் கண்ணீர். இது கண்விழியின் கடின வெளிப்பகுதியான விழி வெண்படலத்தைத் (cornea) தொடர்ந்து குளிப்பாட்டி விடுகிறது எனலாம். இதனால் அயல் பொருட்களான தூசு, முடி ஆகியவற்றை வெளியேற்றி, கண் உலர்ந்து போகாமல், அதனால் பார்வையிழப்பு ஏற்படாமல் காக்கப்படுகிறது. ஒவ்வொரு கண் மீதும் அமைந்துள்ள இரு கண்ணீர்ச் சுரப்பிகள் கண்ணிமையின் பின்புறம் உள்ளன. கண்ணிமைக்குள்ளே இருக்கும் சிறு நாளங்கள் பலவற்றின் வாயிலாக அவை திரவத்தை வெளிப்படுத்துகின்றன. ஒருவர் கண் இமையைச் சிமிட்டும் ஒவ்வொரு முறையும், சிறிதளவு திரவத்தை சுரப்பியிலிருந்து அது உறிஞ்சிக் கொள்கிறது. துக்கம், கோபம் போன்று மிகத் தீவிரமாக உணர்ச்சி வசப்படும்போது கண்ணீர்ச் சுரப்பிகளைச் சுற்றியுள்ள தசைகள் இறுகி கண்ணீரை வெளிப்படுத்துகின்றன. இதே நிலைமை ஒருவர் வாய்விட்டுச் சிரிக்கும் போதும் ஏற்படுகிறது எனலாம். கண்விழியை விட்டு கண்ணீர் வெளியேறிய பின்னர், ஒவ்வொரு கண்ணின் உள்ளே திறந்திருக்கும் இரு கண்ணீர் நாளங்கள் வழியே அது வெளியேறுகிறது.
கண்ணீர்த் திரவம் பெரும்பாலும் உப்புக்கரிக்கும்; இதில் பாக்டீரியாவை எதிர்க்கும் பொருட்களும், தொற்றைத் தவிர்ப்பதற்கு உதவும் நோய் தடுப்பாற்றல் கொண்ட புரோட்டீன்களும் இருக்கின்றன.
நமது கண்ணிலுள்ள கண்பாவைகள் (pupils) ஏன் தம் அளவை அவ்வப்போது மாற்றிக் கொள்கின்றன?
கண்ணின் விழித்திரைப் படலத்தில் (iris) வட்டமான கண்பாவை கருமை நிறத்தில் அமைந்துள்ளது. கண்பாவையின் அளவு கண்ணுள் நுழையும் ஒளியின் அளவை ஒழுங்குபடுத்துகிறது. விழித் திரைப்படலத்தில் அமைந்துள்ள இரு தசைகள், ஒளியின் அளவுக்கேற்ப, கண்பாவையின் உருவ அளவை தாமாகவே மாற்றி அமைக்கின்றன. மங்கலான ஒளியில், கண் விரிவாக்கத் தசை கண்பார்வையைப் பெரிதாக்குகிறது; எனவே எந்த அளவு முடியுமோ அந்த அளவு ஒளி கண்ணுள் நுழைகிறது. தெளிவான பிரகாசமான ஒளியில், சுருங்கு தசை (Sphincter muscle) கண்பார்வையைச் சிறிதாக்கி அதனால் பெருமளவு ஒளி கண்ணுள் நுழைவது தடுக்கப்படுகிறது. கண் அருகிலுள்ள பொருளைப் பார்க்கும் போதும் கண்பார்வை சிறியதாகி உருவம் கூர்மையாகப் பார்க்கப்படுகிறது.
மனிதர் உட்பட அனைத்து விலங்குகளுள்ளும் மிகக் கூர்மையான பார்வையைப் பெற்றிருப்பவை பறவைகளே. தரையில் கிடக்கும் இறந்துபோன ஒரு விலங்கை 4 கி.மீ. (2.5 மைல்கள்) உயரத்தில் இருந்து கழுகினால் காண இயலும்.
|
| | டாக்டர்.விஜயராகவன் அவர்களின் இதர படைப்புகள்.
| அறிவியல் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
|
|
|
|
|