எல்லோரும் லைசென்ஸ் எடுக்குறதுக்கு ஏன் அந்த ஆர்.டி.ஓ ஆபீசுக்கே போறாங்க?
அவங்க எட்டு போடறதுக்கு பதிலா அவங்கவங்க ராசிப்படி ராசியான எண்ணைப் போடச் சொல்றாங்களாம் அதான்!
போலீஸ்: ஏ.டி.எம் கவுண்டர் முன்னாடி ஏன் சும்மா நிக்கறீங்க? நம்மவர்: தெரிஞ்சவங்க யாராவது பணம் எடுக்க வந்தாங்கன்னா கடன் கேட்கலாம்ன்னுதான்.
--------
பேஷண்ட்: வீட்டுல சமையல் வேலையெல்லாம் உங்களோடதுதானா டாக்டர்? டாக்டர்: ஆமாம், எப்படி கண்டுபிடிச்சீங்க? பேஷண்ட்: மாத்திரைகளையெல்லாம் வகை வகையாப் பிரிச்சி அஞ்சரைப் பெட்டிக்குள்ள போட்டு வச்சிருக்கீங்களே, அதான் கேட்டேன்.
--------
எல்லோரும் லைசென்ஸ் எடுக்குறதுக்கு ஏன் அந்த ஆர்.டி.ஓ ஆபீசுக்கே போறாங்க? அவங்க எட்டு போடறதுக்கு பதிலா அவங்கவங்க ராசிப்படி ராசியான எண்ணைப் போடச் சொல்றாங்களாம் அதான்!
--------
தலைவரே உங்களை கைது பண்ணச் சொல்லி மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்கு! யாருய்யா உத்தரவு போட்டது? உங்க சம்சாரம்…!
--------
வாத்தியார் : எங்கே முட்டாள்களெல்லாம் எழுந்து நில்லுங்க! சிறிது நேரம்வரை யாரும் எழுந்திருக்கவில்லை. பின்பு ஒருவன் மட்டும் தயங்கி தயங்கி எழுந்து நிற்கிறான். வாத்தியார் : (எல்லோரும் ஏளனமாக சிரிக்கின்றனர்!) நீ முட்டாள் என்று எப்படித் தெரியும்? மாணவன் : அதெல்லாம் ஒன்றும் இல்லை! நீங்கள் தனியாக நிற்கிறீர்களே, அதனால்தான்!
நிலாச்சாரலில் இன்று தான் நனைகிறேன். இணய தளங்களுக்குள் இப்படியோர் இனிய தளமா ? கோழி முட்டைகளுக்குள் கோமேதக் கல் போல இத்தளத்தை ரசிக்கிறேன். யார் இந்த மாயன் ? எல்லா ஜோக்குமே இந்த எருமையைச் சிரிக்க வைத்த வகையில் அருமை. ஆனந்த விகடன் போன்ற பிரபல வாராந்தரிகளில் மட்டுமே இது போன்ற நல்ல காமெடி வரும். நான் இந்த நிலாச்சாரலின் உறுப்பினன் ஆக முடியுமா, ?