 |
இதழ் 376 |
 |
ஆகஸ்ட் 04 2008
|

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Your Advertisement Here
|
| |
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
|
|
| வெற்றிக்கலை (24) : வெற்றிக்கு உற்ற துணை (2)
- ச.நாகராஜன் |
| | ஆழ்மனதின் அற்புதத்தை என்னால் வியக்காமல் இருக்கவே முடியாது. உண்மையிலேயே நமக்குத் தெரியாத பாதைகள் அதற்குத் தெரியும்! ரஷ்யாவிலிருந்து தப்பிய டாக்டர்
ரஷ்யாவில் சிறைக்கைதியாக காம்பில் வைக்கப் பட்டிருந்த மதிநுட்பம் வாய்ந்த எலக்ட்ரானிக் எஞ்சினியரும் ஆராய்ச்சியாளருமான டாக்டர் லொதார் வான் ப்ளெங் ஸ்மிட் ஆழ்மன உதவியோடு தான் சிறையிலிருந்து தப்பிய மெய்சிலிர்க்கும் அனுபவத்தைக் கூறியுள்ளார்.
அவரே கூறும் அவரது அனுபவம் :- "ரஷ்யாவில் நிலக்கரி சுரங்கத்தில் போர்க்கைதியாக சிறை வைக்கப்பட்டவன் நான். என்னைச் சுற்றிலும் சக கைதிகள் சிறைச்சாலைக்குள் இறந்தவண்ணம் இருப்பதைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். எங்களைக் கண்காணிக்க ஆணவம் பிடித்த காவலர்களும், கொடூரமான அதிகாரிகளும் ஏராளமானோர் இருந்தனர்.
மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு ஒவ்வொருவருக்கும் நிலக்கரிச் சுரங்கத்தின் ஒவ்வொரு பகுதி, வேலைக்காக ஒதுக்கப்பட்டது, ஒரு நாளைக்கு 300 பவுண்ட் வெட்ட வேண்டும் என்பது எனக்கு அளிக்கப்பட்ட கோட்டா. யார் இந்தக் கோட்டாவை அடையவில்லையோ அவர்களுக்கு வழக்கமாகக் கிடைத்து வரும் கொஞ்சம் கஞ்சிகூட நிறுத்தப்பட்டு விடும். விளைவு - மரணம் தான்!
தப்புவது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்தேன் நான். எனது ஆழ்மனம் எப்படியும் ஒரு வழியைக் கண்டுபிடிக்கும் என்பது எனக்குத் தெரியும். ஜெர்மனியில் இருந்த என் வீடு அழிக்கப்பட்டது. எனது நண்பர்களோ, முந்தைய நாளில் என்னோடு தொடர்பு கொண்டிருந்தவர்களோ கொல்லப்பட்டனர்; அல்லது சித்ரவதை முகாம்களில் கைதிகளாக்கப்பட்டனர். எனது ஆழ்மனத்திடம் கூறினேன். 'நான் லாஸ் ஏஞ்சல்ஸிற்குப் போக வேண்டும். அதற்குரிய வழியை நீ கண்டுபிடிப்பாய்' என்று.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரப் படங்களை நான் பார்த்திருக்கிறேன். அங்குள்ள கட்டிடங்கள் எனக்கு நன்கு நினைவில் இருந்தது. ஒவ்வொரு நாள் இரவிலும் வில்ஷைர் பொலிவார்டு பகுதியில், பெர்லினில் போருக்கு முன்னர் நான் சந்தித்த ஒரு அமெரிக்கப் பெண்ணுடன் நடந்து செல்வதாகக் கற்பனை செய்து பார்ப்பேன். (இப்போது அவள் என் மனைவி!)
எனது கற்பனை உலகில் அவளுடன் கடைக்குப் போவேன். பஸ்ஸில் பயணம் செய்வேன். ஓட்டல்களில் சாப்பிடுவேன். ஒவ்வொரு இரவும் எனது கற்பனைக் காரில் லாஸ் ஏஞ்சல்ஸ் முழுவதும் அங்குமிங்குமாகச் சுற்றுவேன். மொத்தத்தில் கனவுக் காட்சிகளை எவ்வளவு தத்ரூபமாக ஆக்க முடியுமோ அந்த அளவுக்கு ஆக்கினேன்.
ஒவ்வொரு நாளும் தலைமை வார்டர் கைதிகளை வரிசையாக நிற்க வைத்து எண்ணுவார். ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணி பதினேழு என்று அவர் கூறும் போது நான் ஒரு பக்கமாகத் தள்ளிப் போனேன். அப்போது அந்த வார்டரை ஒருவர் அழைக்க, வெளியே சென்று ஒரு நிமிடத்தில் திரும்பி வந்தவர் எனக்கு அடுத்தாற் போல் இருந்தவரிலிருந்து பதினேழு என்று எண்ணத் தொடங்கினார். மாலை கைதிகள் திரும்பும் போது கைதிகளின் எண்ணிக்கை சரியாக இருக்கும். நான் தொலைந்ததைக் கண்டுபிடிக்க சற்று காலம் ஆகும்.
காம்பிலிருந்து வெளியேறியவன் 24 மணி நேரம் நடந்தேன். மறுநாள் ஆளே இல்லாத ஒரு நகரத்தில் தங்கினேன். காட்டு மிருகங்களை வேட்டையாடி உண்டேன். மீன்களைப் பிடித்துச் சாப்பிட்டேன். நிலக்கரி ஏற்றிச் செல்லும் புகைவண்டிகள் இரவு நேரங்களில் போலந்து தேசத்தை நோக்கிப் போவதைக் கண்டேன். சில நண்பர்கள் உதவியுடன் ஸ்விட்சர்லாந்தில் உள்ள ல்யூசர்ன் நகரம் சென்றேன்.
ஒரு நாள் அங்கிருந்த பாலஸ் ஓட்டலில் அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு தம்பதியைச் சந்தித்தேன். கலிபோர்னியாவில் சாண்டாமோனிகா என்னும் இடத்தில் உள்ள தனது வீட்டிற்கு விருந்தாளியாக வர விருப்பம் உண்டா என்று அவர்கள் கேட்க, உடனே சம்மதம் தெரிவித்தேன்.
லாஸ் ஏஞ்சல்ஸை நான் அடைந்தவுடன் என்னைக் காரில் ஏற்றிச் செல்ல வந்த டிரைவரை ஏற்கனவே சந்தித்தது போலவே இருந்தது. அந்த நகர வீதிகள் அப்படியே நான் முன்பு பார்த்தது போலவே இருந்தன. எனது இலட்சிய நகரை அடைந்தே விட்டேன். ஆழ்மனதின் அற்புதத்தை என்னால் வியக்காமல் இருக்கவே முடியாது. உண்மையிலேயே நமக்குத் தெரியாத பாதைகள் அதற்குத் தெரியும்!"
எண்ணமே விதை
ஆழ்மனதில் எண்ணங்களை விதைக்க வேண்டும். வெற்றி, அமைதி, வளம், செல்வம் போன்ற எண்ண விதைகளை விதைத்தால் அது நிறைவேறும் வழியை ஆழ்மனம் தானே கண்டுபிடிக்கும். செயலே விளைவாக இருக்கும்.
அனைத்தும் தெரிந்த ஆழ்மனம்
ஆழ்மனம் அனைத்தையும் அறியும். எல்லாவற்றிற்கும் விடைகளைத் தெரிந்து வைத்திருப்பது அது. ஆகவே எதிர்மறை எண்ணங்களை விதைத்து அதை நச்சுப்படுத்தாமல் நல்ல எண்ணங்களை விதைத்து அது காட்டும் பாதையில் செல்ல வேண்டும். 24 மணி நேரமும் விழித்திருக்கும் உற்ற துணை அது! ஆம், நாம் தூங்கும் போது தான் தூங்காது விழித்திருக்கும் நமது துணை ஆழ்மனம். இப்படி மாதங்கள், வருடங்கள் என வாழ் நாள் முழுவதும் கூடவே இருக்கும் துணை அது.
இந்தப் பெரும் சக்தியை உபயோகப்படுத்த வேண்டும். உபயோகப்படுத்தினால் வெற்றியை வெகு சீக்கிரம் அடையலாம். இறுதியில் இந்தத் தொடரை இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய ரகசியத்துடன் நிறைவு செய்வதே பொருத்தமானது. இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு எது? அணுகுண்டா, ஆகாய விமானமா, நீர் மூழ்கிக் கப்பலா, டெலிபோனா, தொலைக்காட்சியா, மருத்துவக் கருவிகளா, அல்லது சந்திரனையே அடைய உதவும் விண்கோளா - எது? எதுவுமில்லை!
வில்லியம் ஜேம்ஸ் எனும் பேரறிஞர் கூறியது போல இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் கண்டுபிடிப்பு - "ஆழ்மனத்தின் சக்தியால் வெற்றியை அறிவியல் பூர்வமாக அடைய முடியும்" என்பதே ஆகும்.
(அடுத்த இதழில் முடியும்) |
| | ச.நாகராஜன் அவர்களின் இதர படைப்புகள்.
| சுயமுன்னேற்றம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
|
|
|
|
|