மருத்துவம், தொழில், வேளாண்மை போன்ற துறைகளில் மரபணுப் பொறியியலின் முக்கிய பயன்பாடுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எதிர்காலத்தில் மேலும் பல புதிய பயன்பாடுகள் கண்டறியப்பட உள்ளன.

மரபுப் பொறியியல் (Genetic Engineering) என்றால் என்ன?
ஒரு உயிரியின் (organism) மரபணுக்களை (genes) அல்லது மரபணுக்களின் சேர்க்கையை மாற்றும் தொழில்நுட்பங்களைக் குறிப்பதே மரபணுப் பொறியியலாகும். வாழும் எல்லா உயிரிகளின் உயிரணுக்களிலும் மரபணுக்கள் இருக்கின்றன. உயிரியின் பண்புநலன்களைத் தீர்மானிக்கும் வேதியியல் தகவல்களை மரபணுக்கள் எடுத்துச் செல்கின்றன. ஒரு உயிரியின் மரபணுக்களை மாற்றுவதன் வாயிலாக, விஞ்ஞானிகள் அவ்வுயிரி மற்றும் அதன் வழித்தோன்றல்களுக்கு வேறு மரபுக் கூறுகளை (traits) அளிக்க முடிகிறது.
பல்லாயிரம் ஆண்டுகளாக, தாவரம் மற்றும் விலங்குகளை வளர்ப்போர் இலாபம் தரத்தக்க மரபணுச் சேர்க்கைகளை உற்பத்தி செய்வதற்கான வளர்ப்புமுறைகளை பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த "மரபணுப் பொறியாளர்கள்" பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மலர்கள், காய்கறிகள், தானியங்கள், குதிரை, பசு, நாய் மற்றும் பூனை போன்ற விலங்குகளை உருவாக்கியுள்ளனர்.
மருத்துவம், தொழில், வேளாண்மை போன்ற துறைகளில் மரபணுப் பொறியியலின் முக்கிய பயன்பாடுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எதிர்காலத்தில் மேலும் பல புதிய பயன்பாடுகள் கண்டறியப்பட உள்ளன.
நமது நோய்த் தடைகாப்பு அமைப்பு (Immune system) எவ்வாறு பணி புரிகிறது?
நோய்கள் மற்றும் பிற தீங்கு விளைவிப்பவற்றை எதிர்த்து உடலைப் பாதுகாக்கும்; உயிரணுக்கள், மூலக்கூறுகள் மற்றும் திசுகளின் தொகுதியே தடைகாப்பு அமைப்பாகும். உடலுக்கு உள்ளே புகுந்து உடலைச் சேதப்படுத்தும் பல்வேறு வகையான பொருட்களை எதிர்த்து பாதுகாப்பளிப்பதே இந்த தடை காப்பு அமைப்பின் செயல்பாடு. பேக்டீரியா, பூசணங்கள், ஒண்டுயிரிகள் (parasites) மற்றும் நோய்க்கிருமிகள் (viruses) ஆகிய நோய்க் காரணிகளான உயிரிகள் உடலுள் புகும் பொருட்களுள் அடங்கும்.
உடலுக்குச் சொந்தமான ஆரோக்கியத் திசுக்களை, வெளியேறும் போது தொடாமல் அயல் பொருட்களை அழிக்கும் திறன் கொண்டு விளங்குவது, தடைகாப்பு அமைப்பின் முக்கிய பண்பாகும். இருப்பினும், சில நேரங்களில் தடைகாப்பு அமைப்பு இந்த ஆரோக்கியத் திசுக்களைத் தாக்கி அவற்றை அழித்து விடுவது உண்டு. இத்தகைய எதிர்வினை, தன்னியக்கத் தடைகாப்பு விளைவு அல்லது தன்னியக்கத் தடைகாப்புத் தன்மை (auto immunity) எனப்படும்.
தடைகாப்பு அமைப்பு எதிர்வினை என்பது லிம்போசைட்கள் எனப்படும் வெள்ளை உயிரணுக்களை உற்பத்தி செய்து உடலுள் புகும் அயல் பொருட்களுக்கு எதிராகச் செயல்படுத்தும் எதிர்வினையாகும். லிம்போசைட்கள் முக்கியமாக எலும்புச் சோற்றில் (bone marrow) உற்பத்தி செய்யப்படுகின்றன.
|