 |
இதழ் 481 |
 |
ஆகஸ்ட் 16 2010
|

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Your Advertisement Here
|
| |
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
|
|
| மனித உடலியல் (37)
- டாக்டர்.விஜயராகவன் |
| | உண்மையில் விரல் ரேகைகள் தோலில் அமைவதில்லை; தோலுக்கு அடியிலுள்ள தசைகளில் தான் உண்டாகின்றன. ரேகைகளின் அமைப்பில் மரபியலும் தன் பங்களிப்பைச் செய்கிறது; இருப்பினும் இரட்டைப் பிறவிகளின் விரல் ரேகைகளிலும் வேறுபாடு இருக்கிறது. மனிதர்களின் விரல்ரேகைகள் (finger prints) எவ்வாறு வேறுபட்டு அமைகின்றன?
விரல்ரேகைகளின் வேறுபாடு பல நூறாண்டுகளாக வியப்புக்குரியதாகவே விளங்குகிறது. பழங்காலத்திலிருந்தே அவை தனிப்பட்டவரின் அடையாளத்தைக் கண்டறிவதற்கான ஒரு முறையாகப் பயன்பட்டு வருகின்றன. ஆனால் விரல் ரேகைகள் எவ்வாறு அமைகின்றன? அவை ஒருவருக்கொருவர் மாறுபட்டு அமையும் என்பது உண்மையா? விரல் ரேகைகளை நீங்கள் கூர்ந்து நோக்கினால் அவற்றின் அமைப்பு நிலத்தில் உழுதது போன்று அமைந்திருப்பதைக் காணலாம். இவ்வமைப்பு எங்கும் தொடர்ச்சியாக இருப்பதில்லை; அவை சில சமயங்களில் நின்று விடும்; சில இடங்களில் பிரிந்து செல்லும்; சிறு சிறு பகுதிகளாக அமைந்திருக்கும் மற்றும் ஒன்றை ஒன்று ஊடுருவிச் செல்லும்; இவ்வாறு ரேகைகள் தாறுமாறாக அமைந்திருக்கும். இத்தகைய தனிப்பண்புகள்தான் ஒரு விரல் ரேகைகளுக்கும் மற்றவர் விரல் ரேகைகளுக்கும் இடையேயான வேறுபாட்டிற்குக் காரணமாக அமைபவை.
விரல் ரேகைகள் பிறப்பதற்கு முன்பே, கைகள் உருவாகும் போதே, அமைகின்றன எனலாம். உண்மையில் விரல் ரேகைகள் தோலில் அமைவதில்லை; தோலுக்கு அடியிலுள்ள தசைகளில் தான் உண்டாகின்றன. ரேகைகளின் அமைப்பில் மரபியலும் தன் பங்களிப்பைச் செய்கிறது; இருப்பினும் இரட்டைப் பிறவிகளின் விரல் ரேகைகளிலும் வேறுபாடு இருக்கிறது. விரல் ரேகைகள் குறிபிட்ட அமைப்பில் இருப்பதால், அவற்றைப் பதிவு செய்து விரல் ரேகை ஆய்வுகளை எளிதாக மேற்கொள்ள முடிகிறது.
குற்றம் செய்யுமிடத்தில் விரல் ரேகை எவ்வாறு பதிந்து விடுகிறது? விரல் தோலின் நுண்ணிய துளைகள் வழியே வியர்வையும் எண்ணெய்ப் பிசுபிசுப்பும் விரல்களில் பரவுகின்றன. விரகள் பொருட்களின் மீது பதியும் போது, இத்திரவம் விரல் ரேகைகளின் அமைப்பில் அப்பொருட்கள் மீது பதிந்து விடும்.
தலைமுடி சுருண்டு அமைவதற்கு என்ன காரணம்?
மனிதனின் தோல்பகுதி மென்மையாகக் காணப்படுகிறது, உணரப்படுகிறது; ஆனால் ஒரு நுண்ணோக்கியின் (microscope) வாயிலாகப் பார்க்கும் போது மலை முகடுகள் போலவும், முடிகள் முளைத்திருக்கும் குழிகள் போலவும் அமைந்திருப்பதைக் காணலாம். இந்தக் குழிகள் திசு நுண் குமிழ்கள் (follicles) எனப்படும்; முடி நீண்டும், சுருண்டும் அமைவதற்கு இவையே காரணமாக அமைபவை. வட்ட வடிவ நுண் குமிழ்களிலிருந்து நீள முடியும், நீள்வட்ட (oval shaped) நுண் குமிழ்களிலிருந்து அலைபோன்ற முடியும், தட்டை வடிவ நுண் குமிழ்களிலிருந்து மிகவும் சுருண்ட முடியும் வளர்கின்றன.
தலை முடியின் இழை நயமானது (texture) முடியின் உருவத்தைப் பொறுத்தே பெரிதும் அமைகிறது. நுண்ணோக்கியின் மூலம் உருவத்தின் குறுக்கு வெட்டு தோற்றத்தைக் காணலாம். நீண்ட முடிகளின் குறுக்கு வெட்டுத் தோற்றம் வட்ட வடிவத்திலும், அலைபோன்ற மற்றும் சுருண்ட முடிகளின் குறுக்கு வெட்டு தோற்றம் தட்டையாகவும் அமைந்திருக்கும். மிகவும் தட்டையான தோற்றத்திலிருப்பவை மிகவும் சுருண்டும் அலை போன்றும் அமைந்திருக்கும்.
உங்கள் தலைமுடியின் எண்ணிக்கை உங்கள் வண்ணத்தை அதாவது பொன்னிறமானவரா அல்லது கருமையானவரா என்பதைப் பொறுத்தது. பொன்னிறமானவர்களுக்கு 140,000 எண்ணிக்கையிலும் செந்நிறமான தலைகளில் சராசரியாக 90,000 எண்ணிக்கையிலும் கருமை நிற அல்லது பழுப்பு நிறமுள்ளவர்களும் இவற்றிற்கு இடைப்பட்ட நிலையில் 110,000 என்ற அளவிலும் தலை முடியின் எண்ணிக்கை இருக்கும்.
பெரும்பாலான தலை முடி திசு நுண் குமிழ்களில் எண்ணெய்ச் சுரப்பிகள் உள்ளன. இச்சுரப்பிகளிலிருந்து பிசுபிசுப்பான எண்ணெய் சுரக்கிறது; இதுவே முடியில் பரவி தலை முடியை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது.
மிகப் பெரும்பாலான மக்களின் தலை முடி, வயதாக ஆக நரைத்து வெண்மையாகிறது; இதற்கு நிறமிப் பொருட்களே (pigments) காரணம்; இவை இத்தகைய வண்ணங்களை முடிகளுக்கு அளிக்கின்றன.
|
| | டாக்டர்.விஜயராகவன் அவர்களின் இதர படைப்புகள்.
| அறிவியல் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
|
|
|
|
|