எவனோ நந்தினிக்கு லெட்டர் கொடுத்திருக்கான்.. சனிக்கிழமை ராத்திரி... மறுபடி அவனே நேத்தும் சாப்பாட்டுக்கு வந்திருக்கான்... உள்ளே வந்ததும்... நடராஜன் பேரைக் கேட்டு.... அடுத்த நிமிஷம்... அடி... உதைத்தான்.."
வாடிக்கையானதால் சாப்பிட்ட கணக்கு தெரியும். சிறுவனுக்குப் பணம் பெறும் உரிமை இல்லை
"அக்கா..."என்றான்.
நந்தனி வெளியே வந்தாள்.
"அக்காகிட்டே கொடுத்துருங்க..." சமையல் கட்டுக்குள் ஓடினான்.
ரூபாய் நோட்டை நீட்டி மீதிக்காகக் காத்திருந்தான். அதற்குள் அடுத்தவனும் கை கழுவிவிட்டு வந்தான்.
"இந்தாங்க..." நந்தனி கொடுத்த சில்லறையை வேண்டுமென்றே தவறவிட்டு கீழே குனிந்து தேடினான்.
அடுத்தவன் வெளியேற சங்கர் நிமிர்ந்து கடிதக் கவரை மேஜை மீது வைத்தான். நந்தனி பார்க்காத போது.
வழக்கமற்ற செயல் என்பதாலோ என்னவோ உடம்பு அநியாயத்திற்கு நடுங்கியது.
"இது உங்களுதா..?"
கையில் அதே கவர்.
"இ... இல்லே..."
ஏன் சட்டென்று அந்த பதில் வந்தது... புரியவில்லை. வேகமாய் நடந்து வந்துவிட்டான். அறைக்குள் நுழைந்து பத்து நிமிடங்களில் மூச்சு நிலைப்பட்டது
‘சே... என்ன பதில் சொல்லிவிட்டேன். எத்தனை அருமையான சான்ஸ். மனம் விட்டுப் பேச. மாநாட்டில் உள்ளதைக் கொட்ட. தவற விட்டாச்சு. இனிதுபோல் அமையப் போவதில்லை.’
தலையை வேகமாய் உதறிக் கொண்டான். மடையன். முட்டாள் என்று தன்னையே திட்டிக் கொண்டான்.
நள்ளிரவில் ஒரு தடவை திடுக்கிட்டு எழுந்து மீண்டும் திட்டிக் கொண்டான். ஞாயிறு மெஸ்ஸூக்கு செல்ல மனம் இல்லை. பஸ் பிடித்து திருத்தணி போனான். மலை மீது அப்படியே அமர்ந்திருந்து விட்டு பசித்ததும் பிரசாதம் சாப்பிட்டான். மாலையில் அறைக்குத் திருன்பினான்.
திங்கள்காலை ஹோட்டல் ஒன்றில் டிபன். மெஸ் போல வாய்க்கு ருசிக்கவில்லை.மணி ஆபீசில் இவனைப் பார்த்ததும் பரபரப்பாய் ஓடிவந்தான்.
"நேத்து என்ன பண்ணே... எங்கே இருந்தே...?"
"என்ன விஷயம்...?"
சங்கருக்குப் புரியவில்லை.
"நீ முதல்ல சொல்லு...?"
"நேத்து முழுக்க நான் திருத்தணியில இருந்தேன். மனசு ரொம்ப அமைதியா... சந்தோஷமா... நல்ல தரிசனம்..."
"ஹப்பா... நீதானோன்னு கலங்கிப் போயிட்டேன்..."
மணி நிம்மதியாய் பெருமூச்சு விட்டான்.
"நேத்து மெஸ்ஸுல கலாட்டா.! நடராஜன் யாரோ ஒரு சங்கரைப் போட்டு நிமித்திட்டானாம்.. ஒரு வேளை அது நீதானோன்னு..."
"எ... எதுக்கு...?" சங்கர் தடுமாறியது மணிக்குத் தெரியவில்லை.
"எல்லாம பாழாய்ப் போன லவ் லெட்டர் விவகாரம். எவனோ நந்தினிக்கு லெட்டர் கொடுத்திருக்கான்.. சனிக்கிழமை ராத்திரி... மறுபடி அவனே நேத்தும் சாப்பாட்டுக்கு வந்திருக்கான்... உள்ளே வந்ததும்... நடராஜன் பேரைக் கேட்டு.... அடுத்த நிமிஷம்... அடி... உதைத்தான்.."
"ஏன்... அவன் எதுவும் சொல்லலியா... நான் எழுதலேன்னு மறுத்திர வேண்டியது தானே..." படபடப்பை அடக்கிக் கொண்டு சங்கர் சொன்னான்.
"எப்படிச் சொல்லுவான்... அவனே எழுதிட்டு... வாய் தவறி உண்மையைச் சொல்லிவிட்டான்..."
சங்கருக்கு அதற்குமேல் அதை எப்படி விசாரிப்பது என்று புரியவில்லை. இல்லை நான் தான் எழுதினேன் என்றால் மணி 'உடனே அறையைக் காலி பண்ணு' என்று நிச்சயம் வெளியேற்றி விடுவான். அவனுக்கு இதில் துளிக்கூட உடன்பாடு இல்லை என்று நேரம் கிடைத்தபோதெல்லாம் வலியுறுத்தி இருக்கிறான்.
அடி வாங்கிய இன்னொரு நபரும் சங்கர்... சங்கர் ராமன். ஆனால் அவன், ஏன் உளறினான், 'தான் எழுதியதாய்! அன்று மாலை டிபன் சாப்பிடப் போனபோது நந்தனி இல்லை. ஊருக்கு அனுப்பிவிட்டதாய்ப் பிறகு தெரிய வந்தது. குறிப்பிட்ட 'சங்கர் ராமன்' வேறு இடம் பார்த்துக் கொண்டு போய்விட்டதாக அரைவாசி தகவல் தந்தான்.
மனசுக்குள் குறுகுறுப்பு. தான் எழுதிய கடிதத்திற்கு எவனோ அடி வாங்கியது உறுத்தியது.
மூன்றாவது நாள் மாலை, மணி இல்லாமல் சங்கர் மட்டும் கடைத் தெருவில் நடந்து போனபோது யாரோ பின்னாலிருந்து அவன் கையைக் பிடித்திருக்க நின்றான்.
"அன்னைக்கு உங்க கூட இன்னொருத்தர் சாப்பிட்டாரில்லே. அவருதான் அடி வாங்கினது. மறுநாளும் அவர் சாப்பாட்டுக்கு வந்தாரு... அக்கா பார்க்கிறாப்ல லெட்டரை மேஜை மேல வச்சு சிரிச்சாரு.அப்ப... வெளியே போன பெரியண்ணன் வந்திட்டாரு... பிய்ச்சு உதறிட்டாரு..."
சிறுவன் குரல் தேம்பியது. சங்கர் என்ன சமாதானம் சொல்வது என்று புரியாமல் நின்றான்.
"அண்ணே. நம்மால உதவி செய்ய முடியாட்டியும் தொந்தரவு தராம இருக்காலாம்ல. பாவம் அக்கா. தப்பு செய்யாம தண்டனையை அனுபவிக்குது. வேணாம்ணே. இனிமேல இந்த மாதிரி எதுவும் செஞ்சிராதீங்க."
விருட்டென்று திரும்பிப் போய் விட்டான்.
சங்கருக்குத்தான் அசையக் கூட முடியவில்லை அந்த இடத்திலிருந்து.