பெண்களின் இடுப்புக் கூட்டைப் பொறுத்தவரை அது ஆண்களுடையதை விட தட்டையாகவும் அகன்றும் இருக்கும்’ மையக் குழியும் பெரிதாக இருக்கும்.
கழுத்து சார்ந்த சிரைகள் (Jugular veins) எவ்வாறு அமைந்துள்ளன?
தலை மற்றும் கழுத்திலிருந்து இதயத்துக்கு இரத்தத்தைக் கொண்டு வரும் நான்கு பெரிய சிரைகளுக்குக் கழுத்து சார்ந்த சிரைகள் என்று பெயர். ஆங்கிலத்தில் இப்பெயர் இலத்தீன் மொழிச் சொல்லான Jugulus என்னும் சொல்லிலிருந்து பெறப்பட்டது. இச்சொல்லுக்குக் கழுத்துப்பட்டி எலும்பு (collar bone) எனப் பொருள். கழுத்தின் ஒவ்வொரு பக்கமும் இரண்டு கழுத்து சார்ந்த சிரைகள் உள்ளன; இவை வெளிப்புற (external) மற்றும் உட்புறக் (internal) கழுத்து சார்ந்தவை என அழைக்கப்படுகின்றன. வெளிப்புறச் சிரைகள் தலை மற்றும் கழுத்தின் வெளிப்புறப் பகுதிகளில் இருந்து இரத்தத்தை இதயத்துக்கு எடுத்துச் செல்கின்றன. உட்புறச் சிரைகள் கழுத்தின் ஆழ்பகுதியிலுள்ள திசுக்களிலிருந்தும் மண்டைக் கூட்டின் (skull) உட்பகுதியிலிருந்தும் இரத்தத்தை எடுத்துச் செல்கின்றன. உட்புறச் சிரைகள் வெளிப்புறச் சிரைகளை விட மிகவும் பெரியவை; இவையே கழுத்து சார்ந்த சிரைகள் எனப் பொதுவாக அழைக்கப்படுகின்றன. இவ்வுட்புறக் கழுத்து சார்ந்த சிரைகள் திறக்கப்படுவது மிகவும் ஆபத்தானதாகும்; காரணம் இதனால் ஏராளமான இரத்த இழப்பு விரைந்து நிகழும்.
கழுத்தில் ஏற்படும் ஒரு வகையான காயம் சாட்டை அடி (whiplash) என அழைக்கப்படுகிறது. இவ்வகையான காயம் திடீரென விழும் அடியின் காரணமாகத் தலை முன்னும் பின்னும் விரைந்து அசைவதால் ஏற்படும்.
எந்த எலும்புகளால் இடுப்புக் கூடு (Pelvis) அமைகிறது?
இரு பெரிய ஒரே மாதிரியான (symmetrical) இணை எலும்புகளால் இடுப்புக்கூடு என்னும் அமைப்பு உருவாகிறது. இவ்வெலும்புகள் முன் பகுதியில் இடுப்பு ஒருங்கிணைவுகளாக (pubic symphysis) அமைகின்றன. பின் பகுதியில் பிட்டத்துடன் (sacrum) வலிய இணைப்பாகச் சேர்கின்றன. வயது வந்த ஒருவரிடம் ஒவ்வொரு இடுப்பெலும்பும் ஒரே திடமான எலும்பாகத் தோன்றும்; ஆனால் நாளாக ஆக இவை இடுப்பெலும்பு மேற்பகுதி (ilium), இடுப்பெலும்பு கீழ்ப்பகுதி (ischium), இடுப்பு முன்னெலும்பு (pubis) என மூன்று எலும்புகளாக அமைகின்றன. இடுப்பெலும்பு மேற்பகுதி அகன்ற தட்டையான எலும்பாகும்; கையை இடுப்பின் மீது வைக்கும்போது இது உணரப்படும். நாம் உட்காரும்போது நமது உடலின் பெரும்பாலான எடை இடுப்பெலும்பின் கீழ்ப்பகுதியில் விழும்.
இடுப்புக் கூடானது அடி வயிற்றைத் தாங்கும் எலும்பு அமைப்பாகும். இதைச் சுற்றிலும் சிறுநீர்ப் பை (urinary bladder) பெருங்குடல் (large intestine) ஆகியனவும் மற்றும் பெண்களுக்குப் பிறப்பு உறுப்புகளும் அமைந்திருக்கும். பெண்களின் இடுப்புக் கூட்டைப் பொறுத்தவரை அது ஆண்களுடையதை விட தட்டையாகவும் அகன்றும் இருக்கும்’ மையக் குழியும் பெரிதாக இருக்கும்.
முதுகுத் தண்டானது (spinal column) இடுப்புக் குழிவைப் பின் இடுப்பெலும்பு (scaroilia) இணைப்பிகளில் சேர்க்கிறது. இடுப்புக்குழிவின் கீழ்ப்பகுதியை தொடை எலும்புகள் (thigh bones) இடுப்பின் பெரிய பந்து கிண்ண மூட்டுகளுடன் (ball and socket joints) இணைக்கின்றன; இதனால் கால்கள் பல பக்கங்களிலும் அசைய முடிகின்றன.