 |
இதழ் 483 |
 |
ஆகஸ்ட் 30 2010
|

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Your Advertisement Here
|
| |
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
|
|
| சங்கம் காண்போம் 21
- சித்ரா பாலு |
| | அப்போது. . தலைவன் இந்தச் சன்னதியில் காதல் மிகுதியால் என் கைகளைப் பிடித்து “இவளே என் மனைவி. இவளை எக்காலத்திலும் கை விடேன்” என்று சத்தியம் செய்தான். ஆனால். . . ”என்று அழ ஆரம்பித்தாள் தலைவி. தோழி பல நாட்களாகத் தலைவியைக் காணச் செல்லவில்லை. வீட்டில் விருந்தினரின் வருகை, அவள் தாயின் உடல்நலக்குறைவு என்று பல காரணங்கள்! நேற்று மாலையில் ஒரு பணிப்பெண், தலைவி நாளை வரச்சொன்னதாகக் கூறினாள். அதனால்தான் இன்று தோழி கிளம்பிக் கொண்டிருக்கின்றாள். தலைவியின் வீட்டை தோழி அடைந்த போது அவள் வீட்டினர் அனைவரும் எங்கேயோ செல்ல ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தனர். தோழியைப் பார்த்த தலைவியின் தாய், “வா! நல்ல நேரத்தில்தான் வந்திருக்கின்றாய். தலைவியைக் கிளப்பிக் கொண்டு வா” என்று ஒரு பையில் பூமாலையை வைத்தவாறு கூறினாள். ‘எங்கே கிளம்புகிறார்கள்? தலைவியுமா?’ என்று யோசித்தவாறு தலைவியைக் காணச்சென்றாள் தோழி! ‘தன்னுடைய தலைவியா இவள்’ என்று சந்தேகிக்கும் வண்ணம் முகம் வெளுத்து, உடல் மெலிந்து. . . கண்களில். . வெறுமையுடன். . .
‘வருத்தத்தோடு அருகே சென்ற தோழி “தலைவி என்ன இப்படி இருக்கிறாய்? எங்கே செல்கிறாய்? ஊருக்கா? ஏன் என்னை அழைத்தாய்?” என்று கேள்விக் கணைகளை அடுக்கினாள். “தோழி ஊருக்கு எங்கும் செல்லவில்லை. நம் ஊர் எல்லையில் இருக்கும் கோயிலுக்குச் செல்கிறோம். எனக்குச் செல்ல விருப்பமில்லை. இங்கேயே இருந்து விட எண்ணித்தான் உன்னை அழைத்தேன். ஆனால். . என் தாய். . .” என்று தலைவி முடிப்பதற்குள் தோழி இடைமறித்தாள், “என்ன தலைவி கோயிலுக்குப் போக விருப்பமில்லையா. . ?” என்று பதறினாள். ‘ஒருவேளை தலைவன் பிரிவால் தலைவியின் மனநிலை பாதிக்கப்பட்டு விட்டதோ’ என்ற சந்தேகத்தோடு தலைவியைப் பார்த்தாள்.
“தோழி அது இல்லை. இப்போது உன்னிடம் விளக்கமாகக் கூற முடியவில்லை. . ”. என்று தயங்கியவாறு பேசும்போதே. . உள்ளே வந்த தலைவியின் தாய், “உன் தலைவி என்ன சொல்கிறாள்? நீயும் எங்களுடன் வா!உன் வீட்டினருக்கு நான் சொல்லிவிட்டேன். . சீக்கிரம் கிளம்புங்கள்” என்று ஆணையிட்டாள். வேறு வழியில்லாமல் தலைவி கிளம்புவதற்கு ஆயத்தப்படுத்திக் கொள்ளலானாள். . வளமான வாழ்க்கைக்குப் பொருள் தேவை என்பதை தலைவியும் உணர்ந்திருந்ததனால், தலைவன் பொருள் தேடச் சென்ற போது, அவனை வாழ்த்தி மகிழ்ச்சியோடு அனுப்பி வைத்தாள். ஆயினும் மென்மையான தலைவியின் உடல் அவனுடைய பிரிவைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் வாடியது. அவள் தாயும் ஏதோ புரிந்தவளாக தலைவிக்கு மணமகன் தேடிக் கொண்டிருக்கிறாள். தலைவியோ தலைவன் வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் இருக்கின்றாள். ‘. இறைவா. . இவளின் நம்பிக்கையைக் குலைத்து விடாதே. . ’ என்று தோழி வேண்டிக்கொண்டிருக்கும் போது தலைவியின் தாய் அவர்களை வருமாறு அழைத்தாள். மாலை வேளையாக இருந்ததால் குளிர்ச்சியான காற்று குறிஞ்சி மலரின் நறுமணத்தைப் பரப்பிக் கொண்டிருந்தது. குயில்களும், கிளிகளும் கூட்டம் கூட்டமாய் தன் கூட்டை நோக்கி மகிழ்ச்சியாக பறந்து கொண்டிருந்தன. மடியில் தன் குட்டிகளைக் கட்டிக் கொண்டு மந்திகள் மரத்திற்கு மரம் தாவி தன் இருப்பிடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. இயற்கையின் இந்த இதத்தை ரசித்தவாறு அனைவரும் கோயிலை அடைந்தனர். தலைவியின் தாய் தட்டை எடுத்து வைத்து அதில் அவள் கொண்டு வந்திருந்த பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்தாள். தலைவி மௌனமாய் தாய்க்கு உதவி செய்து கொண்டிருந்தாள். ‘ஏன் இப்படி இருக்கிறாள் தலைவி’ என்று குழம்பிக் கொண்டிருந்தாள் தோழி! தாய் தோழியிடம் “அதோ அங்கிருக்கும் குளத்திலிருந்து தண்ணீரெடுத்து வந்து இந்த இடத்தைச் சுத்தம் செய்து, கோலம் இட்டு எல்லாவற்றையும் எடுத்து வையுங்கள், நாங்கள் சென்று பூசாரியைப் பார்த்துவிட்டு வருகின்றோம்” என்று கூறி விட்டுச் சென்றாள். ‘அப்பாடா. . தலைவியுடன் மனம் விட்டு பேசலாம் என்ற மகிழ்ச்சியில் தோழி குடத்தை எடுத்துக் கொண்டு “வா தலைவி” என்றாள். இருவரும் குளத்தை நோக்கிச் சென்றனர். “என்ன ஆயிற்று தலைவி? உன் மௌனம் என் வயிற்றைக் கலக்குகின்றது. கோயிலுக்கு வந்திருப்பது எனக்கு நல்ல சகுனமாகத் தெரிகின்றது. உன் தலைவன் விரைவாக வந்து விடுவான் என்று எண்ண வைக்கின்றது. ஆனால் நீயோ. . ஏன்?” என்று கேட்டாள் தோழி
“எனக்கு ஒன்றும் ஆகவில்லை. . நன்றாக இருக்கின்றேன். இந்தக் கோயிலுக்கு நானும் தலைவனும் ஒருமுறை வந்திருந்தோமே நினைவிருக்கிறதா?” என்று மெதுவான குரலில் கேட்டாள் தலைவி. “ஆமாம். பொருள் தேடி வேற்று ஊருக்குச் செல்லும் முன், நீதான் அவனை இங்கு கூட்டிக் கொண்டு வந்தாய். அதற்கு என்ன இப்போது?” என்று கேட்டாள் தோழி. “தோழி நான் சொல்வதை முழுவதுகாகக் கேள்! அன்று நாங்கள் இருவரும்... இதோ... இந்தக் குளத்தில் இறங்கி கால்களை நனைத்துக் கொண்டு மிகுந்த பக்தியோடு வழிபட்டோம். தலைவன் நல்ல முறையில் பொருளைத் தேடி வந்த பிறகு இருவரும் பெற்றோர்களின் சம்மதத்தோடு மணம் முடித்து வாழ வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருந்தோம். . . அப்போது. . தலைவன் இந்தச் சன்னதியில் காதல் மிகுதியால் என் கைகளைப் பிடித்து “இவளே என் மனைவி. இவளை எக்காலத்திலும் கை விடேன்” என்று சத்தியம் செய்தான். ஆனால். . . ”என்று அழ ஆரம்பித்தாள் தலைவி. “இப்போது என்ன ஆயிற்று தலைவி? தலைவன் திரும்பி வந்து விடுவான். வருந்தாதே.. . ஏற்கெனவே உடல் மெலிந்து... முகம் வெளுத்து... அப்பப்பா.. . உலகத்தாரே உன் காதலை அறிந்து விடுவார்கள் போல் உள்ளது. அழாதே. . ”. என்று சமாதானம் செய்தாள் தோழி. “பார்த்தாயா தோழி, நீயே தலைவனை நித்திக்கின்றாய்! என் உடல் மெலிந்து வெளுத்ததற்கும் என் தலைவனின் பிரிவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நீ நினைப்பது போல. . அந்த இறைவனும் நினத்து விட்டால். . ” என்று அச்சத்தோடு முகத்தை மூடிக்கொண்டாள் தலைவி. “தலைவி என்ன சொல்கிறாய்? விளங்கவில்லை” என்று கேட்டாள் தோழி “தோழி, என் தோற்றத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைப் பார்த்து, இந்தக் கடவுள், ‘என் தலைவன் என்னை வஞ்சித்து விட்டான்’ என்று தவறாக எண்ணி தலைவனைத் தண்டித்து விடுவாரோ என்று அஞ்சுகின்றேன். அதனால்தான் கோயிலுக்கு வர மறுத்தேன். . ” என்று அழுதாள். தலைவியை அன்போடு அணைத்துக் கொண்ட தோழி “தலைவியே உன் அன்பையும் நம்பிக்கையையும், தலைவனின் காதலையும் கடமையையும் தெய்வம் நிச்சயம் அறியும். அஞ்சாதே! கூடிய விரைவில் நீ உன் தலைவனுடன் மணப்பெண்ணாக இக்கோயிலுக்கு வரப் போவது உறுதி. வா இப்போது செல்லலாம்” என்று கூறும் போதே கோயிலின் மணி ஒலித்தது. ‘நல்ல சகுனம்’ என்று மகிழ்ந்த தலைவி கண்களைத் துடைத்தவாறு தோழியைப் பின் தொடர்ந்தாள்.
இக்காட்சி குறுந்தொகை பாடலில் அமைந்துள்ளது
தலைவி கூற்று
மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள் கொடியோர்த் தெறூஉம் என்ப யாவதும் கொடியர் அல்லர் எம்குன்றுகெழு நாடர் பசைஇப் பசந்தன்று நுதலே ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் தோளே
கபிலர்
ஊர் நடுவே நிற்கும் கடம்பமரத்தில் உறையும் அஞ்சத்தக்க தெய்வம் கொடியோரை அழிக்கும் என ஊரார் உரைப்பர். என் தலைவர் கொடியர் அல்லர் தாமாக பசந்து மெலிந்தன என் நெற்றியும் தோள்களும்!
|
| | சித்ரா பாலு அவர்களின் இதர படைப்புகள்.
| ஸ்பெஷல்ஸ் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
|
|
|
|
|