 |
இதழ் 380 |
 |
செப்டம்பர் 01 2008
|

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Your Advertisement Here
|
| |
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
|
|
| | | நீ என் ஷேமத்துக்காகவும் உன் தாலி பாக்கியத்துக்காகவும் சோம வார விரதம் இருக்கே. திங்கள்கிழமை தோறும் எனக்கு புட்டு டிபன் கிடைக்கறது. ஞாயிற்றுக்கிழமை தவறாம சூர்யநமஸ்காரம். நன்றி : ஆனந்த விகடன்
"இனி பிரயோஜனம் இல்லை... வீட்டுக்கு எடுத்துட்டுப் போயிடுங்க.." டாக்டர் சொன்னதைக் கேட்டு மகாதேவன் அழுதார்.
வாய் கோணி, கையும், காலும் இழுத்தபடி... ஜீவன் மட்டும் இழுத்துக் கொண்டிருக்கும் தன் நடைப்பிண மனைவி சாரதாவைப் பார்க்கிறார்.
கண்கள் வெறித்து எங்கோ நிலைத்து பார்த்தபடி இருக்கின்றன. கண்களில் தாரை தாரையாக நீர்! கையை அசைக்க முடியாமல்... இடத்தை விட்டு நகர முடியாமல்...
அடிப்பாவி! இந்தக் கைகளால் அந்த ஆண்டவனுக்கு எத்தனை அர்ச்சனைப் பூக்களை அள்ளிச் சொரிந்திருப்பாய்! அடைத்துப்போன அந்த வாயால் எத்தனை ஸ்லோகங்களை இனிமையாகப் பாடியிருப்பாய்! 'செளந்தர்ய லஹரி'யை அட்சர சுத்தமாக ராகமாலிகையாகப் பாடுவாயே சாரதா!
இன்று அந்த வாக்கு ஸ்பஷ்டம் போய் - உனக்கா... உனக்கா இந்த கதி?
"ஏன்னா, ரிட்டயர்டு ஆயி சும்மாதானே உட்கார்ந்திருக்கேள்?"
"அதுக்கென்ன இப்போ? உனக்குக் கூடமாட சமையல்ல உதவணுமா?"
"போறுமே... காலேஜூல செகண்ட் லாங்க்வேஜ் சம்ஸ்கிருதம்னு பெருமையா சொல்லிப்பேளே! ரகுவம்சம் எல்லாம் படிச்சதா சொல்லுவேளே..."
"அப்போ ரகுவம்சம்... இப்போ மகாதேவ வம்சம்தான் வந்தாச்சே?"
"உஸ்... மறந்துபோன சம்ஸ்கிருதத்தை ஞாபகப்படுத்திக்கோங்கோ.. ராமாயணம் சுந்தரகாண்டம் பாராயணம் பண்ணுங்கோ... குடும்பத்துக்கு க்ஷேமம்... அந்த வாயுபுத்ரன் நம் புத்ரனை ரட்சிப்பார்."
"இதோ பார் சாரதா... விரதம், நோன்பு, அனுஷ்டானம் எல்லாம் நீ ஒருத்தி செய்யறது போறாதா? மாதா செஞ்சது மக்களுக்குதானே? நீ என் ஷேமத்துக்காகவும் உன் தாலி பாக்கியத்துக்காகவும் சோம வார விரதம் இருக்கே. திங்கள்கிழமை தோறும் எனக்கு புட்டு டிபன் கிடைக்கறது. ஞாயிற்றுக்கிழமை தவறாம சூர்யநமஸ்காரம். அடடா... அந்தக் காலை நேரத்தில் நீ காபியோட, வெண்பொங்கலையும் தருவே பார்... ரொம்ப ருசி..."
"நான் விரதம் இருக்கிறது உங்களுக்குக் கிண்டலாப் போச்சா?"
"ஆமாம் போ... வாரத்தில் ஏழு நாள் விரதம். ஞாயிறு சூர்யநமஸ்காரம், திங்கள் சோமவார விரதம், எனக்குச் செவ்வாய் தசைங்கிறதால மங்கள வார விரதம், ராகு கால பூஜை, புதன்கிழமை விஷ்ணுவுக்கு, எனக்கு அஷ்டமத்துக் குரு... அதனால குருவார விரதம், வெள்ளிக்கிழமை அம்பாள் பூஜை, சஹஸ்ரநாமாவளி... அப்புறம் சனிக்கிழமை... சொல்லவே வேண்டாம். நவக்கிரக ஆராதனை. எள் சாதம் நைவேத்தியம். கோயில், குளம் வேண்டுதல்... வாரத்திலே இன்னும் ரெண்டு நாள் கூட இருந்தாலும் உனக்கு புரோகிராம் போடத் தெரியும்! பிள்ளையாருக்கு வாழைப்பழ மாலை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை, வடைமாலை... ஆஞ்சநேயர் வால் முழுக்கப் பொட்டு..."
இப்படி இவர் கிண்டலடித்தாலும் மனைவியின் சொல்லைத் தட்டாமல் சுந்தரகாண்டம் பாராயணம் பண்ணுவார்.
"ஸ்வஸ்திக் ப்ரஜாப்ய பரிபாலயந்தாம்" - என்று இவர் பாராயணம் முடிக்கும் சத்தம் கேட்டவுடன் நைவேத்தியத்துக்கு பாலுடன் வருவாள் சாரதா. பால் இல்லை, திராட்சைப்பழம்...
சுந்தரகாண்ட ராமாயணப் பாராயணம் முடிக்கும் நாளில் ஒரு சின்ன ராம பட்டாபிஷேகமே நடத்தி விடுவாள். பட்டாபிஷேக சர்க்கம் வாசிக்கச் சொல்லி, பருப்புத் தேங்காய் பிடித்து ரவிக்கை துணி வைத்து...'ராம கல்யாண வைபோகமே' - என்று சம்பிரதாயக் கீர்த்தனை பாடி ஆரத்தி எடுத்து நீர்மோர், பானகம் என்று விநியோகித்து... முடிந்தால் சிலரை அழைத்துச் சாப்பாடு போட்டு, ரவிக்கைத் துணி வைத்துக் கொடுத்து -
எதிலும் சாரதாவுக்குக் குறை கூடாது.
"சும்மாதானே இருக்கிறீர்கள்... ருத்ரம் கற்றுக்கொள்ளுங்கள்... சும்மாதானே இருக்கிறீர்கள்... சமகம் கற்றுக்கொள்ளுங்கள்... சும்மாதானே இருக்கிறீர்கள்... வேதம் கற்றுக்கொள்ளுங்கள்!" என்று பிரம்பெடுக்காத டீச்சர் மாதிரி இவரை விரட்டி விரட்டி வித்தைகள் கற்றுக் கொள்ள செய்தவள் இவள்தான்!
ஆனால், இவளே, இன்று - பேச முடியாமல் கையை அசைக்க முடியாதபடி படுத்த படுக்கையாகக் கிடக்கிறாள்!
இவருக்கு 'பக்தியின்' மீதே கோபம் வந்தது.
கடந்த நாலைந்து ஆண்டுகளாகவே இவள் கொஞ்சம் கொஞ்சமாக படுக்கையில் விழ ஆரம்பித்தாள்.
முதலில் கால்வலி என்றாள். மூட்டுவலி என்றாள். மருந்துகள், மாத்திரைகள், ஆயுர்வேத எண்ணெய்கள் என்று வைத்தியம் ஆரம்பமானது.
'எக்ஸ்ரே' எடுத்துப் பார்த்ததில் எலும்புகள் தேய்ந்துவிட்டன என்றார்கள். எண்ணெய்க் குளியல், மருந்து தடவல் என்று கை வைத்தியமாகச் செய்துகொண்டாள். உட்கார முடியவில்லை. அதனால் நின்றபடியே பூஜை செய்தாள். குச்சி வைத்து நடமாடினாள். அதன் பிறகு மெள்ள மெள்ள படுக்கையில் சாய்ந்தாள்... சரிந்தாள்!
"என்ன சார்.. இன்னும் கிளம்பலியா?" டாக்டரின் குரல் மகாதேவனின் சிந்தனையைக் கலைத்தது.
"உம்... கிளம்ப வேண்டியதுதான்!"
"ஆம்புலன்ஸ் தயாரா இருக்கு, மிஸ்டர் மகாதேவன். உங்களுக்கு... பையன், பொண்ணுனு..."
மகாதேவன் சிரித்தார்.
"உம்... இருக்கான். ஒரே பையன் சதீஷ்..ஒரு மராட்டியக்காரியைக் கல்யாணம் பண்ணிட்டு மும்பையிலே தன் வேட்டகத்தோட வசதியா இருக்கான்! கம்ப்யூட்டர் இன்ஜினீயர்."
"அவனுக்கு சொல்லி அனுப்பிடுங்கோ... நான் நினைக்கிறேன்.. அவங்க மனசுக்குள்ளே ஏதோ ஒண்ணு இருக்கு... அதைச் சொல்ல முடியாமத் தவிக்கிறாங்க... ஒருவேளை, மகனைப் பார்க்ணும்னு ஆசைப்படறாங்களோ என்னவோ?" என்றார் டாக்டர்.
இன்னும் நன்றாக நினைவு இருக்கிறது. இவரின் மகன் சதீஷ் ஒருத்தியைக் காதல் திருமணம் செய்துகொண்டுவிட்டதாக போன் வழி அறிவித்தபோது மகாதேவன் கொதித்துப் போனார்.
"ராஸ்கல்... இத்தனை கஷ்டப்பட்டு கடன் உடன் வாங்கி இவனை அமெரிக்காவுக்கு அனுப்பி எம்.எஸ். படிக்க வெச்சதுக்கு என் மூஞ்சியிலே கரி பூசியிருக்கான். காதலியாம்.. ஒண்ணா அமெரிக்காவிலே படிச்சாங்களாம்! கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம். நீ ஒரு பைத்தியம்டி! பையன் படிப்புக்கு விரதம் இருந்தே... அவன் பாஸ் ஆகணும்னு பட்டினி கிடந்தே... இப்போ என்ன பண்ணப் போறே? உன் பக்தியும் பூஜையும்..."
"சும்மா இருங்கோ.. அவன் எங்கிருந்தாலும் நம்ம குழந்தை. அவன் க்ஷேமமா இருக்கணும்.. அதான் நமக்கு வேணும்.." என்றாள் சாரதா.
"உம்.. வேணும், வேணும்! உனக்கு இதுவும் வேணும்.. இன்னமும் வேணும்..."
"உங்களுக்கு தெரியுமா? அன்னிக்கு ஒரு பிரசங்கத்திலே கேட்டேன். பகவான் அத்தனை பேரையும் ஒரே மாதிரிப் படைக்கறதில்லை. ஒருத்தன் ஏழை, ஒருத்தன் பணக்காரன், ஒருத்தன் குட்டை, ஒருத்தன் நெட்டை, ஒருத்தன் கருப்பு, ஒருத்தன் வெளுப்பு... ஆனா அத்தனை பேருக்கும் மூச்சுக்காத்தை மட்டும் ஒரே மாதிரிப் படைச்சிருக்கான். இந்த மூச்சுக் காத்து நம்மகிட்ட சொல்லிக்காமயே வருது... சொல்லிக்காமலே வெளியே போறது. இந்த மூச்சுக் காத்து நம்ம இஷ்டப்படி விட முடியாது. நம்ம இஷ்டப்படி திரும்ப அடைய முடியாது. இதுதான் ஆண்டவன் தத்துவம். இதைப் புரிஞ்சுனுட்டா கோபம் வராது. எரிச்சல் வராது..."
அன்று சாரதா சொன்னது எத்தனை நிஜம்..!
(அடுத்த இதழில் முடியும்) |
| | விமலா ரமணி அவர்களின் இதர படைப்புகள்.
| கதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
|
|
|
|
|