Home  
இதழ் 484

செப்டம்பர் 06 2010


www.guruji.com

Search

 

Nilacharal Web

Search in English

Help
 

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
Simbu
Wanted Freelancers!
Home>>அறிவியல்

மனித உடலியல் (40)
- டாக்டர்.விஜயராகவன்

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

பல பறவைகளிடம் இவ்வுணவுக் குழாய் சாக்குப் பை போல் அமைந்து உணவைத் தற்காலிகமாகச் சேமித்து வைக்கப் பயன்படுகிறது

உணவூட்டக் குழாயில் (Alimentary Canal) நடைபெறுவது என்ன?

நாம் உண்ணும் உணவு, உணவூட்டக் குழாய் வழியே உடலுள் சென்று செரிமானமாகிறது. மனித உடலைப் பொறுத்த மட்டில் இவ்வுணவூட்டக் குழாய் சுமார் 9 மீட்டர் (30 அடி) நீளமுள்ளதாகும். இது வாயில் துவங்கி தொண்டை, உணவுக் குழல் (oesophagus), வயிறு, சிறு குடல் மற்றும் பெருங்குடல், மலக்குடல் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிச் செல்வது.

ஒருவர் உணவை விழுங்கியவுடன், தொண்டையிலுள்ள தசைகள் அதனை உணவுக் குழலுக்குள் தள்ளி விடுகின்றன. உணவுக் குழலின் சுவர்ப் பகுதியிலுள்ள தசைகள் அலைகள் போல் சுருங்குகின்றன; இதனை அலையியக்கம் என்பர். அதே நேரத்தில் உணவுக் குழலின் கீழ்ப்பகுதியிலுள்ள சுருங்கு தசை (sphincter) உணவை வயிற்றுக்குள் தள்ளி, அங்கே செரிமானம் நடைபெறத் துவங்குகிறது.

மனித உடலிலுள்ள உணவுக் குழல் சுமார் 25 செ.மீ. (10 அங்குலம்) நீளமுள்ளது. இதன் நீளம் விலங்குகள் ஒவ்வொன்றிற்கும் மாறுபடும். மீனின் உணவுக் குழல் மிகச் சிறியது. ஒட்டகச் சிவிங்கிக்கு இது மிக நீண்டது. பல பறவைகளிடம் இவ்வுணவுக் குழாய் சாக்குப் பை போல் அமைந்து உணவைத் தற்காலிகமாகச் சேமித்து வைக்கப் பயன்படுகிறது.

தன்னியக்க நரம்பு அமைப்பு (Autonomic Nervous system) என்பது என்ன?

மூளையின் விழிப்புடனான கட்டுப்பாடு ஏதுமின்றி நடைபெறும் சுவாசிப்பு, செரிமானம் போன்ற உடல் செயற்பாடுகளைத் தன்னியக்க அமைப்பு ஒழுங்குபடுத்தி நடத்துகிறது. தொடர்ச்சியான இந்த ஒழுங்கு முறையால், உடலின் நிலையான உட்சூழல் பராமரிக்கப் படுகிறது. தன்னியக்க நரம்பு அமைப்பில் பரிவு அமைப்பு, இணைப் பரிவு அமைப்பு என இரு பிரிவுகள் உள்ளன. இணைப் பரிவு நரம்புகள் உடலை அமைதியாகவும் ஓய்வாகவும் வைத்திருந்து செரிமானம், நாடித் துடிப்பு போன்றவற்றை மெதுவாகச் செயல் படுத்துகின்றன. பரிவு நரம்புகள் எல்லாச் செயற்பாடுகளையும் நடவடிக்கைகளையும் விரைவுபடுத்தி உடலை வேகமான நடைமுறைகளுக்கு ஆயத்தப்படுத்துகின்றன. இந்த இரண்டு தொகுதி நரம்புகளுக்கிடையில் உடலின் உட்புற நிலைமைகள் கட்டுப்பாடுடன் நிலவுகின்றன.

தன்னியக்க அமைப்பு முழுமையும் மூளையின் கீழ்த்தளப்பகுதியில்தான் (hypothalamus) கட்டுப்படுத்தப்படுகின்றன. உடலில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றிய தகவல்கள் இப்பகுதிக்குத்தான் செல்கின்றன.

டாக்டர்.விஜயராகவன் அவர்களின் இதர படைப்புகள். அறிவியல் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
                         
Your Comments
Comment
உங்கள் கருத்து
பெயர் :
மின் அஞ்சல் :
சுட்டி :

Comment In:

Tamil English
(Type here in Thanglish and see tamil text in bottom. Tamil conversion powered by : www.suratha.com)
NOTE : Please do not use single quote in your comments. You can use double quote in place.
(English / தமிழில் - யூனிகோட்)
What you see in this box gets posted as feedback.

Hot properties in India

ஜோதிடம் கேளுங்கள் பகுதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைந்து கட்டண சேவை பெற இங்கே சுட்டவும்.

 

 


 

 


About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, India Pakistan cricket series, Kuselan, India Cricket, Sultan The Warrior

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide