Home  
இதழ் 382

செப்டம்பர் 15 2008


www.guruji.com

Search

 

Nilacharal Web

Search in English

Help
 

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
adamgilchrist
mahabharata
Home>>அறிவியல்

மூளை பற்றிய ஆராய்ச்சி! - 11
- ச.நாகராஜன்

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

ஒரு சிறிய பேப்பரின் நடுவில் மூளை என்ற வார்த்தையையோ (அல்லது ஏதேனும் உங்களுக்குப் பிடித்த ஒரு வார்த்தையையோ) எழுதி அதைச் சுற்றி ஒரு நீள்வட்டத்தை வரையுங்கள்

பத்தாவது வழி : டென்னிஸனின் ந்யூக்ளியர் ஷார்ட்ஹாண்ட் முறை

புதிய கருத்துக்களை உருவாக்கி படைப்பாற்றல் திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சி இது

பிரபல ஆங்கிலக் கவிஞரான லார்ட் ஆல்ப்ரெட் டென்னிஸன் ந்யூக்ளியர் ஷார்ட்ஹாண்ட் என்னும் புதிய உத்தி ஒன்றைக் கண்டுபிடித்துக் கையாண்டார். இது தனது பிரக்ஞையில் ஒளிந்து கொண்டிருக்கும் கருத்துக்களைத் துரத்திப் பிடித்துத் தன் வசம் கொண்டு வருவதற்கான வழியாக அவர் அமைத்துக் கொண்டார். ஒரு சின்ன வார்த்தையோ அல்லது வார்த்தைத் தொடரோ எதுவானாலும் சரி.. தன் கையில் உள்ள பேப்பரில் இருக்கும் அதை நோக்கித் தன் கவனத்தை, அவர் குவிப்பார். அந்த வார்த்தையை மையமாகக் கொண்டு அதன் தொடர்புடைய கருத்துக்கள் அனைத்தையும் தன் மனதிலிருந்து பெறுவார். இதன் மூலம் அவரது மூளை அந்த வார்த்தையுடன் தொடர்பு கொண்ட அவரது எண்ணங்கள், அனுபவங்கள், கருத்துக்கள் அனைத்தையும் கொண்டு வந்து அவரிடம் குவித்தது. இதை வைத்து அவர் தனது புதிய கவிதைகளை அமைக்கத் தொடங்கினார்!

இதற்கான வழி:

1. ந்யூக்ளியர் ஷார்ட்ஹாண்ட் உத்தியைக் கடைப்பிடித்து ஒரு கருத்தையோ அல்லது வார்த்தையையோ அல்லது வார்த்தைத் தொடரையோ உங்கள் மனதில் இருத்தி கவனக் குவிப்பைச் செய்யுங்கள்.
2. ஒரு சிறிய பேப்பரின் நடுவில் மூளை என்ற வார்த்தையையோ (அல்லது ஏதேனும் உங்களுக்குப் பிடித்த ஒரு வார்த்தையையோ) எழுதி அதைச் சுற்றி ஒரு நீள்வட்டத்தை வரையுங்கள்.
3. இதைச் சுற்றி உங்களுக்கு நினைவில் வரும் அனைத்துக் கருத்துக்களையும் எழுதுங்கள். எதையும் ஆராய்ச்சி செய்ய வேண்டாம். மனதில் தோன்றும் புதுப்புதுக் கருத்துக்களை எழுதுங்கள்.
4. நீள்வட்டத்தைச் சுற்றிப் புதுப்புது கிளைகளை அமைத்து அனைத்து கருத்துக்களையும் எழுதினால் பேப்பரே நிரம்பிவிடும்.
5. படைப்பாற்றலின் மூல வார்த்தையான ஏன் என்ற கேள்வியே பல புதிய கருத்துக்களுக்கான அடிப்படை. இதையும் பயன்படுத்தினால் ஏராளமான மதிப்பு மிக்க கருத்துக்கள் குவிந்து விடுவதைக் கண்டு பிரமிப்பீர்கள்.

இந்த ந்யூக்ளியர் ஷார்ட் ஹாண்ட் நோட்புக்கை நிரப்ப ஆரம்பித்தீர்கள் என்றால், நோட்புக் பூர்த்தியாகும் போது பிரமிக்க வைக்கும் ஏராளமான உங்களது கருத்துக் குவியலைக் கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

பதினொன்றாவது வழி : கவனத்தைக் குவிப்பது எப்படி?

உங்கள் கவனத்தைச் சிதற விடாது குவிப்பது எப்படி என்பதற்கான பயிற்சி இது :-

அன்றாட புலன் வழிச் செயல்களில் நாம் அறியாமலேயே அனைத்தையும் தன் போக்கில் செய்து கொண்டே இருக்கிறோம். எதைப் பார்க்கிறோம், எதைக் கேட்கிறோம், எதைச் சுவைத்துச் சாப்பிடுகிறோம், எதை முகர்கிறோம் என்பதை உணர்ந்தால் அது புதிய விழிப்புணர்ச்சியைத் தரும். உங்களது கவனம் அந்தக் கணத்தில் நடைபெறும் செயல் மீது முழுவதுமாக இருக்கும்.

1. கேளுங்கள்: உங்கள் கம்ப்யூட்டர் உம்மென ஒலி எழுப்புகிறதா? கண்களை மூடி அறையில் என்னென்ன ஒலிகள் கேட்கிறது என்பதை உணருங்கள். அனைத்து ஒலிகளின் மீதும் உங்கள் கவனம் பதிகிறதா?
2. உணருங்கள் : நீங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலியில் உடல் ஒட்டி இருப்பதை உணருங்கள். உங்கள் உடலோடு ஒட்டி இருக்கும் சட்டையை உணருங்கள். உங்கள் பாதம் தரையைத் தொடுவதை உணருங்கள். இப்படி உணர்வது உங்கள் பிரக்ஞையை அதனுடன் இணைக்கும் முயற்சியாகும். இது உள்ளார்ந்த பார்வை எனப்படும். உங்கள் உள்முக புலனாற்றலால் அனைத்தையும் உணரத் தொடங்கும் புதிய முயற்சி இது!

இந்தப் புதிய முறையில் அனைத்¨தையும் எப்படி நீங்கள் உணர்கிறீர்கள் என்று பாருங்கள். உங்கள் கவனம் சிதறினால் அதை சிதற விடாமல் உங்கள் மனதின் விழிப்புணர்ச்சியால் அதைப் புலன்கள் உணருகின்ற செயல்கள் மீது குவியுங்கள்.

பெரிய யோகிகளும், தலைவர்களும் தங்களைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் அந்தக் கணத்தில் உணர்ந்து முழுதுமாக வாழ்வதாலேயே யோகிகளாகவும், தலைவர்களாகவும் திகழ முடிகிறது. முழு புலனாற்றலையும் கவனக் குவிப்பு மூலம் செயல்படச் செய்தால் நீங்களும் ஒரு யோகியே; ஒரு தலைவரே!

(அடுத்த இதழில் முடியும்)
 

ச.நாகராஜன் அவர்களின் இதர படைப்புகள். அறிவியல் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
                         
Your Comments
Comment
உங்கள் கருத்து
பெயர் :
மின் அஞ்சல் :
சுட்டி :

Comment In:

Tamil English
(Type here in Thanglish and see tamil text in bottom. Tamil conversion powered by : www.suratha.com)
(English / தமிழில் - யூனிகோட்)
What you see in this box gets posted as feedback.

Cunard Cruise Lines
Hot properties in India
Tamil Channel
 
 
 
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, Cunard Cruise Lines, India Pakistan cricket series, Kuselan, India Cricket, Sultan The Warrior

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide