கணவன் (தள்ளாடியபடியே) : வீட்டுக்குள்ள யாருடி இவன்.. பொறுக்கி மாதிரி இருக்கான். உன் கள்ளக் காதலனா? அவன மொதல்ல வெளியே அனுப்பு.. மனைவி : அது கண்ணாடிங்க. குடிச்சுப் போட்டு இப்படி உளர்றதே உங்க பொழப்பாப் போச்சு.. சை!
***** வெலாவாரியா விசாரிக்கலையா?
விமலா : மாப்பிள்ளை கம்ப்யூட்டர் ஃபீல்டுல இருக்கார்னு சொன்னத நம்பி கல்யாணம் பண்ணி ஏமாந்து போனேண்டி. கீதா : ஏன்.. என்னாச்சு? விமலா : அவர் கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிக்கிற வேலையில இருக்கார்.
*****
போதும் சரவணா!
சரவணன் : நான் நேத்து ஒரு கண்காட்சிக்குப் போயிருந்தேனா.. அங்கே ஒரு அழகான ஆளோட ஓவியம் வச்சிருந்தாங்க. அதப் பாத்து பிரமிச்சி போயிட்டேன். சுந்தர் : அப்படியா! என்ன ஓவியம் அது? சரவணன் : அது ஓவியம் இல்லை.. ஆளுயரக் கண்ணாடின்னு கண்காட்சிக்காரர் சொன்னாருன்னா பாத்துக்கோயேன்! சுந்தர் : என்ன கொடுமை சரவணன் இது!!
இங்கு உள்ள அனைத்து சிரிப்பு வெடிகளையும் படித்து நண்பர்களுடனும் குடும்பத்துடனும் வாய் விட்டு சிரித்து மகிழ்ந்தோம்.இப்பகுதி மேன்மேலும் வளர எங்களது வாழ்த்துக்கள்