ரோட்ல நடந்து போயிட்டு இருந்த ஜோ மேல் காகம் எச்சமிட்டது. அதற்கு
ஜோ, நினைத்தார். "நல்ல வேளை மாடுகளால் பறக்க முடியாதது எவ்வளவு நல்லதா போச்சு!!"
ஜோ : "இப்போ நான் தங்கி இருக்கும் வீடு என்னுடைய எதிர்பார்ப்புக்கு இல்லை. அதனால் இதை வித்துடலாம்னு இருக்கேன். அதுக்காக பேப்பர்ல விளம்பரம் கொடுக்கப் போறேன்."
சிறிது நாட்களுக்குப் பிறகு, நண்பர் : "உன்னுடைய வீட்டை வித்தாச்சா?" ஜோ : "விளம்பரம் பார்த்தப்புறம் நான் எதிர்பார்த்தது இந்த மாதிரி வீடுதான்னு எனக்கு ஞாபகம் வந்தது. அதனால நான் வீட்டை விக்கல."
*****
ரோட்ல நடந்து போயிட்டு இருந்த ஜோ மேல் காகம் எச்சமிட்டது.
ஜோ நினைத்தார். "நல்ல வேளை மாடுகளால் பறக்க முடியாதது எவ்வளவு நல்லதா போச்சு!!"
*****
டீச்சர் : "உன்னை வரிசையோட கடைசியிலதான போய் நிக்கச் சொன்னேன். ஏன் இங்க நிக்கற?"
பப்பு : "நான் போனேன் டீச்சர். ஆனால் எனக்கு முன்னாடியே அங்கே யாரோ நிக்கறாங்க. அதுதான் நான் திரும்ப வந்துட்டேன்."
*****
அப்பா : "உன்னுடைய பிறந்த நாளுக்கு என்ன பரிசு வேணும்னு சொல்லு. வாங்கித்தரேன்."
மகன் : "பெருசா எதுவும் வேண்டாம்பா. சின்ன ரேடியோ அதச் சுத்தி ஒரு கார். அது போதும்."
*****
ஜோவும் நண்பரும் டபுள் டக்கர் பஸ்ஸில் ஏறினார்கள். ஜோ மேலேயும் நண்பர் கீழேயும் உட்கார இடம் கிடைத்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு மேலே சென்ற நண்பர் ஜோ மிகவும் பயத்துடன் உட்கார்ந்து இருப்பதைக் கண்டு,
நண்பர் : "என்ன ஜோ இப்படி பயப்படறே?"
ஜோ : "உனக்கு கீழே டிரைவர் இருக்கார்.. அதனால் பயமில்லை. இங்க டிரைவர் இல்லாம உட்கார்ந்து பார்.. அப்போ தெரியும் என் கஷ்டம்."