Home  
இதழ் 382

செப்டம்பர் 15 2008


www.guruji.com

Search

 

Nilacharal Web

Search in English

Help
 

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
kareena
carnatic_music
Home>>ராசிபலன்

இராசிபலன்கள் (15-9-2008 முதல் 21-9-2008 வரை)
- ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

ரிஷப ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். கூட்டுத் தொழில் முயற்சிகளால் மன நிம்மதி அடைவீர்கள். வீட்டைத் திருத்திக் கட்டப் போட்ட திட்டங்கள் நிறைவேறும்.

மேஷம்:-

மேஷ ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். உடம்பில் காது சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். பெரிய மனிர்கள் சந்திப்பால் மன மகிழ்ச்சி உண்டாகும். தேவையற்ற காரியங்களில் தலையிட்டுச் சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம். பேராசிரியர்கள், மருத்துவர்களுக்கு இட மாற்றம் உண்டாகும். புதிய ஆடை, அணிகலன்கள் வாங்குவதைத் தள்ளிப் போடவும். பிள்ளைகளால் பொருட் செலவு உண்டு. மனைவியால் பொருள் வரவு உண்டு. தந்தை மகன் உறவால் பிற பிரச்சினைகள் வந்து நீங்கும். பழைய வாகனங்களைப் பழுது பார்க்க நேரிடும். புதிய ஒப்பந்தங்கள் உண்டாகும். வங்கிகளிலிருந்து எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- ஐயப்பன் வழிபாடு செய்து வரவும்.

ரிஷபம்:-

ரிஷப ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். கூட்டுத் தொழில் முயற்சிகளால் மன நிம்மதி அடைவீர்கள். வீட்டைத் திருத்திக் கட்டப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். விபரீத எண்ணங்களை விலக்கவும். இணையதளம், தொலைக்காட்சி, வானொலி நடத்துவோர் லாபம் அடைவர். குல தெய்வ வழிபாடு செய்து வரவும். தந்தைக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும். பழைய கட்டிடங்களைப் புதுப்பித்துக் கட்டுவீர்கள. மன நிம்மதிக்காக உல்லாசப் பயணங்கள் செல்லுவீர்கள். வேற்று மதத்தவரால் ஆதாயம் உண்டு. காதல் விஷயங்களில் கவனம் தேவை. புதிய நண்பர்கள் சேர்க்கையைத் தவிர்த்தல் நல்லது.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- மஹாலக்ஷ்மி வழிபாடு செய்து வரவும்.

மிதுனம்:-

மிதுன ராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரகமாகும். கிழக்குத் திசையிலிருந்து நற்செய்திகள் கிடைக்கும். பணப் புழக்கம் சுமாராக இருக்கும். இருப்பிடம் சம்பந்தமான பிரச்சினைகள் எழலாம். உத்தியோகத் துறையினருக்கு மேலதிகாரிகளுடன் பிரச்கனைகள் உண்டாகும். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். புதிய தொழில் ஆரம்பம் செய்வதைத் தள்ளிப் போடவும். தாய்வழிச் சொத்துக்கள் கிடைக்கும். சூதாட்டத்தைத் தவிர்க்கவும். நண்பர் மற்றும் உறவினர்களின் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன நிம்மதி அடைவீர்கள். வராத பணம் பிள்ளைகளால் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலையாட்களால் ஆதாயம் உண்டு.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- சிவ வழிபாடு செய்து மஞ்சள் ஆடை தானம் செய்யவும்.


கடகம்:-

கடக ராசி அன்பர்களே, ராகு நன்மை தரும் கிரகமாகும். வியாபாரத்தில் திடீர் ஒப்பந்தம் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் மாற்றம் செய்யலாம். புதிய நிலம் மற்றும் வீடு வாங்கத் திட்டம் போடுவீர்கள். யாத்திரையின் போது எச்சரிக்கையுடன் பயணம் செய்வது நல்லது. கமிஷன், தரகு, காண்டிராக்ட் தொழில் செய்வோர், பூசைப் பொருள் வியாபாரிகள், கோவில் திருப்பணி செய்வோர் லாபம் அடைவார்கள். அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். யாத்திரைகளை விலக்குதல் நல்லது. புதிய அணிகலன்களை வாங்குவீர்கள். கலைத்துறையினர் மற்றும் அரசியல்வாதிகள் ஆதாயம் அடைவர்.

இராசியான எண்:- 4
இராசியான நிறம்:- கருப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- அம்மன், காளி வழிபாடு செய்து வரவும்.

சிம்மம்:-

சிம்ம ராசி அன்பர்களே, சனியே நன்மை தரும் கிரகம் ஆகிறார். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படும். தீராத நோய்க்கும் புதிய மருத்துவச் சிகிச்சை மூலம் விடை காணுவீர்கள். ஆலயத் திருப்பணிகளில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. சமுதாய நல்லிணக்கத்திற்காக உழைக்ககூடிய வாரமாகும். வீட்டில் கவனமுடன் இருந்தால் திருடு போவதைத் தவிர்க்கலாம். உறவினர்களால் ஆதாயம் அடைவீர்கள். பொது நலக் காரியங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. பொருளாதாரம் சுமாராக இருக்கும். கலைத்துறையினர் மற்றும் அழகு சாதானப் பொருள் வியாபாரிகள், கலைத்துறை சம்பந்தமான பொருள் விற்பனை செய்வோர்கள் லாபம் அடைவார்கள்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனீஸ்வர வழிபாடு செய்து கருப்பு ஆடை தானம் செய்யவும்.

கன்னி:-

கன்னி ராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் மூலம் சில லாபம் கிடைக்கும். உத்தியோகத் துறையினர்கள் எசசரிக்கையுடன் பணியாற்றுதல் நல்லது. அரசு சம்பந்தமான வழக்குகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டு. தீர்த்த யாத்திரையால் மன நிம்மதி உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு மணமாகின்ற காலமாகும். பங்காளிகளால் ஆதாயம் உண்டு. செய்தொழிலில் கவனம் தேவை. தொலைதூரப்பயணங்களில் சுமாரான வெற்றி கிடைக்கும். தாயின் உடல் நிலையில் சில பாதிப்புகள் உண்டாகும்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- சிவ வழிபாடு செய்து வரவும்.

துலாம்:-

துலா ராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகளில் சிற்சில தடைகள் வந்து விலகும். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. மனசஞ்சலங்கள் தீரும். பிள்ளைகளுக்கு உத்தியோகம் கிடைக்கும். தொழிற்சாலைகளை விருத்தி செய்வீர்கள். உடம்பில் சுரம் மற்றும் உஷ்ண சம்பந்தமான உபாதைகள் வந்து தீரும். சினிமா, நாடகம் போன்ற துறை சார்ந்தவர்கள், எலக்டிரிக் மற்றும் போலீஸ் துறை சார்ந்தவர்கள் லாபம் அடைவர். ஆலயப்பணி மற்றும் மன நல விடுதி சார்ந்தவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். விவசாயம் சுமாராகக் காணப்படும். ஆடம்பர அலங்காரப் பொருட்களை வாங்க எண்ணுவீர்கள்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- துர்க்கை வழிபாடு செய்து சிகப்பு ஆடை தானம் செய்யவும்.

விருச்சிகம்:-

விருச்சிக ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். விட்ட பொருள் திரும்பக் கிடைக்கும். சகோதரர்களுடன் பிரச்சினைகள் உருவாகும். தாயின் உடல் நிலை சற்று பாதிப்படையும். விநோத விளையாட்டுத் துறை சார்ந்தவர்கள், தபால் தந்தித் துறையினர் லாபம் அடைவார்கள். வாய், பல், காது சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும். ஆடு, மாடு போன்ற வாகனத் தொழில் செய்வோர்கள் லாபம் அடைவார்கள். பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனம் வாங்குவீர்கள். கடல் யாத்திரை வெற்றியளிக்கும். பிறருக்காக உதவிக்கரம் நீட்டுவீர்கள். அடுத்த மதத்தவரால் ஆதாயம் உண்டு.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

தனுசு:-

தனுசு ராசி அன்பர்களே, கேது நன்மை தரும் கிரகமாகும். தூரத்து யாத்திரைகளை விலக்குதல் நல்லது. சகோதரர்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். தேவையற்ற மன சஞ்சலம் தவிர்க்கவும். விருந்தினர் வரவால் பொருட் செலவு உண்டாகும். திரவ சம்பந்தமான பொருட்கள், அழகுசாதனப் பொருள் வியாபாரிகள், ஏற்றுமதி இறக்குதி தொழில் செய்வோர் லாபம் அடைவர். விட்டுப் போன பழைய பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்கும். கண்களில் கவனம் தேவை. கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சம்பந்தமில்லாத நபருடன் பிரச்சினைகள் வரலாம்.

இராசியான எண்:- 7
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- கணபதி மற்றும் பிதுர் வழிபாடு செய்து வரவும்.

மகரம்:-

மகர ராசி அன்பர்களே, சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். பொருளாதார நெருக்கடி ஏற்படலாம். நண்பர் உதவியால் சிறிது பண உதவி கிடைக்கும். காதல் விஷயங்களில் பிரச்சினைகள் வரலாம். உடம்பில் வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தஙகள் கிடைக்கும். புதிய கார் மற்றும் வாகனங்களை வாங்குவதைத் தள்ளிப் போடவும். பள்ளிக் கூடங்கள், அநாதை விடுதிகள் நடத்துவோர், சமுதாயத் தலைவர்கள், அற நிலையத்துறை சார்ந்தவர்கள் நற்பலன் அடைவார்கள். புதிய பெரிய மனிதர்களைச் சந்திப்பீர்கள். வங்கிகள் மூலம் எதிர்பார்த்த கடன் கிடைக்கும்.

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- அம்மன் வழிபாடு செய்து வரவும்.

கும்பம்:-

கும்ப ராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரகமாகும். மாமன் வழி மூலம் சில ஆதாயம் அடைவீர்கள். உறவினர் வரவால் சில பிரச்சினைகள் வந்து போகும். வீடு மாற்றம் உண்டாகலாம். நண்பர்களுக்கு வீண் பொருட்செலவு செய்வதைத் தவிர்க்கவும். முன் கோபத்தை தவிர்த்தல் உகந்ததாகும். ரேஸ், லாட்டரி மூலம் திடீர் தனவரவு ஏற்படலாம். பங்காளிகளால் ஆதாயம் உண்டு. அடிமையாட்களால் ஆதாயம் இல்லை. குடும்பச் சொத்துக்கள் கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முயற்சிப்பீர்கள். கல்வித்துறையினர் நன் மதிப்பைப் பெறுவர். மன தைரியத்துடன் எடுத்த காரியத்தைச் செய்து முடிப்பீர்கள்.

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- சிவ வழிபாடு செய்து வரவும்.

மீனம்:-

மீன ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரகமாகும். தந்தை மகன் உறவில் சில பிரச்சினைகள் வந்து தீரும். இரும்பு, இயந்திரம், இரசாயன சம்பந்தமான தொழில் செய்வோர் லாபம் அடைவார்கள். தாயின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உறவினர் வரவால் பொருட் செலவுகள் உண்டாகும். மருத்துவச் செலவுகள் குறையும். மனைவியின் உடல் நிலை பாதிப்படையும். விஞ்ஞானிகள் வெற்றி பெறுவார்கள். யாத்திரைகளில் புதிய செல்வந்தர்கள் சந்திப்பால் சில காரியங்களை நிறைவேற்றுவீர்கள்.
பூர்வீக இடங்களை விட்டுப் பெயர்ந்து செல்லுவீர்கள். வெளிநாட்டுப் பயணம் நன்றாக இருக்கும்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:-மஹாலக்ஷ்மி வழிபாடு செய்து வரவும்.


ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M அவர்களின் இதர படைப்புகள். ராசிபலன் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
                         
Your Comments
 
balchandhar
9/16/2008 , 9:57:20 PM

 [Comment url]
உஙல் ராசிபலன் எனக்கு மிகவும் சரியாக உல்லது. நன்ரி. வனக்கம்
Comment
உங்கள் கருத்து
பெயர் :
மின் அஞ்சல் :
சுட்டி :

Comment In:

Tamil English
(Type here in Thanglish and see tamil text in bottom. Tamil conversion powered by : www.suratha.com)
NOTE : Please do not use single quote in your comments. You can use double quote in place.
(English / தமிழில் - யூனிகோட்)
What you see in this box gets posted as feedback.

Cunard Cruise Lines
Hot properties in India

ஜோதிடம் கேளுங்கள் பகுதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைந்து கட்டண சேவை பெற இங்கே சுட்டவும்.

 

 


 

 


About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, Cunard Cruise Lines, India Pakistan cricket series, Kuselan, India Cricket, Sultan The Warrior

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide