 |
இதழ் 383 |
 |
செப்டம்பர் 22 2008
|

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Your Advertisement Here
|
| |
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
|
|
| | | "சொல்லு செல்லம், எப்போ ஏற்காடு போகலாம்?" என்று எடுத்த எடுப்பில் ஆரம்பித்த கணவனிடம், "ம்ம்ம்.... இது சரியில்லையே... என்ன தப்பு பண்ணீங்க?" என்று கேட்டுச் சிரித்தாள் ரேகா.
 அஞ்சனா தலையைச் சிலுப்பிக் கொண்டு விடுவிடுவென நடந்தாள். என்ன நடந்ததென்று புரியுமுன்னே உடல் வியர்த்துவிட்டிருந்தது. ஏதோ தற்செயலாய் பார்வைகள் சந்தித்துக் கொண்டதற்கு எதற்கு இத்தனை படபடப்பெனத் தன்னை சமாதானம் செய்து கொள்ள அவள் முயன்றாலும் அவன் பார்வையின் தீட்சண்யம் தன்னை இன்னும் தொடர்வது போலவே தோன்றிற்று அஞ்சனாவுக்கு.
வாசு இரண்டு கண்களையும் இறுக்கமாய் மூடித் திறக்கிறான். அஞ்சனா தன் பார்வையின் வழியாய்த் தன் முகத்திலிருந்த பரவசத்தை அவன் நெஞ்சில் ஏற்றிவிட்டிருந்தாற்போன்ற பிரமை எழ, 'சில்லி மீ' என்று முகத்தின் முன் கையை அசைத்து அந்த மாயையைக் கலைக்க முயல்கிறான். அப்படியும் அவன் இதயத்தின் துள்ளல் குறையாமல் போக, கவனத்தைத் திருப்பும் விதமாய் அலைபேசியை உயிர்ப்பித்து ரேகாவை அழைத்தான்.
"சொல்லு செல்லம், எப்போ ஏற்காடு போகலாம்?" என்று எடுத்த எடுப்பில் ஆரம்பித்த கணவனிடம், "ம்ம்ம்.... இது சரியில்லையே... என்ன தப்பு பண்ணீங்க?" என்று கேட்டுச் சிரித்தாள் ரேகா.
தன் மனைவி தன்னைத் திறந்த புத்தகம் போலப் படித்துவிடுகிறாள் என்று வாசுவுக்குத் தோன்ற, "என்னடி இடம் போனால் இடிக்கிறே, வலம்போனா கடிக்கிறே?" என்று மையலில் இறங்கினான்.
பத்து நிமிட உரையாடலுக்குப் பின் தேதியை நிச்சயம் செய்து கொண்டு விடுமுறைக்கு அவன் விண்ணப்பித்த போது, முன்பு விடுமுறைக்கு ஏங்கிய மனதில் இப்போது ஒரு விட்டேற்றித்தனம் குடியேறியிருந்ததை கவனித்தான். மாணவர்களின் அஸைன்மென்டுக்கான கேள்விகள் தயாரிப்பதில் கவனத்தைச் செலுத்த முயன்றும் மனம் ஒரு நிலையிலில்லாமல் பரபரவென்று அந்த சமுத்திரக் கண்களின் மின்னல் பார்வையிலேயே நீந்திக் கொண்டிருந்தது.
அஞ்சனா அன்று நாராயணனுக்குப் பிடித்ததாய்ப் பார்த்துப் பார்த்து சமைத்திருந்தாள்.
"என்ன இத்தனை அமர்க்களம், இன்னிக்கு? வேலை ரொம்பப் பிடிச்சிருக்கோ?" என்றான் நாராயணன்.
"ஒரு வேலையும் இன்னிக்குப் பண்ணல்லே. ஆனா டிபார்ட்மெண்ட்ல ஒரு நல்ல •பீலிங் இருக்கு. வேலை எனக்குப் பிடிக்கும்னுதான் நினைக்கிறேன்" என்றாள் அஞ்சனா, வாசு நினைவுக்கு வந்ததைத் தவிர்க்கமுடியாமல்.
சாப்பிடும்போது நாராயணன் அதிகம் பேசாமல் ஏதோ யோசனையுடனே இருந்தான். அஞ்சனா அவனைக் கலைக்க விரும்பாமல் தொலைக்காட்சியில் பார்வையைத் திருப்பினாள்.
நாராயணன் தன் இடது கையால் அவளது விரல்களை இறுக்கமாய்ப் பற்றினான். பின், "ஆறு மாசம் சிங்கப்பூர் போகணும் போலிருக்கு. இருந்துப்பியா?" என்றான் சஞ்சலத்தோடு. திருமணமாகி இந்த ஒரு வருடத்தில் ஒரு நாள் கூட இருவரும் பிரிந்திருந்ததில்லை. ஆறு மாதங்கள் பிரிந்திருக்கவேண்டும் என்றதும் மலைப்பாய் இருந்தது அஞ்சனாவுக்கு.
அவள் பதில் சொல்லாமல் தன்னை சற்று அதிர்ச்சியாய்ப் பார்க்கவும், "எனக்கும் பிடிக்கலைதான், அஞ்சு. ரொம்ப நல்ல ப்ராஜக்ட். ப்ரொமோஷனுக்கு வாய்ப்பிருக்கு. அதனால வேண்டாம்னு விடமுடியலை" என்றான் நாராயணன்.
"சேச்சே... நல்ல வாய்ப்பை ஏன் விடணும்? போய் வாங்க"
அவள் வாய் அப்படிச் சொன்னாலும் கண்களில் கலக்கமிருந்ததை கவனித்த நாராயணன், "இடையில நீ ஒரு தடவை சிங்கப்பூர் வர்ற மாதிரி ப்ளான் பண்ணலாம். நாள் ஓடிப்போயிடும். ஒண்ணும் தெரியாது" என்றான் சமாதானமான குரலில்.
(தொடரும்)
|
| | நிலா அவர்களின் இதர படைப்புகள்.
| தொடர் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
|
|
|
|
|