அட! ஒரு பாடலுக்கு மட்டும்தான். இன்று பீக் மார்க்கெட்டில் இருக்கும் நயனுக்கு ஏன் இந்த விஷப் பரீட்சை என்று கேட்கின்றனர் நாலும் தெரிந்தவர்கள்.
ரஜினியே ஹீரோவும், வில்லனும்!
'எந்திரனில்' ஹீரோவும் ரஜினியே; வில்லனும் ரஜினியே என்கிறது படக் குழு. தசாவதாரத்தின் பாதிப்போ!! கதைப்படி, விஞ்ஞானி ரஜினி உருவாக்கும் ரோபோவும் ஒரு ரஜினிதான். கெட்டவர்களின் கையில் சிக்கும் ரோபோவும் கெட்ட செயல்களைச் செய்கிறதாம். அதைத் தன் கட்டுப்பாட்டுக்கு மீண்டும் ரஜினி கொண்டு வருவதே கதை.
*****
பட்டி தொட்டியெல்லாம் 'நாக்க முக்க'
செப்டம்பர் 26ல் வெளிவருகிறது நகுலன், சுனேனா நடித்திருக்கும் 'காதலில் விழுந்தேன்'. படம் வெளிவருவதற்கு முன்னரே விஜய் ஆண்டனியின் இசையில் சக்கப்போடு போட்டிருக்கும் 'நாக்க முக்க' பாடல் படத்தின் ஹைலைட்களில் ஒன்று.
*****
நயன் - வடிவேலு காம்பினேஷன்!
விஜய் நடிக்கும் 'வில்லு' படத்தில் வைகைப்புயலுடன் நயன்தாரா ஜோடி போடுகிறாராம். அட! ஒரு பாடலுக்கு மட்டும்தான். இன்று பீக் மார்க்கெட்டில் இருக்கும் நயனுக்கு ஏன் இந்த விஷப் பரீட்சை என்று கேட்கின்றனர் நாலும் தெரிந்தவர்கள். ஏற்கெனவே வடிவேலுவுடன் 'அழகப்பனில்' ஒரு பாடலுக்கு சோடி போட்ட ஸ்ரேயா, போக்கிரியில் 'சுட்டும் விழிச் சுடரே' என ஆடிய அசின் ஆகியோர் ஃபீல்டு அவுட் ஆகியிருப்பதுதான் விஷயம் தெரிந்த சிகாமணிகளின் ஆதங்கம்.
*****
கீரத் வெளியேற்றம்
ஷாம் நடிக்கும் 'அகம் புறம்' ஹீரோயின் கீரத் நீக்கப்பட்டு மீனாட்சி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். கால்ஷீட்டுகளில் செய்த குளறுபடியால் கீரத் நீக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கு மார்க்கெட்டில் கீரத் டாப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
*****
காஸ்ட்லி அழகு
'எந்திரன்' படத்தில் ஐஸ்வர்யா ராயின் சம்பளம் ஆறு கோடியாம்! இதன் மூலம், இந்தியப் படவுலகில் அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த கரீனா கபூரை முந்தியிருக்கிறார் 'காஸ்ட்லி அழகு' ஐஸ்வர்யா!
*****
முடிவை நோக்கி 'அங்காடி தெரு'
'வெயில்' வெற்றிக்குப் பின் சிறிது இடைவெளி விட்டிருந்த வசந்தபாலன் தனது அடுத்த புராஜெக்டான 'அங்காடி தெரு'வை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக உருவாக்கி வருகிறார். இன்னும் பதினைந்து நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கியுள்ளதாக படக்குழு கூறியிருக்கிறது.
*****
சன் பிக்சர்ஸ் அறிமுகம்
சன் நெட்வொர்க் தற்போது 'சன் பிக்சர்ஸ்' என்ற பேனரில் படத் தயாரிப்பிலும் கால் பதித்துள்ளது. தென்னிந்திய மொழிகளில் தொலைக்காட்சி நிறுவனங்களை நடத்திவரும் சன், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் படத் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட இருக்கிறது.
*****
அமெரிக்காவில் ஹ்ரித்திக்
ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் உருவாகி வரும் மெகா பட்ஜெட் படம் 'கைட்ஸ்'. ஹ்ரித்திக்குடன் பார்பரா மோரி மற்றும் கங்கனா ரணவ்த் நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் மெக்ஸிகோவில் நடந்து வருகிறது. சமீபத்தில் அங்கு வீசிய சூறாவளியால் படப்பிடிப்பைத் தொடருவதில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
*****
ஹாலிவுட் நம்பர் ஒன்
ஹாலிவுட் நடிகைகளில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்திருப்பவர் கேமரூன் டயஸ். கடந்த ஒரு வருடத்தில் அவருடைய வருமானம் ஐம்பது மில்லியன் டாலர்களாம்! அவருக்கு அடுத்தபடியாக கெய்ரா நைட்லி 32 மில்லியன் டாலர்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.