Home  
இதழ் 383

செப்டம்பர் 22 2008


www.guruji.com

Search

 

Nilacharal Web

Search in English

Help
 

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
Prithviraj
bhagavad_geeta
Home>>ராசிபலன்

இராசிபலன்கள் (22-9-2008 முதல் 28-9-2008 வரை)
- ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

மீனராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். புதிய ஆடை, அணிகலன்கள் வாங்குவீர்கள். தூரப்பயணம் தள்ளிப் போடவும்.

மேஷம் :-

மேஷராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரகமாகும். புதிய தொழில் ஒன்றை ஆரம்பம் செய்யத் திட்டமிடுவீர்கள். செல்வந்தர்களால் ஆதாயம் உண்டு. விட்டுப் போன பழைய பிரச்சினைகள் மீண்டும் தொடரலாம். இரும்பு, இயந்திரம், இரசாயனம் சம்பந்தமான ஆலைப் பணியாளர்கள் நற்பலன் அடைவர். சகோதரர் குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். பேப்பர், புத்தகம், பிரிண்டிங் தொழில் செய்வோர் நல்ல லாபம் அடைவார்கள். வீண் பொருட்செலவுகள் உண்டாகலாம். தீர்த்த யாத்திரைகள் மற்றும் உல்லாசப் பயணம் சென்று வரக் கூடிய காலமாகும். வாகனங்களில் எச்சரிக்கையுடன் செயல்படவும். கோர்ட் வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

இராசியான எண் - 3
இராசியான நிறம் - மஞ்சள்
இராசியான திசை - வடகிழக்கு
பரிகாரம் :- தட்சிணா மூர்த்தி வழிபாடு செய்து வரவும்.

ரிஷபம் :-

ரிஷபராசி அன்பர்களே, சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். தீராத நோய்க்கு விடை காணுவீர்கள். தாய்க்கு உடல் நிலை பாதிக்கும். தந்தை வழிச் சொத்துக்கள் மற்றும் வரவேண்டிய பணம் கைவந்து சேரும். பொது நலத் தொண்டு நிறுவனத்தவர்களுக்கு நற்பெயர், புகழ் உண்டாகும். உடம்பில் தலை முகம் சம்பந்தமான உபாதைகள் வந்து விலகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பெண்களால் ஆதாயம் உண்டாகும். புதிய கூட்டுத் தொழில் முயற்சிகள் நன்றாக இருக்கும். விளையாட்டுத்துறை சார்ந்தவர்களுக்கு பரிசும், பாராட்டுதலுகளும் கிடைக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளது. மீன், முட்டை, மாமிச சம்பந்தமான உணவுப் பொருள் வியாபாரிகள் நற்பலன் அடைவார்கள்.

இராசியான எண் - 2
இராசியான நிறம் - வெள்ளை
இராசியான திசை - மேற்கு
பரிகாரம் :- அம்மன் வழிபாடு செய்து வரவும்.

மிதுனம் :-

மிதுனராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரகமாகும். வங்கிகளிலிருந்து எதிர்பார்த்த கடன் கிடைக்கும். சினிமா மற்றும் நாடகத் துறையினர் கவனமுடன் செயல்படவும். யாத்திரையில் கவனம் தேவை. வெளிநாடு சம்பந்தமான புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி நன்றாக இருக்கும். தந்தை மகன் உறவில் பிரச்சினைகள் ஏற்படலாம். பழைய வீட்டைத் திருத்திக் கட்ட வாய்ப்புள்ளது. மாணவர்கள் கல்வியில் நற்பலன் அடைவார்கள். கூட்டுத் தொழில் முயற்சிகளை தள்ளிப் போடவும். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். உப்பு வியாபாரம், நீர்வளத்துறை சார்ந்தவர்கள் மற்றும் கூல்டிரிங்ஸ் வியாபாரிகள் நற்பலன் அடையக்கூடிய காலமாகும்.

இராசியான எண் - 3
இராசியான நிறம் - மஞ்சள்
இராசியான திசை - வடகிழக்கு
பரிகாரம் :- சிவ வழிபாடு செய்து வரவும்.

கடகம் :-

கடகராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். பணப் புழக்கம் சுமாராக காணப்படும். திருமண காரியங்களில் தடை ஏற்படும். காதல் விஷயங்களில் கவனம் தேவை. புதிய தொழில்கள் ஆரம்பம் செய்யலாம். அரசியல்வாதிகளுக்கு பழைய பிரச்சினைகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. திடீர் அதிர்ஷ்டமாகிய ரேஸ், லாட்டரி மூலம் தனம் வர வாய்ப்புள்ளது. உடம்பில் வாய், பற்கள் சம்பந்தமான தொல்லைகள் வந்து நீங்கும். வீடு மாற்றம் உண்டாகும். உத்தியோகம் செய்பவர்களுக்கு இடமாற்றம் அல்லது பதவி உயர்வு ஏற்படும். கலைஞர்கள் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது. போலீஸ், ராணுவத்துறை, தீயணைப்புத்துறை சார்ந்தவர்கள் நற்பலன் அடைவார்கள்.

இராசியான எண் - 9
இராசியான நிறம் - சிகப்பு
இராசியான திசை - தெற்கு
பரிகாரம் :- முருகன் வழிபாடு செய்து வரவும்.

சிம்மம் :-

சிம்மராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். நண்பர்களால் மன உற்சாகம் குறையும். காதல் விஷயங்கள் வெற்றியடையும். புதிய தொழில் ஆரம்பம் செய்வதைத் தள்ளிப் போடவும். வீடு மாற்றம் உண்டாகும். தங்கம், வெள்ளி போன்ற நகை வியாபாரிகள் லாபம் அடைவார்கள். உத்தியோக விஷயமாகப் பணம் சொத்து ஏமாறாமல் இருக்கவும். யாத்திரையில் புதிய பெரிய மனிதர்கள் சந்திப்பு உண்டாகி அவர்களால் நன்மையடைவீர்கள். தெய்வீகப் பணிகளில் மிகுந்த அக்கறையுடன் செயல்படுவீர்கள். கண்களில் கவனம் தேவை. கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் மன அமைதி உண்டாகும்.

இராசியான எண் - 6
இராசியான நிறம் - வெள்ளை
இராசியான திசை - தென்கிழக்கு
பரிகாரம் :- மஹாலஷ்மி வழிபாடு செய்து வரவும்.

கன்னி :-

கன்னிராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரகமாகும். கொடுத்த கடனைத் திரும்பக் கேட்டால் பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளதால் முன் கோபம் தவிர்த்தல் நல்லது. ஆடம்பர அலங்காரப் பொருட்கள் வாங்குவதால் பணச் செலவுகள் ஏற்படும். காண்டிராக்ட், கமிஷன் தரகு சம்பந்தமான தொழில் செய்வோர் லாபம் அடைவர். வீண் பொருள் விரையம் ஏற்படலாம். வண்டி, வாகனம் வைத்திருப்பவர்களுக்கு பழுது பார்க்கும் செலவுகள் ஏற்படும். திடீர் அதிர்ஷ்டம் மூலம் தனம் வரும். புதிய வழக்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அண்டை அயலாருடன் கவனமுடன் பழகி வரவும். தேவையான பணம் கிடைக்கும். மற்றவர் நடத்தும் தொழில் ஸ்தாபனங்களில் பொரிய பதவிகள் கிடைக்கும்.

இராசியான எண் - 1
இராசியான நிறம் - வெள்ளை
இராசியான திசை - கிழக்கு
பரிகாரம் :- சூரிய வழிபாடு செய்து வரவும்.

துலாம் :-

துலாராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரகமாகும். உறவுகள் பலப்படும் காலமாகும். இரும்பு, இயந்திரம், எண்ணை வியாபாரம் செய்வோர்கள் நற்பலன் அடைவார்கள். தொலைதூரப் பயணம் விலக்கவும். கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும். பொருளாதாரம் திருப்திகரமான நிலையில் உள்ளது. கலைஞர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும். உத்தியோகத்துறையினருக்கு சில இடையூறுகள் வந்து விலகும். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்க கூடிய காலமாகும். செய்தொழிலில் லாபம் உண்டாகும். தென்திசையில் இருந்து பொருள் வரவு உண்டு. நண்பர்களால் ஆதாயம் இல்லை. பிள்ளைகளால் மன நிம்மதி குறையும்.

இராசியான எண் - 5
இராசியான நிறம் - பச்சை
இராசியான திசை - வடக்கு
புரிகாரம் :- மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

விருச்சிகம் :-

விருச்சிராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரகமாகும். திருட்டுப்போன பொருள் கிடைக்கும். பங்காளியால் ஆதாயம் இல்லை. அரசியல்வாதிகள் ஆதாயம் அடைவார்கள். மருத்துவத்துறை சார்ந்தவர்கள், ஆலயப்பணி புரிவோர், ஷேர் மார்க்கெட் தொழில் செய்வோர் நற்பலன் அடைவார்கள். வீட்டைப் புதுப்பித்துக் கட்டுவீர்கள். காண்ட்டிராக்ட், தரகு தொழில் செய்வோர் கவனமுடன் இருக்கவும். உடம்பில் வாயு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். மனைவியால் பொருள் வரவு உண்டு. தீராத வியாதிகளுக்கு நல்ல மருத்துவர் மூலம் விடைகாணுவீர்கள். பொது நலத் தொண்டுகளில் மனமுவந்து பணியாற்றுவீர்கள்.

இராசியான எண் - 1
இராசியான நிறம் - வெள்ளை
இராசியான திசை - கிழக்கு
பரிகாரம் :- சூரிய நமஸ்காரம் வழிபாடு செய்து வரவும்.

தனுசு :-

தனுசுராசி அன்பர்களே, கேது நன்மை தரும் கிரகமாகும். கம்யூட்டர், இணையதளம், தொலைக்காட்சி நடத்துவோர் லாபம் அடைவார்கள். மறைமுக எதிரிகளால் தொல்லைகள் உண்டாகலாம். நண்பர்களால் காரணமற்ற பிரச்சினைகள் வந்து நீங்கும். தேவையற்ற மனசஞ்சலம் ஏற்படும். குல தெய்வ வழிபாடு செய்து வருதல் நல்லது. பூர்வீகச் சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் பணம் வர வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சில சச்சரவுகள் வந்து நீங்கும். சகோதர சகோதாரிக்குள் மனக் கசப்பு ஏற்படலாம். தொலைதூரப் பயணம் வெற்றியளிக்கும். விவசாயம் நன்றாகப் பலிதமாகும். உறவினர்கள் உதவியால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.

இராசியான எண் - 7
இராசியான நிறம் - கருஞ்சிகப்பு
இராசியான திசை - வடமேற்கு
பரிகாரம் :- விநாயகர் வழிபாடு செய்து வரவும்.

மகரம் :-

மகரராசி அன்பர்களே, ராகு நன்மை தரும் கிரகமாகும். கடன் தொல்லைகள் நெருக்கடி ஏற்படுத்தும். நண்பர் ஒருவர் உதவியால் புதிய கடன் வாங்குவீர்கள். கலைஞர்களுக்கு பரிசுகள் மற்றும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கட்டிட சம்பந்தமான பொருள் வியாபாரிகள், வாகனத் தொழிற்சாலைகள் நடத்துவோர் லாபம் அடைவார்கள். மனைவிக்கு மருத்துவச் செலவு ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாட்டுப் பயணம் வெற்றி பயக்கும். வீடு மாற்றம் உண்டாக வாய்ப்புள்ளது. உடம்பில் வயிறு குடல் சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும். தீர்த்த யாத்திரை சென்று வரக்கூடிய வாய்ப்புள்ளது.

இராசியான எண் - 4
இராசியான நிறம் - கருப்பு
இராசியான திசை - வடமேற்கு
பரிகாரம் :- பிதுர் வழிபாடு செய்து வரவும்.

கும்பம் :-

கும்பராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரகமாகும். அடுத்தவருக்காக ஜாமீன் போட்டு பிரச்சினைகளை விலைக்கு வாங்க வேண்டாம். வங்கிகளிலிருந்து எதிர்பார்த்த கடன்கள் கிடைக்கும். உறவினர் வரவால் பொருட்செலவு உண்டாகும். உடம்பில் நரம்பு, எலும்பு சம்பந்தமான பிணிகள் வந்து தீரும். சுப காரிய நிகழ்ச்சிகளுக்காக வெளியூர் சென்று வருவீர்கள். மன அமைதிக்காக ஆலய வழிபாடு செய்தல் நன்று. விட்டுப்போன பழைய பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்கும். ஆடம்பர அலங்காரப் பொருட்கள், கட்டில், மெத்தை, சினிமா, நாடகத்துறை சார்ந்தவர்கள் நற்பலன் அடைவார்கள். புதிய வீடு நிலம் வாங்குவீர்கள்.

இராசியான எண் - 5
இராசியான நிறம் - பச்சை
இராசியான திசை - வடக்கு
பரிகாரம் :- மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

மீனம் :-

மீனராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். புதிய ஆடை, அணிகலன்கள் வாங்குவீர்கள். தூரப்பயணம் தள்ளிப் போடவும். காண்டிராக்ட் தொழில் செய்வோர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மூலம் நற்பலன் கிடைக்கும். வராத கடன், கொடுத்த தொகை திரும்பக் கிடைக்கும். அரசியல்வாதிகள் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது. வீடு மற்றும் நகைகள் மூலம் புதிய கடன் வாங்குவீர்கள். பங்காளிகளிடம் எச்சரிக்கை தேவை. உடம்பில் இரத்தம் மற்றும் இதயம் சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும். ஸ்டேஷனரி ஷாப் மற்றும் தபால், தந்தித்துறையினர், அச்சுத் தொழில் செய்வோர் லாபம் அடைவார்கள்.

இராசியான எண் - 8
இராசியான நிறம் :- நீலம்
இராசியான திசை :- தென்மேற்கு.
பரிகாரம் :- சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.

ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M அவர்களின் இதர படைப்புகள். ராசிபலன் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
                         
Your Comments
Comment
உங்கள் கருத்து
பெயர் :
மின் அஞ்சல் :
சுட்டி :

Comment In:

Tamil English
(Type here in Thanglish and see tamil text in bottom. Tamil conversion powered by : www.suratha.com)
NOTE : Please do not use single quote in your comments. You can use double quote in place.
(English / தமிழில் - யூனிகோட்)
What you see in this box gets posted as feedback.

Cunard Cruise Lines
Hot properties in India

ஜோதிடம் கேளுங்கள் பகுதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைந்து கட்டண சேவை பெற இங்கே சுட்டவும்.

 

 


 

 


About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, Cunard Cruise Lines, India Pakistan cricket series, Kuselan, India Cricket, Sultan The Warrior

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide